காபி பிரியரா நீங்கள். உங்களை காபி உலகுக்கு அழைத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்களும் ரெடியா.. அப்ப என்ன வாங்க இந்தியாவில் மிகச் சிறந்த காபி தோட்டங்கள் வழியே ஒரு சிறப்பான சுற்றுலா செல்ல எங்களுடன் நீங்களும்...
இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்த விசயங்களில் காபி மிக முக்கியமான ஒரு பொருள். உலகின் பல இடங்களில் காபி விளைந்தாலும், இந்திய காபிக்கு சந்தையில் தனி மதிப்பு இருக்கிறது. இந்தியாவில் நிறைய பேருக்கு காபி என்பது தினமும் பருகும் பருக வேண்டிய, அது இல்லாமல் தன்னால் வாழ முடியாது எனும் அளவுக்கு இருக்கும் ஒரு பயிர். இதை பயிரிட்டு மலைப் பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். அப்படி பயிரிட்டுள்ள பகுதிகளை இந்த சுற்றுலாவின் மூலம் கண்டு களிக்கலாம் வாருங்கள்.

இந்தியாவின் காபி உற்பத்தியில் சிறந்த மாநிலங்கள்
இந்தியாவின் காபி உற்பத்தியில் சிறந்த மாநிலங்களாக இருப்பன தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் ஒடிசா ஆகியன. மேற்கு வங்காளம் உட்பட பல வடகிழக்கு மாநிலங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்றாலும், நாம் இப்போது பார்க்கவிருப்பது தென்இந்தியா மற்றும் ஒடிசாவும்.
அன்றாடம் எப்படி துவங்குகிறது
உங்களுக்கு அன்றாடம் எப்படி துவங்குகிறது. என்னைப் போன்ற பலருக்கு அது காபியில்தான் துவங்கும் என நினைக்கிறேன். ஆம் பொழுது விடிந்ததும் முதல் வேளை காபி அருந்துவதுதான். அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கச் செய்வது காபி தான் இல்லையா?
இந்தியாவின் இயற்கை காபி தோட்டங்களும் அதற்கு செல்வதற்கான வழிகளையும் இந்த பகுதியில் உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம். .

காபி தோட்டங்களில் ஓர் உலா
பச்சை பசேலென்ற இயற்கை அழகை கண்டுகொண்டே காபியின் அதீத மணத்துடன், அதை பருகிக் கொண்டே காபி தோட்டங்களைச் சுற்றி வருவது என்பது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. ஒருவேளை இப்படி முயற்சி செய்யவில்லை என்றால், முயற்சியுங்கள் நன்றாகவே இருக்கும்.
ஆமோதிக்கிறீர்களா அப்போது எங்களுடன் வாருங்கள். நாங்கள் இவ்வுலகின் சிறந்த இடங்களுள் காபி தோட்டங்கள் நிறைந்த இந்தியாவின் சிறந்த ஐந்து மாநிலங்களைக் கண் முன்னே கொண்டு நிறுத்துகிறோம்.
காபி தேர்ந்தெடுப்பது
விருப்பமான பிராண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த காபி பவுடரை தேர்வு செய்து காபி கலந்து குடித்து இன்பம் பெறுவது ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க காபி தயாரிக்கும் இடங்களையும் தெரிந்துகொள்வது சிறப்புதான் இல்லியா?
நிச்சயமாக என்று சொல்கிறீர்களா அப்போது இவைதான் நாம் செல்லப்போகும் இடங்கள்.

கர்நாடகம்
உங்களுக்கு தெரியுமா இந்தியாவில் காபி எங்கு முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது என்று?
சந்தேகமே வேண்டாம் கர்நாடகாவேதான்.
கர்நாடகத்தின் சிக்மகளூர் மலைக் குன்றில் இருக்கும் ஒரு இடத்தில்தான் காபி முதலில் அறிமுகப் படுத்தபட்டது. இதுதான் இந்தியாவின் முதல் காபி தோட்டம்.
இன்று கர்நாடக மாநிலம் இந்தியாவிலேயே கிட்டத்தட்ட 70 சதவிகித காபி உற்பத்தியாளராக இருக்கிறது. இங்குள்ள பெரும்பான்மையான கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியவாறோ, மலையின் மீதோ இருக்கின்றன. இதுவும் இங்கு காபி அதிகளவில் பயிரிட ஒரு காரணமாகும்.
சிக்மகளூர் தவிர்த்து, குடகு, ஹாசன், சிமோகா ஆகிய இடங்களிலும் காபி பயிரிடப்பட்டுள்ளது. இவைதான் உங்களுக்கு ஏற்ற காபி தோட்டங்கள் என நினைத்தால் நீங்கள் ஏன் ஒரு காபி தோட்ட சுற்றுலா சென்று வரக் கூடாது.

தமிழ்நாடு
தாய் தமிழகத்தில் நிறைய கோவில்கள், கடற்கரைகள் சுற்றுலாவுக்கு பிரபலமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் எல்லா வகையான சுற்றுலா அம்சங்களையும் கொண்டிருக்கு வெகு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. இங்கும் நாம் காபி தோட்டங்களில் புகுந்து விளையாடலாம்.
குன்னூர், ஏற்காடு, ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் காபி தோட்டங்கள் இருக்கின்றன. இங்கு அருகிலேயே சுற்றுலாத் தளங்கள் நிறைய இருப்பதால், இந்த இடத்துக்கு வருகை தருகின்றனர் பல சுற்றுலா பயணிகள்.
இந்த காபி பயிர்களுக்கு இடையே நீங்கள் இருக்கும்போது, உங்கள வாயில் காபியின் சுவை நாக்கின் சுவை மொட்டுக்களை தூண்டி விறைக்கச் செய்யும். காபியின் மணம் மூக்கினுள் நுழைந்து மூளையை உசுப்பி விடும். அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகள் மலைகள் என சுற்றுலாவை கண்டு களித்து திரும்புங்கள்.

கேரளம்
கடவுளின் தேசத்தைப் பற்றி எழுதுவதற்கு காரணங்களா இல்லை. இல்லை என்ற சொல்லே இல்லாமல் வற்றாத ஜீவ நதியாய் இயற்கையை அள்ளி அள்ளித் தரும் கேரளம் காபிகளுக்கும் பெயர் பெற்றது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?
சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பை நிச்சயமாக நிறைவேற்றித் தரும் அழகு நிறைந்த தேசம் இந்த கேரளம். இந்தியாவிலேயே அதிக படித்தவர்களை கொண்ட நாடு மட்டுமல்ல.. குடிப்பவர்களையும்தான்.. அட நா காபியை சொன்னேன்.
டீ, காபி அதிகம் பருகுபவர்கள் பட்டியலில் அநேகமாக முதலிடம் கேரளத்துக்குத் தான்.
மலபார் பகுதியில் இருக்கும் வயநாடு, காசர்கோடு, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு என முக்கிய பகுதிகள் காபிக்காக பெயர் பெற்றவை. இயற்கையை அருந்த தகுந்த இடம் என்று கேரளாவை நினைக்கிறீர்கள்தானே.. அப்போது என்ன தயக்கம் உடனே திட்டமிடுங்கள் இன்னும் சில வாரங்களில் கேரளா தயாராகிவிடும்.

ஆந்திரப்பிரதேசம்
அரக்கு பள்ளத்தாக்கு மற்றும் அனந்தகிரி மலை ஆகிய இடங்களில் விளையும் காபி பயிர்கள் மிகவும் தனித்தன்மையாக இந்த இடத்தை மாற்றியுள்ளன. வாருங்கள் ஆந்திரத்திலும் அலைந்து திரிவோம்.
ஒடிசா
கோராப்புட் மற்றும் தாரிங்க்பாடி ஆகிய இடங்களில் காபி பயிர்கள் பயிரிடப் படுகின்றன. இவை ஒடிசாவை காபி தயாரிப்பு பட்டியலில் இணைத்துள்ளன. ஒருமுறை ஒடிசா சென்று காபி பயிர்களையும், மற்ற சுற்றுலாத் தளங்களையும் கண்டு களித்து திரும்புங்கள்.
Jee & Rani Nature Photography



Click it and Unblock the Notifications




