Search
  • Follow NativePlanet
Share
» »பேகுசராய் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பேகுசராய் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பேகுசராய் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

பேகுசராய் என்ற நகரம் பீகார் மாநிலத்தில் உள்ளது. மேலும் இந்நகரம் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயல்படுகிறது. புனிதமாக கருதப்படும் கங்கை நதியின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். பேகுசராயில் பல சுற்றுலாத் தலங்கள் இருப்பதால் அது கண்டிப்பாக சுற்றுலாப் பயணிகளை கவரும். கன்வார் ஏரி பறவைகள் சரணாலயம் மற்றும் நௌலா கர் என்ற இரண்டு இடங்களும் தான் பேகுசராயின் முதன்மையான ஈர்ப்புகளாகும். கோடைக்காலம் தொடங்கும் முன், அதாவது அக்டோபர் முதல் மார்ச் மாதத்திற்குள் இங்கு வருவதே உகந்த நேரமாகும்.

Cover PC: Santoshvirudhuak

பேகுசராய் - ராணியின் தங்குமிடம்!

இந்நகரம் இப்பெயரை பெற்றதுக்கு ஒரு தனித்துவமான காரணம் உள்ளது. ராணி என்று அர்த்தம் தரும் "பேகம்" என்ற வார்த்தையும் வாழுமிடம் என்று அர்த்தம் தரும் "சராய்" என்ற வார்த்தையும் இணைந்து தான் இந்நகரத்தை பேகுசராய் என்று அழைக்கின்றனர். பகல்பூரின் பேகம் கங்கா நதிக்கரையோரம் அமைந்துள்ள "சிமரியா காட்" என்ற வழிப்பாட்டிடத்திற்கும் ஒரு மாதம் காலம் தங்கியிருந்தார் என்று நம்பப்படுகிறது. காலப்போக்கில் இந்த இடம் ராணியின் தங்குமிடமாக பார்க்கப்பட்டதால், பேகுசராய் என்ற பெயரால் இவ்விடம் அழைக்கப்பட்டது.

பேகுசராய் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது

PC: Tonii

பேகுசராய் இதற்கு முன்னாள் முன்கர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. இதற்கென தனித்துவமான அடையாளமும் உள்ளது. புகழ் பெற்ற ஹிந்தி கவியான ராஷ்டிரகவி ராம்தாரி சிங் மற்றும் வரலாற்று பேராசிரியரான ராம் சரண் ஷர்மா ஆகியவர்களின் பிறப்பிடம் இந்த பேகுசராய். பழங்காலத்திலிருந்தே கம்யுனிசம் ஆழமாய் இங்கு வேரூன்றி இருப்பதால் பேகுசராய் நகரத்தின் மற்றொரு சிறப்பம்சமாக இது விளங்குகிறது. இந்நகரத்தை முன்னாட்களில் "பீகாரின் லெனின்கிராட்" என்று அழைத்தனர்.

பேகுசராயை அடைவது எப்படி?

இந்திய துணைக்கண்டத்தில் கங்கைச் சமவெளியின் ஒரு பகுதியாக விளங்கும் பேகுசராயில் அனைத்து காலங்களிலும் சீரான வானிலையே நிலவும்.

பேகுசராய் கங்கைச் சமவெளியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வழியாக பைண்டி, பயா, புர்ஹி கண்டக், பாலன் மற்றும் சந்திரபாகா போன்ற நதிகள் பாய்ந்தோடுகின்றன. பீகாரின் இதர பகுதிகளுக்கும் இந்தியாவின் இதர பகுதிகளும் பேகுசராயிலிருந்து இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக செல்லலாம்.

Read more about: bihar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X