» »தமிழ்கடவுளா முருகன்? அந்த மூவருக்காக சூரசம்ஹாரம் நடத்துவது ஏன்?

தமிழ்கடவுளா முருகன்? அந்த மூவருக்காக சூரசம்ஹாரம் நடத்துவது ஏன்?

Written By: Udhaya

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழா மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும்.

விழாவில், 6ம் நாள் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு காலை 9 மணி அளவில் மூலவருக்கு உச்சிகால பூஜை நடைபெறும். நண்பகலில் ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை நடத்தப்படும். பின் அவர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன், மேளவாத்தியம் முழங்க சண்முகவிலாசம் மண்டபம் வந்தடைவார்.

இவை வருடாவருடம் நடப்பவைதான். ஆனால் இதன் பின்னணி என்ன என்பது பற்றில் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாருங்கள் அதுபற்றி இந்த பதிவில் காணலாம்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டதில், மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய அழகிய ஊர் , திருச்செந்தூர் . இவ்வூரில் உள்ள முருக பெருமான் கோவில் அறுபடை வீடுகளுள் ஒன்றாக விளங்குவதால் இந்த ஊர் முருக பக்தர்களின் மத்தியில் புகழ்பெற்ற புனித ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.

 திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோயில்

திருச்செந்தூர் என்றாலே நினைவுக்கு வருவது அங்கு படைகொண்டுள்ள முருகப்பெருமான்தான். அறுபடை வீடுகளுள் இரண்டாவது படைவீடாக உள்ளது இந்த சுப்பிரமணியர் கோயில். இராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் இங்கும் வருகை தருகிறார்கள்.

சூரசம்ஹார விழா

சூரசம்ஹார விழா

கந்தசஷ்டியின் ஆறாவது நாள் மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கோயில் முன்புள்ள கடற்கரையில் எழுந்தருளுகிறார். கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு போரிட வரும் சூரபத்மனை வதம் செய்கிறார். தொடர்ந்து மாமரமாக மாறும் சூரபத்மனை இரண்டு துண்டுகளாக பிளந்து வேலாகவும், மயிலாகவும் மாறும் அவனை ஆட்கொள்கிறார்.

சூரபத்மன் யார்?

சூரபத்மன் யார்?

முருகப்பெருமான் வதம் செய்யும் சூரபத்மன் அவரது தாத்தா எனவும் கூறப்படுகிறது. பார்வதியின் தந்தையான தட்சன் அடுத்தபிறவியில் சூரபத்மனாக அவதரித்தார் என்றும் கூறுகின்றனர்.

சிவன் கொடுத்த வரம்

சிவன் கொடுத்த வரம்

சிவனை நோக்கி தவமிருந்த சூரபத்மனுக்கு சிவனிடம் கேட்டவரம் கிடைத்தது. இதனால் ஆபத்தை உணர்ந்த தேவர்கள் சிவனிடம் முறையிட்டதாகவும், அதிலிருந்தே ஆறு குழந்தைகள் தனித்தனியே பிறந்ததாகவும். அதில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமானே சூரபத்மனை வதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஒருவருக்காகவா சூரசம்ஹாரம்

ஒருவருக்காகவா சூரசம்ஹாரம்

நாம் அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பது போல சூரபத்மன் ஒருவருக்காக அல்ல இந்த சூரசம்ஹாரம். மூன்று பேருக்காக. யார் அவர்கள் தெரியுமா

யார் அந்த மூவர்

யார் அந்த மூவர்

சூரசம்ஹாரத்தில் முருகன் வதம் செய்யும் அந்த மூவர் சூரபத்மனின் சகோதரர்களாம். ஆம். சிங்கமுகனும், தாரகனும் சூரபத்மனின் சகோதரர்கள். இவர்கள் மூவரையும் வதம் செய்யவே முருகன் அவதரித்தாராம்.

சிறப்பு என்ன?

சிறப்பு என்ன?

இந்த சூரசம்ஹாரத்தில் கலந்து கொள்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும் எனவும், நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழவும் துணைபுரியும் எனவும் கூறப்படுகிறது.

அருகாமையில் அமைந்துள்ள சுற்றுலா தலங்கள்

அருகாமையில் அமைந்துள்ள சுற்றுலா தலங்கள்

திருச்செந்தூரில் முருக பெருமான் கோவில், வள்ளி குகை, தத்தாத்ரேயரின் குகை போன்ற சில அழகிய கோவில்கள் உள்ளன. அவை மட்டுமின்றி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மேலப்புதுக்குடி, தூத்துகுடியில் உள்ள குதிரைமொழித்தேறி மற்றும் புன்னை நகரில் உள்ள வனத்திருப்பதி போன்ற இடங்களும் கண்டு களிக்கக் கூடியவை.

சுவடிகள்

சுவடிகள்


திருச்செந்தூரை சுற்றி உள்ள வறண்ட நிலக் காடுகளில் பனை, முந்திரி போன்ற வெப்ப மண்டல மரங்கள் நிறந்துள்ளன. கிமு காலத்து சுவடிகளில் திருச்செந்தூர் பற்றிக் குறிப்புகள் உள்ளன. முருக பெருமான், சூரபத்மன் என்ற அரக்கனை இங்கு வதம் செய்ததாக வரலாறு கூறுகின்றது. அதனால் இவ்வூர் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Sreejith86cs

தெறித்து ஓடிய டச்சுப் படை

தெறித்து ஓடிய டச்சுப் படை

கபாடபுறம் என்றும், பின்னர் திருச்சென்-செந்திலூர் என்றும் அழைக்கப்பட்டு வந்த இவ்வூருக்கு, பின்னாளில் திருச்செந்தூர் என்ற பெயர் நிலைத்தது.சேரர், பாண்டியர் என பல வம்சங்கள் இங்கு ஆட்சி செய்துள்ளனர். 1649ல், போர்துகீஸிடமிருந்து தூத்துகுடியை கைப்பற்ற நினைத்த டச்சு நாட்டினர், இவ்வூர் மீது படை எடுத்தனர். ஆனால், போர்துகீஸியரும் மதுரையை சேர்ந்த நாயக்கர்களும் இணைந்து போராடி டச்சு படையை முறியடித்து விரட்டினர்.

 திருச்செந்தூர் வானிலை

திருச்செந்தூர் வானிலை

வருடம் முழுவதுமே மிதமான பருவநிலை நிலவுவதால் திருச்செந்தூருக்கு நீங்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலா ஸ்தலங்களைக் கண்டு களிக்கவும், புனித யாத்திரை மேற்கொள்ளவும் சிறந்தது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் கோவில்களை காணவும் சில நாள் பயணங்களுக்கும் உகந்தது.

திருச்செந்தூரை அடைவது எப்படி

திருச்செந்தூரை அடைவது எப்படி

திருச்செந்தூரை சாலை வழியில் எளிதாக அடையலாம். இதற்கு நெருங்கிய விமான நிலையம் 27 கிமி தொலைவில் தூத்துக்குடியில் உள்ளது. திருநெல்வெலி நிலையித்திலிருந்து இவ்வூருக்கு ரயில் வசதி உள்ளதால்,அனைத்து நகரங்களிலிருந்தும் ரயில் மூலமாக எளிதாக அடையலாம். நீங்கள் வரலாற்று மற்றும் ஆன்மீக சுற்றுலாவில் விருப்பம் உள்ளவர் எனில், திருச்செந்தூருக்கு கட்டாயமாக வந்து செல்லவும்.