Search
  • Follow NativePlanet
Share
» »வார விடுமுறையை கொண்டாட அற்புதமான , இன்னும் அதிகம் அறியப்படாத இடங்கள்

வார விடுமுறையை கொண்டாட அற்புதமான , இன்னும் அதிகம் அறியப்படாத இடங்கள்

இந்தியாவில் என்றென்றும் பயணங்களுக்கு எல்லையே கிடையாது. சிறகுகள் முளைத்து பறக்க ஆரம்பித்தால் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய இடம் என பயணித்தாலும் இந்திய பெருநிலப்பரப்பு முழுவதும் பயணித்து முடிக்க முடியாது. அத்தனை அற்புதங்களை கொண்டிருக்கும் இந்தியாவில் இருந்து கொண்டு வார விடுமுறைக்கு திரும்ப திரும்ப சென்ற அதே இடங்களுக்கு சென்று அலுத்துவிட்டதா உங்களுக்கு.

இப்போது கிறிஸ்மஸ், புத்தாண்டு அதனை தொடர்ந்து பொங்கல் என நீண்ட வார விடுமுறைகள் கிடைக்கும். அந்த விடுமுறைகளில் தென் இந்தியாவில் சுற்றுலா சென்றிட நாம் அதிகம் அறிந்திராத ஆனால் அற்புதமான இடங்களை பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வார விடுமுறை சலுகைகள் : விமான மற்றும் ஹோட்டல் கட்டணங்களில் 80% தள்ளுபடி பெற்றிடுங்கள்

 கொல்லி மலை, நாமக்கல்:

கொல்லி மலை, நாமக்கல்:


சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என சங்கத்தமிழ் பெருங்கப்பியங்களில் குறிப்பிடப்படும் சிறப்பு கொண்டது நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லி மலையாகும். மூலிகை செடிகள் நிறைந்த இம்மலையில் ஆனந்தமாக வார விடுமுறையின் போது இங்கு வந்து சுற்றிப்பார்க்க நல்ல இடங்கள் உள்ளன. நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பிக்க நினைப்பவர்களுக்கு கொல்லி மலை ஒரு வரப்பிரசாதம்.

Photo:dilli2040

 கொல்லி மலை, நாமக்கல்:

கொல்லி மலை, நாமக்கல்:


இயற்கை விரும்பிகளிடமும் ட்ரெக்கிங், பாறை ஏற்றம் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபட நினைப்பவர்களுக்கும் கொல்லி மலை சிறந்த இடம். இங்கே அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆகாய கங்கை அருவியில் கரைந்து உருகிய வெள்ளி போன்று நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. படகு சவாரி செய்ய சிறிய ஏரி ஒன்றும் இங்கே உண்டு. ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு அமைதியாக தியானம் செய்த விரும்புகிறவர்களும் இங்கே வருகின்றனர்.

Photo:Dilli2040

 கொல்லி மலை, நாமக்கல்:

கொல்லி மலை, நாமக்கல்:

எப்படி அடைவது:

கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் இருக்கும் கொல்லி மலையை சாலை மார்காமாகவே அடையமுடியும். இந்த சாலையில் 70 கொண்டையூசி வளைவுகளை கடக்க வேண்டும் என்பதால் வண்டி ஓட்டும் போது அதீத கவனம் தேவை.

மேலதிக விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Dilli2040

முருத் கடற்க்கரை, மும்பை:

முருத் கடற்க்கரை, மும்பை:

மும்பையில் இருந்து 143 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது முருத் கடற்க்கரை, மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக வேகமாக பிரபலமாகி வரும் சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று. ரைகத் மாவட்டத்தில் உள்ள முருத் என்ற ஊரில் அமைந்திருக்கும் முருத் கடற்க்கரை மற்றும் கடற்கரையில் இருந்து 500 மீ தொலைவில் ஜைஞ்சிரா என்னும் தீவுக்கோட்டை ஆகிய இடங்கள் மும்பையில் இருந்து வார விடுமுறைக்கு சென்று வர மிக ஏற்ற இடங்களாகும்.

Photo:Ishan Manjrekar

முருத் கடற்க்கரை, மும்பை:

முருத் கடற்க்கரை, மும்பை:

எவ்வித வர்த்தகத்தனதிர்க்கும் உட்படாமல் வெகு சுத்தமாக இருக்கிறது இந்த முருத் கடற்க்கரை. சோம்பேறித்தனமாக ஓய்வெடுத்தபடி ஒரு நாளை இங்கு நண்பர்களுடன் கொண்டாடலாம். கடற்கரையில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

Photo:Tomas Belcik

முருத் கடற்க்கரை, மும்பை:

முருத் கடற்க்கரை, மும்பை:

கடற்கரையில் இருந்து 500 மீ தொலைவில் உள்ள ஜைஞ்சிரா கோட்டைக்கு படகு சேவை உண்டு. டச், போர்த்துகீசியர்கள் என எந்த வெளிநாட்டு படைகளாலும் கைப்பற்றப்படாத கோட்டை என்ற பெருமை இதற்க்கு உண்டு. இங்கு பீரங்கிகள் மற்றும் இதர போர் தளவாடங்களை இன்றும் நாம் காணலாம்.

Photo:Vikas Rana

பூவார் - கேரளத்தின் முனை:

பூவார் - கேரளத்தின் முனை:

கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தை அடுத்து அமைந்திருக்கிறது பூவார் என்னும் சிறிய கடற்க்கரை கிராமம். கேரளாவின் தென் முனையாக இந்த ஊர் இருக்கிறது. இன்னும் அதிகம் வெளியில் தெரிந்திராத அதேசமயம் அற்புதமான கடற்க்கரைகளையும் படகு சவாரி செய்ய ஏற்ற உப்பங்குழி (Back water) நீரோடைகளையும் கொண்டுள்ளது.

Photo:Nagesh Jayaraman

பூவார் - கேரளத்தின் முனை:

பூவார் - கேரளத்தின் முனை:

இயற்க்கைக்கு நெருக்கமாக அமைதியாக வார விடுமுறையை கொண்டாட விரும்புபவர்களுக்கு இந்த பூவார் கிராமம் சிறந்த தேர்வாக அமையும். திருவனந்தபுரத்தில் இருந்து வெறும் 32 கி.மீ தொலைவில் இக்கிராமம் அமைந்திருக்கிறது.

Photo:Senorhorst Jahnsen

செம்பரா சிகரம், வயநாடு:

செம்பரா சிகரம், வயநாடு:

இயற்கையின் வினோத்திற்கு அளவே இல்லை போலும். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ளது செம்பரா சிகரம். வயநாட்டில் உள்ள சிகரங்களுள் மிக உயர்ந்ததான இதன் உச்சியில் காதலின் சின்னமான இதயத்தின் வடிவில் இயற்கையாகவே ஏரி ஒன்று அமைந்துள்ளது.

Photo:Karthik Narayana

செம்பரா சிகரம், வயநாடு:

செம்பரா சிகரம், வயநாடு:

பசுமை நிறைந்த இந்த செம்பரா மலையில் சில கிலோ மீட்டர்கள் ட்ரெக்கிங் செய்வதன் மூலம் இந்த ஏரியை அடைய முடியும். உங்கள் காதல் துணையுடன் வார விடுமுறைக்கு செல்ல இதைவிட வேறென்ன இடம் வேண்டும் உங்களுக்கு? .

Photo:leendeleo

 அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

எங்கெங்கு காணினும் பசுமையடா! என்று வியக்க வைக்கிறது ஆந்திர மாநிலத்தில் விசாகபட்டினம் நகருக்கு அருகில் அமைந்துள்ளது அரக்கு பள்ளத்தாக்கு.

Photo:Raj

 அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

மிகவும் சுத்தமான அதேசமயம் வர்த்தகத்தனம் இல்லாத அழகிய இடமான இங்கு தான் இந்தியாவில் முதல் முறையாக பழங்குடிகளால் விளைவிக்கப்பட்ட பூச்சிகொல்லிகளும், உரங்களும் சேர்க்காத கரிம(Organic) காப்பி கொட்டை கிடைக்கிறது. சுவையான இந்த காபியை ருசித்தபடி பசுமையான இவ்விடத்தை சுற்றிப்பாருங்கள்.

Photo:Kara Newhouse

கெம்மனுங்குண்டி:

கெம்மனுங்குண்டி:

கர்நாடக மாநிலம் சிக்மங்கலுரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது கெம்மனுங்குண்டி என்னும் அழகிய மலை வாசஸ்தலம். மலைகளின் ஊடாக பாயும் வெள்ளி ஓடைகள், பசுமையான விவசாய நிலங்கள், அற்புதமான இயற்கை காட்சிகள், மெய் மறக்கச்செய்யும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் என சிறந்த சுற்றுலாவுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் நிரம்பிக்கிடக்கின்றன இங்கே.

Photo:Yathin S Krishnappa

கெம்மனுங்குண்டி:

கெம்மனுங்குண்டி:

Z பாயிண்ட் :

கெம்மனுங்குண்டியின் உயரமான மலைக்குன்று அமைந்திருக்கும் இடம்தான் இந்த Z பாயிண்ட். இந்த குன்று ஆங்கில எழுத்தான Z வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றிருக்கிறது. கெம்மனுங்குண்டியில் சூரிய இங்கிருந்து சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் அற்புதமாக காணலாம். சாந்தி அருவியும் இதனருகில் தான் அமைந்திருக்கிறது.

Photo:Elroy Serrao

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

உலகத்திலேயே டீ உற்பத்தியாகும் மிக உயரமான இடம் தான் இந்த கொலுக்குமலை. கடல் மட்டத்தில் இருந்து 7500 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் மூணாறில் இருந்து 30 கி.மீ தொலைவில் இன்னும் அதிகமானோர் கேள்விப்பட்டிராத சுற்றுலாதலமாகவே இருந்து வருகிறது. மூணாறைப் போன்றே அற்புதமான இயற்க்கை காட்சிகளை இங்கு பார்த்து ரசிக்கலாம்.

Photo:Prasanth Chandran

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

கொலுக்குமலைப்பதை தனியாருக்கு சொந்தமானது என்பதால் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்தவேண்டும். இங்கு தங்கவேண்டுமானால் கொலுக்குமலை தேயிலை உற்பத்தி ஆலையால் நடத்தப்படும் 3 படுக்கையறை வசதி கொண்ட தாங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.

Photo:Motographer

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more