Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் குழந்தைகள் மனம் மகிழ இந்த கடற்கரைகளுக்கு செல்லுங்கள்!

உங்கள் குழந்தைகள் மனம் மகிழ இந்த கடற்கரைகளுக்கு செல்லுங்கள்!

உங்கள் குழந்தைகள் மனம் மகிழ இந்த கடற்கரைகளுக்கு செல்லுங்கள்!

குழந்தைகளை வைத்துக்கொண்டு கடற்கரைக்கு செல்வது அவ்வளவு எளிமையான வேலை இல்லை. மகிழவும் முடியாமல், குழந்தைகளைக் கட்டுக்குள் வைக்கவும் தெரியாமல், திணறி அந்த கடற்கரையை விட்டு வெளியே வந்தால் போதும் சாமி என்று முடிந்துவிடும் ஒவ்வொரு கடற்கரை பயணமும். கவலை வேண்டாம். இந்தியாவில் குழந்தைகளுக்காகவே செல்லும் கடற்கரைகள் என்றும் சில கடற்கரைகள் இருக்கின்றன. கூட்ட நெரிசல் இல்லாமல், அதிக அலைகள் இல்லாமல் குறைந்த ஆழம் கொண்ட கடற்கரைகளுக்கு நம் குழந்தைகளுடன் சென்று மகிழ்வோம். இதோ குழந்தைகளுக்கான அந்த 5 கடற்கரைகளும், அதன் சிறப்புகளும்.

ராதா நகர் பீச்

உங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட ராதாநகர் பீச் மிகவும் சிறந்ததாகும். ஹேவ்லாக் தீவில் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருப்பது ராதாநகர் கடற்கரை ஆகும். புகழ்பெற்ற 'டைம்ஸ்' பத்திரிக்கையினால் ஆசியாவில் இருக்கும் மிகச்சிறந்த கடற்கரையாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அசுத்தம் நிறைந்த கடற்கரைகளையே பார்த்து பழகிய நமக்கு இந்த ராதா நகர் கடற்கரை இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.

என்ன செய்யலாம்

குழந்தைகளுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழுங்கள். கடற்கரையில் கொண்டாடுங்கள்.

எப்படி அடையலாம்

அரசு மற்றும் தனியார் வாகனங்கள் போர்ட் பிளேர் பகுதியிலிருந்து இந்த இடத்துக்கு இயக்கப்படுகின்றன.

காலப்பாதர் பீச்

இந்திய நிலப்பகுதியிலிருந்து விலகி பல கிலோ மீட்டர்களுக்கப்பால் உள்ள இந்த சொர்க்க தீவுகளில் இந்தியப்பெயர்களை கேட்கும்போதே வியப்பும் பெருமையும் ஏற்படுவதையும் நம்மால் உணரமுடியும்.

என்ன செய்யலாம்

குழந்தைகளுக்கான விளையாட்டுகள், போட்டிகள் போன்றவற்றுக்கு சிறந்த இடமாகும்.

எப்படி அடைவது

போர்ட் பிளேரிலிருந்து பெர்ரி வகை படகுகள் வாயிலாக எளிதில் அடையலாம்.

காஷித் பீச்

கொங்கன் கடற்கரையை மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையில் கொண்டிருக்க, இரண்டு குன்றுகளிற்கு இடையில் செட்டில் ஆகியிருக்கிறது. மகாராஷ்டிராவில் காணப்படும் கடற்கரை நகரமான காஷித் அழகிய காட்சிகளை நம் கண்களுக்கு வழங்குகிறது. மும்பையிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், பூனேவிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படும் இந்த காஷித், வார விடுமுறையில் மகிழ்ச்சியால் நம் மனதினை வருடும் ஒரு இடமாக காணப்படுகிறது.

என்ன செய்யலாம்

குதிரை ஏற்றம், பாராஸ்லைடிங், நீர் விளையாட்டுகள் விளையாடலாம்

எப்படி அடையலாம்

அலிபக்கிலிருந்து 30 கிமீ பயணத்தில் எளிதில் அடையலாம். மும்பை புனே ஆகியவற்றிலிருந்து முறையே 110 கிமீ மற்றும் 170 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

 மராரி பீச்

மராரி பீச்


கேரள மாநிலம் ஆலப்புழாவில் மராரிக்குளம் கிராமத்தை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த மராரி கடற்க்கரை. தனிமையை விரும்புகிறவர்களும், தேனிலவு செல்லவேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஏற்ற இடம் இந்த மராரி பீச். இந்த கடற்கரையை ஒட்டி நிறைய தனியார் தாங்கும் விடுதிகளும், அற்புதமாக பராமரிக்கப்படும் தனியார் கடற்க்கரைகளும் உள்ளன. அருமையான சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடி உங்கள் அன்பானவருடன் காதல் கொண்டு இதழ்பருக அற்புதமான இடம் இந்த மராரி பீச் ஆகும்.

என்ன செய்யலாம்

பின்புலத்தில் நீர் கொண்டு அழகிய புகைப்படங்கள், செல்பிக்களை எடுத்து மகிழலாம்.

நீரில் பயணிக்கலாம்

எப்படி அடைவது

ஆலப்புழாவிலிருந்து தனியார் டாக்ஸி வாகனங்கள் மூலம் எளிதில் இந்த பகுதியை அடையலாம்.

 அகோண்டா பீச்

அகோண்டா பீச்

நிறைந்த அமைதியும், இதமான தட்பவெட்பமும் நிலவும் மாலை வேளையில் இங்கே கூடும் வெளிநாட்டினர் ஒரு குழுவாக யோகா பயிற்சிகளில் ஈடுபடுக்கின்றனர்.சூரியனின் பொன்னிறமான கதிர்களால் தங்க குளம் போல ஒளிரும் அகோண்டா கடற்கரையின் அழகு ததும்பும் ஓர் புகைப்படம்.அகோண்டா கடற்கரையோரத்தில் உள்ள உணவகம் ஒன்றின் வெளியே இருக்கும் விதவிதமான உணவு வகைகளின் பட்டியல்.

More News

    Read more about: travel beach
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+