Search
  • Follow NativePlanet
Share
» »அட இப்படியெல்லாம் கூட தீபாவளி கொண்டாடுவாங்களா? இது சுற்றுலா தீபாவளி!

அட இப்படியெல்லாம் கூட தீபாவளி கொண்டாடுவாங்களா? இது சுற்றுலா தீபாவளி!

அட இப்படியெல்லாம் கூட தீபாவளி கொண்டாடுவாங்களா? இது சுற்றுலா தீபாவளி!

By IamUD

தீபாவளி எனும் பண்டிகை நரகாசுரனை அழித்தது, ராவணனைக் கொன்றது, ஒளித் திருவிழா என பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் மட்டுமல்ல பெயர்களும் பலவாறு அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் தீப ஒளித் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை வட மாநிலங்களில் நரக் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் அங்கு ஓரிரு நாள்கள் முன் பின் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதைவிட முக்கியமான விசயம் என்னெவென்றால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மிகவும் வித்தியாசமான முறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சரி இந்த இடங்களில் எப்படியெல்லாம் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்று காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 முதலில் கோவா

முதலில் கோவா

கோவாவில் தீபாவளி கொண்டாடப்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் கோவாவில் கொண்டாடப்படும் தீபாவளி நமக்கு புதியதாக இருக்கும். அது மிகவும் வித்தியாசமானது. இரண்டு முதல் மூன்று நாட்கள் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தொடங்கட்டும்

தீபாவளி தொடங்கட்டும்

தீபாவளி பண்டிகை கோவாவில் நரக சதுர்த்தி தினத்திலேயே தொடங்கப்பட்டுவிடும். வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து தோரணங்கள் தொங்கவிட்டு, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தீபாவளியை வரவேற்கின்றனர்.

நீங்கள் தவறவிடக் கூடாது

நீங்கள் தவறவிடக் கூடாது

கோவாவின் தீபாவளி கொண்டாட்டத்தில் ஒரு விசயத்தை மட்டும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை தவறவிடவும் கூடாது. அதுதான் நரகனின் உருவ பொம்மை. அத்துடன் கிருஷ்ணரின் பொம்மையும் கூட.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்


வழக்கமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கூறப்படும் கதைதான். கிருஷ்ணர் நரகாசூரனை எதிர்த்து வதம் செய்ததை கொண்டாடும் வகையில் இந்த விழா. மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் புனித திருவிழாவாக நரக சூரன் பொம்மை எரிக்கும் விழா நடக்கும்.

அதனுடன் கூடவே வெடிகளையும் பட்டாசுகளையும் கொழுத்தி போட்டு தீபாவளியை வரவேற்கின்றனர்.

 ஜெய்ப்பூரில் தீபாவளி

ஜெய்ப்பூரில் தீபாவளி

பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரில் தீபாவளி களைகட்டும். தீப ஒளி என்று அழைக்கப்பட்டாலும், தீபங்களால் மின்னும் அழகுடன் சேர்த்து வண்ண மின் விளக்குகளும் ஒளிரவிடப்படும்.

வித்தியாசமான தீபாவளி

வித்தியாசமான தீபாவளி


ஜெய்ப்பூரில் தீபாவளி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுகளோடு வரவேற்கப்படுகிறது. புத்தாடை உடுத்தி இல்லங்கள் தோறும் பண்டிகைகளை வரவேற்கின்றனர் மக்கள்.

வண்ண விளக்குகளின் மின்னும் அழகை கண்டு ரசிப்பதா, புனித தீபத்தின் ஒளியில் எண்ணங்களை தவழ விடுவதா என்று குழம்பிடக்கூடும்.

அம்ரித்சரிலும் தீபாவளி

அம்ரித்சரிலும் தீபாவளி

அம்ரித்சரில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படும். இது இங்கு சீக்கிய பண்டிகையோடு இணைந்து கொண்டாடப்படுகிறது. இரண்டு பண்டிகைகளை ஒரே நேரத்தில் கொண்டாடுகிறார்கள் இவர்கள்.

மின்னும் தங்க ஒளி

மின்னும் தங்க ஒளி


வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபம் சுற்றிலும் அழகிய அம்சங்களால் நிறைந்து காணப்படும் ஒளியில் நம்மை மறந்து ரசிக்க ஏதுவாக இருக்கும்.

இந்த பண்டிகையின் முக்கிய அம்சமே தங்க கோவில்தான். என்னதான் தீபாவளி இந்து மதப் பண்டிகையாக கூறப்பட்டாலும், சீக்கியர்களும் இதன் நினைவைக் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் வெடி வெடிப்பதில்லை.

உங்க ஊர்லதான் அதுக்கு பேரு தீபாவளி இங்க வேற

உங்க ஊர்லதான் அதுக்கு பேரு தீபாவளி இங்க வேற


மகிழ்ச்சியின் நகரமான கொல்கத்தாவில் தீபாவளி குதூகலமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இங்கு பெயர்தான் வேறு.. காளி பூசை. கிருஷ்ணரும் இல்ல ராமரும் இல்ல.. இது காளியோட வதம்னு இந்த பண்டிகைய கொண்டாடுறாங்க. காளி தேவி அரக்கர்களை கொன்ன நினைவுல இந்த பண்டிகை கொண்டாடப்படுது.

வெடிகள் இல்லை

வெடிகள் இல்லை

கொல்கத்தாவில் அதிக அளவு வெடிகள் வெடிப்பதில்லை. அவர்கள் இந்த பண்டிகையை ஒலி இல்லா ஒளித் திருவிழாவாகவே கொண்டாட நினைக்கின்றனர். வண்ண வண்ண ஒளிகள் எழுப்பும் பல விதமான விளக்குகளை கொண்டு அவர்களது வீட்டை அலங்கரிக்கின்றனர்.

இனிப்புகளும், பலகாரங்களும் வீடுகளுக்கு வீடு பரிமாறப்படுகின்றன. தீபாவளியில் அன்பும் பாசமும் ஊட்டப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமூகம் எப்போதும் பண்டிகைகளை எட்டி வைப்பதில்லை.. மாறாக கொண்டாடித் தீர்த்துவிடுகிறது. ஆம். கொண்டாடித் தீர்த்துவிடுவோம்.

Read more about: travel diwali
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X