Search
  • Follow NativePlanet
Share
» »லைப் ரொம்ப போர் அடிக்குதா பாஸ் ?? இந்த இடங்களுக்கு ஒரு தடவை போயிட்டு வாங்க...

லைப் ரொம்ப போர் அடிக்குதா பாஸ் ?? இந்த இடங்களுக்கு ஒரு தடவை போயிட்டு வாங்க...

எப்போதும் டென்ஷன், பரபரப்பு நிறைந்த அயற்சியூட்டும் வாழ்க்கை வாழ்ந்து அலுத்து விட்டதா?. மனதுக்கு புத்துணர்வு தரும் இசை கேட்கவோ, உடலுக்கு வலுவூட்டும் உடற்பயிற்சி செய்யவோ நேரமே இருப்பதில்லையா?. படிக்கலாம் என்று வாங்கி வைத்த புத்தகம் இன்னமும் திறக்கப்படாமலேயே இருக்கிறதா?. என்றாவது ஒருநாள் இவற்றில் இருந்தெல்லாம் விடுதலை கிடைக்காதா என ஏங்குகிறதா மனது?.

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகான வேண்டிய நேரம் வந்து விட்டது. காலம் யாருக்காகவும் காத்திருக்கப்போவதில்லை. செய்ய வேண்டிய கடமைகள் முக்கியம் தான். நம்மை சார்ந்தவர்களின் பாரத்தை நாம் தான் சுமக்க வேண்டும். ஆனால், இவை யாவற்றை காட்டிலும் நமக்காகவும் வாழ்தல் அதனினும் முக்கியம்.

கிடைத்திருக்கும் அற்புதமான இந்த ஒரு வாழ்க்கையை நம் மனதுக்கு பிடித்தபடி வாழ்ந்திடுவோம் வாருங்கள். இந்தியாவில் எந்த தொந்தரவும் இல்லாத, நம்மை நாமாக இருக்க அனுமதிக்கும் அற்புதமான 3 இடங்களை பற்றி அறிந்து கொள்வோம்.

 அகத்தி தீவு :

அகத்தி தீவு :

கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து 459 கி.மீ தொலைவில் லட்சத்தீவு தீவுக்கூட்டத்தில் அமைந்திருக்கும் இடம் தான் அகத்தி தீவு ஆகும். 5.6 கி.மீ நீளமுள்ள இந்த தீவில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கை வெறும் 10,000 தான். சற்றும் மாசுபடாத கடற்கரைகள், இனிமையான சீதோஷணம், சாகச விரும்பிகளுக்கேன்றே ஸ்குபா டைவிங் என முழுமையான சுற்றுலா அனுபவத்தை இந்த தீவில் நாம் பெறலாம்.

Photo:Binu K S

 அகத்தி தீவு :

அகத்தி தீவு :

இந்த தீவுக்கு செல்வதற்கு முன்பாக முறையான அனுமதி பெறவேண்டியது அவசியம். 'அகத்தி தீவு பீச் ரிசார்ட்' மட்டும் 'ஷீ ஷேல்ஸ் பீச் ரிசார்ட்' என இங்குள்ள இரண்டு ஹோட்டல்களில் ஏதேனும் ஒன்றில் நாம் தங்கிக்கொள்ளலாம்.

Photo:Rainer Voegeli

 அகத்தி தீவு :

அகத்தி தீவு :

இந்த தீவை கொச்சியில் இருந்து படகு மூலமோ அல்லது விமானம் மூலமோ சென்றடையலாம். அகத்தி தீவில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் எப்படி அடைவது என்பது பற்றிய மேலதிக தகவல்களை தமிழின் No.1 பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட் தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

 அகத்தி தீவு :

அகத்தி தீவு :

அகத்தி தீவின் பேரழகு நிறைந்த கடற்கரை.

Photo:Sankara Subramanian

 அகத்தி தீவு :

அகத்தி தீவு :

அகத்தி தீவின் பேரழகு நிறைந்த கடற்கரை.

Photo:Sankara Subramanian

 அகத்தி தீவு :

அகத்தி தீவு :

லட்சத்தீவை சுற்றியுள்ள தெள்ளத்தெளிவான கடல்.

Photo: Flickr

 அகத்தி தீவு :

அகத்தி தீவு :

லட்சதீவை சுற்றியுள்ள தெள்ளத்தெளிவான கடல்.

Photo: Flickr

ஏலக்காய் தீவு :

ஏலக்காய் தீவு :

லட்சத்தீவு தீவுக்கூட்டத்தில் அமைந்திருக்கும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளில் காத்மத் தீவு என்றழைக்கப்படும் ஏலக்காய் தீவும் ஒன்றாகும். எப்போதும் மிதமான வெப்பநிலை நிலவும் இந்த தீவை சுற்றியுள்ள கடற்பகுதி மிக தெளிவானதாகவும் பவளப்பாறைகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

Photo:Sankara Subramanian

ஏலக்காய் தீவு :

ஏலக்காய் தீவு :

இதன் காரணமாகவே ஸ்கூபா டைவிங், ஸ்நார்கிலிங்க் போன்ற கடல் சாகச விளையாட்டுகளுக்கு பெயர்போன இடமாக இந்த ஏலக்காய் தீவு திகழ்கிறது. ஒய்யாரமாக கடற்கரையோரத்தில் ஓய்வெடுத்தபடி உங்கள் விடுமுறையை இங்கே கொண்டாடிடுங்கள்.

Photo: Sankara Subramanian

ஏலக்காய் தீவு :

ஏலக்காய் தீவு :

கடற்கரையில் மகிழ்ச்சியாக விடுமுறையை கொண்டாடிடும் சுற்றுலாப்பயணிகள்.

Photo:Sankara Subramanian

ஏலக்காய் தீவு :

ஏலக்காய் தீவு :

இந்த தீவில் அமைந்திருக்கும் பேரழகுடைய ரிசார்ட் ஒன்று.

Photo:cprogrammer

ஏலக்காய் தீவு :

ஏலக்காய் தீவு :

ஏலக்காய் தீவில் உள்ள கடற்கரை.

Photo:Oscar

ஏலக்காய் தீவு :

ஏலக்காய் தீவு :

கடற்கரையோரத்தில் காலாற நடந்துசெல்ல இதைவிட சிறந்த இடம் இருக்க முடியுமா என்ன..?

Photo: Flickr

ஹேவ்லாக் தீவு :

ஹேவ்லாக் தீவு :

சொர்க்கம் என்ற ஒன்று எப்படியிருக்கும் என்று நம்மில் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருமுறை அந்தமான் தீவுகளில் இருக்கும் ஹேவ்லாக் தீவுக்குசென்றால் ஒருவேளை சொர்க்கம் இப்படித்தான் இருக்குமோ என்று நிச்சயம் நினைக்க தூண்டும். அவ்வளவு அழகான இடங்களையும் அற்புதமான கடற்கரையையும் கொண்டுள்ளது இவ்விடம்.

Photo: Flickr

ஹேவ்லாக் தீவு :

ஹேவ்லாக் தீவு :

அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து 57 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த தீவில் உள்ள ராதா நகர் கடற்கரை ஆசியாவின் சிறந்த கடற்கரையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Photo: Flickr

ஹேவ்லாக் தீவு :

ஹேவ்லாக் தீவு :

உங்கள் அன்பு மனைவியுடனோ, காதலியுடனோ தேனிலவுக்கு வர மிகச்சிறந்த இடம் இந்த ஹேவ்லாக் தீவு ஆகும். வேறு எந்த இடத்திலும் இல்லாத அம்சமாக இந்த கடற்கரையில் யானையின் மீது அமர்ந்து சவாரி செய்யலாம் . ஸ்கூபா டைவிங், ஸ்நார்கிலிங்க் போன்ற கடல் விளையாட்டுகளும் இங்கே நடத்தப்படுகிறது.

Photo: Flickr

ஹேவ்லாக் தீவு :

ஹேவ்லாக் தீவு :

ஹெவ்லொக் ஹேவ்லாக் தீவின் சில அற்புதமான புகைப்படங்கள்.

தெள்ளத்தெளிவான கடற்கரையில் விளையாடும் சுற்றுலாப்பயணிகள்.

Photo: Flickr

ஹேவ்லாக் தீவு :

ஹேவ்லாக் தீவு :

ஹெவ்லொக் ஹேவ்லாக் தீவின் சில அற்புதமான புகைப்படங்கள்.

Photo: Flickr

ஹேவ்லாக் தீவு :

ஹேவ்லாக் தீவு :

ஹெவ்லொக் ஹேவ்லாக் தீவின் சில அற்புதமான புகைப்படங்கள்.

ஸ்குபா டைவிங் மூலம் இந்த தீவை சுற்றியுள்ள கடற்பகுதியில் இருக்கும் அற்புதமான பவளப்பாறைகளை நாம் காணலாம்.

Photo: Flickr

ஹேவ்லாக் தீவு :

ஹேவ்லாக் தீவு :

ஹெவ்லொக் ஹேவ்லாக் தீவின் சில அற்புதமான புகைப்படங்கள்.

கோடைவிடுமுறையை கொண்டாடிட மிகச்சிறந்த இடங்களில் இந்த ஹேவ்லாக் தீவும் ஒன்றாகும். சென்னையில் இருந்து விமானம் மற்றும் படகு மூலம் இந்த இடத்திற்கு நாம் வரலாம்.

Photo: Flickr

Read more about: lakshadweep andaman havelock
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X