உயரமான ஒரு இடத்திலிருந்து அல்லது பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்து வான்வெளியில் பறக்கும் ஒரு அற்புத நிகழ்வுக்கு ஸ்கைடைவிங் அல்லது பாராசூட்டிங் என ஆங்கிலத்தில் பெயர். வானில் பறக்கும் நிகழ்வு மனிதர்களால் சாத்தியப்படாது என்ற நிலை இருந்தாலும் பாராசூட் உதவியுடன் வான்வெளியில் குதித்து பறந்து ஒரு வித்தியாசமான உணர்வை அளிக்கும் இந்த செயலை முழு பாதுகாப்புடன் இந்தியாவில் சில இடங்களில் செய்ய முடியும். இதற்கென தனிப்பட்ட முன்னணி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சரி வாருங்கள் என்னென்ன இடங்களில் இது போன்ற பயிற்சிகள் நடந்துவருகின்றன என்பதை பார்க்கலாம்.

அட்ரினலை அலறச் செய்யும் சாகசம்
நீங்கள் சாகச பிரியர்களாக இருக்கலாம். அட்ரினல் சுரப்பியை எகிறச் செய்யும் சாகசங்களை புரிய தயாராக இருப்பீர்கள் என்றால் வானிலிருந்து குதிக்கும் நிகழ்வுக்கு தயாராகிவிட்டீர்களா?
பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதிக்கும் அனுபவத்தை கற்பனை செய்ததுண்டா.. நினைத்து பாருங்கள்... வானில் சில ஆயிரம் அடிகள் தூரம் சென்றதுமே நம் பூமி வித்தியாசமாக காட்சியளிக்கும்.
மேகங்களுக்கு மேல் நின்று காற்றின் அலசல் களினூடே பூமியைக் காண்பது சிறப்பானதாகவே இருக்கும். ஆனால் நீங்கள் நினைக்கும் அளவுக்கு அத்தனை ஸ்லோ மோசனில் காண்பது கடினம்தான்.
கொஞ்சம் வேகமாக மண்ணை நோக்கி வருவீர்கள் வானில் பறப்பீர்கள் பாராசூட்டில் பறக்கும் உணர்வு மிகவும் சுவாரசியமானதாகவே இருக்கும்.
Skydive Andes Chile

உண்மையில் எத்தனை வான்பறக்கும் நிகழ்வுகள்
ஸ்கை டைவிங்கில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது தெரியுமா?
அ. தாண்டெம் ஜம்ப்
தாண்டெம் ஜம்ப் எனப்படும் ஸ்கை டைவிங்க் செய்யும்போது நம்முடன் பயிற்சியாளர் ஒருவர் கூடவே இருப்பார். அவர் நமக்கு ஆலோசனைகளை வழங்கியபடி நம்முடனேயே குதிப்பார். அவர் பாராசூட்டை இயக்குவது முதலிய விசயங்களை பார்த்துக்கொள்வார். பெரும்பாலும் புதிதாக செல்பவர்களுக்கு இந்த முறையே தரப்படுகிறது. நீங்கள் பறக்கும் அனுபவத்தை மட்டும் உணர்ந்தால் போதும்.
பாராசூட் செயல்பாடு
குதித்தவுடன் சில நொடிகளில் உங்கள் பயிற்சியாளர் பாராசூட்டை திறப்பார். இதனால் நீங்கள் இருவரும் வானில் பறப்பீர்கள். அதன்பின் அவர் ஆலோசனைகளை வழங்குவார். அப்போது அவர் கூறியபடி நீங்கள் நடந்துகொள்ளவேண்டும்.
இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இது எல்லாமே ஒரு கேமராவில் படம்பிடிக்கப்படும். அவை சுவாரசியமானதாக இருக்கும். இப்படி ஒரு அனுபவத்தை வாழ்வில் மறக்கவே மாட்டீர்கள் நீங்கள்.
Skydive Andes Chile

ஆ. ஸ்டேட்டிக் லைன் ஜம்ப்
இது மூவாயிரம் அடி உயரத்தில் இருந்து குதிக்கும் ஒரு நிகழ்வாகும்.
இதற்கு 6 மணி நேரம் வரை பயிற்சி அளிக்கப்படும்.
பறக்கும் விமானத்திலிருந்து நீங்கள் கீழே குதிக்கும்போது, உங்கள் உடலில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அது விமானத்துடன் பிணைக்கப்பட்டிருக்கும்.
பாராசூட் செயல்பாடு
இந்த முறையில் பாராசூட் ஆனது தானாகவே திறந்து கொள்ளும். வேகமாக பறந்து கொண்டிருக்கும்போது பாராசூட் திறந்து உங்களை வானில் மிதக்கச் செய்யும்.
இந்த நிகழ்வையும் நீங்கள் படம்பிடித்துக்கொள்ளலாம். இதில் பயிற்சியாளர்கள் இல்லை என்பதும், இது ஆட்டோமேட்டிக் பாராசூட் என்பதும் உங்களுக்கு நினைவில் இருக்கவேண்டும். முறையான பயிற்சி இன்றி இதை செயல்படுத்துதல் ரிஸ்க்கான விசயமாகும்.
Nd0806

இ. ஆக்லரேட்டட் ஃப்ரீ ஃபால்
இதுதான் உங்கள் தன்னம்பிக்கை துணிச்சல் ஆகியவற்றின் அடித்தளத்தை அசைத்து பார்க்கும் நிகழ்வாகும். 13000 அடியிலிருந்து 10000 அடி வரையிலான உயரத்தில் (அதிகபட்சமாக) இருந்து குதித்து வானில் பறக்கும் நிகழ்வு இது. இதில் உங்களுக்கு பல கட்ட பயிற்சிகள் தரப்படும். ஆனால் இதில் உங்களுக்கு பயிற்சியாளர் இருக்கமாட்டார்.
பாராசூட் செயல்பாடு
இதை இயக்க உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். விமானத்திலிருந்து குதித்ததும் எத்தனை விநாடிகள் கழித்து இதை திறக்கவேண்டும் என்பது உட்பட பல கட்ட பயிற்சிகளுக்கு பிறகே உங்களை ஸ்கை டைவிங்க் செய்ய அனுமதிப்பர்.
Marines

இதற்கான படிப்புகள்
அ. முதல் வான்குதித்தல் படிப்பு
ஆ. தனிமையில் வான்குதித்தல் படிப்பு
ஸ்கை டைவிங் குறித்து படிக்க நினைக்கும் சாகச பிரியர்களுக்கு இந்த படிப்பு மிகவும் உதவும். முதல் பிரிவில் பாராசூட் பயிற்சி, தற்காப்பு பயிற்சி என ஸ்கை டைவிங்க் செய்வதற்கு ஏற்ற பயிற்சிகள் அனைத்து வழங்கப்படும். இதற்கான கட்டணங்கள் அதற்குரிய பயிற்சிகளுக்கு ஏற்றவாறு பெறப்படுகின்றன.
Peter Sobchak

மைசூர்
சாமுண்டி மலையின் அடிவாரத்தில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. விருப்பமுள்ளவர்கள் மைசூர் சாமுண்டி மலைக்கு செல்லும்போது இதை காணமுடியும்.
ஸ்கை டைவிங்க் அனுபவத்துக்கு மிக அழகான இடம் இதுவாகும். மேலும் இந்த மலை சுற்றுலா அம்சங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
சாமுண்டி மலையின் அழகு
சாமுண்டி மலைகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் உள்ளன. மைசூர் நகருக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது. இந்த சாமுண்டி மலையின் உச்சியில் பார்வதி தேவியின் அவதாரமான சாமூண்டீஸ்வரி அம்மனின் கோயில் அமைந்துள்ளது. இந்த தெய்வம் உடையார் ராஜ வம்சத்தினரின் குல தெய்வமாகும்.
11 ஆம் நூற்றான்டில் கட்டப்பட்ட இந்த கோயில் 1827 ஆம் ஆண்டு மைசூர் மன்னர்களால் புதுப்பிக்க பட்டதாக வரலாறு கூறுகிறது. கோயில் எதிரில் அசுர வம்ச மன்னனான மகிஷாசுரனின் பிரம்மாண்ட சிலை அமைந்துள்ளது.சாமுண்டி மலையில் மற்றொரு குறிப்பிடத் தக்க அம்சம் இங்கு அமைந்துள்ள நந்தி சிலை ஆகும்.
5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட சிலை ஒரே ஒரு கருப்பு சலவைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது இதன் விசேஷமாகும். இந்த மலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் ஹனுமானுக்குமான ஒரு சிறிய கோயில் அமைந்துள்ளது. இது காலை 7.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும், அதன் பின்னர் மதியம் 3.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும் பக்தர்களுக்கு திறந்து விடப்படுகிறது.
சாமுண்டி மலை உச்சியிலிருந்து கீழே பார்த்தால் சுற்றுலாப்பயணிகளுக்கு மைசூர் நகரம் முழுவதும் காட்சிக்கு தெரியும் என்பது சாமுண்டி மலையின் மற்றொரு சிறப்பம்சம்.
wiki

தீஸா
குஜராத் மாநிலத்தின் இந்த தீஸா நகரில் மூன்று விதமான ஸ்கை டைவிங் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவை மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். வானில் வேகமாக சென்று விமானத்திலிருந்து கீழ குதித்து நிறமற்ற காற்றையும் நீல நிற வானையும் ஒருங்கே எதிர்கொண்டு கீழிறங்கும் வேளையில் கண்ணுக்கு தெரியும் அட்டகாசமான காட்சியை கண்கொள்ளாமல் உணரும் தருணத்தை பெற இன்றே புறப்படுங்கள்.
Tony Danbury

பாண்டிச்சேரி
ஸ்டேட்டிக் லைன் மற்றும் டேன்டம் ஜம்ப் ஆகிய இரு ஸ்கை டைவிங் பயிற்சிகளும் இங்கு தரப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இந்த இடம் மிகச் சிறந்த விடுமுறை தின சுற்றுலாத் தளமாக திகழ்கிறது. பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வருபவர்கள் நிச்சயம் இந்த பயிற்சி நடைபெறும் இடத்துக்கு சென்று காணலாம்.
ஆரோவில் நகரம்
பாண்டிச்சேரி நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும் ஆரோவில் நகரம், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களையும், கலாச்சாரங்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது. 50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய இந்த நகரம் ஒரு சர்வதேச நகரமாகும். சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் இருக்கும் ஆரோவில் கலாச்சார அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ளது.
தாவரவியல் பூங்கா
1826-ம் ஆண்டு சி.எஸ்.பெர்ரோடெட் என்பவரால் பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் நிறுவப்பட்டது. இந்த பூங்காவில் இருக்கும் அரிய தாவர இனங்கள் அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்து இழுப்பதாக உள்ளன. 22 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் ஆகியவை பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளிவரும் தெற்கு புற நுழைவாயிலுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது
Ronald Saunders

தானா
தானாவிலும் இதுபோன்ற ஸ்கைடைவிங்க் பயிற்சிகள் கிடைக்கின்றன. இங்கு அதிக அளவில் கேம்ப்கள் நடத்தப்படுகின்றன. உள்ளுக்குள் இருக்கும் பய உணர்வை கிழித்து எறிந்துவிட்டு வெளியே வாருங்கள் இங்கு பறக்கலாம்.
Richard Schneider

ஆம்பி பள்ளத்தாக்கு
இந்தியாவின் மிகச் சிறந்த ஸ்கை டைவிங் பயிற்சி தளம் இதுவாகும். புனே அருகிலுள்ள இந்த இடத்துக்கு புனேவுக்கு செல்லும் ஒவ்வொருவரும் நிச்சயமாக செல்லவேண்டும். குறைந்தபட்சம் பறப்பவர்களையாவது காணவேண்டும். இந்த உலகம் சமுதாயம் என்பது எத்தனை அடிமைத்தனமானது என்பதை இந்த பறக்கும் நிகழ்வு உங்களுக்கு புரிய வைத்துவிடும். இதுபோன்ற மேலும் பல கட்டுரைகளுக்கு மேல இருக்குற பெல் பட்டன தட்டி சப்ஸ்கிரைப் பண்ணுங்க.. உடனுக்குடன் நமது தள அப்டேட்டை பெறுங்க..
Richard Schneider



Click it and Unblock the Notifications




