Search
  • Follow NativePlanet
Share
» »குழந்தைகளின் விடுமுறைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? குடும்பத்துடன் இங்கே ட்ரிப் அடித்து விட்டு வாருங்கள்!!!

குழந்தைகளின் விடுமுறைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? குடும்பத்துடன் இங்கே ட்ரிப் அடித்து விட்டு வாருங்கள்!!!

உங்கள் வீட்டு செல்லப்பிள்ளைகளின் விடுமுறைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? கவலையே வேண்டாம்! மூன்று முதல் நான்கு நாட்களில், பட்ஜெட் ஃபிரண்ட்லியாக ஒரு ட்ரிப் அடித்துவிட்டு வரலாமே! பரபரப்பான வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து சற்று ஓய்வுப்பெற இதுவே நேரம். தென்னிந்தியா ஒரு தனித்துவமான மற்றும் சுற்றுலா வளம் நிறைந்த ஒரு பகுதியாகும், இந்தியாவின் இந்தப் பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை மற்ற எவற்றோடும் ஒப்பிடமுடியாது. வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சாம்ராஜ்யத்தின் வரலாற்றுடன் இணைந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கோடை சுற்றுலாத் தலங்களின் பட்டியல் உங்களுக்கு ஒரு புத்துணர்வை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய சில முக்கியமான மற்றும் நம்பிக்கைக்குரிய இடங்கள் இதோ உங்களுக்காக!

https://www.google.co.in/search?q=kumarakom+native+planet&tbm=isch&ved=2ahUKEwiwzrT42LP4AhUTgWMGHfkFCxYQ2-cCegQIABAA&oq=kumarakom+native+planet&gs_lcp=CgNpbWcQAzoECCMQJzoECAAQQzoECAAQGFCTC1iOZmCCcGgAcAB4AYABnwGIAdEOkgEEMTAuOJgBAKABAaoBC2d3cy13aXotaW1nwAEB&sclient=img&ei=LQmsYvCDKZOCjuMP-YussAE&bih=664&biw=1538#imgrc=qpnts0h9gEKOFM

குத்ரேமுக், கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள அமைதியான மலைவாசஸ்தலமான குத்ரேமுக், அடர்ந்த காடுகள் மற்றும் பசுமையான புல்வெளிகளால் உருவாக்கப்பட்ட இயற்கை அழகுக்காக பிரபலமானது. குத்ரேமுக் சிகரத்தின் வடிவம் குதிரையின் முகத்தை ஒத்திருப்பதால் அதற்கு குத்ரேமுக் என்று பெயர் வந்தது. ட்ரெக்கிங் செய்பவர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடமாக திகழும் குத்ரேமுக் பல்லுயிர் பெருக்கத்தின் நகரமாக, சுற்றிப் பார்ப்பதற்கு பல இடங்களைக் கொண்டுள்ளது. அதில் குத்ரேமுக் தேசிய பூங்கா, ஹனுமான் கண்டி நீர்வீழ்ச்சி, கங்கமூலா, லக்யா அணை, ஹொரநாடு மற்றும் கடம்பி நீர்வீழ்ச்சி ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். ஜூன் மாதத்தில் சராசரி வெப்பநிலையானது 24 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை நிலவும். குத்ரேமுக்கை அடைய மங்களூர் விமான நிலையம் அல்லது மங்களூர் ரயில் நிலையத்தை உபயோகிக்கலாம் அல்லது சாலை மார்க்கமாக பயணிக்கலாம்.

https://www.google.co.in/search?q=kumarakom+native+planet&tbm=isch&ved=2ahUKEwiwzrT42LP4AhUTgWMGHfkFCxYQ2-cCegQIABAA&oq=kumarakom+native+planet&gs_lcp=CgNpbWcQAzoECCMQJzoECAAQQzoECAAQGFCTC1iOZmCCcGgAcAB4AYABnwGIAdEOkgEEMTAuOJgBAKABAaoBC2d3cy13aXotaW1nwAEB&sclient=img&ei=LQmsYvCDKZOCjuMP-YussAE&bih=664&biw=1538#imgrc=qpnts0h9gEKOFM

குமரகம், கேரளா

அமைதியான வேம்பநாடு ஏரியின் கரையில் அமைந்துள்ள குமரகம், அதன் மினுமினுக்கும் உப்பங்கழிகளுக்கு பெயர் பெற்றது. தென்னந்தோப்புகளுக்கு இடையே படகில் அமர்ந்து இயற்கை காட்சிகளை ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். சைபீரியன் நாரை, ஈக்ரெட்ஸ், நீர்ப்பறவைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இப்பகுதியின் பறவைகளை ஆராய்வதோடு நீங்கள் இங்கு மீன் பிடித்து மகிழலாம். குமரகம் பறவைகள் சரணாலயம், அருவிக்குழி நீர்வீழ்ச்சி, குமரகம் கடற்கரை, வேம்பநாடு ஏரி மற்றும் ஜமா மஸ்ஜித் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். குமரகத்தில் பகலில் சராசரி வெப்பநிலை 35 செல்சியஸாகவும், இரவில் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கொச்சி விமான நிலையம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், கோட்டயம் ரயில் நிலையம் மற்றும் சாலை மார்க்கமாக குமரகத்தை அடையலாம்.

https://www.google.co.in/search?q=kodaiknal+native+planet&tbm=isch&ved=2ahUKEwjezb7Q2LP4AhUvxaACHe36BuwQ2-cCegQIABAA&oq=kodaiknal+native+planet&gs_lcp=CgNpbWcQAzoECCMQJzoECAAQQzoECAAQGFDwCVjnRWDdTGgAcAB4AIAB_waIAfgVkgELNi42LjEuMS42LTGYAQCgAQGqAQtnd3Mtd2l6LWltZ8ABAQ&sclient=img&ei=2QisYp79Oa-Kg8UP7fWb4A4&bih=664&biw=1538#imgrc=AbytNC4dJ_ykaM

கொடைக்கானல், தமிழ்நாடு

அதன் கனவு மற்றும் காதல் அதிர்வு காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் குறிப்பாக ஜூன் மாதத்தில் பயணம் செய்வது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது. நீங்கள் இங்கு படகு சவாரி செய்யலாம், தலையார் நீர்வீழ்ச்சி, மன்னவனூர் ஏரி, செட்டியார் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு வியூவுக்கு சென்று வரலாம். மறக்காமல் வட்டக்கானலில் ஷாப்பிங் செய்யுங்கள். ஜூன் மாதத்தில் கொடைக்கானலில் வெப்பநிலை 23.5 முதல் 32.1 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மதுரை சர்வதேச விமான நிலையம், கோடை சாலை ரயில் நிலையம் மற்றும் சாலை மார்க்கமாக கொடைக்கானலை அடையலாம்.

https://www.google.co.in/search?q=coorg+native+planet&tbm=isch&ved=2ahUKEwiu6LDB2LP4AhXAxqACHRc-DLsQ2-cCegQIABAA&oq=coorg+native+planet&gs_lcp=CgNpbWcQAzoECCMQJzoECAAQQzoECAAQGFDoCFiaLmD8PmgAcAB4AIABmQGIAYkMkgEDOS41mAEAoAEBqgELZ3dzLXdpei1pbWfAAQE&sclient=img&ei=ugisYq6jEMCNg8UPl_yw2As&bih=664&biw=1538#imgrc=wYZBjA0vxVlJfM

மூணாறு, கேரளா

மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1600 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த பிரபலமான மலைவாசஸ்தலம் காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கோடைகால ஓய்வு விடுதியாக இருந்தது. இந்த விசித்திரமான சிறிய நகரம் பசுமையான காடுகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் நீலகிரி தஹ்ர் போன்ற வனவிலங்குகள், நீலக்குறிஞ்சி போன்ற தாவரங்களுக்கு தாயகமாக உள்ளது. மக்கள் அழகிய பள்ளத்தாக்கில் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் இந்த மலைப்பகுதி அமைதியான ஏரிகள், ஆறுகள் மற்றும் பாறை நிலப்பரப்புகளால் நிறைந்துள்ளது. பைக்கிங், ட்ரெக்கிங், கேம்பிங், டீ எஸ்டேட் சுற்றுலா மற்றும் பலவற்றையும் நீங்கள் அனுபவிக்கலாம். கொச்சி சர்வதேச விமானநிலையம் மூலமாகவோ அல்லது கொடைக்கானலில் இருந்து சாலை மார்க்கமாகவோ நீங்கள் மூணாறை அடையலாம்.

https://www.google.co.in/search?q=coorg+native+planet&tbm=isch&ved=2ahUKEwiu6LDB2LP4AhXAxqACHRc-DLsQ2-cCegQIABAA&oq=coorg+native+planet&gs_lcp=CgNpbWcQAzoECCMQJzoECAAQQzoECAAQGFDoCFiaLmD8PmgAcAB4AIABmQGIAYkMkgEDOS41mAEAoAEBqgELZ3dzLXdpei1pbWfAAQE&sclient=img&ei=ugisYq6jEMCNg8UPl_yw2As&bih=664&biw=1538#imgrc=wYZBjA0vxVlJfM

முதுமலை, தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள இந்த அழகிய இடம், அழிவின் விளிம்பில் உள்ள புலிகளை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள முதுமலை தேசிய பூங்காவிற்கு இது மிகவும் பிரபலமானது. எந்தவொரு விலங்கு பிரியரும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பார்க்கவே விரும்புவார்கள். அதற்கு இதுவே ஒரு சிறந்த இடமாகும். ஜங்கிள் சஃபாரி மற்றும் தெப்பக்காடு யானைகள் முகாம் ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். புலிகள், சோம்பல் கரடிகள், கோடிட்ட ஹைனாக்கள், தங்க நரிகள் மற்றும் ஆசிய யானைகளைக் காண முதுமலை தேசியப் பூங்காவிற்குச் செல்லுங்கள். ஜூன் மாதத்தில் முதுமலையில் வெப்பநிலை 20-37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. கோயம்புத்தூர் விமான நிலையம், கோயம்புத்தூர் ரயில் நிலையம் அல்லது சாலை மார்க்கமாக முதுமலையை அடையலாம்.

https://www.google.co.in/search?q=coorg+native+planet&tbm=isch&ved=2ahUKEwiu6LDB2LP4AhXAxqACHRc-DLsQ2-cCegQIABAA&oq=coorg+native+planet&gs_lcp=CgNpbWcQAzoECCMQJzoECAAQQzoECAAQGFDoCFiaLmD8PmgAcAB4AIABmQGIAYkMkgEDOS41mAEAoAEBqgELZ3dzLXdpei1pbWfAAQE&sclient=img&ei=ugisYq6jEMCNg8UPl_yw2As&bih=664&biw=1538#imgrc=wYZBjA0vxVlJfM

குடகு, கர்நாடகா

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று குறிப்பிடப்படும் குடகு தென்னிந்தியாவில் உள்ள சிறந்த மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். கம்பீரமான அழகு, சாகச விளையாட்டு மற்றும் பசுமையான சூழல் ஆகியவற்றிற்கு பெயர் போன இந்த இடம் ஆண்டு முழுவதும் விடுமுறை செல்ல ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது. அபே நீர்வீழ்ச்சி, துபாரே யானைகள் முகாம், ராஜா இருக்கை, நாகர்ஹோலே தேசிய பூங்கா, ஓம்காரேஸ்வரா கோயில், மடிகேரி கோட்டை, பிரம்மகிரி மலைகள், தலக்காவேரி, பொற்கோயில் பைலகுப்பே ஆகியவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். ஜூன் மாதத்தில் குடகில் வெப்பநிலை 20-28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. கோழிக்கோடு ரயில்வே நிலையம் வாயிலாகவோ அல்லது கோழிக்கோட்டில் இருந்து சாலை மார்க்கமாகவோ குடகை அடையலாம்.

https://www.google.co.in/search?q=waynad+native+planet&tbm=isch&ved=2ahUKEwjezb7Q2LP4AhUvxaACHe36BuwQ2-cCegQIABAA&oq=waynad+native+planet&gs_lcp=CgNpbWcQAzoECCMQJzoECAAQQzoECAAQGFCqCVj7KWCNLWgAcAB4AIABuwGIAZ8KkgEEMTAuM5gBAKABAaoBC2d3cy13aXotaW1nwAEB&sclient=img&ei=2QisYp79Oa-Kg8UP7fWb4A4&bih=664&biw=1538

வயநாடு, கேரளா

வயநாடு அதன் பெயருக்கு ஏற்றாற்போலவே வயல்களுக்கு நடுவே அழகான சொர்க்கம் போல காட்சியளிக்கிறது. முற்றிலும் பசுமையால் சூழப்பட்டுள்ள இந்த நகரம் நீரோடைகளால் பிரிக்கப்படுகின்றது. மீன்முட்டி நீர்வீழ்ச்சி, செம்ப்ரா சிகரம், திருநெல்லி கோயில் மற்றும் கந்தன்பாரா நீர்வீழ்ச்சி ஆகியவை வயநாட்டில் பார்க்க வேண்டிய இடங்களாகும். ஜூன் மாதத்தில், வயநாட்டில் வெப்பநிலை சுமார் 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோழிக்கோடு ரயில்வே நிலையம் வாயிலாகவோ அல்லது கோழிக்கோட்டில் இருந்து சாலை மார்க்கமாகவோ வயநாட்டை அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X