Search
  • Follow NativePlanet
Share
» »கோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க!

கோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க!

கோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே சொல்லுங்க!

By IamUD

சென்னையிலிருந்து ஆரம்பித்து தெற்கே கன்னியாகுமரி வரை மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் முன்பு வரை மதராச மாநிலமாக இருந்த தமிழகம், இயற்கை வனப்பிலும், சுற்றுலா சிறப்பிலும் பெருமை கொண்டு விளங்கியது. கர்நாடகமும், கேரளமும் பிரிக்கப்பட்டதும் கிட்டத்தட்ட மலைகள், காடுகள் என பல இயற்கைகள் எல்லை பிரிக்கப்பட்டன. அதன்பின்பும் எஞ்சிய மலைகளும் காடுகளும் தமிழகத்தை வளமாக்கிக் கொண்டுதான் இருந்தன. என்றாலும், நதிகள் உற்பத்தியாகும் இடங்களும் காடுகளும், அணைகளும் அண்டை மாநிலங்களில் சிக்கிக்கொண்டதால், தமிழகம் வறண்ட பூமியாக மாறி வருகிறது. அதற்காக தமிழகத்தை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம். வடதென் மேல் கீழ் திசைகளில் திசைகளுக்கொன்று இரண்டாய் இயற்கை எழில் கொஞ்சி விளையாடுகிறது. வாருங்கள் நால்திசைகளிலும் எந்தெந்த இடங்கள் சிறந்தவை என்று ஒரு ஒப்பீடு செய்து பார்ப்போம்.

மலைத் தொடர்களும் மலை சுற்றுலாவும்

மலைத் தொடர்களும் மலை சுற்றுலாவும்

எங்கே நோக்கினும் பச்சை வெளிகளும், இயற்கை காதலும், மனம் நிறைய அமைதியும் வளமும் மண் வாசமும் இயற்கையின் ஈரப்பதமும் நிறைந்து காணப்படும் மலைகளும், அவற்றின் சுற்றுலா அம்சங்களும் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

இன்னொரு பகுதியில் மலைகள் இருந்தாலும் அவை அந்த அளவுக்கு பசுமையாக இல்லாமல், சீசன்களின்போது மட்டும் பசுமை தோல் போர்த்தி நிற்கின்றன. வாருங்கள் நால் திசைகளிலும் மலைகளில் எவை சிறப்பு என்று காணலாம்.

Arunchaitanya Mandalapu

 நால் திசை மலைகள்

நால் திசை மலைகள்

பொதுவாக தமிழகத்தின் மலைகள் என்று எடுத்துக்கொண்டால், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடைக்கானல்,ஏற்காடு, வால்பாறை, தேனி, ஏலகிரி, கொல்லிமலை ஆகியவை முக்கியமாக குறிப்பிடவேண்டியவை ஆகும்.

இவற்றில் அதிகம் கோவையை முன்னிறுத்தும் மேற்கு பகுதியிலேயே இருக்கின்றன.

வடக்கு திசையில் ஏலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மலைகளும், தென் திசையில், குற்றாலம், பாபநாசம், மேகமலை உள்ளிட்ட மலைகளும் சுற்றுலாத் தளங்களாக இருக்கின்றன.

Mprabaharan

மாநகரங்கள்

மாநகரங்கள்

தமிழகத்தின் நான்கு திசைகளிலும் மாநகரங்கள் வளர்ச்சி பெற்று, நல்ல வசதிகளுடன் காட்சி தருகின்றன. தொழில் வளர்ச்சியுடன் கட்டமைப்பு வளர்ச்சியும் கொண்டு அமைந்துள்ள இந்த மாநகரங்களைப் பற்றி பார்க்கலாம்.

வடக்கு திசையில் குறிப்பிடும்படியாக, சென்னை மிகப்பெரிய மாநகரமாக திகழ்கிறது. இதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் வேலூரை குறிப்பிடும்படியான மாநகரம் என்று சொல்லமுடியும்.

அதே நேத்தில் மேற்கில், கோவை மிகப் பெரிய மாநகராக வளர்ந்து நிற்கிறது. அதைத் தொடர்ந்து ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் என அடுத்தடுத்த நகரங்கள் மாநகரங்களாக வளர்ச்சியடைந்து வந்துகொண்டே இருக்கின்றன.

தஞ்சாவூரை விட வளர்ச்சியடைந்த மாநகராக திருச்சி இருந்தாலும், இந்த பகுதியில் வேறெந்த நகரங்களும் அந்த அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில் இல்லை.

தென்னகத்தில் மதுரையிலிருந்து, குமரி வரை இடையில் திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய வளர்ந்து வரும் மாநகரங்களாக இருக்கின்றன. குமரி சுற்றுலா மாநகராக திகழ்கிறது. சரக்கு கப்பல் போக்குவரத்தின் காரணமாக தூத்துக்குடி அடுத்த நிலை மாநகராக இருக்கிறது.

VtTN

அட்டகாச காடுகள் பல்கிப் பெருகும் உயிர்கள்

அட்டகாச காடுகள் பல்கிப் பெருகும் உயிர்கள்

ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டில் வாழும் மக்களை மட்டுமல்ல, அங்குள்ள காடுகள் மற்றும் உயிரிகளின் வளத்தையும் சேர்த்தே பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரந்து விரிந்த காடுகள் அங்கு பல்வேறு உயிர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த காடுகள் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டாலும் மேற்கு மற்றும் தெற்கு நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகிறது. இயல்பிலேயே காடுகளாக இருக்கும் மேற்கு பகுதிகளும், பகுதி காடுகள் நிறைந்த தென்னகமும் இந்த விசயத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.

தமிழகத்தின் 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 22,643 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே காடுகள். இது தமிழ்நாட்டின் முழுநிலப்பரப்பில் 15 சதவீதம் மட்டுமே. அதிலும் பெரும்பாலும் மேற்கு திசையிலேயே காணப்படுகின்றன.

மேற்கு திசையில், முதுமலைக் காடுகளும், தென் திசையில் முண்டந்துரை காடுகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இதையடுத்து சத்தியமங்கலம் காடுகள், ஜவ்வாது மலை, பச்சைமலை, கொல்லிமலை, வல்லநாடு காடுகள் என பகுதி காடுகளும் இருக்கின்றன.

Suniltg

கடற்கரைகள்

கடற்கரைகள்

எப்படி காடுகளும், மலைகளும் ஒரு நாட்டின் வளங்களாக கருதப்படுகிறதோ அதுபோல கடற்கரைகளும் சிறந்த வளமாகும். சொல்லப்போனால் மற்றதை காட்டிலும் வெளிநாட்டு தொடர்புக்கு ஏற்ற சிறந்த ஊடகமாக கடற்கரைகள் திகழ்கின்றன. அதிக எடை கொண்ட சரக்குகள் கொண்டு செல்ல ஒரு நாட்டின் கடலே அடிப்படையாக இருக்கிறது. தமிழகமும் நல்ல நிலையிலான கடற்கரைகளை கொண்டது.

சென்னை மெரினாவில் தொடங்கி, கடலூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என வடக்கு, கிழக்கு, தெற்கு வரை பரந்து விரிந்து காணப்படுகிறது கடற்கரைகள். அவற்றுள் மிக முக்கியமானவைகளாக

மெரினா, வேளாங்கன்னி, கோவளம், மஹாபலிபுரம், தரங்கம்பாடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம்,நாகப்பட்டினம், கடலூர், உவரி, கன்னியாகுமரி கடற்கரைகள் இருக்கின்றன.

மேற்கு திசையில் கடற்கரையே இல்லை. இந்த ஒரு விசயத்தில் மட்டும் மற்ற திசைகளை விட மேற்கு திசைப் பகுதிகள் அதன் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிவிட்டது. ஆனால் அவர்கள் அதற்காக கவலைப்பட தேவையில் கேரளத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.

Darshika28

ஆன்மீகத் தலங்கள்

ஆன்மீகத் தலங்கள்

தமிழகத்தில் ஆன்மீகத்துக்கா பஞ்சம், குமரியில் தொடங்கி சென்னை வரையிலும், கோவையில் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலும் ஏகப்பட்ட இறை தளங்கள் இருக்கின்றன.

நாகூர் தர்கா, சாந்தோம் தேவாலயம், காஞ்சி கோவில் என்றாலும் எத்தனை மதங்கள் இருந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதற்கு சான்றாகவே இத்தனை மத கோவில்களும் இருக்கின்றன.

வேளாங்கன்னி, ராமேஸ்வரம், பழனி, சுவாமி மலை, திருச்செந்தூர், ஆலங்குடி என ஏகப்பட்ட கோவில்களும், ஆலயங்களும், மசூதிகளும் காட்சி தரும் இடமாக தமிழகம் இருக்கிறது.

சென்னை வீக் எண்ட் பிக்னிக்

சென்னை வீக் எண்ட் பிக்னிக்

சென்னையிலிருந்து வார இறுதி விடுமுறையில் சுற்றுலா செல்ல மகாபலிபுரம், பாண்டிச்சேரி என நிறைய இடங்கள் காணப்படுகின்றன. மேலும் அவற்றைத் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்

Gak2016

 குமரி வீக் எண்ட் பிக்னிக்

குமரி வீக் எண்ட் பிக்னிக்

குமரியிலிருந்து வார இறுதி விடுமுறையில் சுற்றுலா செல்ல முண்டந்துரை சரணாலயம், அகத்தியர் காடுகள் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன. மேலும் அவற்றைத் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்

Ash7786

 கோவை வீக் எண்ட் பிக்னிக்

கோவை வீக் எண்ட் பிக்னிக்

கோவையிலிருந்து வார இறுதி விடுமுறையில் சுற்றுலா செல்ல முண்டந்துரை சரணாலயம், அகத்தியர் காடுகள் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன. மேலும் அவற்றைத் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்

rajaraman sundaram

 தஞ்சை வீக் எண்ட் பிக்னிக்

தஞ்சை வீக் எண்ட் பிக்னிக்

தஞ்சையிலிருந்து வார இறுதி விடுமுறையில் சுற்றுலா செல்ல முண்டந்துரை சரணாலயம், அகத்தியர் காடுகள் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன. மேலும் அவற்றைத் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்

Richard Mortel

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X