» »அசாமில் பார்க்க வேண்டிய அழகிய சுற்றுலாத்தளங்கள் பற்றி தெரிந்துக்கனுமா? இதப் படிங்க!!

அசாமில் பார்க்க வேண்டிய அழகிய சுற்றுலாத்தளங்கள் பற்றி தெரிந்துக்கனுமா? இதப் படிங்க!!

Written By: Bala karthik

அசாம் தெய்வீகமான தேயிலை தோட்டத்தை கொண்டு பெயர் பெற்று விளங்குகிறது. இவ்விடமானது முதலாம் எண்ணெய் வளர்ச்சியை கொண்டு பெயர்பெற்று ஆசியாவிலே விளங்குகிறது. கிழக்கு இமாலயத்தின் தெற்கு முனையில் காணப்படும் அசாம், பிரம்மப்புத்திரா பள்ளத்தாக்கு, மற்றும் பராக் பள்ளத்தாக்கை கொண்டிருக்க அத்துடன் இணைந்து மாவட்டமான கர்பி ஆங்க்லாங்க் மற்றும் திமா ஹாசவோவும் காணப்படுகிறது.

இந்தியாவின் ஏழு தங்கை மாநிலங்களுள் ஒன்றாக அசாம் விளங்க, வருடமுழுவதும் வருகையானது சுற்றுலா கொண்டு மன மகிழ்வையும், குதூகலத்தையும் கால நிலையினால் மனதில் தரவும்கூடும். கோடைக்காலத்து சூட்டை ஒருவர் பொறுத்துக்கொள்ள, குளிர்கால சிலுசிலுப்பும் நம் மனதை குளிர்ச்சி அடைய செய்திட, சிறப்பான மன நிலையை தரும் இவ்விடம் நாம் காண சிறந்த இடமாகவும் அமைகிறது. இந்த அழகிய மாநிலத்தில் நாம் பார்க்க வேண்டிய ஒரு சில சிறந்த இடங்களை இப்போது பார்க்கலாம்.

உமனன்டா:

உமனன்டா:

ஆசியாவின் சிறு நதிக்கரையை கொண்டிருக்கும் இடங்களுள் ஒன்றாக விளங்கும், உமனன்டா. கவுஹாத்தியின் இதயப்பகுதியில் காணப்படுகிறது. தொடர்ச்சியிலிருந்து படகு சவாரி நாம் செல்ல, எண்ணற்ற கடைத்தெருவையும் அடைவதோடு, பெருமூச்செறிந்து பார்க்கவைக்கும் பிரம்மப்புத்திராவையும் அடைகிறோம். நீங்கள் ஓர் ஆரம்ப பறவையாக இருப்பின், நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய சூரிய உதயத்தையும், மத்தியில் பனிப்பாறையையும் சுற்றுப்புறத்தில் கொண்டிருக்கிறது.

PC: Kinshuk Kashyap

நாமேரி தேசிய பூங்கா:

நாமேரி தேசிய பூங்கா:

இயற்கையின் மீது அன்பு காட்டக்கூடிய விரும்பிகள் அனைவரும் பார்க்க வேண்டிய இடமாக நாமேரி தேசிய பூங்கா விளங்குகிறது. இந்த பூங்காவானது பகுயீ வனவிலங்கு சரணாலயத்தை எல்லையாக பகிர்ந்துக்கொண்டு விளங்க, இந்த பூங்காவானது கண்கொள்ளா காட்சியை கருவிழிகளுக்கு பரிசாய் தருகிறது.

எண்ணற்ற சாகச விருப்பங்களானது நீர் படகு சவாரி முதல் பயணம் வரை என பலவற்றையும் கொண்டிருக்க, இவ்விடமானது உண்மையான சொர்க்கமாக விளங்குகிறது. நதியானது முழுமையடைந்து காணப்பட, மாநிலத்தில் காணப்படும் இந்த பூங்கா, மாபெரும் ஈர்ப்பை கொண்டிருக்க, வடக்கு - கிழக்கு பகுதியில் அதீத புகழ்பெற்ற ஒரு இடமாக இது விளங்குகிறது.

PC: Udit Kapoor

டிக்பாய்:

டிக்பாய்:

டின்சுகியா மாவட்டத்தில் காணப்படும் இவ்விடமான டிக்பாய், எண்ணெய் நகரமாக பெயர்பெற்று விளங்க, பத்தொன்பதாம் நூற்றாண்டின் கச்சா எண்ணெய்யின் பிறப்பிடம் இதுவெனவும் தெரியவருகிறது. இவ்விடமானது வரலாற்று புத்தகத்தில் தனக்காக இடத்தை பிடித்திருக்க, டிக்பாய் போர் கல்லறையுடனான, போக்குவரத்தானது இரண்டாம் உலகப்போரில் பயத்தையும் மனதில் தந்தது.

அதீத தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் வீடாக இவ்விடம் விளங்க, இயற்கை விரும்பிகள் காண வேண்டிய இடமாக இது கருதப்படுகிறது. மற்றுமோர் முக்கியமான ஈர்ப்பாக பதினெட்டு துளை கோல்ஃ என நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்காக காணப்பட, விடுமுறைக்காலத்தில் இங்கே கூட்டத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது.

PC: Parthapratim Neog

பர்பெட்டா:

பர்பெட்டா:

அசாமின் ஆன்மீக மையமாக கருதப்படும் பர்பெட்டா, இரயில்வே நிலையத்துக்கு மட்டும் புகழ்பெற்று விளங்காமல், அசாம் மக்களின் பல்வேறு வட்டாரங்களுக்கும் பிரசித்திப்பெற்று விளங்குகிறது.

இவ்விடமானது நியோ வைணவத் சத்ராக்களையும், தாண்களையும் கொண்டு பெயர்பெற்று விளங்குகிறது. சந்தேகத்திற்கு இடமற்ற பர்பெட்டா, அமைதி மற்றும் நிசப்தத்தின் நிழலாக இருக்கிறது. இந்த ஆன்மீக நகரத்தை நாம் அடைய சிறந்த வழிகளுள் ஒன்றாக, பேருந்துகளும் காணப்பட, இந்த நகரத்தை ஆராய்வதற்கு அது நமக்கு உதவக்கூடும்.

PC: Jharna Patgiri

வட சாச்சர் மலைகள்:

வட சாச்சர் மலைகள்:

திமா மற்றும் ஹசாவோ பழங்குடியினருக்கு வீடாக கொண்டிருக்கும் வடக்கு சாச்சர் மலைகள், பொக்கிஷமான நீர்வீழ்ச்சிக்கு பெயர் பெற்று விளங்க, அதீத மூங்கில் காடுகள் வழியாக பாய்ந்தோடுகிறது. எவ்வித இயற்கை விரும்பிகளும் இவ்விடத்தை அடைவதன் மூலம் கவலைக்கொள்வதில்லை.

கம்பீரமான மலைகள் சூழ்ந்திருக்க, இவ்விடமானது ஹப்லாங்குடன் இணைக்கப்பட்டிருக்க, மலையின் தலைமையாக இவ்விடம் பெயர் பெற்று விளங்க, போதுமான அளவு போக்குவரத்து வசதிகளும் காணப்பட, உள்ளூர் பேருந்துகளானது வந்த வண்ணமும் போன வண்ணமும் கவுஹாத்தியை நோக்கி இருந்துக்கொண்டிருக்கிறது.

PC: lauramoretto

 உமிமாம் ஏரி/ பராபானி:

உமிமாம் ஏரி/ பராபானி:

சாலையுடன் இணைந்து கண்கொள்ளா காட்சியை தரும் ஏரி, கவுஹாத்தி மற்றும் ஷில்லாங்குடன் இணைந்து காணப்படுகிறது. பராபனி என்பதனை நாம் மொழிப்பெயர்க்க, பெரும் நீர் என்னும் பொருள் தர, அதில் எந்த வித சந்தேகமும் தேவைப்படுவதுமில்லை.

இங்கே வரும் ஒருவர் மாலை பொழுதில் குளுமையான காட்சிகளால் நேரத்தை செலவிட, இரவின் மடியில் வானத்தில் தாலாட்டு பாடி தூங்க வைக்கும் அழகிய காட்சியையும் கதிரவன் மறைவதன் மூலம் மனதார கண்டிடலாம். எண்ணற்ற காட்சிப்புள்ளிகள் காணப்பட, பராபனி நாம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாகவும் அமைகிறது.