Search
  • Follow NativePlanet
Share
» »எதனால் பிரிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி? அப்படி என்னதான் இருக்குது அங்க?

எதனால் பிரிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி? அப்படி என்னதான் இருக்குது அங்க?

எதனால் பிரிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி? அப்படி என்னதான் இருக்குது அங்க?

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவித்துள்ளது அரசு. கள்ளக்குறிச்சி தமிழகத்தின் 33 வது மாவட்டமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலை நகர் கள்ளக்குறிச்சி ஆகும். சரி இந்த கள்ளக்குறிச்சியில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாமா?

எங்குள்ளது இந்த கள்ளக்குறிச்சி

எங்குள்ளது இந்த கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பது விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதற்கு தலைநகராக கள்ளக்குறிச்சி நகரம் அமையும்.

எதனால் பிரிக்கப்பட்டது?

எதனால் பிரிக்கப்பட்டது?


ஒவ்வொரு மாவட்டம், வட்டம், ஊராட்சி பகுதிகளும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, நிர்வாக வசதிகளுக்காக வேண்டி தனித்தனியாக பிரிக்கப்படும். ஏனென்றால் அதிக அளவு மக்களுக்கு சேவை செய்ய அரசு இயந்திரமும், அதிகாரிகளும் சற்று சிரமமப்படுவார்கள். அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க தாமதமாகும். எனவேதான் மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை செல்லும் வழியில் அமைந்துள்ள மாவட்டமாகும். மேலும் சென்னை, காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து அதிக அளவில் வளர்ச்சியடைந்து வரும் மாவட்டமாகும். இதனால் மக்கள் பெரும்பாலானோர் இங்கு குடியமரத் தொடங்கினர். அது நாளடைவில் அதிக மக்கள் தொகையை இங்கு உருவாக்கியது. இதனால் விழுப்புரத்தின் தென்பகுதி மாவட்ட மக்களுக்கு அதிக அளவு வசதிகள் கிடைக்கவில்லை. இதனாலேயே தென்பகுதிகளை இணைத்து தனி மாவட்டம் பிரிக்கப்படுகிறது.

 சரி கள்ளக்குறிச்சியில் என்னவெல்லாம் இருக்கு?

சரி கள்ளக்குறிச்சியில் என்னவெல்லாம் இருக்கு?

கள்ளக்குறிச்சி நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது வெள்ளிமலை. இங்கு கல்வராயன் மலையும் சிறந்த சுற்றுலாத் தளமாகும். கோமுகி அணையும், தாகப்பாடி அம்மன் ஆலயும் மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும்.

கல்வராயன்மலை

கல்வராயன்மலை

கல்வராயன் மலையடிவாரத்தில் மலைகளுக்கிடையில் கோமுகி அணையும், அதையொட்டி சுமார் 15 ஏக்கர் அளவில் அழகிய பூங்காவும் உள்ளது. பூங்காவில் பயணிகள் இளைப்பாறவும், கழிப்பிடம் செல்லவும் தனி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

Lokesh Ramachandra

 அருவிகள்

அருவிகள்

மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற அருவிகள் காணப்படுகின்றன. குளியலறை வசதிகளும் அருவிக்கு அருகில் செய்யப்பட்டுள்ளன.

PJeganathan

 படகு குழாம்

படகு குழாம்


மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாகியுள்ளது. சுற்றுலா பயசிகள் படகில் சென்று வரலாம்.

PJeganathan

விலங்குகள்

விலங்குகள்

காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் காணும் வாய்ப்பும் கிடைக்கலாம். இங்கு பலர் சாகச சுற்றுலா மலையேற்றம் செய்கின்றனர்.

Dr. Ajay Balachandran

 அனுமதியுடன் விடுதி

அனுமதியுடன் விடுதி


கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப, வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். அங்கு தங்க முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்.

PJeganathan

 எப்படி செல்வது?

எப்படி செல்வது?


கல்வராயன் மலைக்கு அரிகில் உள்ள தொடர்வண்டி நிலையம் விழுப்புரம் தொடர்வண்டி நிலையமாகும், அங்கிருந்து பேருந்தில் கல்வராயன் மலை செல்லலாம். கள்ளக்குறிச்சியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி இருக்கிறது.

official site

மலையேற்றப் பயணம்

மலையேற்றப் பயணம்


இந்த வழியில் பயணித்தால் நாம் வளைந்து நெளிந்து செல்லும் திகில் பயணத்தை தொடங்குவோம். இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே அந்த திகிலை உணரலாம்.

பச்சை பசேலென்று காட்சி தரும் கல்வராயன் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மிக அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தளமாகும்.

இது சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு தேன் எடுத்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

செல்லும் வழியில் பெரியார் நீர்வீழ்ச்சி நம் ஒவ்வொருவரையும் கவரும். அழகிய ஓசை தரும் அருவி, நம்முள் இன்னிசையை ஓட விட, அதற்கு தகுந்தாற் போல மலை பறவைகள் பாடும்.

அடுத்து கரியாலூர் ஏரி படகு சவாரி அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவையாக இது இருக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X