Search
  • Follow NativePlanet
Share
» »உத்தரகண்டில் தவறவிடக் கூடாத கிளுகிளுப்பான சுற்றுலாத் தலங்கள்!

உத்தரகண்டில் தவறவிடக் கூடாத கிளுகிளுப்பான சுற்றுலாத் தலங்கள்!

உத்தரகண்ட் மாநிலம் வடக்கில் திபெத் நாட்டையும், கிழக்கில் நேபாள நாட்டையும் எல்லைகளாக கொண்டு, வடமேற்கில் இமாசலப்பிரதேச மாநிலத்துக்கும், தெற்கே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் நடுவே இமயமலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் முதல் இயற்கைக்காட்சிகள், சாகச மலையேற்ற பயணங்கள் என உத்தரகண்டின் சுற்றுலா அம்சங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சரி வாருங்கள், அப்படி அங்கே என்னமாதிரியான சுற்றுலாத் தலங்கள் எல்லாம் உள்ளது என பார்க்கலாம்.

முன்ஷியாரி

முன்ஷியாரி

கோரி கங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் முன்ஷ்யாரி எனும் இந்த பனிமலை பிரதேசம் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் நகரிலிருந்து 127 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மஹேஷ்வர் குண்ட் மற்றும் தம்ரி குண்ட் ஆகிய ஏரிகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளன. இங்கு அமையப்பெற்றுள்ள முன்ஷ்யாலி புக்யால் என்று அழைக்கப்படும் காட்டு மலர்கள் நிரம்பிய பரந்த புல்வெளிப்பிரதேசம் ஆகும்.

L. Shyamal

ஹர்சில்

ஹர்சில்

சார்தாம் புனித யாத்திரையின் நான்கு முக்கிய இடங்களில் ஒன்றான கங்கோத்ரிக்கு மிக அருகில் உள்ளது ஹர்சில். இங்கு சுற்றுலாவிற்கு என முக்கியத்துவம் வாய்ந்த பல தலங்கள் உள்ளன. அவற்றில்ள் கங்கோத்ரி தேசிய பூங்கா மற்றும் முகாபா கிராமம் அகியன பயணிகளை பெரிதும் ஈர்ப்பவையாகும். புகழ்பெற்ற கங்கோத்ரி தேசிய பூங்கா, ஹர்சிலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

MGA73bot2

தெஹ்ரி

தெஹ்ரி

தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில், சம்பா-முஸ்ஸூரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இச்சிறுகிராமம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது ஒரு இனிய பொழுதுபோக்குத் தலமாக உள்ளது. பச்சைப் பசேல் என்ற சுற்றுப்புறங்கள், பனி மூடிய மலைகள், ஆறுகள் மற்றும் காடுகள், இந்த இடத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. இந்தியாவின் உயரமான அணையாக கருதப்படும் தெஹ்ரி அணைக்காக தெஹ்ரி நகரம் புகழ்பெற்றுள்ளது.

Guptaele

கேதார்நாத்

கேதார்நாத்

இமயமலைத் தொடர்களின் அங்கமான கேதார்நாத் மலைகளில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் இந்தியாவில் இந்துக்களின் முக்கியமான புனித பயணத் தலமாக திகழ்கிறது. இங்கு சிவபெருமானுக்கான முதன்மையான ஜோதிர்லிங்கம் அமைந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் கேதார்நாத்தில் 3584 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஜோதிர்லிங்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Kiranmadhu.e

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்

டெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியத் தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்து புராணங்களின் படி ராமாயணத்தின் வில்லனான ராவணனைக் கொன்ற பின்பு ராமன் இங்கு நீராடியதாக நம்பப்படுகிறது. இதே இடத்தில் தான் ராமனின் தம்பியான லட்சுமணன் சணல் கயிற்றால் ஆன பாலம் அமைத்து நதியைக் கடந்ததாகவும் சொல்லப்படுகிறதது. திரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக் கூடாத முக்கிய தளமாகும்.

Sumita Roy Dutta

பத்ரிநாத்

பத்ரிநாத்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் மலைவாசத்தலம் நாட்டின் புகழ்பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள நரசிங்கரின் பிரபலமான திருவுருவச்சிலை சுருங்கிக்கொண்டே வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு உலவும் நம்பிக்கைகளின் படி, இச்சிலை உடைந்து விழும் நாளில் மிகப்பெரும் நிலச்சரிவு உண்டாகி பத்ரிநாத் செல்லும் பாதையை மறைத்து விடும் என்று நம்பப்படுகிறது.

Seema Sati

ஜோஷிமத்

ஜோஷிமத்

உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் புனித நகரமான ஜோஷிமத் இமயமலைப் பிரதேசத்தால் சூழந்து ஜில்லென்ன சீதோஷன நிலை கொண்டுள்ளது. இந்த எழில் கொஞ்சும் மலைப்பிரதேசத்தில் சுமார் 1200 வருடங்கள் பழமையான கல்பவிருக்ஷா என்ற மரம் உள்ளது. இதன் கீழ் அமர்ந்து ஆதி குரு ஷங்கராச்சார்யா தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனருகே அமைந்துள்ள நரசிங்கர் கோவில் மஹா விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகக் கருதப்படும் நரசிங்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். குளிர்காலங்களின் போது இக்கோவிலில் ஸ்ரீ பத்ரிநாத் முனிவர் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Dinesh Valke

பித்தோராகர்

பித்தோராகர்

பிராஹ்ம் மன்னர்களால் 15ம் நூற்றாண்டில் சிறிது காலமும், பின்னர் சந்த் வம்சத்தினரும் ஆட்சி செய்து வந்த இப்பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். பித்தோராகர் பகுதியில் குமோனி மொழியானது இங்கு வசிக்கும் பூர்வ குடிகளால் பேசப்படுகிறது. சல், சிர் மற்றும் ஓக் மரங்கள் அடர்ந்த பசுமை மாறாக்காடுகளால் இப்பகுதி சூழப்பட்டிருக்கிறது. இமாலயன் சமோயிஸ், சம்பார் மான் மற்றும் புலி போன்றவற்றோடு வேறு பல ஊர்வன ஜந்துக்களும் பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. அதோடு இங்கு பாய்ந்தோடும் காளி ஆறு பித்தோராகர் மாவட்டத்தையும், நேபாள் பகுதியையும் பிரிக்கிறது.

Ashok singh negi 41

பவுரி

பவுரி

பனியால் போர்த்தப்பட்டிருக்கும் பந்தர்புன்ச் மலை, ஜனலி மலை, கங்கோதரி குரூப், நந்ததேவி மலை, திரிசூல் மலை, சவுக்கம்பா மலை, கோரி பர்வத் மலை, ஹதி பர்வத் மலை, சுவர்க்கரோகினி மலை, ஜோகின் குரூப், தலாய சாகர் மலை, கேதர்நாத் மலை, சுமேரு மலை மற்றும் நீல்காந்த் மலை போன்றவற்றின் அழகுக் காட்சிகளை பவுரியிலிருந்து பார்த்து ரசிக்கலாம். மேலும் அலகந்தா மற்றும் நயர் ஆகிய ஆறுகள் பவரி மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளாகும்.

Fowler&fowler

தார்சூலா

தார்சூலா

பனியை உடுத்திக் கொண்டிருக்கும் பஞ்ச்சூலி சிகரங்கள் தார்சூலாவை ஜோஹர் பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கின்றன. இந்நகரத்திலுள்ள சில சுற்றுலா தலங்களில் மிகவும் புகழ் பெற்றதாக மானசாரோவர் அல்லது மனாஸ் ஏரி உள்ளது. மானசாரோவர் என்ற நன்னீர் ஏரி சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் உள்ளது. இந்த ஏரி இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கு மிகவும் புனிதமான ஏரியாகும். இந்த நன்னீர் ஏரியின் தண்ணீர் அதனை குடிப்பவர்களின் பாவங்களை துடைத்தெறிந்து, அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் என நம்பப்படுகிறது.

Greatestprateek

அல்மோரா

அல்மோரா

அல்மோரா மலையிலிருந்து அழகு கொஞ்சும் பனிமூடிய இமயமலையின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம். கசார் தேவி கோவில், நந்தா தேவி கோவில், சித்தை கோவில், மற்றும் கதர்மல் சூரியக் கோவில் ஆகியவை இங்கு அமைந்துள்ள பிரபலமான கோவில்களாகும். அல்மோராவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அழகுற காட்சியளிக்கும் மான் பூங்கா பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம். இப்பூங்காவில் மான், சிறுத்தை, மற்றும் இமாலய கருப்புக் கரடிகள் மற்றும் இது போன்ற பல விலங்குகள் உள்ளன.

Fromshahar

கௌஸனி

கௌஸனி

மிகப் பிரபலமான கிரியா-வின் உத்தராஞ்சல் தேயிலை, கௌஸனியில் அமைந்துள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் வளர்க்கப்படும் இலைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உயர் ரக ஆர்கானிக் டீ, அமெரிக்கா, ஜெர்மனி, கொரியா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

Pulkit Tyagi

சௌகோரி

சௌகோரி

உத்தரகண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் வடக்கில் திபெத் மற்றும் தெற்கில் தேராய் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்த சிறிய கிராமத்தில் கண்ணைக்கவரும் இயற்கைக்காட்சிகள் மற்றும் பசுமையான பைன் மரங்கள் மற்றும் ஓக் மரங்கள் அடர்ந்த ஊசியிலைக்காடுகள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். அவற்றோடு கவர்ச்சியான சோள வயல்கள் மற்றும் பழத்தோப்புகள் போன்றவை இங்கு பயணிகளை கவரும் அம்சங்கள். சௌகோரி பகுதியில் பல புராதன கோவில்கள் அமைந்துள்ளன. பெரிநாக் எனும் கிராமத்தில் உள்ள நாகமந்திர் எனும் கோவில் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த பாம்புக்கோவில் நாகவேணி மன்ன்னர் பேணிமாதவா என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Shubhachemu

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more