» » ஆகஸ்ட் மாதத்தில் நாம் இந்தியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்!!!

ஆகஸ்ட் மாதத்தில் நாம் இந்தியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்!!!

Written By: Balakarthik Balasubramanian

நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தின் போது மழையானது மாயாஜால வித்தை காட்ட, அந்த நேரத்தில் விழும் சாரல் துளிகளில் நாம் நம்முடைய உடலையும், மனதையும் புத்துணர்ச்சி கொள்ள செய்வது வழக்கமாகும். ஆனால், நம்முடைய சிறு விடுமுறையின்போது இத்தகைய தூரலானது இடஞ்சலை ஏற்படுத்தி விடுமுறை பற்றிய கவலையை மனதில் உதிக்க செய்கிறது.

ஆகஸ்ட் மாதம் என்பது பொதுவாக சுற்றுலாக்கான காலமாக இருப்பதில்லை என்றாலும், நம் நாட்டில் காணும் சில இடங்களுக்கு வந்து மனதினை மகிழ்ச்சி என்னும் பேரலையின் நீரால் நிரப்பி செல்ல ஆகஸ்ட் தான் சிறந்ததொரு மாதமாக விளங்குகிறது. ஒருவேளை, நீங்கள் ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் பயணப் பட்டியலை தயார் செய்திருப்பீர்களென்றால்...இரண்டு சிறந்த விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் நாம் பார்க்க போவது அதிக சலுகைகள். அதாவது மெலிவான சுற்றுலா காலமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, அவ்வாறு ஆகஸ்ட் மாதத்தில் நாம் பார்க்க முடிகின்ற, பூமியில் காணும் சொர்க்க இடங்கள் எவை என்பதை நாம் இப்பொழுது தெரிந்துக் கொள்ள வேண்டியது.

 லாஹௌல்:

லாஹௌல்:

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் காணப்படும் பள்ளத்தாக்கு தான் லாஹௌல் ஆகும். ஹிமாச்சல பிரதேசத்தில் காணப்படும் பல இடங்களும், பயணத்தின் சிறப்பை நம் மனதில் உணர்த்த, அவற்றுள் சில... யாக் சவாரி, பனிச்சறுக்கு, வனவிலங்கு பயணம் ஆகியவையாகும்.

இந்த ஆகஸ்ட் தூரலில் வரும் நாம், இங்கே காணும் அழகிய மடத்தை காணாமல் ஒருபோதும் திரும்பிவிட கூடாது. மலையின் வழிகளும், மற்ற சாலை வழிகளும் என ஆகஸ்ட் மாதங்களில், குளிர்காலத்தின் போது மூடியே காணப்படுகிறது.

ஆனால், உங்கள் மனதில் மகிழ்ச்சிக்கு பதிலாக கவலையை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றும்...லாஹௌலில் நாம் ரசித்து விளையாடி மகிழ பல ஈர்க்கும் இடங்கள் காணப்படுவதால், எவ்வளவு நாட்களிற்கு வேண்டுமென்றாலும் நாம் இங்கே தங்கி செல்லலாம் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

Ajay Panachickal

 அந்தமான் & நிகோபர் தீவு:

அந்தமான் & நிகோபர் தீவு:

இங்கே மழை பெய்தாலும், பொய்த்து பெய்யாமல் போனாலும் உண்மையான சொர்க்கமாக இந்த தீவு காணப்படுகிறது. இங்கே காணும் வெள்ளை நிற கடற்கரை மணல்களும், வெது வெதுப்பான லகூன்களும், கடற்கரையை சூழ்ந்திருக்கும் பனை மரங்களும், நேர்த்தியான அழகிய நீர் விளையாட்டுகளுமென இந்த இடம், மிதமான சாரலின் போது கூட நம்மை சிலிர்க்க வைக்கிறது. ஆகஸ்ட் மாதத்தின்போது இந்த இடத்தின் அழகானது கொஞ்சம் அதிகமாகவே நம்மை கவர்கிறது.
மெலிந்த பருவத்தின்போது, இங்கே நம்மால் சுற்றுலா பயணிகளை அதிகம் பார்க்க முடிவதில்லை. இதனால் நாம் தனியாக இங்கே நம்முடைய நேரத்தை செலவிட்டு மனதினை இதமாக்கிக்கொள்ள, பிஸியான கடற்கரையினை காட்டிலும் இங்கே நாம் ஓய்வில் அமைதிபெற்று மனமகிழலாம்.

இங்கே காணப்படும் வசதிகளை நாம் பெற்று மகிழ, எக்ஸ்ட்ரா சந்தோசமானது நம் முதுகில் ஏறி சவாரி செய்து மனதினை சந்தோஷத்தில் தள்ளுகிறது. மெலிந்த பருவத்தின் போது இங்கே கிடைப்பவை அனைத்தும் சலுகை விலையில் நமக்கு கிடைக்கிறது.

Debalin Sarangi

 முசோரி:

முசோரி:

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹிமாலய தொடர்ச்சியின் அடிவாரத்தில் காணப்படும் இந்த இடமானது, ஆகஸ்ட் மாதத்தின்போது அழகிய காட்சிகளால் கண்களை வெகுவாக கவர்கிறது. நீங்கள் ஆகஸ்ட் மாதத்தின்போது இந்த இடத்திற்கு பயணம் வருவீர்களென்றால், டெராடூனிலிருந்து சாலை வழியாக வரலாம்.
மதிமயக்கும் சாலை பயணமானது அனைத்து நிலைகளிலும் உங்களுக்கு கைக்கொடுக்க, குளிர்ந்த கால நிலையும் மனதினை குளிரூட்டுகிறது. இங்கே முசோரியில், இயற்கையால் நம்மை ஈர்க்க கூடிய இடங்கள் பல காணப்பட, அவற்றுள் நீர்வீழ்ச்சியும் ஒன்றே. இங்கே எண்ணற்ற ஆலயங்களும், தேவாலயங்களும் காணப்பட, மழைக்கு பிறகு மதி மயக்கும் அழகினை தந்து உயிர்த்துடிப்பாகவும் விளங்குகிறது.

Paul Hamilton

 மஹாபலேஷ்வர்:

மஹாபலேஷ்வர்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் ஒரு பெரிய மலை நிலையம் தான் இந்த மஹாபலேஷ்வர் ஆகும். இந்த மலை பின்னடைவு, பசுமையாக மாற, நாம் மழைக்கு தான் நம் நன்றியை சொல்லி ஆக வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்தின்போது, இங்கே சாரல் மழை பெய்ய, இந்த இடமானது பனியாக காட்சியளிக்கிறது. இந்த பனியானது வளிமண்டலத்தில் காண, காதல் கைக்கூடும் ஒரு விடுமுறையாகவே அது நமக்கு தெரிகிறது. இங்கே நம்மால் பெருமளவில் சுற்றுலா கூட்டத்தை காண முடியவில்லையென்றாலும், இங்கே நல்ல ஒப்பந்தங்களை நம்மால் மேற்கொள்ள முடிகிறது.

Nishanth Jois

 அகும்பே:

அகும்பே:

கர்நாடக மாநிலத்தில் காணும் ஓர் அழகிய இடமான அகும்பே, எண்ணற்ற இயற்கை ஈர்ப்புகளை கொண்டிருக்க, அவற்றுள் நீர்வீழ்ச்சிகளும், மலைகளும், என பலவும் அடங்கும்.
ஆகஸ்ட் மாதத்தில் நாம் இங்கே வருவதன் மூலமாக, ஹோய்சலா பேரரசின் இடிபட்ட நிலை இடங்களை பார்க்க முடிகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, இங்கே நாம் காணும் நீர்வீழ்ச்சியின் அழகானது மனதினை வருட, அதுமட்டுமல்லாமல், மத்தியில் பயணம் செய்வதன் மூலமாக சாரல் துளிகளையும் நம்மால் ரசிக்க முடிகிறது.

b sarangi

 சிரபுஞ்சி:

சிரபுஞ்சி:


பூமியில் காணப்படும் ஈரப்பதம் கொண்ட இடங்களுள் ஒன்றான சிரபுஞ்சியில், மழைவளமானது வருடம் முழுவதும் காணப்பட, குறைந்த குழப்பங்கள் குடி கொள்ளும் ஒரு மாதமாக ஆகஸ்ட் நம்மை பயணத்திற்கு அழைப்பதோடு, பருவமழைக்காலத்தில் பயணமும் மிக சிறப்பாக அமைகிறது.

இங்கே காணும் ஆரஞ்ச் மலர் தேனும், தேயிலையும் சந்தோஷத்தை நமக்கு தர, இங்கு இந்த மாதங்களில் பல பூக்களை காண முடியவில்லையென்றாலும்...பச்சை போர்வை போர்த்திய அழகிய இடங்கள் நம் கண்களை பறிக்கிறது. இங்கே காணும் செடிகளின் வேர் வழியே நாம் நடந்து செல்ல, ஆகஸ்ட் மாத மழை சாரலும் நம் மனதினை மகிழ்ச்சியால் நனைய செய்கிறது.

Ashwin Kumar

 கூர்க்:

கூர்க்:

இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் மலை பகுதியான கூர்க்கில், மழை சாரல் துளி விழ, அது நம் மனதில் பலவித கற்பனைகளை உருவாக்கி நெகிழ செய்கிறது.

இந்த மலையின் பின்னடைவானது அழகிய பசுமை போர்வையால் மூடப்பட, இங்கே நாம் எண்ணற்ற பருவ நீர்வீழ்ச்சியை பார்த்து பரவசமடைவதோடு, இந்த நேரத்தில் மட்டுமே பார்க்க கூடிய அரிய காட்சியாகவும் இது இருக்கிறது.

Kalidas Pavithran

 பைகனர்:

பைகனர்:


ராஜஸ்தானில் காணப்படும் மிகவும் பெயர்பெற்ற ஒரு சுற்றுலா இடமான பைகனரில் மிதமான மழைதூரல் விழ, ஜுனகார்ஹ் மற்றும் கஜ்னெர் அரண்மனைகளையும், எண்ணற்ற ஆலயங்களையும் இங்கே நம்மால் பார்த்து மனதினை இதமாக்கிக்கொள்ள முடிகிறது. இங்கே காணும் ஈரப்பதமானது இந்த இடத்திற்கு அழகு சேர்க்க, பைகனரில் காணப்படும் வெப்ப நிலையும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், இங்கே விழும் மழை தூரலானது மனதினை இதமாக மாற்றி, இன்பம் பயக்கிறது.

Jean-Pierre Dalbéra

 மூனார்:

மூனார்:


கேரளாவின் மலை பகுதியான இந்த மூனாரில் காணும் மலையின் அழகானது எந்த ஒரு சுவாரஸ்யமற்ற போதிலும் காட்சிகளால் கண்களை குளிர்வித்து மனதினை இதமாக்க முயல்கிறது.

ஆகஸ்ட் மாதத்தின்போது, சுற்றுலா பயணிகளின் வருகையானது குறைவாக காணப்பட, இங்கே வருபவர்கள் தங்கள் மனதை அமைதியாகவும், இந்த மலையில் மத்தியில் காணப்படும் தேயிலை தோட்டங்களின் மூலமாக, உடல் ஓய்வு நிலையில் இருப்பதையும் உணர்கின்றனர்.

இங்கே நாம் பார்த்துக்கொண்டிருக்க, நம் மீது விழும் மழைத்துளிகளானது, நொடிப்பொழுதில் காட்சியில் பார்வையை மாற்றி உற்றவர் மனதில் காதல் உணர்வினை உருவாக்கி நேரத்தின் அழகை உணர்த்துகிறது.

Nishanth Jois

 கொடைக்கானல்:

கொடைக்கானல்:

மலைப் பகுதிகளின் இராணி என்றழைக்கப்படும் கொடைக்கானல், தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்திபெற்று காணப்படும் ஒன்றாகும். இங்கே வருபவர்கள் காணும் எண்ணற்ற காட்சி கோணங்கள் அவர்களுடைய மனதில் இன்பத்தை தெளித்து பெருமூச்செறிந்து பார்க்க வைக்கிறது.

இங்கே, மிதமான மழை சாரலின் போது ஏரியில் நாம் படகு பயணம் செய்வது இனிமையானதோர் உணர்வினை நம் மனதில் பதிய செய்கிறது. இவற்றை கடந்து, நம் நாட்டில் காணப்படும் முக்கிய இடமாகவும் இவ்விடம் விளங்குகிறது.

netlancer2006

Read more about: travel tour

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்