Search
  • Follow NativePlanet
Share
» »தேனி சுற்றுலாத் தலங்கள் - காணத்தக்க இடங்கள் மற்றும் எப்படி அடைவது

தேனி சுற்றுலாத் தலங்கள் - காணத்தக்க இடங்கள் மற்றும் எப்படி அடைவது

தேனி சுற்றுலாத் தலங்கள் - காணத்தக்க இடங்கள் மற்றும் எப்படி அடைவது

தமிழ் நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றும், மிகவும் இளமையானதுமான மாவட்டம் தேனி. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் தவழும் இந்த தேனி மாவட்டம் விடுமுறைக் காலங்களை கழிக்க மிகவும் ஏற்ற இடமாகும். பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய முக்கிய இடங்களை உள்ளடக்கிய இந்த புதிய மாநகரம் அதன் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகளுக்காக மிகவும் பொருள் பெற்றது.

நீங்கள் தேனியில் இருக்கும் போது மென்மையான துண்டுகள், ருசியான மாம்பழங்கள், அருமையான பருத்தித் துணிகள், மனம் கமழும் ஏலக்காய், காரமான மிளகாய்கள், புத்துணர்வூட்டும் காப்பிக் கொட்டைகள் மற்றும் ஆரோக்கியான கிரீன் டீ ஆகியவற்றை வாங்கவோ, அனுபவிக்கவோ மறந்து விடாதீர்கள்.

 தேனி மொத்தமும் சுத்தலாம்

தேனி மொத்தமும் சுத்தலாம்

தேனியில் வைகை அணைக்கட்டு, சோத்துப்பாறை அணைக்கட்டு மற்றும் சண்முகா நதி அணைக்கட்டு ஆகிய புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. மேலும் சுருளி நீர்வீழ்ச்சி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி மற்றும் சின்ன சுருளி நீர்வீழ்ச்சி ஆகிய அற்புதமான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளின் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன.

ஆன்மீகப் பயணம்

தேனியில் பல்வேறு கோவில்களும், புனிதத் தலங்களும் இருப்பதால் புனிதப் பயணம் செல்பவர்களுக்கும் மிகவும் விருப்பமான சுற்றுலாதலமாக தேனி இருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் குச்சானூர், தீர்த்த தொட்டி, கௌமாரியம்மன் கோவில், தேவதானபட்டி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் பாலசுப்ரமணியர் கோவில் ஆகிய இடங்களில் வழிபட்டு செல்வார்கள்.
மேகமலைப் பகுதிகள், போடி மெட்டு மற்றும் பரவச உலகம் தீம் பார்க் ஆகியவை இங்குள்ள பிற பார்வையிடங்களாகும்.

Kujaal

திருவிழாக்களும், கண்காட்சிகளும்

திருவிழாக்களும், கண்காட்சிகளும்

தேனி மாவட்டத்தில் பொங்கல், சிவராத்திரி மற்றும் மாசிமகம் ஆகிய பண்டிகைகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இந்த திருவிழாக் காலங்களில் தேனியில் நடத்தப்படும் மாட்டு வண்டி பந்தயம் மிகவும் புகழ் பெற்றதாகும்.


தேனிக்கு எப்போது செல்லலாம்

தேனிக்கு வருடம் முழுவதும் வந்து செல்ல முடியுமென்றாலும், திருவிழாக்காலங்களில் வந்து செல்வதற்கு நீங்கள் திட்டமிட்டால் அது பலனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த காலகட்டங்களில் வெப்பநிலை குளிர்சியானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருப்பதால், சூரியனின் சுட்டெரிக்கும் வெய்யிலை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.


எப்படி அடையலாம்

தேனி நகரம் பிற முக்கிய நகரங்களுடன் சாலை மற்றும் ரயில் பாதைகள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. தேனிக்கு மிகவும் அருகிலுள்ள விமான நிலையம் மதுரை விமான நிலையமாகும்.

Mprabaharan

 மாவூத்து

மாவூத்து

மாவூத்து, தேனியிலிருந்து 93 கிமீ மற்றும் ஆண்டிபட்டியில் இருந்து 78 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமாகும். வருசநாடு மலைப்பகுதிகளில் உள்ள வேலப்பர் கோவிலுக்காக புகழ் பெற்ற இடமாக மாவூத்து விளங்குகிறது.

விநாயகப் பெருமானுக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் சப்த கன்னிகைகள் என்ற ஏழு கன்னியரின் வழிபாட்டு தலமும் உள்ளது. இதனைக் கட்டியவர் கண்டமனூர் ஜமீன்தார் என்பவராவார். இந்த கோவிலிற்குள் இருக்கும் நீர்ச்சுனையின், தண்ணீருக்கு நோய்கள் மற்றும் வலிகளைத் தீர்க்கும் வல்லமை உள்ளதாக நம்பப்படுகிறது.

மாவூத்து என்றால் தமிழ் மொழியில் 'மாம்பழ ஊற்று' என்று பொருளாகும்.

Lilo Johnson

சின்ன சுருளி நீர்வீழ்ச்சி

சின்ன சுருளி நீர்வீழ்ச்சி

மேகமலை மலைப்பகுதிகளில் பிறக்கும் சின்ன சுருளி நீர்வீழ்ச்சியானது மேகமலை நீர்வீழ்ச்சி என்று பொருள் தரும் 'க்ளெவுட்லேண்ட் பால்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.

எங்குள்ளது

தேனியிலிருந்து 54 கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி கோம்பைத்தொழு என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது. ஆரவாரமான சத்தம் மற்றும் வெள்ளிக் கோடு போன்ற மேகங்களுக்கிடையில் விழுந்து கொண்டிருக்கும் அருவி தொலைதூரம் மற்றும் அருகில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் வேலையை செவ்வனே செய்து வருகின்றது.

Kujaal

 தீர்த்த தொட்டி

தீர்த்த தொட்டி

தீர்த்த தொட்டி, தேனியிலிருந்து 19 கிமீ தூரத்திலும், பெரிய குளத்திலிருந்து 2 கிமீ தூரத்திலும் உள்ள இடமாகும். தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் வழியில் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் இவ்விடம் அமைந்துள்ளது.

புனித தலம்

1000 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணிய கடவுளின் கோவில் இங்குள்ள மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். தீர்த்த தொட்டி என்றால் புனித நீருள்ள தொட்டி என்று பொருளாகும். இவ்விடத்தில் உள்ள இயற்கையான நீரூற்றை சுற்றிலும் வேம்பு மற்றும் பிற மூலிகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவில் உள்ள இந்த நீர் நிரம்பிய இடம் தீர்த்த தொட்டி என்று அழைக்கப்படுகிறது.

Kujaal

சுருளி நீர்வீழ்ச்சி

சுருளி நீர்வீழ்ச்சி

18-ம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளையுடைய மிகவும் புகழ் பெற்ற இடம் சுருளி நீர்வீழ்ச்சியாகும்.

150 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக இந்த அருவி விழுந்து கொண்டிருக்கிறது. மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி நீர்வீழ்ச்சி முதலில் ஒரு குட்டையில் தேங்கி அதனை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு விழுகிறது.

தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்த அருவியின் சிறப்பையும், வனப்பையும் பற்றி இளங்கோவடிகள் பாடியுள்ளார். இந்த அருவிக்கு அருகில் உள்ள இடம் மூலிகைகளின் இருப்பிடமாகும். சுருளி நீர்வீழ்சியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சுருளி வேலப்பர் கோவில் உள்ளது.

Michael

 கைலாசநாதர் குகைக் கோவில்

கைலாசநாதர் குகைக் கோவில்

கைலாசநாதர் குகைக் கோவில் சுருளி நீர்வீழ்ச்சிக்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து 800 மீ உயரத்தில் அமைந்துள்ளது. தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம், இந்த கோவில் குகைகளில் தமிழ் மாதங்களான ஆடி, தை மற்றும் சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதை தெரிவிக்கிறது. இந்த கோவிலில் இருக்கும் இயற்கையான நீர்ச்சுனை மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. இந்த கோவிலிற்கு அருகில் உள்ள தர்ஹாவிற்கு 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய துறவியான அபுபெக்கர் மஸ்தான் என்பவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வருபவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து வருவார்கள்.

Arjunnarayanasamy23

Read more about: districts of tamil nadu theni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X