Search
  • Follow NativePlanet
Share
» »காதலர் தினம் வந்தாச்சு..எங்க போகலாம் ?

காதலர் தினம் வந்தாச்சு..எங்க போகலாம் ?

வாட்ஸ் ஆப்பில் காதல் மொழிந்து, காபி டேவில் கால்கள் குலைந்து கொஞ்சி, டெட்டி பியர் வாங்கி கொடுத்து என ஸ்வீட்டாக காதலை சொல்லி கொண்டாட காதலர் தினம் வந்தே விட்டது. ஒரு மாறுதலுக்கு இந்த மாதிரியான கிளிஷேத்தனமான கொண்டாட்டங்களை விடுத்து உங்கள் காதலியுடனோ, காதல் மனைவியுடனோ எங்காவது சுற்றுலா செல்ல ஆசைப்படுகிறீர்களா?
வாங்க, இந்த காதலர் தினத்தன்று செல்லவேண்டிய காதல் ததும்பும் இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

காதலர் தின சிறப்பு சலுகையாக 50% + 30% ஹோட்டல் கட்டணங்களில் தள்ளுபடி

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவு :

அந்தமான் தீவில் கண்டிப்பாக செல்லவேண்டிய ஓரிடம் இருக்குமென்றால் அது ஹவேலோக் தீவு தான். இங்கு நிறைந்திருக்கும் இயற்கை அழகிற்கு அளவே இல்லை. சற்றும் அசுத்தமில்லாத கடற்கரைகள், அதை ஒட்டியே பசுமையான காடுகளில் நிறைந்திருக்கும் தென்னை மரங்கள் மற்றும் எப்போதும் நிலவும் அமைதியான சூழல் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகப்பிடித்தமான இடமாக இந்த தீவு திகழ காரணமாகிறது.

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவு, அந்தமான் & நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் ப்ளேயரில் இருந்து 57 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த தீவில் இருக்கும் 7.ஆம் என் கடற்கரை (அ) ராதா நகர் கடற்கரை டைம்ஸ் பத்திரிக்கையால் ஆசியாவின் மிகச்சிறந்த கடற்கரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று இங்கிருக்கும் எலிபெண்ட் கடற்கரை மற்றும் விஜயா நகர் கடற்கரைகளும் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களாகும்.

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவு :

ஹெவேலோக் தீவு கடற்கரைகளில் இருக்கும் ஒரு சிறப்பம்சம் யானை சவாரி. கடற்கரையில் தெளிவான நீல நிற கடலை ரசித்தபடியே ஒய்யாரமாக யானைகளின் மேல் அமர்ந்து வலம் வரலாம். இங்கே இருக்கும் 'ராஜன்' என்ற யானையின் மேல் அமர்ந்து கடலில் நீச்சலும் அடிக்கலாம்.

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவு :

காதலர் தினத்தை கொண்டாட அருமையான இடமான இந்த ஹவேலோக் தீவில் கொண்டாட விரும்புகிறீர்களா நீங்கள்?. அப்படியெனில் இந்த தீவை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களையும், அங்கே உள்ள ஹோட்டல்களில் சலுகை கட்டணங்களில் அறைகளை பற்றிய தகவல்களையும் இங்கே பெற்றிடுங்கள்.

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவின் சில அழகான புகைப்படங்கள்.

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவின் சில அழகான புகைப்படங்கள்

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவின் சில அழகான புகைப்படங்கள்

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவு :

ஹவேலோக் தீவின் சில அழகான புகைப்படங்கள்

உதய்பூர் - இந்தியாவின் வெனிஸ் :

உதய்பூர் - இந்தியாவின் வெனிஸ் :

செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரிகள், அற்புதமாக கட்டப்பட்ட அரண்மனைகள், கோயில்கள் என ஒரு ராஜ ராணியைப் போல காதலர் தினத்தை கொண்டாட விரும்புகிறவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதைபுரை விட சிறந்த இடம் இருக்க முடியாது.

உதய்பூர் - இந்தியாவின் வெனிஸ் :

உதய்பூர் - இந்தியாவின் வெனிஸ் :

உதய்பூர் அரண்மனை:

ராஜஸ்தானில் உள்ள அரண்மனைகளில் வைத்து அளவில் மிகப்பெரியதாகவும், சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விரும்பப்படும் அரண்மனையாகவும் இருக்கிறது இந்த உதய்பூர் அரண்மனை. இதனுள்ளே அருங்காட்சியகம், பூந்தோட்டம், மன்னர் காலத்தில் வரையப்பட்ட நுணுக்கமான ஓவியங்களின் காட்சியகம் போன்றவை உள்ளன. யானை சவாரி செய்தபடி இந்த அரண்மனையில் உலா வருவது மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

உதய்பூர் - இந்தியாவின் வெனிஸ் :

உதய்பூர் - இந்தியாவின் வெனிஸ் :

பதெஹ் சாகர் ஏரி:

உதய்புரில் உள்ள ஏரிகளில் மிக அழகானதாக இது வர்ணிக்கப்படுகிறது பதெஹ் சாகர் ஏரி. இது1680களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரியினுள் மூன்று சிறிய தீவுகள் உள்ளன. ஒரு தீவில் நேரு பூங்காவும், வனவிலங்கு காட்சியகமும் உள்ளது. மற்றறொரு தீவினுள் நவீனமான 'Water-Jet' நீருற்றுடன் கூடிய பூங்கா அமைந்திருகிறது.

காதல் ஏரி, வயநாடு:

காதல் ஏரி, வயநாடு:

கேரளாவின் அற்புதமான இடங்களில் ஒன்றான வயநாட்டில் செம்ப்ரா மலையின் மேல் அமைந்திருக்கிறது இந்த காதல் ஏரி. இயற்கையாகவே காதலின் சின்னமான இதயவடிவில் அமைந்திருக்கிறது. மெப்படி என்ற இடத்தில் இருந்து மூன்று மணிநேர ட்ரெக்கிங் பயணத்தில் இந்த ஏரியை அடையலாம். மிதமான குளிர் நிலவும் இந்த பிப்ரவரி மாதம் இங்கு செல்ல உகந்ததாகும். மைசூர் கோழிக்கோடு நெடுஞ்சாலையில் இந்த இடம் அமைந்திருக்கிறது.

காதல் ஏரி, வயநாடு:

காதல் ஏரி, வயநாடு:

பேரழகு நிறைந்த வயநாட்டின் சில புகைப்படங்கள்.

காதல் ஏரி, வயநாடு:

காதல் ஏரி, வயநாடு:

பேரழகு நிறைந்த வயநாட்டின் சில புகைப்படங்கள்.

காதல் ஏரி, வயநாடு:

காதல் ஏரி, வயநாடு:

பேரழகு நிறைந்த வயநாட்டின் சில புகைப்படங்கள்.

காதல் ஏரி, வயநாடு:

காதல் ஏரி, வயநாடு:

பேரழகு நிறைந்த வயநாட்டின் சில புகைப்படங்கள்.

காதல் ஏரி, வயநாடு:

காதல் ஏரி, வயநாடு:

பேரழகு நிறைந்த வயநாட்டின் சில புகைப்படங்கள்.

கூர்க்:

கூர்க்:

இயற்கையை ரசித்தபடி குளுகுளுப்பான சூழலில் காதலர் தினத்தை கொண்டாட நினைப்பவர்கள் தாரளமாக கூர்க் வரலாம். பெங்களுருவில் இருந்து 260 கி.மீ தொலைவில் இருக்கும் இங்கு அப்பே அருவி, நகர்ஹோலே விலங்குகள் சரணாலயம், இந்தியாவின் ஸ்காட்லான்ட் என அழைக்கப்படும் மடிகேரி, ட்ரெக்கிங் செய்ய சிறந்த இடமான குமார பர்வதம் மலை, காவேரி ஆற்றில் சாகச படகு சவாரி என சுற்றிபார்க்க ஏராளமான இடங்கள் உண்டு.

டல்ஹௌசி:

டல்ஹௌசி:

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் டல்ஹௌசி கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் நிறைந்திருக்கும் ஓரிடமாகும். ஆப்பிள் தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், ட்ரெக்கிங் செல்ல தகுந்த மலைப்பாதைகள் என இயற்கையோடு காதலர் தினத்தை கொண்டாட விரும்புகிறவர்களுக்கு மிகச்சிறந்த இடம் இந்த டல்ஹௌசி.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X