Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க டிசைன் டிசைனா வாங்கி போடுற இந்த துணிகள் எங்க தயாரிக்குறாங்க தெரியுமா?

நீங்க டிசைன் டிசைனா வாங்கி போடுற இந்த துணிகள் எங்க தயாரிக்குறாங்க தெரியுமா?

நீங்க டிசைன் டிசைனா வாங்கி போடுற இந்த துணிகள் எங்க தயாரிக்குறாங்க தெரியுமா?

நம் வீட்டுப் பெண்கள் விதவிதமாக உடைகள் அணிவதை நாம் பார்த்திருக்கிறோம். நமக்கே அவர்கள் அணியும் சில உடைகள் மிகவும் வித்தியாசமாக அழகாக இருப்பதால் பிடிக்கும்தானே. அந்த மாதிரியான உடைகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன என தெரியுமா? வாருங்கள் கைவினையாக தயாராகும் சிக்கான் உடைகளைப் பற்றி பார்க்கலாம்.

'நவாப்புகளின் நகரம்' என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். இது கோமதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சூர்யவம்ஷி எனும் ராஜவம்சத்தினரின் ஆட்சியிலிருந்து இந்நகரத்தின் வரலாறு துவங்குகிறது. நவாப் ஆசஃப் உத் தௌலா என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்நகரம் ஆவாத் நவாப்புகளின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. இவர்களின் ஆட்சியில்தான் இந்நகரின் கலாச்சாரம் மற்றும் பிரசித்தமான உணவுத்தயாரிப்பு பாரம்பரியம் முதலியவை செழித்து வளர்ந்திருக்கின்றன. சரி லக்னோ சுற்றுலா செல்லும்போது அங்கு என்னவெல்லாம் கிடைக்கும். வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

லக்னோ சிறப்பு

லக்னோ சுற்றுலா செல்பவர்களுக்கு அங்கிருந்து வாங்கி வர பல பொருள்கள் இருக்கின்றன. லக்னோவின் நினைவாக உங்கள் மனம் விரும்பிய ஒரு வருக்கு கொடுக்க அழகிய சிறந்த கலை வேலைப் பாடுகள் கொண்ட கலைப் பொருள்கள் நிறைய இருக்கின்றன. வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

சிக்காங்கரி


சிக்காங்கரி என்பது அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய எம்ப்ராய்டெரி உடை. இது லக்னோவின் நினைவில் நிற்கும் கலை அம்சங்கள் நிறைந்த பொருளாகும்.

இங்கு நிறைய சந்தைக் கடைகளில் இந்த பொருள் கிடைக்கிறது. இது உலகம் முழுவதும் புகழ் பெற்றது.

மகிழுங்கள்


லக்னோ உங்களை மகிழ்விக்க பல்வேறு சுற்றுலா அம்சங்களையும் கொண்டுள்ளது. கலைப் பொருள்களை வாங்கும் முன் அங்குள்ள சில சுற்றுலாத் தளங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

லக்னோ சுற்றுலா

லக்னோ நகரத்தில் பசுமைக்கும் பஞ்சமில்லை. லக்னோ விலங்குப்பூங்கா, பாடனிகல் கார்டன்ஸ் மற்றும் புத்தா பூங்கா, குக்ரெயில் பாதுகாப்பு வனச்சரகம் மற்றும் சிகந்தர் பாக் ஆகியவை இங்குள்ள இயற்கை எழில் ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன.

கண்ணைக் கவரும் கட்டிடங்கள்

லக்னோ நகரத்தில் பல கண்ணைக்கவரும் நினைவுச்சின்னங்கள் மற்றும் புராதன கட்டிடங்களும் ஆவாத் நவாப் கால கட்டிடக்கலை மேன்மைக்கு சான்றுகளாக வீற்றிருக்கின்றன.

மேன்மையுடன் கூடிய கட்டிடக் கலை


கேய்சர்பாக் அரண்மனை, தாலுக்தார் ஹால், ஷா நஜஃப் இமாம்பாரா, பேகம் ஹஸ்ரத் மஹால் பார்க் மற்றும் ரூமி தார்வாஸா எனும் லக்னோ நகர நுழைவாயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஷாப்பிங் ஷாப்பிங் லக்னோ ஷாப்பிங்

லக்னோ நகரத்தின் பெரிய ஷாப்பிங் பகுதியான இந்த ஹஸ்ரத்கஞ்ச் மார்க்கெட். இதற்கு அடுத்தபடியாக இருப்பது அமீனாபாத் எனும் மார்க்கெட் பகுதி. லக்னோவுக்கு சுற்றுலா வருபவர்களும் சரி, வேறு வேலையாக வருபவர்களும் சரி இங்கு கண்டிப்பாக வந்து செல்கிறார்கள்

கிடைக்காத பொருளே இல்லை

ஹஸ்ரத்கஞ்ச் மார்க்கெட் பகுதியில் பஜார்கள், ஷாப்பிங் மால்கள், நவீன ஷோரூம்கள், ஹோட்டல்கள், PVR சினிமா அரங்கு, ஃபன் சினிமா, உணவகங்கள், ஃபுட் கோர்ட் மற்றும் பிரபல நிறுவனங்களின் அலுவலகங்கள் ஆகியவை நிரம்பியுள்ளன. இப்பகுதியில் கிடைக்காத பொருளே இல்லை என்று சொல்லும் படியாக யாவுமே இங்கு கிடைக்கின்றன.

லக்னோ சிக்கான்


கார்கள், நகைகள், புராதன கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்கள் ஆகியவற்றோடு பிரசித்தமான லக்னோ சிக்கான் துணி வகையையும் இங்கு வாங்கலாம். இங்கு அமைந்திருக்கும் பிக் பஜார் சூப்பர்ஸ்டோர், குர்ஜாரி கைத்தறி எம்போரியம், காந்தி ஆஷ்ரம் போன்றவற்றில் பயணிகள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

அமீனாபாத் சந்தை


துண்டே கபாப், திவிவேதி சாரீஸ், பிரகாஷ் குல்ஃபி, மாதாபாதல் பன்சாரி போன்ற கடைகள் மிகப்பிரபல்யமான வியாபார அடையாளங்களாகவே மாறிவிட்டன.

165 வருடங்கள் பழமையான இந்த சந்தை வளாகத்துக்குள்ளேயே பல்வேறு சந்தைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் பர்தாப் சந்தை, ஸ்வதேஷி சந்தை மற்றும் மோகன் சந்தை என்பவை குறிப்பிடத்தக்கவை

Read more about: travel lucknow shopping
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X