Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் 73 ஆண்டுகளாக இலவசமாக பயணிகளை ஏற்றி செல்லும் ரயில் – இந்த அழகான ரூட்டிலா?

இந்தியாவில் 73 ஆண்டுகளாக இலவசமாக பயணிகளை ஏற்றி செல்லும் ரயில் – இந்த அழகான ரூட்டிலா?

மிக எளிமையானதாகவும், மலிவு விலையில் இருப்பதாலும், சிரமமின்றி பயணிப்பதாலும் நாட்டின் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். எவ்வளவு தான் ரயில் மலிவாக இருந்தாலும், இலவசமாக இந்தியாவில் இங்கு ஒரு ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட 73 வருடங்களாக இது பயணிகளிடம் டிக்கெட் எதுவும் வாங்காமல் இலவசமாக ரயில் சேவையை வழங்கி வருகிறது. இது படிப்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? ஆனால் உண்மைதான்! பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேச எல்லைகளில் பக்ரா-நங்கல் இயங்கி வரும் இந்த ரயில் இன்றளவும் இலவசமாக செயல்பட்டு வருகிறதாம்!

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய இரயில்வே நெட்வொர்க்

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய இரயில்வே நெட்வொர்க்

இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில் வலையமைப்பு மற்றும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும். 22,593 க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கும் நான்காவது பெரிய ரயில்வே வலையமைப்பைக் கொண்ட இந்திய ரயில்வே பயணிகளுக்கு மலிவான மற்றும் சிறப்பான சேவையை செய்து வருகிறது. ஆனால் இந்த ரயில்களில் ஒன்று மட்டும் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இலவசமாக பயணிகளை ஏற்றி செல்கிறது. சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில் இருந்து இயங்கி கொண்டிருக்கும் இந்த இரயில் இதுவரையில் பயணிகளிடம் ஒரு பைசா கூட கட்டணமாக வாங்கியது இல்லை.

தொழிலாளர்களை இலவசமாக ஏற்றிச் செல்ல துவங்கப்பட்ட சேவை

தொழிலாளர்களை இலவசமாக ஏற்றிச் செல்ல துவங்கப்பட்ட சேவை

பக்ரா நங்கல் அணையானது உலகின் மிக உயர்ந்த நேரான ஈர்ப்பு அணை மற்றும் சுதந்திர இந்தியாவின் ஆரம்பகால நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். அதன் கட்டுமானம் 1948 இல் தொடங்கியது. அப்பொழுது தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்களின் போக்குவரத்துக்கு வசதியாக ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டது. பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்காகவும், கனரக இயந்திரங்களை கொண்டு செல்வதற்காகவும் முதலில் இந்த ரயில் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை பயணிகளை ஏற்றிச் செல்கிறது.

தொடங்கியே நாளில் இருந்தே இலவசப் பயணம்

தொடங்கியே நாளில் இருந்தே இலவசப் பயணம்

இதனாலேயே இந்த இரயிலில் பயணிப்பதற்கு பயண சீட்டோ அல்லது வேறேதேனும் கட்டணமோ ஆரம்பத்தில் விதிக்கப்படவில்லை. பின்னர் அந்த நடைமுறை தற்போது வரையிலும் பின்தொடரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், அதாவது 1948இல் முதல்முறையாக சேவை துவங்கப்பட்ட போது ரயில் ஸ்டீம் எனப்படும் புகை வண்டியாகவே இருந்துள்ளது. ஆனால் அடுத்த 5 வருடங்களில், அதாவது 1953இல் அமெரிக்காவில் இருந்து 3 மாடர்ன் என்ஜின்கள் இந்த இரயிலில் பொருத்துவதற்காக வாங்கிவரப்பட்டுள்ளன. எது எப்படி இருந்தாலும் எவ்வளவு செலவு ஆனாலும் இன்றளவும் இலவசமாக பயணிகளை ஏற்றி செல்கிறது.

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம்

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம்

ஒவ்வொரு நாளும் சுமார் 300 பயணிகள் இலவச சவாரி பெறுகின்றனர். குறைந்தபட்சம் 25 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினசரி பயணத்திற்கு இந்த ரயிலை நம்பியுள்ளனர். இந்த ரயில் நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:05 மணிக்கு புறப்பட்டு 8:20 மணிக்கு பக்ராவை சென்றடைகிறது. இந்த ரயிலை நம்பி அன்றாடம் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த ரயில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தினசரி வேலை செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.

அழகான பாதையில் இலவச ரைடு

அழகான பாதையில் இலவச ரைடு

பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தால் இயக்கப்படும் இந்த ரயில், சட்லெஜ் நதி மற்றும் ஷிவாலிக் மலைகள் வழியாக ஒரு அழகிய பாதையில் 13 கிமீ தூரத்தை கடக்கிறது. இவ்வாறு இயற்கை அழகு செழித்தோங்கும் பகுதிகளில் செல்லும் இந்த இரயில் பயணத்திற்கு ஒரு ரூபாய் கூட டிக்கெட் கட்டணம் இல்லை என்பது உண்மையில் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ரயில் பிராந்தியத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறியப்படுகிறது. ரயிலை இயக்கும் பக்ரா பியாஸ் நிர்வாகம் (பிபிஎம்பி) ஒருமுறை அதிக செலவு காரணமாக இலவச சேவையை நிறுத்த திட்டமிட்டது. ஆனாலும் இன்றளவும் இந்த சேவை நிறுத்தப்படவில்லை. நீங்களும் இந்த பகுதி செல்ல நேரிட்டால், இந்த அழகிய பாதையில் ஒரு முறை இலவசமாக சென்று வாருங்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+