» »கும்பகர்ணன் குடும்பத்தையே அழித்த ராமர்... இந்த கதை தெரியுமா?

கும்பகர்ணன் குடும்பத்தையே அழித்த ராமர்... இந்த கதை தெரியுமா?

Written By:

கும்ப கருணன் அல்லது கும்ப கர்ணன் பற்றி உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். அவர் ராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். அவர் ராமாயணத்தில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட அரக்கனாக கூறப்பட்ட ராவணனின் தம்பி. ராமனின் தம்பிகளை விட அண்ணன் மீது அதிக பாசம் கொண்டதாக அறியப்படும் கும்பகர்ணன் அரக்க குலத்தில் பிறந்ததற்காக அழிக்கப்பட்டதாக ராமாயண கதை சொல்கிறது. அந்த நிகழ்வை பற்றி இந்த பதில் காண்போம். மேலும் அது தொடர்பான கோயிலுக்கும் சென்று வருவோம். இங்கு சென்று வருவதில் ஒரு சிறப்பு இருக்கிறது அது என்ன சிறப்பு என்பதையும் இதே பதிவில் காண்போம். இந்த தளத்திலிருந்து உடனுக்குடன் பதிவுகளைப் பெற மேலுள்ள பெல் பட்டனை கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

பீமாஷங்கர்

பீமாஷங்கர்

யார் இந்த பீமாஷங்கர் என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவர் கும்பகர்ணனோட தொடர்பு கொண்டவர். அவருக்கும் கும்பகர்ணனுக்கும் என்ன உறவு என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன் இந்த கோயிலைப் பற்றி ஒரு பார்வை.

புதியதும் பழையதுமாக இரண்டு மூன்று கட்டிடங்கள். ஒன்று கறு நிறத்தில் அழகாக காட்சியளிக்கிறது. மற்றவை பழம்பெருமையோடு சில மேற்பூச்சுகளுடன் அழகை புதுப்பித்து காட்டுகிறது. இப்படி பட்ட கட்டிடங்களில் பயன் படுத்தப்பட்ட கட்டிட கலை நாகர கட்டிடக் கலை என்று அழைக்கப் படுகிறது.

மிதமான அளவு பரந்த இந்த கோயில் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது. எனினும் சிலர் இந்த கோயில் பண்டை காலத்தில் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

பீமாஷங்கர் மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான புகழ்பெற்ற ஆன்மீகத்திருத்தலமாகும். இது பிரபலமான மலையேற்ற ஸ்தலமான கர்ஜாத்'திற்கு மிக அருகில் உள்ளது. பீமாஷங்கர் நகரத்தில் முக்கியமான புனித ஜோதிர்லிங்க கோயில் ஒன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஐந்து கோயில்கள் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இடம் பெற்றிருப்பதும் விசேஷமான தகவலாகும்.

புனே நகரத்துக்கு அருகில், கேட் எனுமிடத்திலிருந்து 568 கி.மீ வடமேற்கில், ஷிரதாவ்ன் எனும் கிராமத்தில் 3,250 அடி உயரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கம்பீரமான சஹயாத்திரி மலைப்பகுதியில் இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பீமாஷங்கர் ஸ்தலமானது பீமா ஆறு உற்பத்தியாகும் இடமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆறு தென்கிழக்காக பாய்ந்து இறுதியில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது.

யார் இந்த பீமாஷங்கர்

யார் இந்த பீமாஷங்கர்


பீமஷங்கர் என்ற பெயரைக் கேட்டவுடனே இது சிவன் கோயில் என்பது நிச்சயமாக தெரியும். ஆனால், இது கும்பகர்ணனின் மகன் பெயர். கும்பகர்ணன் குடும்பத்தை அழித்த ராமர், பீமஷங்கர் சிவ பக்தர் என்பதால் விட்டுவிட்டதாகவும், அவருக்காக கட்டப்பட்ட இந்த கோயில், சிவன் கோயிலாக பூசிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

புராண ஐதீகங்களின்படி சிவபெருமான் இந்த சஹயாத்திரி மலைகளின் மீது பீமா வடிவத்தில் தேவர்களின் விருப்பப்படி எழுந்தருளியதாக சொல்லப்படுகிறது. இங்கு திரிபுராசுரன் எனும் அசுரனுடன் நிகழ்ந்த கடுமையான போரின் இறுதியில் சிவபெருமான் அந்த அசுரனைக் கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.

அந்தப் போரின்போது ஏற்பட்ட வெப்பத்தில் இந்த பீமா ஆறு ஆவியாகிப்போனதாகவும், சிவனின் உடலிலிருந்து பெருக்கெடுத்த வியர்வை வெள்ளம் திரும்பவும் அந்த ஆற்றில் நீராய் பாய்ந்ததாகவும் புராணம் கூறுகிறது.

இங்கு அருகாமையில் கமலஜா எனப்படும் பார்வதி தேவியின் கோயிலும் உள்ளது. பீமாஷங்கர் கோயிலுக்கு அருகிலுள்ள மோட்க்ஷகுண்ட தீர்த்தம், குஷாரண்ய தீர்த்தம் மற்றும் சர்வ தீர்த்தம் போன்றவை தவறவிடக்கூடாத இதர ஆன்மிக அம்சங்களாகும்.

எப்படி செல்வது

எப்படி செல்வது

மராட்டிய மாநிலம் புனேக்கு அருகிலுள்ள கெட் என்னும் ஊரில் வடமேற்கு திசையில் 50 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி எனும் ஊரில் அமைந்துள்ளது. சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்றாகவும் உள்ளது. இங்கு நிறைய பக்தர்களும். சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.

PC: SaurabhJain

பயண வழிகாட்டி

பயண வழிகாட்டி

புனேயிலிருந்து மான்சர் வழியாக பீமஷங்கர் கோயிலுக்கு சென்றடையலாம்.

ராஜ்குருநகரிலிருந்து வாடா வழியாக இந்த கோயிலை எளிதில் அடையலாம்.

பீமஷங்கர் கோயிலுக்கு மட்டுமில்லாமல் அருகிலுள்ள பசுமையான இயற்கை அழகு சார்ந்த விசயங்களுக்கும் சிறந்ததாகும்.

இங்கு வரும் இயற்கை ஆர்வலர்கள், டிரெக்கிங் பிரியர்கள், காடு விரும்பிகள், பறவைகள் மீது காதல் கொண்டவர்கள் என எல்லாருக்குமே இன்பத்தை அள்ளி தெளிக்கும் ஒரு இடமாகும்.

மழைக்காலங்களிலும் வசந்த காலங்களிலும் இங்கு சென்றால் நல்ல தரமான சுற்றுலாவை அனுபவித்த மனநிலை கிடைக்கும்.

பீமஷங்கர் சாலை வழியாக 127 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

புனே - கெட் - தாலெகர் என இந்த கோயிலை அடைவது சுலபம்.

PC:Unknown

அழகு

அழகு

பீமாஷங்கர் ஸ்தலம் வெறும் ஆன்மிகத்தலமாக மட்டுமல்லாமல் இயற்கை ரசிகர்களின் விருப்பஸ்தலமாகவும் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. சஹயாத்திரி மலையின் இயற்கை அமைப்பு காரணமாக இந்த பகுதியில் ஏராளமான மலையேற்றத்தலங்கள் அமைந்துள்ளன.

இங்குள்ள வனப்பகுதி மற்றும் காட்டுயிர் சரணாலயங்களில் பல அரிய வகை பறவை இனங்களைக் காணலாம். இங்கு விசேஷமாக இந்திய காட்டு (ராட்சத) அணிலை தவறாமல் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

எனவே பீமாஷங்கர் சுற்றுலாத்தலமானது ஆன்மிக யாத்ரீகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சாகச சுற்றுலாப்பிரியர்கள் மத்தியிலும் பிரசித்தமான ஸ்தலமாக அறியப்பட்டுள்ளது. இயற்கை எழில் நிறைந்து வழியும் ஸ்தலமான இந்த பீமாஷங்கர் பிரமிக்க வைக்கும் அழகு மற்றும் பசுமைப்பாரம்பரியத்தை கொண்டுள்ளது.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


ஹனுமான் ஏரி

பீமாஷங்கர் பகுதியில் உள்ள இந்த ஹனுமான் ஏரி ஒரு முக்கியமான சிற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பதற்கு இந்த ஹனுமான் ஏரி மிக ஏற்ற இடமாக உள்ளது.

பீமாஷங்கர் சுற்றுலாத்தலத்தின் முக்கிய அம்சமான இந்த ஹனுமான் ஏரிப்பகுதியில் பலவிதமான பறவைகள் மற்றும் அணில்களை பயணிகள் பார்த்து ரசிக்கலாம். மேலும், இந்த ஏரிக்கு அருகிலேயே ஒரு நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நீர்வீழ்ச்சியும் பயணிகளால் பெரிதும் விரும்பி ரசிக்கப்படுகிறது.

பீமாஷங்கர் காட்டுயிர் சரணாலயம்

பீமாஷங்கர் கிராமப்பகுதியில் 2100 அடி மற்றும் 3800 அடி உயரத்தில் 100 ச.கி.மீ பரப்பளவில் இந்த பீமாஷங்கர் காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது வளமான சஹயாத்திரி மலைப்பகுதியை ஒட்டி எல்லா திசைகளிலும் பசுமையான வனப்பகுதி சூழ அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் பல அரிய விலங்கினங்களான ஷேக்ரு எனப்படும் இந்திய ராட்சத அணில், கழுதைப்புலி, பறக்கும் அணில், குரைக்கும் மான், சிறுத்தை, முள்ளம்பன்றி மற்றும் காட்டுப்பன்றி போன்றவை வசிக்கின்றன. மேலும், இந்த பீமாஷங்கர் காட்டுயிர் சரணாலயத்தில் பறவை ரசிகர்கள் மற்றும் இயற்கைப்பிரியர்கள் பெரிதும் விரும்பக்கூடிய மலபார் விசில் குருவி, மலபார் அரிவாள் மூக்கன் மற்றும் பழுப்பு காட்டுக்கோழி போன்ற பலவகை பறவையினங்களையும் காணலாம். இந்த காட்டுயிர் சரணாலயத்தை மழைக்காலத்தில் பயணம் செய்து பார்ப்பது சிறந்தது. இக்காலத்தில் பலவிதமான தாவர வகைகள் மற்றும் மூலிகைச்செடிகளை அவற்றின் பசுமையான தோற்றத்தில் கண்டு ரசிக்கலாம்.

மன்மோத் மலை

ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மன்மோத் மலைகள் பலவிதமான புராதன பாறைக்குறிப்புகள் மற்றும் பாறைச்சிற்ப வடிவங்களை கொண்டுள்ளது. இந்த மன்மோத் மலை பீமாஷங்கர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பாறைச் சிற்ப வடிவமைப்புகள் பெரும்பாலும் புனித ஜோதிர்லிங்க கோயிலுடன் சம்பந்தம் உடையனவாய் காட்சியளிக்கின்றன. பூதலிங்கம் மற்றும் அம்பா-அம்பிகா குறிப்புகளும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள எல்லா பாறைச்சிற்ப வடிவமைப்புகளும் பாரம்பரிய புத்த பிரிவு சிற்பக்கலை பாணியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அருகாமையில் உள்ள நாக்ஃபானி மற்றும் குப்த பீமாஷங்கர் போன்ற ஸ்தலங்களும் பயணிகள் பார்க்க வேண்டிய அம்சங்களாக அமைந்துள்ளன


PC: Pratik Kadam

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்