» »போபாலிலிருந்து சாத்புராவிற்கு ஒர் அழகிய மலைப்பயணம் என்னைக்காவது போயிருக்கீங்களா? இதப் படிச்சா உங்களு

போபாலிலிருந்து சாத்புராவிற்கு ஒர் அழகிய மலைப்பயணம் என்னைக்காவது போயிருக்கீங்களா? இதப் படிச்சா உங்களு

Written By: Balakarthik Balasubramanian

எமரால்டு மலைகளும், பணக்கார பல்லுயிரின் வாழ்வாதாரங்களும், பண்டைய குகைகளும் நம் கண்களுக்கு தென்பட, இந்த சாத்புரா தேசிய பூங்கா அழகிய காட்சிகளால் மனதை வருடி, செல்லும் இடமெல்லாம் காட்சிகளை கண்களுக்கு தந்து விரிவான நிலப்பரப்பை கொண்டு மனதை ஆட்சி செய்கிறது. மேலும் இந்த பூங்காவை காண்பதற்கு ஏதுவானதொரு மாதமும் காலமும் எது? என்ற விளக்கங்களையும் கீழ்க்காணும் பத்தியின் மூலம் நாம் பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலத்தின் இதய துடிப்பாக இருக்கும் இந்த சாத்புரா தேசிய பூங்கா... வந்து செல்வோரை தன் பக்கம் ஈர்த்து எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்து மகிழ்வித்து கூடவே ஏக்கத்தையும் பரிசாய் அளித்து மனதை நெகிழ செய்கிறது. குறிப்பாக இந்த பூங்கா... வன விலங்கு/வன தாவர வாழ்க்கை பிரியர்களுக்கு பெரும் தீணியாக அமையும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

போபாலிலிருந்து சாத்புராவிற்கு ஒர் அழகிய மலைப்பயணம் என்னைக்காவது போயிருக்கீங்களா? இதப் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வரும்.!!

Abhayashok

மத்தியபிரதேசத்தின் ஹோசங்பாத் மாவட்டத்தில் சாத்புராவின் மலைத்தொடர்ச்சிகளில் அமைந்து நம் இதயத்தில் இடம் பிடிக்கிறது. இந்த சாத்புரா மலைத்தொடர்ச்சி, 'மலைகளுக்கு மட்டும் நான் பிரபலம் அல்ல...பல்லுயிர் வாழ்க்கையின் அழகிய காட்சிகளுக்கும், பல குகைகளுக்கு வழிவகுத்து தரும் அழகு நீங்கா நதிகளின் ஓட்டத்திற்கும், குகைகளில் வாழும் விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கும், இயற்கை சுரங்கங்களுக்கும் நான் பிரசித்தியே!!!' என செல்லும் இடமெல்லாம் கொள்ளை அழகை கொண்டு மனதினை தூக்கிகொண்டு தூரச் செல்கிறது.

524 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த அழகிய சாத்புரா தேசிய பூங்கா...1857ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கேப்டன் ஜெ. போர்சித் என்பவரால் கண்டிபிடிக்கப்பட்டதாகும். இங்குள்ள நிலப்பரப்புகள் முரட்டுத்தனமானதாகவும், ஆழமான பள்ளத்தாக்குகளையும் கொண்டிருக்க...அத்துடன் மனதை வசீகரிக்கும் நீர்வீழ்ச்சிகளும், சிற்றாறுகளும், பசுமை நீங்கா காடுகளும், தாழ்ப்பாள் பலிகளும், மணற்கல் மலைகளும் நம் மனதை இயற்கையின் அழகின் பின் ஒளியவைத்து... நம் கால்கள் முன்னோக்கி அதனை தேடிய படியே பிரம்மிப்புடன் செல்கிறது.

போபாலிலிருந்து சாத்புராவிற்கு ஒர் அழகிய மலைப்பயணம் என்னைக்காவது போயிருக்கீங்களா? இதப் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வரும்.!!

Manishwiki15

டென்வா நதி, சாத்புரா தேசிய பூங்காவின் உயிர் நாடி என்று கருதப்படும் இந்த நதி பூங்காவின் உள்ளே வீரமாக பாய்ந்து நம் மனதை அழகு நீங்கா தன்மை கொண்டு நெருடவைக்கிறது. இந்த நதி பசுமையாக காணப்படுவதுடன்...இந்த நதியின் நீர் அங்குள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் வருடம் முழுவதும் தாகம் தீர்த்து பெரும் உதவி புரிகிறது. மத்திய பிரதேசத்திலுள்ள உயர்ந்த சிகரமான தூப்கார்ஹ், கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் அமைந்து நம்மை அன்னாந்து பார்க்க வைத்து வியப்பை நோக்கி இழுத்து செல்கிறது.
இங்கு நாம் காணும் ஒரு அற்புதம் என்னவென்றால்...கதிரவன் துயில் எழுந்து முதலில் இந்த பூங்காவை காண அதன் பின் தான் மத்தியபிரதேசத்தின் மற்ற பகுதிகளை காணுவான் என்ற ஒன்று நம் மனதை ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது. இங்கே அருகில் காணப்படும் இரண்டு முக்கிய இடங்களான.... பச்மார்ஹி மற்றும் போரி சரணாலயம் நம்மை விடாமல் இறுக்கி பிடித்து இயற்கையின் முன்பு சரணாகதியடைய வைக்கிறது என்று தான் கூற வேண்டும். 1981ஆம் நிறுவப்பட்ட இந்த பூங்கா...தனித்தன்மையுடனும், சிறந்த பராமரிப்பு கொண்டதாகவும் விளங்குகிறது. மேலும் இங்குள்ள உயிரினங்களின் வாழ்க்கையை நாம் தெரிந்துகொள்ள ஜீப் சவாரியும், யானை சவாரியும், நடைப்பயணமும், படகு சவாரியும் உதவ...நம் மனம் எல்லையில்லா ஆனந்தத்தில் துள்ளிக்குதித்து விளையாடுகிறது.

சாத்புரா தேசிய பூங்காவை நாம் காண உகந்ததோர் மாதங்கள்:

போபாலிலிருந்து சாத்புராவிற்கு ஒர் அழகிய மலைப்பயணம் என்னைக்காவது போயிருக்கீங்களா? இதப் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வரும்.!!

Flickr.com

சுற்றுலா பயணிகளுக்காக அக்டோபர் மாதங்களிலும், ஜீன் மாதத்தின் நடுவிலும் இந்த பூங்கா திறக்கபடுகிறது. பருவ மழைக்காலங்களின் போது இந்த பூங்காவில் நிகழும் அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக மூடப்படுகிறது. இந்த பூங்காவிற்கு அக்டோபர் முதல் திசம்பர் வரையிலும்...மார்ச் முதல் மே வரையிலான காலங்களில் ஆர்வலர்கள் வந்து மகிழ்ந்து மன நிறைவுடன் செல்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

இந்த பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் ஒரு பார்வை:

தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், தொலைநோக்கிகள், கதிரவன் ஒளியிலிருந்து காத்துக்கொள்ள பயன்படும் கண்ணாடிகள், மலையில் ஏற உகந்த குச்சிகள், புகைப்படக்கருவி, தொப்பிகள் என நம் பயணத்திற்கு தேவையான பொருட்கள் அமைந்து நம் பயணத்தின் கடினத்தை குறைக்கிறது.

சாத்புரா தேசிய பூங்காவை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக நாம் அடைவது எப்படி?

இந்த சாத்புரா தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு விமான நிலையம், 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள போபால் விமான நிலையமாகும். அங்கிருந்து நாம் டாக்சியின் உதவியுடன் சாத்புரா தேசிய பூங்காவை அடையலாம்.

தண்டவாள மார்க்கமாக நாம் அடைவது எப்படி?

இந்த சாத்புரா தேசிய பூங்காவிற்கு அருகில் சோஹாக்பூர், இடர்சி, பிபாரியா, ஹோசங்பாத் இரயில் நிலையங்கள் அமைந்து நம் பயணத்தை சிறக்க செய்கிறது. இந்த நிலையங்கள்...பூங்காவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

சாலை மார்க்கமாக செல்வது எப்படி?

போபாலில் இருந்து சாத்புரா தேசிய பூங்காவிற்கு நாம் செல்ல ஒரே ஒரு வழி தான் உள்ளது. ஆம், அது தேசிய நெடுஞ்சாலை 46இன் வழியாக மட்டும் தான்.

போபாலிலிருந்து சாத்புராவிற்கு ஒர் அழகிய மலைப்பயணம் என்னைக்காவது போயிருக்கீங்களா? இதப் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வரும்.!!

Suyash Dwivedi

வழி பற்றிய விபரம்:

போபால் - காம்கேடா - ஒபைத்துல்லாகஞ்ச் - ஹோசாங்பாத் - சாத்புரா தேசிய பூங்கா...

போபாலில் இருந்து புறப்படும் நாம் 180 கிலோமீட்டர்கள் பயணம் செய்து இந்த சாத்புரா தேசிய பூங்காவை அடைகிறோம். இந்த 180 கிலோமீட்டர்கள் கடக்க நமக்கு சுமார், 4 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகிறது. போபாலில் இருந்து நாம் புறப்பட்டு அதிகாலை பொழுதில் பயணத்தை ஆரம்பிக்க... நம்மால் போபாலின் பல முக்கிய இடங்களையும் அவற்றின் அழகு காட்சிகளையும் கண்களால் கண்டு மனதை பறிகொடுத்து ஆச்சரியப்பட அவை வழிவகை செய்கிறது. இராணுவ அருங்காட்சியகம் என்றழைக்கப்படும் இந்த யோதஷ்தல், இந்திய இராணுவ படையின் பல்வேறு சாதனைகளையும் பயணத்தையும் நமக்கு தெளிவுபடுத்தி மனதை வரலாற்றை கொண்டு வருடுகிறது. அந்த இடங்கள் நமக்கு பல வித புதிய அனுபவங்களை தந்து வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகிறது.

சஞ்சியில் உள்ள புத்த நினைவுச் சின்னங்கள், மிகவும் பிரசித்திபெற்று வரலாற்றின் நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி புத்த மதத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க செய்கிறது. இலங்கையின் ஏ.எஸ்.ஐ. மற்றும் மஹா போதி சங்கத்தால் இந்த இடம் பராமரிக்கப்படுகிறது. இது போல் போபாலில் நடைக்கு தடைக்கட்டும் நம் மனம், இங்கே பல காட்சிகளை கண்டு மனதை பறிகொடுத்து காம்கேடாவை நோக்கி முன்னேறி அதன் பின் செல்கிறது.

இங்கே பார்ப்பதற்கு இடங்கள் அதிகம் தென்படவில்லையென்றாலும்... நாம் பார்க்கும் சில இடங்கள் நம் மனதில் தேங்கி இயற்கையால் ஆட்சி செய்கிறது. குறிப்பாக, இங்கே நாம் காணும் காம்கேடா அணை, நம்மை நதி நீரில் பயணிக்க வைத்து மனதிற்கு நீங்கா புத்துணர்ச்சியை தருகிறது. மேலும் போஜேஷ்வரா ஆலயம் போன்ற வரலாற்று சிறப்பிடங்கள் ஆங்காங்கே இந்த ஒபையதுல்லாகஞ்சில் அமைந்து நம் மனதை பக்திகொண்டு ஆக்கிரமிக்கிறது. இந்த போஜேஷ்வரா ஆலயம், சிவபெருமானுக்கு அற்ப்பணிக்கப்பட்டு பரமரா வம்சத்தின் ராஜாவான போஜாவால் கட்டப்பட்டதாகும். ஒபையதுல்லாகஞ்சின் அருகில் காணப்படும் பிம்பேத்கா, பாறைகளால் ஆன உறைவிடத்தை கொண்டு பெருமையுடன் விளங்குகிறது. இங்கே உள்ள பாறைகளில் தென்படும் ஓவியங்களும், சிற்பங்களும் கற்காலத்தில் கட்டப்பட்டு...இந்த தளங்கள் இன்று ASIஆல் பராமறிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் மூலம் நமக்கு தெரியவருகிறது.

போபாலிலிருந்து சாத்புராவிற்கு ஒர் அழகிய மலைப்பயணம் என்னைக்காவது போயிருக்கீங்களா? இதப் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வரும்.!!

LRBurdak

இங்கே காணும் கற்காலத்தின் ஓவியங்கள், காட்சிகளை கண்களுக்கு சமர்ப்பித்து மனதை இனிமையாக்குகிறது. பச்மார்ஹி பாறை கலை மிகவும் பிரசித்திபெற்ற ஓவியங்களை கொண்டு வரலாற்றை தாங்கியபடி பெருமையுடன் நிற்கிறது. அதுமட்டுமல்லாமல்... ஹோசங்பாத்தில் காணப்படும் வரலாற்று பெருமைமிக்க பாறைகளின் ஓவியங்களும், பாண்டவா குகைகளும் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அங்கிருந்து இன்னும் சில கிலோமீட்டர்கள் நாம் முன்னோக்கி செல்ல இறுதியில் சாத்புரா தேசிய பூங்காவை நாம் அடைகிறோம்.

சாத்புரா தேசிய பூங்காவிலுள்ள மரங்கள், செடிகள் மற்றும் விலங்குகள் ஒரு பார்வை:

இந்த சாத்புரா தேசிய பூங்காவில் எண்ணற்ற மரங்களும், செடிகளும் விலங்குகளும் காணப்படுகிறது. ஆம், இங்கே சுமார் 1300 வகையான மரங்கள் செடிகள் அசைந்து நம் மனதை தூய காற்றினால் புத்துணர்ச்சி அடைய செய்கிறது. அவற்றுல் சில... தேக்கு, சல் மரம் (இது ஒரு வகையான முக்கியமான மரமாகும்), டெண்டு, இலுப்பை மரம், பெல் மரம், மூங்கில் மரம், புற்கள், புதர்செடிகள், லன்டானா ஆகிய மரங்கள் இங்கே உள்ள மிகவும் ஸ்பெசலான மரங்களாகும்.
இந்த சாத்புரா தேசிய பூங்காவில் காணப்படும் சில முக்கிய விலங்குகளான புள்ளி மான், இந்திய காட்டெருமை (இது ஒரு வகையான எருமை இனம் ஆகும்), புலி, சிறுத்தை, கருப்பு நிற ஆண் மான் (நடிகர் சல்மான் கானால் நன்கு அறியப்பட்ட ஒரு இனம் தான் இந்த கருப்பு நிற ஆண் மானாகும்)...அத விடுங்க...நாம் தொடர்வோம்.. காட்டுப்பன்றி, காட்டு நாய்கள், சோம்பல் கரடிகள், சாம்பர் மான்கள், முள்ளம்பன்றி, நான்கு கொம்பு மான்கள், எறும்புண்ணி, நீலான் மான்கள், பறக்கும் அணில்கள், சிறிய இந்திய புனுகு பூனை, இந்திய பறக்கும் நரிகள், ஆசிய காட்டு பூனை, காட்டு பூனை, தங்க நிற குள்ள நரிகள், பிளாக்நெப்ட் ஹாரே, குரைக்கும் மான், நீர் நாய், நீண்ட வால் உடைய குரங்கு என ஒரு பட்டாளமே நம்மை குஷிபடுத்த இங்கே காத்திருக்கிறது. இந்திய பெரிய வடிவ அணில்கள் இங்கே ஓடி ஆடி திரிந்து தன்னுடைய பெரிய உருவத்தால், மனதை கட்டி இழுத்துக்கொண்டு தூர குதித்து செல்கிறது. இங்கே காணும் காட்சிகள் மிகவும் அரிதான காட்சிகள் என்பதால் செல்லும் நாம் வழிமேல் விழி வைத்து நடக்க... இந்த காட்சிகளை கண்டுவிட்டு தான் செல்ல வேண்டுமென நம் மனது நமக்கு கட்டளையிடுகிறது.

போபாலிலிருந்து சாத்புராவிற்கு ஒர் அழகிய மலைப்பயணம் என்னைக்காவது போயிருக்கீங்களா? இதப் படிச்சா உங்களுக்கும் அந்த ஆசை வரும்.!!

Davidvraju

மேலும் இந்த சாத்புரா தேசிய பூங்காவில் காணும் பறவைகள் சிறகடித்து பறந்து மனதை தூக்கிகொண்டு தூர பறக்கிறது. ஆம், தவான் கழுகு, புல்வெளி கழுகு, சிக்ரா எனப்படும் பறவை, பேஸ்ரா, பெரிய மேலங்கி கழுகு, குறைவாகக் காணப்படும் கழுகு, யூரேசியன் குருவி பருந்து, க்ரெஸ்டட் கோஷ்வாக், வடக்கு கோஷ்வாக், கருங்கழுகு, தட்டாம்பூச்சி, நீர்க்காகங்கள், ஈக்ரெட் எனப்படும் பறவை, பிட்டெர்ன், நாரைகள், கொக்குகள், ஐபிஸ், வாத்துகள், ஒரு வகையான பருந்து, கைட் எனப்படும் பறவை, பருந்துகள், மீன் கொத்தி கழுகுகள் என இன்னும் நிறைய பறவைகள் பறந்த படி வானில் திரிய மனிதன் என்பதனை மறந்து நம் மனமும் இறக்கையற்று வானில் பறந்து அதனை துரத்தி செல்கிறது என்று தான் கூற வேண்டும்.

ரஜினிகாந்த் செல்லும் குகையின் ரகசியம்

ரஜினிகாந்த் செல்லும் குகையின் ரகசியம்

ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!

அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!

அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!

ஸ்டீவ் அறிவுரையால், மார்க் ஜுக்கர்பெர்க் காண விரும்பிய இந்திய கோவில் - அப்படி என்ன அதிசயம்?

ஸ்டீவ் அறிவுரையால், மார்க் ஜுக்கர்பெர்க் காண விரும்பிய இந்திய கோவில் - அப்படி என்ன அதிசயம்?

ஸ்டீவ் அறிவுரையால், மார்க் ஜுக்கர்பெர்க் காண விரும்பிய இந்திய கோவில் - அப்படி என்ன அதிசயம்?

அமெரிக்க விசா வேணுமா அப்ப இவர போயி பாருங்க

அமெரிக்க விசா வேணுமா அப்ப இவர போயி பாருங்க

அமெரிக்க விசா வேணுமா அப்ப இவர போயி பாருங்க

10 கோடி மக்கள் ஒரே இடத்தில் கூடும் அதிசய நிகழ்வை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

10 கோடி மக்கள் ஒரே இடத்தில் கூடும் அதிசய நிகழ்வை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

10 கோடி மக்கள் ஒரே இடத்தில் கூடும் அதிசய நிகழ்வை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

Read more about: travel, temple