Search
  • Follow NativePlanet
Share
» »போபாலில் ஒருநாள் - எங்கெல்லாம் செல்லலாம் என்னவெல்லாம் செய்யலாம்!

போபாலில் ஒருநாள் - எங்கெல்லாம் செல்லலாம் என்னவெல்லாம் செய்யலாம்!

By Udhaya

இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்கும் போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. முந்தைய போபால் மாநிலத்தின் தலைநகரமாக இருந்த இன்றைய போபால், ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சுத்தமான மற்றும் செம்மையான நகரம் இந்தியாவிலேயே மிகவும் பசுமையான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. கி.பி. 1000 முதல் கி.பி. 1055 வரை ஆட்சி செய்து வந்த பராமர வம்ச அரசரான போஜ ராஜரால் உருவாக்கப்பட்ட இந்த நகரம், மனதை வருடும் வரலாற்றை கொண்டிருக்கிறது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்நகரத்தின் நவீன கால அடையாளங்கள் தோஸ்த் முகம்மது கான் என்பவரால் உருவாக்கப்பட்டன. பின்னர் நவாப்களால் ஆளப்பட்டு வந்த இந்த நகரத்தின் கடைசி போபால் நவாபாக இருந்தவர் ஹமீதுல்லா கான் என்பவராவார். போபால் நகரத்தின் கலை, கட்டிடங்கள், இசை, உணவுகள் மற்றும் கலாச்சாரத்தில் முகலாய மற்றும் ஆப்கானியர்களின் தாக்கம் நிரம்பவே இருப்பதை காண முடியும். ஏப்ரல் 1949-ல் முறையாக இந்திய யூனியனில் இணைந்த இந்த நகரம், அது முதலாகவே இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான பாத்திரத்தை ஏற்று வந்திருக்கிறது. வாருங்கள் போபாலின் அதிசயத்தையும் அழகையும் ஒரு நாளில் கண்டுகளிப்போம்.

 போபால் சுற்றுலா | ஈர்க்கும் இடங்கள்

போபால் சுற்றுலா | ஈர்க்கும் இடங்கள்

இந்தியாவின் முக்கியமான விரும்பத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போபால் நகரத்திற்கு ஆயிரக்கணக்கான மற்றும் இலட்சக்கணக்கான இந்திய மற்றும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆர்வமூட்டக் கூடிய வரலாறு நவீன காலத் தோற்றத்தில் வெள்ளி வீதிகளில் உலவிக் கொண்டிருக்கும் இந்நகரம் சுற்றுலாப் பயணிகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இது மட்டுமல்லாமல், மிகவும் கவர்ச்சியான சுற்றுலா தலமாகவும் போபால் விளங்கி வருகிறது. இந்த நகரத்தின் புவியியலமைப்பின் காரணமாக சிறுத்தைகளின் தாயகமாக விளங்கும் வான் விஹார் என்ற வனவிலங்கு பூங்காவும் உள்ளது. வரலாற்று ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாக தொல்பொருள் அருங்காட்சியகமும், பாரத் பவனும் திறந்திருக்கும் வேளையில், சமயப் பற்றுடையவர்களின் விருப்பமான இடமாக பிர்லா மந்திர், மோடி மசூதி மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை உள்ளன. கலைகளை விரும்பும் கலாரசிகர்கள் இங்கிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான அருங்காட்சியகங்கள் மற்றும் கோவில்களுக்குச் செல்லும் போது பழங்காலக் கலைஞர்களின் மகோன்னதமான கை வேலைப்பாடுகள் அவர்களின் கண்களுக்கு விருந்தாக கிடைக்கும்.

PriteshS21

எப்படி செல்வது | பயண தொலைவு மற்றும் நேரம்

எப்படி செல்வது | பயண தொலைவு மற்றும் நேரம்

சென்னையிலிருந்து போபாலுக்கு அந்தமான் விரைவு ரயில், ஹஸ்ராட் நிஜாமுதீன் விரைவு ரயில், திருக்குறள் விரைவு வண்டி உள்பட மொத்தம் 20 ரயில்கள் இருக்கின்றன.

மித வெப்ப மண்டல பருவநிலையை பெற்றிருக்கும் இந்நகரம் கோடை, மழை மற்றும் குளிர்காலங்களில் சுற்றுலா வரும் போது மிகவும் கடினமானதாகவே உள்ளது. எனினும், அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான மாதங்கள் சுற்றுலாவிற்கேற்ற மிகச்சிறந்த மாதங்களாக கருதப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், உலகத்தின் அனைத்து பகுதிகளுடனும் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் மிகச்சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள நகரமாகவும் போபால் உள்ளது.

 காலை 7 மணி | சுற்றுலா தொடங்குகிறது | செல்லவேண்டிய இடங்களும் திட்டமும்

காலை 7 மணி | சுற்றுலா தொடங்குகிறது | செல்லவேண்டிய இடங்களும் திட்டமும்

காலை 7 மணி - வான் விஹார் தேசிய பூங்கா

அதிகாலை 6 மணிக்கெல்லாம் நீங்கள் உங்கள் அறையிலிருந்து கிளம்பவேண்டும். கிட்டத்தட்ட 40 நிமிட பயணத்தில் வான் விஹார் தேசியப் பூங்காவை அடைய முடியும். இருப்பினும் நேர மேலாண்மை தளர்த்தி 7 மணிக்கு பூங்காவில் இருப்பதாகக் கொள்வோம்.

போபால் ரயில் நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த வான் விஹார் தேசியப் பூங்கா. வாருங்கள் பூங்கா பற்றிய சில விசயங்களைத் தெரிந்து கொள்வோம்

அமைப்பும் அமைவிடமும்

போபால் நகரத்தின் மத்தியில் வான் விஹார் தேசிய பூங்கா அமைந்துள்ளது. நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு மலையின் மீது 445 ஹெக்டேர்கள் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் சற்றே பிரபலமாக விளங்கும் இந்த பூங்காவிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் மென்மையாக நிமிர்ந்து நிற்கும் பசும் புல்வெளிகள் வருடம் முழுவதுமே பசுமையாக இருக்கும்.

இந்த பூங்காவில் பல்வேறு வகையான தாவர மற்றும் ஊண் உண்ணிகள் தங்களுடைய இயற்கையான வாழிடங்களில் வசித்து வருவதை உங்களால் காண முடியும். எனினும், இங்கு வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளை காணும் போது இது ஒரு தேசிய பூங்காவைப் போல் இல்லாமல் ஒரு விலங்கியல் பூங்காவைப் போலவே தோற்றமளிக்கிறது. மேலும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்ட பல்வேறு தாயில்லா விலங்குகளுக்கும் ஆதரவு இல்லமாக இந்த பூங்கா விளங்குகிறது.

பிற விலங்கியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு மாற்றாக வேறு சில விலங்குகளும் இந்த பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த இடம் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.

கட்டணம் மற்றும் நுழைவு தகவல்கள்

சனி முதல் வியாழன் வரை அனைத்து நாட்களிலும் செயல்படும் இந்த பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை.

ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்பட்ட இந்த பூங்கா அக்டோபர் 30 வரை திறந்திருக்கும் பின் அடுத்த வருடம் பிப்ரவரிக்குதான் திறக்கப்படும்.

நுழைவுக் கட்டணமாக நபர் ஒருவருக்கு 30 வரை வசூலிக்கப்படுகிறது.

இருசக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும், இலகு ரக வாகனங்களுக்கு 250ரூபாயும், சிற்றுந்து வகை வாகனங்களுக்கு 1100 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.

சபாரி செல்வதற்கு 50 ரூபாய் ஆகும்.

Animesh sengar

காலை 9 மணி | காலை சிற்றுண்டி | அருங்காட்சியகங்கள்

காலை 9 மணி | காலை சிற்றுண்டி | அருங்காட்சியகங்கள்

அருகருகே மூன்று அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. அதற்கு முன்னர் நாம் காலை சிற்றுண்டியை முடித்துக்கொள்வது சிறந்தது. காலை 9.30 அருங்காட்சியகம் நோக்கி பயணத்தைத் தொடர்வோம்.

நம் திட்டப்படி,

டிரைபல் கேபிடட்

இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்

மத்திய பிரதேச பழங்குடியின அருங்காட்சியகம்

இந்த எல்லா இடங்களிலும் இரண்டு மணி நேரங்கள் செலவிடலாம். 12 முதல் 12.30 மணிக்குள் இங்கிருந்து கிளம்பவேண்டும். சரி அருங்காட்சியகத்தில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட இடம் தான் பிர்லா மியூசியம். இந்த மியூசியத்தில் மத்தியப் பிரதேசத்தின் வரலாற்றையும் அறிய உதவும் கலை மற்றும் தொல்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. போபாலின் முக்கியமான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கும் இந்த இடம், முக்கியமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் வரலாற்றுக்கு முந்தைகாலம் மற்றும் பழைய கற்காலம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு கலைப்பொருட்களைக் கொண்டுள்ள இடமாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.

போபால் நகரத்தின் அரசு தொல்பொருள் அருங்காட்சியகம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொறாமைப்படத்தக்க தொல்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகமாகும். மேலும், இங்கிருக்கும் மத்தியப் பிரதேசத்தின் பொக்கிஷம் போன்ற ஓவிய கலைப் பொருட்கள் இம்மாநிலத்தின் கலாச்சார வரலாற்றைப் படம் போட்டுக் காட்டுவதாக இருக்கும்.

ஷாம்லா மலைகளின் மேல் சுமார் 200 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்திருக்கும் மனித குல மியூசியம் அப்பர் லேக் ஏரியின் சுற்று வட்டக் காட்சியைக் காட்டும் இடமாகவும் இருக்கிறது. 1977-ல் திறக்கப்பட்ட, நாட்டிலேயே மிகப்பெரிய திறந்த வெளி மானிடவியல் மியூசியமான சங்கராலயா மனித குல வரலாற்றை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.

Suyash Dwivedi

 நண்பகல் 12 மணி | மாநகரை நோக்கி பயணம் | காணவேண்டிய இடங்கள்

நண்பகல் 12 மணி | மாநகரை நோக்கி பயணம் | காணவேண்டிய இடங்கள்

நண்பகல் நேரம் தாண்டியதும் நாம் மதிய உணவையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அரை மணி நேர பயணத்தில் நாம் ஷௌகட் மஹால் அருகே சென்றுவிடலாம். இங்கு நாம் காணவேண்டிய இடங்களாக ஷௌகட் மஹால்,கௌஹர் மஹால், மோடி மஹால் ஆகியவை இருக்கின்றன. இதன் அருகே இருக்கும் மோடி மசூதியும் காணவேண்டிய தளங்களுள் ஒன்று.

கோஹர் மஹால்

அப்பர் லேக் ஏரியின் கரையில் உள்ள கோஹர் மஹால் போபால் நகரத்தின் பிரமிக்க வைக்கும் அரண்மனைகளில் ஒன்றாகும். போபால் நகரத்தின் முதல் பெண் அரசியான கோஹர் பேகம் என்பவரால் இந்த மாளிகை கட்டப்பட்டது. 1820-ம் ஆண்டு அவருடைய பாதுகாப்பு மற்றும் மேற்பார்வையில் இந்த அரண்மனை கட்டப்பட்டதிலிருந்தே இந்த மாளிகை கட்டிடக்கலை அற்புதமாக விளங்கி வருகிறது. இந்து மற்றும் முகலாய கட்டிடக்கலையின் மிகச்சரியான இணைவாகவே இந்த மாளிகை உள்ளது.

சௌகத் மஹால்

சிறப்பான கட்டிடக்கலை மற்றும் அற்புதனமான கட்டமைப்பு போன்றவற்றைக் கொண்டிருப்பதால், போபால் நகரத்தின் முக்கியமான வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக சௌகத் மஹால் உள்ளது. பல்வேறு விதமான கட்டிடக்கலை வழிமுறைகளின் இணைவாக இருக்கும் இந்த கட்டிடத்தை, ஒரு பிரெஞ்சுக்காரர் ஐரோப்பிய மற்றும் இந்திய கட்டிடக்கலைகளைப் பின்பற்றி பிரமிக்கத்தக்க அரண்மனையாக கட்டியுள்ளார்

ஒரு மணி நேரத்தில் இவ்விரு மஹால்களையும் சுற்றிவிட்டு, பின் மதிய உணவுக்கு சென்றாலும் சரி இல்லை மதிய உணவை முடித்துக்கொண்டு இங்கு சுற்றினாலும் சரி. மொத்தத்தில் 4 மணிக்குள் அனைத்தையும் முடித்துவிடவேண்டும். மாலை நாம் ஷாப்பிங் செல்லவிருக்கிறோம்.

மாலை 4 மணி | ஷாப்பிங் நேரம் | கடைத்தெரு செல்வோம்

தங்களுடைய மனைவி அல்லது காதலியுடன் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் மிகவும் ஏற்ற இடமாக சௌக் பஜார் உள்ளது. போபால்-பழைய நகரத்தில் இருக்கும் இந்த சந்தையில் பல்வேறு விதமான நல்ல பொருட்களையும் மலிவாக வாங்கிட முடியும். இந்த சந்தையில் பழைய உலகத்தின் அழகுடன் கூடிய பழமையான மசூதிகள் மற்றும் கடந்த ஆண்டுகளைச் சேர்ந்த பெண்களின் பழைய ஹவேலிஸ் ஆகியவைகளும் உள்ளன.

இந்த சௌக்கில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட வெல்வெட் மெத்தைகளை குறைந்த விலைகளில் வாங்கிட முடியும். மேலும் உங்கள் கரங்களை அழகுற எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள டுஸ்ஸார் பட்டு மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்கள் ஆகியவற்றையும் கொண்டு அலங்கரித்திட முடியும். போபாலின் கைவினைப் பொருட்களான வெல்வெட் பர்ஸ்கள், சேலை உட்பட எம்பராய்டரி செய்யப்பட்ட உடை வகைகள், கை வளையல் மற்றும் கம்மர்பந்த் போன்ற பாரம்பரிய மற்றும் வண்ணமயமான நகைகளையும் காணும் போது இங்கு வரும் பெண்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியில் குதிப்பார்கள்.

இந்த சந்தைக்கு செல்லும் போது உங்கள் பர்ஸ் நிறைய பணம் இருக்கட்டும் இல்லையேல் கனத்த இதயத்துடன் வெறும் கையுடன் நீங்கள் திரும்ப வேண்டியிருக்கும். எனினும், எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பேரம் பேசுங்கள், இல்லையெனில் கண்டிப்பாக ஏமாற்றப் படுவீர்கள்.

Shivee Aswal Butola

சுற்றுலாவை நிறைவு செய்வோம் | இல்லம் திரும்புவோம்

சுற்றுலாவை நிறைவு செய்வோம் | இல்லம் திரும்புவோம்

இரவு 7 மணிக்கெல்லாம் சுற்றுலாவை நிறைவு செய்து, விடுதிக்கு சென்று கொண்டு வந்த மற்றும் ஷாப்பிங் செய்து வாங்கியவற்றை அனைத்தையும் தயார் செய்து பொதியாக்கி, இல்லம் நோக்கி திரும்பவேண்டும். போபால் செல்ல விமானம் புக் செய்வது, ரயில் தொடர்பான தகவல்களை பெறுவது அனைத்தும் நமது நேட்டிவ் பிளானட் தளத்தில் எளிமையாக்கப்பட்டுள்ளது. முகப்பு (home)பக்கத்துக்கு சென்று தெரிந்துகொள்ளுங்கள்.

திருச்சியில் ஒரே நாளில் அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்கலாம் வாருங்கள்

Arpit Srivastava

Read more about: madhya pradesh travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more