» »லோனாவலா சுற்றுலா போனா இத மட்டும் மிஸ் பன்னிடாதீங்க...

லோனாவலா சுற்றுலா போனா இத மட்டும் மிஸ் பன்னிடாதீங்க...

Posted By: Sabarish

PC : Nagesh Kamath

மகாராஷ்டிராவின் பிரபலமான மலைவாசத் தலமான லோனாவலாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தை தேடி ஏராளமான குடும்பங்கள், வணிகமயமாக்கலின் அசுர வளர்ச்சியின் காரணமாக புலம் பெயர்ந்து வந்து வாழத் துவங்கினர். இதன் காரணமாகவே இங்கு வரும் பயணிகளின் எண்ணிகையும் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று புஷி அணை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது.

இயற்கை குடில்கொண்ட புஷி

இயற்கை குடில்கொண்ட புஷி

PC : Vivek Shrivastava

லோனாவலா மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் இயற்கை குடிகொண்டுள்ள பகுதிகள் என்றே சொல்லலாம். அதிலும் புஷி அணையின் பேரழகினை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. நுழைவு வாயில் துவங்கி சாலையோரக் கடைகள், நீர்த் தேக்கம் என ஒவ்வொன்றும் உங்களை மயக்கம் கொள்ளச் செய்யும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை

PC : Swapniliscreative - Own work

புஷி அணையின் படிக்கட்டுகள் மீது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பார்க்கலாம். அதில், வழிந்தோடும் நீரில் நனைந்து கொண்டு குதூகலிக்கும் குழந்தைகளோடு குழந்தைகளாகவே பெரியவர்களும் விளையாடி மகிழும் காட்சி மிகவும் சிறப்பானது.

லோனாவலாவிலிருந்து புஷிக்கு எப்படி செல்வது?

லோனாவலாவிலிருந்து புஷிக்கு எப்படி செல்வது?

PC : Superfast1111

நீங்கள் லோனாவலாவை அடைந்த பிறகு அங்கு யாரிடம் கேட்டாலும் புஷி அணைக்கு எப்படி செல்வது என்பதை தெளிவாக சொல்வார்கள். அதுமட்டுமின்றி, புஷி அணைக்கு செல்லும் வழியில், அணைக்கு 2 கிலோ மீட்டர் முன்பாக புஷி டேம் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு காலார நடைபயணம் செய்ய வேண்டும். சாலையோரக் கடைகளும், பசுமை வாசனையும் சோர்வு தெரியாமல் உங்களை வழிநடத்தும்.

குட்டைத் தீவு

குட்டைத் தீவு

PC : Ripanvc

புஷி அணையை அடைவதற்கு ஆங்காங்கு தேங்கிக் கிடக்கும் குட்டை நீரினை நடந்து கடக்க வேண்டும். இவை அனைத்தும் ஏதோ சிறிய சிறிய தீவினை கடந்து செல்வதைப் போல தோற்றமளிக்கும். அதன்பிறகு வளைந்து செல்லும் படிக்கட்டுகள் வழியாக சுலபமாக புஷி அணையை அடைந்து விட முடியும்.

உணவுப் பிரியர்களுக்காக...

உணவுப் பிரியர்களுக்காக...

PC : Reuben Strayer

புஷி அணையின் படிக்கட்டுகள் நெடுகிலும், அதைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கடைகளில் அப்பகுதியின் பிரசிபெற்ற உணவு வகைகள் விற்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். அதிலும் வட பாவ், மக்காச் சோளம் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றில் செய்த வடைகள் போன்றவை இங்கு வரும் பயணிகள் விரும்பி உண்ணும் பதார்த்தங்கள் ஆகும். நீங்கள் சாப்பாட்டு பிரியராக இருந்தால் ஒரு வெட்டு வெட்டிட்டு வாங்க...

புஷி அணையை எப்படி அடைவது ?

புஷி அணையை எப்படி அடைவது ?

PC : Ranepictography

புஷி அணையை அடைய ஏதுவாக மும்பை நகரில் இருந்து 88 கிலோ மீட்டர் தொலைவிலும், புனேவில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் விமான நிலையங்கள் உள்ளன. ரயில்களில் பயணம் செய்கிறீர்கள் என்றால் லோனாவலா ரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து வாடகை கார்களின் மூலம் சுலபமாக புஷி அணையை அடைந்து விடலாம்.

எப்போது செல்லலாம் ?

எப்போது செல்லலாம் ?

PC : Abhijeet Safai

புஷி அணை கோடை காலங்களில் அதன் பசுமையை இழந்து மிகவும் வறண்டு காட்சியளிக்கும். புஷி அணையை சுற்றிப் பார்க்க விரும்புவோர் மழைக் காலங்களில் இங்கே சுற்றுலா செல்வது சிறந்தது. புஷி அணையை பனிக் காலத்தில் சுற்றிப் பார்க்கும் அனுபவமும் மகிழ்ச்சியளிக்க கூடியதே. ஆனால் இந்தக் காலங்களில் புஷி அணையின் இரவு நேர வெப்பநிலை 10 டிகிரி அளவில் சென்றுவிடுவதால், அடர்த்தியான ஆடைகளை உடுத்திக் கொள்வதும், கம்பளி எடுத்து வருவதும் நல்லது.