Search
  • Follow NativePlanet
Share
» »திருச்சிக்கு பக்கத்தில இருக்கிற அழகான மலை வாசஸ்தலங்கள் – பைக்கிலே போகலாம்!

திருச்சிக்கு பக்கத்தில இருக்கிற அழகான மலை வாசஸ்தலங்கள் – பைக்கிலே போகலாம்!

திருச்சி என்றாலே அனைவர்க்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உச்சி பிள்ளையார் கோயில் தான் நியாபகத்திற்கு வரும். ஆனால், திருச்சிக்கு பக்கத்தில் இருக்கிற அழகான மலைவாசஸ்தலங்கள் பற்றி நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரியாது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த இடங்களுக்கு எல்லாம் நீங்கள் பைக்கில் ட்ரிப் செல்லலாம் மக்களே!

1

பச்சை மலை

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள பச்சைமலை திருச்சியிலிருந்து 100 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கம்மியான பட்ஜெட்டில் ஒரு சூப்பர் சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தால் நீங்கள் திருச்சியிலிருந்து பச்சை மலைக்கு ட்ரிப் பிளான் பண்ணலாம். பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் கூட்டம், ஆலமரங்கள், பசுமை போர்த்திய சிறு சிறு மலைகள், தூய்மையான காற்று என பச்சை மலை நம்மை வரவேற்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் அமைந்துள்ள பச்சை மலையில் எப்பொழுதுமே ஒரு மிதமான வானிலை நிலவுகிறது. திருச்சியிலிருந்து துறையூர் சென்று, அங்கிருந்து ஆத்தூர் சாலையில் சென்று உப்பிலியபுரம், அங்கிருந்து சோபனபுரம் வழியாகப் பச்சைமலையின் மேல் பயணிக்கலாம்.

2

சிறு மலை

திருச்சியிலிருந்து 136 கிமீ தூரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுமலை, வார இறுதியில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகும். இது பலராலும் அறியப்படாத வாசஸ்தலமாக இருந்தாலும், பல சிறிய நகரங்கள் இந்த அழகிய இடங்களில் அமைந்துள்ளன, மேலும் எதிர்காலத்தில் இதை ஒரு தனித்துவமான சுற்றுலாத்தலமாக நவீனமயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறுமலையை அடையும் வழியில் நீங்கள் 19 ஹேர்பின் வளைவுகளை காண நேரிடும். பதினேழாவது ஹேர்பின் வளைவில் உள்ள ஒரு பிரத்யேக கண்காணிப்பு கோபுரம் ஓய்வெடுக்கவும், சுற்றிலும் உள்ள செழுமையான காடுகளின் பனோரமாவை அனுபவிக்கவும் வாய்ப்பளிக்கிறது.

3

கொல்லி மலை

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லி மலை அதன் ஆபத்தான ஹேர்பின் பெண்டுகளால் 'மௌண்டெயின் ஆஃப் டெத்' என அழைக்கப்படுகிறது. ஜோடி ஜோடியாக கொல்லி மலையில் பைக்கில் பிரயாணம் செய்வது சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. திருச்சியில் இருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள கொல்லிமலை பல அழகிய நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், வியூபாயின்ட்கள் உட்பட பல வசீகரமான இடங்களுக்கு தாயகமாக உள்ளது.

கொல்லிமலை ஊட்டி, கொடைக்கானல் போன்று வணிக அளவில் இன்னமும் பிரபலமடையாமல் இருப்பதால் அதன் இயற்கை அழகு சற்றும் மாசடையாமல் இருக்கிறது. அதிக கூட்டத்தில் சிக்கி கொள்ளாமல் தனிமையை விரும்பும் நமக்கு இந்த இடம் தான் சரியான சாய்ஸ். முக்கியமாக கொல்லி மலைக்கு சென்று திரும்பும் போது, அங்கே விற்கும் மசாலா பொருட்களை வாங்க மறக்காதீர்கள்.

4

புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி

இது ஒரு மலைவாசஸ்தலம் அல்ல, ஆனால் இதன் மயக்கும் அழகு உங்களை மெய் சிலிர்க்க வைக்கும். திருச்சியின் சலசலப்பில் இருந்து 72 கிமீ தொலைவில் உள்ள புளியஞ்சோலை ஒரு அமைதியான அழகான இடமாகும். கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி புளியஞ்சோலை பசுமையான காடுகளால் சூழப்பட்ட இயற்கை நீரூற்றுகள், ஆறுகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அமைதியின் உச்ச உணர்வைத் தரும் அழகிய இடமாக நம்மை வரவேற்கிறது.

புளியமரங்களின் அமைதியும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிகளும் ஆண்டு முழுவதும் நாடு முழுவதிலும் இருந்து இயற்கை ஆர்வலர்களை கவர்ந்திழுக்கிறது. காடுகளில் இயற்கை நீரூற்றுகளை விரும்புவோருக்கு, புளியஞ்சோலை சரியான தேர்வாகும்.

இந்த நான்கு இடங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது?

More News

    Read more about: trichy
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+