Search
  • Follow NativePlanet
Share
» »இராவணனுக்கு உண்மையில் 10 தலையா ? இல்ல கட்டுக் கதையா ?

இராவணனுக்கு உண்மையில் 10 தலையா ? இல்ல கட்டுக் கதையா ?

இராமாயணத்தின்படி, தீவிர சிவ பக்தனான ராவணன் இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னர்களில் ஒருவன். போர்ப்படையில் சிறந்த வீரன், தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் இராவணனது திருவுருவச் சிலையோ, வழிபாடோ இல்லாவிட்டாலும், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானில் வசிக்கும் கோண்ட் பழங்குடி மக்கள் இராவணனின் பிறந்த இடமாக இந்தியாவின் ஒரு கிராமத்தையே கருதுகின்றனர். அப்பகுதி எங்குள்ளது ? இராவணனுக்கும், அக்கிராமத்திற்கும் என்ன தொடர்புள்ளது என பார்க்கலாம் வாங்க.

இராவணன் பிறப்பு

இராவணன் பிறப்பு

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையிலிருந்து இந்தியாவின் தென்னகத்தை ஆண்டு வந்த விச்சிரவாவு, கேகசி தம்பதியினரின் மகனே இராவணன், கும்பகன்னன், பீடணன் என்ற மூன்று ஆண்மக்களும், காமவல்லி என்னும் பெண்ணும். தன் தந்தை விச்சிரவாவுக்குப் பின்னர் இராவணன் ஆட்சியைக் கைப்பற்றினார்.

wikimedia

திருமணம்

திருமணம்

தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செழுமையில் அதீத கவணம் செலுத்தினார் இராவணன். அவ்வாறு, ஒரு முறை மலைவளம் காணச் சென்ற இராவணனும் முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்றனர். இராவணன் வண்டார் குழலியை மணந்து கொண்டான். அவர்களுக்குச் சேயோன் என்னும் மகன் பிறந்தான்.

wikimedia

வில்லனான இராவணன்

வில்லனான இராவணன்

பெரும்பாலும், இராமயணத்தில் கூறப்பட்டுள்ள இராவணன், இராமன் இடையேயான போர் குறித்தும், சீதை கடத்தல் குறித்தும் அறிந்திருப்போம். அன்று தொட்டு, இன்று வரையிலும் இராவணன் நல்லவரா ? கெட்டவரா என்ற கேள்விகள் பல விவாதங்களில் வெளிப்படும். இராமன் பக்தர்களால் இறுதியில் இராவணன் கெட்டவனே என்று முடியு பெறும். ஆனால், அன்று தொட்டு இன்று வரை இக்கேள்விக்கான தெளிவான பதில் வெளிவரவில்லை.

Ravi Varma

வீணையில் வித்தகன்

வீணையில் வித்தகன்

இராமாயணம் தொட்டு இராவணனை ஓர் கொரூரமான வில்லனாக, அரக்கனாக மட்டுமே பெரும்பகுதி சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் அவற்றிற்கு பின், பல சிறந்த ஆட்சியிலும், வேதங்கள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த இராவணன் வீணை வாசிப்பதிலும் வித்தைக்காரராக இருந்துள்ளார்.

AntanO

தீவிர சிவபக்தர்

தீவிர சிவபக்தர்

சிவ பெருமானின் மீத அளவுகடந்த பணிவு கொண்டிருந்தார் இராவணன். சிவன் மீது அலாதி பிரியம் கொண்டவனான இவர், அன்றாடம் தவறாது சிவபெருமானை வழிபட்டு வந்தார். சிவனுடைய பக்தனாக எப்பொழுதும் திருநீர் அணிந்திருப்பவர். இலங்கை என்றும் அழியாமல் இருக்க, சிவபெருமானை நோக்கி தவமிருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

Gane Kumaraswamy

பத்து தலை ரகசியம்!

பத்து தலை ரகசியம்!

இராவணன் என்றதுமே அவரது தோற்றம் நம் கண்முன் வந்து நின்றுவிடும். கம்பீராமான கட்டுடல், பத்து தலைகள்,, முருக்கிய மீசை அவரது தோற்றமாக பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இராவணனுக்கு உண்மையிலேயே பத்து தலைகள் கிடையாது என்ற குறிப்பும் உள்ளது. இராவணனின் தந்தை மாமுனிவரான வைச்ரவ மகரிஷி பல அம்சங்கள் நிறைந்த அணிகலன் ஒன்றை சூட்டினார். அதை அணியும் போது, ஒளியின் எதிரொளியாக பத்து தலைகள் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இராவணனுக்கு எண்ணற்ற தலைகள் இருக்கிறது என்பதற்கும் இது தான் காரணம்.

Pete Birkinshaw

பிறந்த ஊர்

பிறந்த ஊர்

பொதுவாக இராவணன் என்றதுமே அனைவரது நினைவுக்கும் வருவது இலங்கையாகத்தான் இருக்கும். காரணம், அங்கே மாபெரும் ஆட்சியை அவன் செய்து வந்ததாலேயே. ஆனால், உண்மையில் அவர் பிறந்த ஊராக கருதப்படுவது இந்தியா. வட இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் தான் இராவணன் பிறந்ததாக புராணங்கள் வாயிலாகவும், தற்போதும் நம்பப்படுகிறது.

Jonoikobangali

எங்குள்ளது ?

எங்குள்ளது ?

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட இந்தியாவல் வசிக்கும் கோண்ட் இன பழங்குடி மக்களால் இராவணன் முக்கியக் கடவுளாக வழிபடப்படுகிறார். மேலும், இவர்களது அனைவரின் கூற்றும் இராவணன் பிறந்த ஊராக பிஸ்ராக் என்ற பகுதியைக் கருதுகின்றனர். இது தில்லியின் கிரேட்டர் நொய்டா அருகில் உள்ளது. ராவணனுடைய மனைவி மண்டோதரி மத்தியப் பிரதேசத்தில் விதிஷாவில் பிறந்ததாக கருத்துள்ளது. இராவணனன் தங்கள் மூதாதையர்கள் வழியாக வந்தவராகக் கூறும் கோண்ட் இன மக்கள், தாங்கள் குடியேறும் இடங்களில் இராவணனுக்குச் சிலையெழுப்பி, தசரா காலத்தில் துக்க வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.

PIERRE ANDRE LECLERCQ

பிஸ்ராக்

பிஸ்ராக்

உத்திரபிரதேச மாநிலம், காசியாபாத்திற்கும், நொய்டாவுக்கும் இடையில் அமைந்துள்ளது இராவணன் பிறந்த ஊரான பிஸ்ராக். இப்பகுதிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விசயம், இங்கு இதுநாள் வரையில் நவராத்திரி கொண்டாடப் பட்டதில்லை, இராவணனை எரிக்கும் வழக்கமும் இருந்ததில்லை. ஆண்டுதோறும், இராவணனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி திருவிழா கொண்டாடப்படுகிறது.

public domain

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

தில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிஸ்ராக். உள்ளூர் பேருந்துகள் மூலமும், வாடகைக் கார்கள் மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மேலும், காசியாபாத், ஃபரிதாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பிஸ்ராக்கை அடைய எளிய முறையில் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

Bharatahs

மண்டசௌர்

மண்டசௌர்

இராவணனும், மண்டோதரியும் திருமணம் செய்து கொண்ட பகுதியாக மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டசௌர் என்னும் பகுதி கருதப்படுகிறது. பரந்து விரிந்து காணப்படும் இக்கோவிலில் இராவணன் சன்னதி மட்டுமின்றி ஏராளமான பெண் உருவ வழிபாடும் உள்ளது. கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பழங்கால நாகரீகத்தின் அடையாளமான ஹரப்பா நாகரீகம் குறித்த கருத்துகள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LRBurdak

சீதா மாதா ரிசர்வ் வனக் காடு

சீதா மாதா ரிசர்வ் வனக் காடு

மஹரானா பிரதாப் விமான நிலையம் மண்டசௌர் அருகில் உள்ள விமான நிலையமாகும். அங்கிருந்து சுமார் 164 கிலோ மீட்டர் நிம்பஹெரா, நீமுச், பந்த் பிப்ளியா வழியாக பயணித்தால் மண்டசௌரை அடையலாம். இதனருகே உள்ள சீதா மாதா ரிசர்வ் வனக் காடு தவறவிடக் கூடாத சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.

Hemant Shesh

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம், போபாலில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது விதிஷா நகரம். பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது நாட்டிலேயே இராவணன் கோவிலுக்கு மிகவும் புகழ் பெற்றத் தலமாகத் திகழ்கிறது. இங்கே, இராவணனின் பெயரைக் கொண்டு இராவணகிராமம் என்ற ஒரு கிராமமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vadaykeviv

போபால் - விதிஷா

போபால் - விதிஷா

விதிஷாவிற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் போபால் ராஜா போஜ் பன்னாட்டு விமான நிலையம். விமான நிலையத்தில் இருந்து 62 கிலோ மீட்டர் பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் பயணித்தால் விதிஷா கிராமத்தை அடையலாம். விமான நிலையத்தின் அருகிலேயே போபால் ரயில் நிலையமும் உள்ளது.

Suyash Dwivedi

மண்டோர் - ராஜஸ்தான்

மண்டோர் - ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ளது மண்மோர் வட்டம். இங்கே அமைந்துள்ள ராவணனுக்கான திருத்தலத்தை கோவில் என்று சொல்ல முடியாது. இப்பகுதியில் இருக்கும் தேவ பிராமனர்கள் ராவணனின் ரத்த வழி பந்தங்கள் என கூறப்படுகிறது. மற்ற கோவில்கள் போல இங்கும் நவராத்திரி கொண்டாடுவதில்லை. இருப்பினும், இங்கு பிண்டம் வைத்து, ராவணனின் ஆன்மா சாந்தி அடைய திதி செய்யப்படுகிறது.

Jon Connell

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more