Search
  • Follow NativePlanet
Share
» »தானே பக்கத்துல இப்படி ஒரு பீச்.. வாங்க பாக்கலாம்

தானே பக்கத்துல இப்படி ஒரு பீச்.. வாங்க பாக்கலாம்

தானே பக்கத்துல இப்படி ஒரு பீச்.. வாங்க பாக்கலாம்

மும்பை மாநகரின் வடக்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் இந்த போர்டி கடற்கரைக்கிராமம் அமைந்துள்ளது. சுத்தமான ஏகாந்தமான கடற்கரை இயற்கை எழிலுடன் இந்தப்பகுதியில் காணப்படுகிறது. இங்கு மணல் தனது உண்மையான நிறத்தையும் தன்மையையும் கொண்டிருப்பதைக் காணலாம். கறுப்பு நிறத்தில் பிசுபிசுப்பு தன்மையுடன் மணல் இங்கு காணப்படுகிறது. கறு கறு மணலில் காலார நடை போட்டு இயற்கையை அனுபவிப்போம் வாருங்கள்.

நீச்சல் அடிக்கவும் விளையாடவும்

சப்போட்டா மரங்கள் கடற்கரையை ஒட்டியே வரிசையாக அமைந்திருப்பது இப்பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஒரு முக்கிய அம்சமாக இந்த கடற்கரையில் கடலின் ஆழம் இடுப்பளவு வரை மட்டுமே இருப்பதால் நீரில் நீச்சல் அடிக்கவும் விளையாடவும் ஏற்ற விதத்தில் உள்ளது. மும்பை பெருநகரத்திலிருந்து 153 கி.மீ தூரத்திலேயே இந்த போர்டி கடற்கரை அமைந்துள்ளது. அதிகம் கூட்டம் இல்லாத அதிகம் அறியப்படாத இடம் என்பதால் இந்த கடற்கரையி இயற்கை வனப்பு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது.

போர்டி கடற்கரை நகரம்


ஒரு ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணி எதிர்பார்க்கும் எல்லா சுற்றுலா அம்சங்களையும் இந்த போர்டி கடற்கரை நகரம் பெற்றுள்ளது. தனக்கேயுரிய இயற்கை எழில் அம்சங்களை கொண்டிருக்கும் இந்த போர்டி கடற்கரை வெயில் காய்வதற்கும் சப்போட்டா தோப்புகளில் ரசனையுடன் காலாற நடப்பதற்கும் அல்லது உங்கள் அன்புக்குரியவருடன் அமைதியாக நேரத்தைக்கடத்துவதற்கும் மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.

என்னென்ன சுற்றுலா அம்சங்கள் இங்கு உள்ளன?

முன்னரே குறிப்பிட்டுள்ளபடி போர்டி கடற்கரை ஒரு ரம்யமான சிற்றுலாத்தலமாக, உல்லாச நடைபயணத்துக்கு ஏற்றதாகவும் அத்துடன் குதிரைச்சவாரி செல்வதற்கும் உகந்த இடமாக உள்ளது. மஹாராஷ்டிர மாநில அரசாங்கத்தின் மரங்கள் பாதுகாப்பு துறை இப்பகுதியின் இயற்கை அழகு பாழாகிவிடாமல் இருப்பதற்கு தனிக்கவனம் செலுத்துவதால் இந்த கடற்கரை ஸ்தலம் தனித்தன்மையான எழிலுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

ஆன்மீகத் தளங்கள்

இது தவிர இந்த போர்டி நகரம் சௌராஷ்டிரா இனப்பிரிவினருக்கான புனித யாத்ரிக ஸ்தலமாகவும் விளங்குகிறது.
ரிஷப் கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் பிரபாதேவி மலைகளில் அமைந்துள்ளது. போர்டியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள உம்பர்காவ்ன் என்னுமிடத்தில் கல்பதரு பாட்டனிக்கல் கார்டன் அமைந்துள்ளது. மேலும் மஹாபாரதா, ராமாயணா போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித்தொடர்கள் படமாக்கப்பட்ட விருந்தாவன் ஸ்டுடியோ இங்கு அருகிலேயே உள்ளது. வரலாற்றுக்காலத்தில் சிறைச்சாலையாக விளங்கிய தஹானு கோட்டை இன்று அக்காலத்திய உன்னதமான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு சின்னமாக காணப்படுகிறது.

போர்டி கடற்கரை

பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான வகையில் இந்த போர்டி கடற்கரை அமைந்துள்ளது. நீச்சல் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த கடற்கரையில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இடுப்பளவு மாத்திரமே கடல் நீர் மட்டம் காணப்படுகிறது. பிசுபிசுப்பான கறுப்பு மணலுடன் காணப்படும் இந்த கடற்கரையை ஒட்டியே சப்போட்டா மரங்கள் (தோப்பு) வரிசையாக வளர்ந்துள்ளன. இந்த கடற்கரையில் நிலவும் அசாதாரண அமைதிக்காகவே இது அதிக பிரசித்தமாய் அறியப்பட்டுள்ளது. எந்த விதமான செயற்கை அழகூட்டல் அம்சங்களையும் கொண்டிராத இந்த கடற்கரைக்கு பயணிகள் திரும்ப திரும்ப வருவதற்கு ஆசைப்படுகின்றனர்.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X