Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் குழந்தை உலகை வெல்லவேண்டுமா? அப்போ இங்கெல்லாம் கூட்டி போங்க!

உங்கள் குழந்தை உலகை வெல்லவேண்டுமா? அப்போ இங்கெல்லாம் கூட்டி போங்க!

By Udhaya

உங்க குழந்தைங்கன்னு உங்களுக்கு உலகம்னு தெரியும். அதே குழந்தைங்க வளர வளர இந்த உலகத்த பத்தி நிறைய தெரிஞ்சிக்கணும்னு நீங்க மட்டும் இல்ல எல்லாருமே ஆசப் படுவாங்க. அதே நேரத்துல கல்வி, வேலைனு அவங்க வருங்காலத்த நினச்சி சொந்தக் காரங்க வீட்டுக்குக் கூட கூட்டிட்டு போகமா எதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி கத்துக்கணும்னு அவங்கள 24 மணி நேரமும் பிஸியாவே இருக்குற மாதிரி வச்சிடுறீங்க.

காலைல எழுந்ததும் டியூசன், அப்றம் பள்ளி, அப்றம் வீடு, வீடு வந்ததும் எக்ஸ்ட்ராகரிகுலர், அப்றம் டியூசன், அப்றம் தூக்கம்னு அவங்கள கொஞ்ச நேரம்கூட வெளியுலகத்த சுத்திப் பாக்க அனுமதிக்கிறதே இல்ல. சரி வெகேசனுக்காச்சும் போகலாம்னா அதுக்கும் தடை. அப்றம் எப்படி உங்க குழந்தை வெளி உலகத்த தெரிஞ்சிக்கும். உளவியலின் அடிப்படையில ஒரு குழந்தை நிறைய மாறுபட்ட சூழ்நிலைகளுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் பயணிக்கும்போதுதான் அதோட சிந்திக்குற திறன் அதிகமாகுதாம். சரி உங்க குழந்தை இந்த உலகமே திரும்பி பாக்கவைக்க அவங்களுக்கு பிடிச்சமாதிரியான இடங்களுக்கு கூட்டிட்டு போகணும். இந்தியாவுல இந்த இருபது இடங்களும் பெரும்பாலான குழந்தைகளுக்கு பிடித்தவை. அப்போ உங்க குழந்தையையும் கூட்டி போகலாமே.

டார்ஜிலிங்க் டாய் டிரைன்

டார்ஜிலிங்க் டாய் டிரைன்

டார்ஜிலிங்க் இமாலய ரயில்வேயில் ஓடும் இந்த பொம்மை ரயில் உண்மையில் உலகப் புகழ் பெற்றதாகும்.

இது டார்ஜிலிங் மற்றும் புது ஜல்பய்குரி இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான தண்டவாளங்கள் 1879 - 1881களில் போடப்பட்டன. இந்த ரயில் சிறப்பு அம்சம் என்னவென்று கேட்டால் இந்த ரயிலே சிறப்பம்சமானதுதான்.

நீண்ட தூரம் அடுக்கப்பட்ட பெட்டிகளைப் போல நீளமான ரயில்களைக் கொண்ட இந்திய ரயில்வேயில் மற்ற ரயில்களை ஒப்பிடும்போது இந்த ரயில் மிகவும் சிறியதுதான். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

குழந்தைகளுக்காக என்ன இருக்கு

டார்ஜிலிங்க் செல்லும்போது உங்கள் குழந்தையை இந்த ரயிலில் பயணிக்கச் செய்யுங்கள். அவர்களுடன் பயணிக்கும் உங்களுக்கும் இது மிகவும் பிடிக்கும். வேடிக்கையானதாகவும், புத்துணர்ச்சியை உருவாக்கக் கூடியதாகவும் இந்த ரயில் அமையும்.

Aranya449

ஊட்டி சாக்கலேட்

ஊட்டி சாக்கலேட்

சாக்லேட்னா யாருக்குதா புடிக்காது. அதுலயும் உங்களமாதிரி குழந்தைகளுக்கு.. என்னதான் வயசு அதிகமானாலும் உங்க மனசு குழந்தை மாதிரில அததான் சொல்லவந்தேன். சாக்லேட்னு பேரக் கேட்டாலே குழந்தைங்க தங்களுக்கு பிடிச்சத கூட விட்டுத் தந்துடுவாங்க.

நீங்க குழந்தைங்கனு யாருனாலும், சாக்லேட் தயாரிக்குற இடத்துலயே சாக்லேட் வாங்க போறாம்னா உடனே தயாராகிடுவீங்கதானே... அப்படி ஒரு இடம்தான் ஊட்டி. அங்க கிடைக்குற சாக்லேட் வேற எங்கயும் கிடைக்காதுன்னா பாத்துக்கோங்களேன். அவ்வளவு சிறப்பு இந்த சாக்லேட். மறக்காம ஊட்டிக்கு போனா இந்த சாக்லேட் மியூசியத்துக்கு போங்க.

ஊட்டியிலிருந்து மைசூரு போற வழியில இருக்கு இந்த மியூசியம்.

மனாலியில் பறக்க

மனாலியில் பறக்க

இப்டி பொசுக்குனு பறக்க சொன்னா எப்டினு கேக்கறீங்களா.. கொஞ்சம் பதட்டமாதா இருக்கும். ஏன்னா நமக்கு பயம்னு ஒன்னு வந்துடிச்சினா குண்டூசி குத்துரது கூட குண்டுவெடிப்பு மண்ட ஒடஞ்சது கணக்கா பீலிங்க் கொடுப்போம். ஆனா குழந்தைங்க அப்டி இல்ல.. அவங்களுக்கு இந்த உலகம் ஒரு பொக்கிஷம். அவங்கள சுதந்தரமா பட்டாம்பூச்சி போல பறக்க உடனும்.

பெரியவங்க மட்டும் இல்ல குழந்தைகள பறக்க வைக்கவும் அங்க இடம் இருக்குன்னா பாத்துக்கோங்க. உங்க குழந்தையோட உடல்நிலைய பொறுத்து, அவங்களுக்கு பறக்க பயம் இல்லைனா குறஞ்ச தூரம் பறக்குற ஒரு சில பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கள் இங்க விளையாடலாம்.

உதய்ப்பூர் பொம்மலாட்டம்

உதய்ப்பூர் பொம்மலாட்டம்

நம்ம ஊர்ல இல்லாத பொம்மலாட்டமா, தப்பாட்டமானு அந்த காலத்து பெரியவங்க நான்லாம் அந்த காலத்துல்லலலல னு ஆரம்பிச்சி இழுப்பாங்க... அதோட உண்மையான அருமைய நாம உணராமலே போயிட்டோம். அத குழந்தைங்களுக்கு மறுபடியும் காமிக்கணும்னா நம்ம ஊர் திருவிழாக்கள்ல இரவு நேரங்கள்ல நடக்கும். அதேமாதிரி உதய்ப்பூர்லயும் இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடக்குது.

குழந்தைங்களுக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சிங்க இது. மறக்காம உதய்ப்பூர் பக்கம் போகும்போது பாருங்க..

udaipuronline.in

ஜெய்சால்மர் ஒட்டக சவாரி

ஜெய்சால்மர் ஒட்டக சவாரி

ஜெய்சால்மர்ல சூரிய மறைவு காண்பது என்பது ரொம்ப சூப்பரா இருக்கும்னு போய்ட்டு வந்தவங்க சொல்றாங்க. அதே நேரத்துல உங்க குழந்தைகளுக்கு ஒட்டக சவாரி ரொம்ப பிடிக்கும். வேணும்னா ஒரு முறை கூட்டி போய் பாருங்களேன்

அந்த பாலைவன பூமியில உங்க குழந்தைகளோட ஒரு உலா வந்தீங்கன்னா அவங்களுக்கு ரொம்ப புடிக்கும்தானே.. ஒட்டகம்னா யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க

arunpnair

தேக்கடி யானை

தேக்கடி யானை

குழந்தைகளுக்கு ஒட்டகம் மாதிரி ரொம்ப புடிச்ச இன்னொன்னு யானை. ஆன ஆனனு சொல்லிட்டே இருப்பாங்க குழந்தைங்க... ஆனா சில குழந்தைங்க உண்மையான யானைகிட்ட போனா பயப்படுவாங்க. உங்க குழந்தைக்கு யானை ரொம்ப பிடிக்கும்னா தேக்கடிக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாம்.

அக்டோபர்ல இருந்து பிப்ரவரி மாசம் வரைக்கும் தேக்கடியில திருவிழாக்கோலம்தான். இங்க நிறைய யானைகள் பாக்கலாம். யானைல சவாரி போகலாம். அப்பறம் படகு பயணமும் உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் ரொம்ப புடிக்கும்.

celblau

ஆவ்லி பனிச்சறுக்கு

ஆவ்லி பனிச்சறுக்கு

இது வடநாட்டுல இருக்குற எடம். இங்க எப்டி நாம போறதுனுலாம் யோசிக்காதீங்க... இந்த வாழ்க்கை உங்களுக்கு என்ன சொல்லித் தருது.. சம்பாரி, சாப்பிடு படுத்து தூங்கு. அதுலயும் உடம்பு சோர்வாகுறனாலதான் தூங்கவே செய்யுறீங்க.. தூங்காம இருக்க வாய்ப்பு இருந்துச்சின்னா 24 மணி நேரமும் வேலை வேலைனு ஓடிடுவாங்க பாதிபேரு. நம்மதான் இப்படின்னா குழந்தைகளையும் அதையே பாலோ பண்ண வைக்குறது.. அதையெல்லாம் விட்டுட்டு உலகத்த சுத்தி பாருங்க.. நீங்க நினைக்குற அளவுக்குலாம் அதிக அளவு செலவு ஒன்னும் ஆயிடாது. சிக்கனமா டிராவல் செய்றத பத்தி நம்ம தளத்துலயே நிறைய கட்டுரைகள் இருக்கே.

சரி.. ஆவ்லில பனிச்சறுக்கு செய்றதுக்குனே தனியா இடமெல்லாம் இருக்கு. உங்க குழந்தைகளோட பாதுகாப்ப உறுதிப் படுத்திக்கிட்டு இந்த மாரி இடங்கள்ல விளையாட விடலாம். பயிற்சியாளர்களும் இதெற்கென தனி உரிமம் பெற்றுதான் பழகிக் குடுக்குறாங்க.அதனால நோ ஒரீஸ்.

Kayvan126

மஹாபாலேஸ்வர் ஸ்ட்ராபெர்ரி தோட்டம்

மஹாபாலேஸ்வர் ஸ்ட்ராபெர்ரி தோட்டம்

குழந்தைகளுக்கு என்ன பழம் பிடிக்கும்னு கேட்டா உடனே ஸ்ட்ராபெர்ரினு சொல்லுவாங்க. ஏன்னா வாழப் பழத்தையும், கொய்யாப்பழத்தையும் அவங்க பாத்து பாத்து சலிச்சி போய்ருப்பாங்க.. ஸ்ட்ராபெர்ரி அவ்வளவா பழக்கமெல்லாம் ஆயிருக்காத பழம். அதுலயும் செவ்வசெவ்வனு இருக்குறதுனால எளிதா குழந்தைகள கவர்ந்துடுது.

மஹாபலேஸ்வர்ல இருக்குற ஸ்ட்ராபெர்ரி தோட்டங்கள்ல நீங்க உங்க குழந்தைகளோட பயணம் செய்து பாருங்க அந்த அனுபவமும், புத்துணர்ச்சியும் எப்படி இருக்கும்னு.

Inga Vitola

தர்க்காலி கடற்பயணம்

தர்க்காலி கடற்பயணம்

மகாராஷ்ட்ரா மாநிலத்துல இருக்குற இந்த இடத்துல கடல்ல பயணம் செஞ்சிட்டே காத்துல பறக்குற விளையாட்டும் இருக்குது. ஏற்கனவே இந்த மாநிலம் ரொம்ப அழகா இருக்கும். இந்த மாதிரி விளையாட்டுகள்னால இன்னும் அழகு கூடிடுது.

வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு பிடித்த நீர்விளையாட்டுக்கள் நிறைய இங்க இருக்கு.

Elroy Serrao

 லோனாவாலா சாகசம்

லோனாவாலா சாகசம்

சந்தடி நிறைந்த நெருக்கடியான மும்பை வாழ்க்கையிலிருந்தோ (அல்லது வேறெந்த மெட்ரோ நகரங்களிலிருந்தோ!) விலகி ஒரு உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த ‘லோனாவலா' எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். இது மஹாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 625 மீ உயரத்தில் உள்ள இந்த மலை வாசஸ்தலம் அருமையான இயற்கை அழகுடன் விளங்கும் சஹயாத்ரி மலைகளின் மீது அமைந்துள்ளது. 38 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரந்துள்ள இது மும்பையிலிருந்து 89 கி.மீ தூரத்திலும், புனேயிலிருந்து 64 கி.மீ தூரத்திலும் உள்ளது.

Arjun Singh Kulkarn

அந்தமான் நீருக்கடியில்

அந்தமான் நீருக்கடியில்

முடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து கிடக்கின்றன. கடல் ஆழத்தில் மூழ்கி அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும்‘ஸ்கூபா டைவிங்' எனப்படும் அற்புதமான ‘கடலடி காட்சிப்பயணம்', விதவிதமான தாவரங்கள் மற்றும் வித்தியாசமான உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் அழகு ஸ்தலங்கள் போன்றவை இந்த தீவுப்பகுதிகளில் உங்களை திக்குமுக்காட வைத்துவிடும் என்பதை நேரில் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். இந்திய பயணிகளுக்கு ‘விசா' மற்றும் ‘பணமாற்றம்' போன்ற எந்த சிக்கல்களும் இல்லாமல் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய சொர்க்கத்தீவுகளுக்கு இணையான ஒரு சுற்றுலா அனுபவத்தை தருவதற்கு இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் காத்திருக்கின்றன. சிக்கனமான முறையில் ‘ஸ்கூபா டைவிங்' அனுபவங்களை பெற இந்தியப்பயணிகளுக்கு இந்த தீவுகளை விட்டால் வேறு இடமில்லை என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.

Arun Katiyar

ஃபேர்ரிடெய்ல் டெல்லி

ஃபேர்ரிடெய்ல் டெல்லி

இந்தியாவின் தலைநகராம் டெல்லியில் நாம் கண்டு ரசிக்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. குழந்தைகள் விரும்பும் விளையாட்டு அம்சங்களுக்கு டெல்லி மிகச் சிறந்த இடமாக இருக்கும். அவர்களை கிங்டம் ஆப் டிரீம்ஸுக்கு எடுத்துச் செல்லுங்கள். இந்த இடத்தை முழுமைக்கும் சுற்றி வாருங்கள். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் இடங்கள் இவை.

Ekabhishek

 மும்பை - ஃபன் ரைட்ஸ்

மும்பை - ஃபன் ரைட்ஸ்

பொழுதுபோக்குக்கான தலைநகர் என்று பார்த்தால் அது மும்பை தான். இந்தியாவிலேயே அதிக கேளிக்கைகள் நிறைந்த இடங்கள் மும்பையில்தான் இருக்கிறது. பாலிவுட்டுக்காக மட்டுமல்ல, குழந்தைகள் விரும்பும் தனி உலகமே இங்கு இருக்கிறது. அதிலும் பெரியவர்கள் தங்களை குழந்தைகளாக பாவித்து குதூகலித்து மகிழ்கின்றனர்.

இங்கு சென்றால் ஒரு நாள் முழுவதுக்கும் என்ஜாய் பண்ணலாம்.

Kirt Edblom

பாரத்பூர் பறவைகளுடன் உலா

பாரத்பூர் பறவைகளுடன் உலா

இப்பூங்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்சமயம் இங்கு 5 வகையான நிலநீர் உயிரினங்களும், 50 வகையான மீன் இனங்களும், 7 வகையான ஆமையினங்களும் வாழ்ந்து வருகின்றன. இதைத் தவிர இந்த பூங்கா 375-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு இயற்கை வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. கியோலாடியோ பூங்காவை தேடி உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பறவை இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் வந்து செல்கின்றன. எனவே அந்த சமயங்களில் நீங்கள் இங்கு வந்தால் கூர்வால் வாத்துகள், கிளுவை வாத்துகள், செம்பவள நிற வாத்துகள் என இன்னும் பல வகையான நீர்ப்பறவைகளையும், அரிய வகை பறவை இனங்களையும் கண்டு ரசிக்க முடியும். அதுமட்டும் இல்லைங்க, விலங்கினமான கருப்பு மான்கள், சிறு கொம்புடைய மான்கள், சாம்பார் மான் போன்றவையும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

Anupom sarmah

ஜிம் கார்பெட் புலிகளுடன்

ஜிம் கார்பெட் புலிகளுடன்

பசுமையான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்ற இந்த தேசியப் பூங்கா பிரம்மாண்டமான இமயமலையின் அடிவாரத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது. உலகத்திலேயே அதிகமான காட்டுப்புலிகளை கொண்ட நாடு என்ற பெருமை பெற்ற இந்தியாவின், கார்பெட் தேசிய பூங்காவில் மட்டும் சுமார் 160 புலிகள் உள்ளன. ராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த இடத்தின் இயற்கை எழிலை காணும் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் சாகசப் பயணங்களுக்காகவுமே எண்ணற்ற சுற்றுப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். புலிகள், சிறுத்தைப்புலிகள், யானைகள், புள்ளி மான்கள், சம்பார், ஹாக் மான்கள், தேவாங்கு கரடிகள், காட்டுப் பன்றி, குரல், லாங்கூர் மற்றும் ரெசுஸ் குரங்குகள் ஆகியவை இந்த பூங்காவில் காணப்படும் விலங்குகளாகும்.

Soumyajit Nandy

ரான் உற்சவம்

ரான் உற்சவம்

கிரேட் குட்ஜ் ரான் என்று நிலப்பகுதி, குஜராத் மாநிலத்தில் உள்ள குட்ஜ் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது. இந்த பாலவைனம் உலகிலேயே உப்பான பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கிரேட் ரான் ஏறக்குறைய 7505 சதுர பரப்பளவைக் கொண்டிருக்கிறது. அதாவது லிட்டில் ரானைவிட இந்த நிலப்பகுதி மிகப் பெரியதாகும்.

இந்த ரான் பகுதி பலவகையான ஃப்ளோரா மற்றும் ஃபவ்னா இனங்களின் வாழிடமாக இருந்து வருகிறது. மேலும் இடம் பெயரும் பறவைகளுக்கு இந்த ரான் பகுதி ஒரு தங்கும் இடமாகவும் இருந்து வருகிறது.

rannutsav.net

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

உலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள இது கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்ட நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1632ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

Rajesnewdelhi

சிக்கிமில் திரிய

சிக்கிமில் திரிய

இமயமலைகளுக்கிடையே இயற்கையின் ஆசீர்வாதத்துடன் அமைந்திருக்கிறது சிக்கிம் மாநிலம். சிக்கிம் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்த்தே ஆகவேண்டிய அளவிற்கு அழகு நிறைந்தவை. சிக்கிம் மாநிலம் பெருமைப்படத்தக்க பல தனிச்சிறப்புகளை உடையதாகும்.

புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத் தலங்கள். அதிலும் உள்ளூர் மக்களால் 'சொர்கம்' என அழைக்கப்படும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த, பனிகளால் சூழப்பட்ட சிகரங்களைக் கொண்ட, பூக்களால் நிறப்பப்பட்ட புல்வெளிகளுடன் காட்சியளிக்கும், பரிசுத்தமான நீரால் நிரப்பப்பட்ட நீர்நிலைகள் உள்ள இடத்திற்கு பயணித்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளவிடவா முடியும்?

Prasun2017

அவுரங்காபாத்

அவுரங்காபாத்

இந்திய சிற்பக் கலையின் பொக்கிஷமாக போற்றப்படும் எல்லோராவின் தொன்மையான குகைக் கோயில்கள் ஔரங்கபாத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கிறது. யுனேஸ்கோ அமைப்பால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த எல்லோரா குகைக் கோயில்கள் ராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்டது. இங்குள்ள 34 குகைகளும் ஹிந்து, புத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளையும், அதன் பெருமைகளையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் 12 குகைகள் புத்த கோயில்களாகவும், அடுத்த 17 குகைகள் ஹிந்து கோயில்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில் மீதம் உள்ள 5 குகைகளும் ஜைன மரபின் உன்னதத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது.

Kunal Mukherjee

ரெய்காட் கோட்டை

ரெய்காட் கோட்டை

மாவீரன் சிவாஜியால் கட்டப்பட்ட கோட்டைகளுள் ஒன்றுதான் இந்த ரெய்காட் கோட்டை. இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோட்டையாகும். இங்கு மலையேற ரோப்கார் எனப்படும் கயிறுவண்டி இருக்கிறது. இது நிச்சயமாக குழந்தைகளை ஈர்க்கும் விசயமாகும். குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் குதூகலித்து புத்துணர்வு பெறச்செய்யும் இந்த இடம் நிச்சயம் காணவேண்டிய இடங்களுள் ஒன்றாகும்.

Sankarshan Mukhopadhyay

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X