Search
  • Follow NativePlanet
Share
» »நேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா?

நேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா?

நேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா?

By Udhaya

நடந்தது என்னவோ ஆங்கிலேய - நேபாள போர்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பல நாடுகளிலும், தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவாக்கிக்கொண்டே செல்ல செல்ல தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளுக்கு அருகில் இருந்த சிறு குறு நாடுகளையும் சண்டைக்கு அழைத்து நாடு பிடித்துக் கொண்டனர். இப்படி அவர்களின் கண்ணில் பட்டது நேபாள நாடு. நேபாள நாட்டுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் போர் நடக்க இடையில் சிக்கிம் நாட்டை வென்றது நேபாளம். ஆனால்..

ராப்டென்ட்ஸே சிதைவுகள்

ராப்டென்ட்ஸே சிதைவுகள்

நேபாள இராணுவத்தால் அழிக்கப்பட்ட அரண்மனையின் சிதைவுகளே ராப்டென்ட்ஸே சிதைவுகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரண்மனை மற்றும் கோர்டென் (பிரார்த்தனை மண்டபம்) ஆகியவை சிக்கிமில் இருந்து வந்த அரச வம்சத்தின் நினைவுகளை தாங்கி நின்று கொண்டிருக்கின்றன.
dhillan chandramowli

 துப்தி மடாலயம்

துப்தி மடாலயம்

சிக்கிமின் முதல் தலைநகரமாக யுக்ஸோமும், இரண்டாம் தலைநகரமாக ராப்டென்ட்ஸேயும் இருந்துள்ளன. யுக்ஸோமில் உள்ள துப்தி மடாலயத்திலிருந்து துவங்கும் பௌத்த மத சுற்றுப் பயணங்களில் வரும் பல்வேறு மடாலயங்களில் ஒன்றாகவும் ராப்டென்ட்ஸே சிதைவுகள் உள்ளன. ராப்டென்ட்ஸே சிதைவுகள் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
Anand Bhushan

 தொல்லியல் துறை

தொல்லியல் துறை


வடக்கு பிரிவில் தான் அரச குடும்பத்தினர் வசித்து வந்தனர். அங்கே, அரச குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வந்த இடமான 'டாப் லாகாங்' என்ற சிதைவுகளையும் இங்கு காண முடியும். இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்நினைவுச் சின்னம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாகவும் உள்ளது.

போர்

போர்

1814 முதல் 1816ம் ஆண்டு முடிய நடைபெற்ற போருக்கு ஆங்கிலேய நேபாள போர் என்று பெயர். நம் சரித்திரத்தில் நிறைய போர்களை பார்த்திருப்போம். ஆனால் அவற்றில் எத்தனை போராளிகளின் ரத்தம் மண்ணில் சிந்தியது, எத்தனை அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்றெல்லாம் தெரியாது. இவற்றை எல்லாம் கொண்டு ஆண்ட பரம்பரை என்று பீத்திக்கொள்ளும் நாம், பழிக்கு பழி ரத்தத்துக்கு ரத்தம் என காட்டுமிராண்டி தனமாக திரிவதுதான் மனித இனத்தில் சாபம்.

1816ம் ஆண்டு போர் முடிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கார்வால், குமாவுன் , சிக்கிம், டார்ஜிலிங், தராய் ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர்களுக்கு விட்டுத்தரப்பட்டது. தற்போது இவை எப்படி இருக்கிறது என்பது தெரியுமா?
Goldi.negi

கார்வால்

கார்வால்

கார்வால் எனும் பகுதி தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது இரண்டாக பார்க்கப்படுகிறது. டெஹ்ரி கார்வால் , பவுரி கார்வால்.

`ட்ரிஹரி' என்கிற வார்த்தை திரிந்து டெஹ்ரி என வழங்கப்படுகிறது. இந்த வார்தைக்கு மூன்று பாவங்களை நீக்கும் இடம் எனப் பொருள். அந்த மூன்று பாவங்களாவன: சிந்தனை பாவம், வார்த்தை பாவம் மற்றும் செயல் பாவம்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை அழகு கொஞ்சும் மிக அழகிய பகுதி பவுரி ஆகும். பவுரி நகர் கடல் மட்டத்திலிருந்து 1650 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது.

Goldi.negi

டெஹ்ரி அணை

டெஹ்ரி அணை

பாகீரதி நதியின் மீது டெஹ்ரி அணை கட்டப்பட்டதால் பழைய டெஹ்ரி நீரில் மூழ்கிவிட்டது. அதன் காரணமாக புதிய டெஹ்ரி உருவானது. டெஹ்ரி அணைக்கு அதிக இடத்தை வழங்குவதற்காக பழைய டெஹ்ரி மக்கள் புதிய டெஹ்ரிக்கு இடம் பெயர்ந்தார்கள். டெஹ்ரி அணையின் கட்டுமானத்திற்கு எதிராக, புகழ் பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு. சுந்தர்லால் பகுகுனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களின் மையப் புள்ளியாக விளங்கிய டெஹ்ரி, அப்போதைய செய்தித் தாள்களில் முக்கிய இடம் பெற்றது.

பதிவேடுகளின் படி, பிரிட்டிஷ் ஆட்சியின் போது, சுதேச மாநிலமான டெஹ்ரி கர்வாலின் தலைநகராக டெஹ்ரி இருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் டெஹ்ரி, கிழக்கு இந்திய கம்பெனியின் முக்கிய துறைமுக விளங்கியது. இங்கு கிழக்கு இந்திய கம்பெனியின் கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இங்குள்ள டெஹ்ரி அணை மிகவும் பிரபலமான சுற்றுலா மையம் ஆகும். இதனை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் ஆண்டு முழுவதும் வருகின்றனர். மேலும், டெஹ்ரி அணை உலகின் மிக பெரிய அணைகளில் ஒன்றாகும். இந்த அணையில் பாகீரதி மற்றும் பிலங்கான ஆகிய இரு நதிகளின் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, கணிசமான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

AjitK332

டெஹ்ரி சுற்றுலா

டெஹ்ரி சுற்றுலா

டெஹ்ரிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள், அதன் அருகிலுள்ள, புடா கேதாருக்கும் சென்று வரலாம். புடா கேதாரில் புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலின் சிவ லிங்கம் வட இந்தியாவிலேயே மிகப் பெரியதாகும். செம் முக்ஹெம் கோவில் டெஹ்ரியில் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் ஆகும். இது பாம்புகளின் அரசன் நாகராஜாவிற்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலை உள்ளூர் மக்கள் மிகப் புனிதமாக கருதி வழிபடுகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், குஞ்ஜாபுரி மலை மீதுள்ள குஞ்ஜாபுரி தேவியின் கோவிலையும் தரிசிக்கலாம். இந்த கோவிலிருந்து பரந்து விரிந்த வலிமைமிக்க இமயமலை மற்றும் பாகீரதி பள்ளத்தாக்கு ஆகியவற்றின் அழகிய காட்சிகளை கண்டு மகிழலாம்.

டெஹ்ரியில் உள்ள பிற இடங்களான காட்லிங்க் பனியாறு, நரேந்திர நகர், சந்திரபதனி கோவில், காட்டு மற்றும் நாக் திப்பா போன்றவை பயணிகளை பெரிதும் ஈர்கின்றன.

Alokprasad

பவுரி

பவுரி

பவுரி நகர் கடல் மட்டத்திலிருந்து 1650 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. கண்டோலியா மலைகளின் வடக்குச் சரிவில் அமைந்திருக்கும் இந்த பவுரி, காடுகளால் நிறைந்த ஒரு அழகிய பகுதியாகும். இந்த பகுதியில் இறைவன் அளித்திருக்கும் இயற்கை அழகை அள்ளிப் பருக நம் ஒவ்வொருவரின் உள்ளமும் துடிக்கும்.

பனியால் போர்த்தப்பட்டிருக்கும் பந்தர்புன்ச் மலை, ஜனலி மலை, கங்கோதரி குரூப், நந்ததேவி மலை, திரிசூல் மலை, சவுக்கம்பா மலை, கோரி பர்வத் மலை, ஹதி பர்வத் மலை, சுவர்க்கரோகினி மலை, ஜோகின் குரூப், தலாய சாகர் மலை, கேதர்நாத் மலை, சுமேரு மலை மற்றும் நீல்காந்த் மலை போன்றவற்றின் அழகுக் காட்சிகளை பவுரியிலிருந்து பார்த்து ரசிக்கலாம். மேலும் அலகந்தா மற்றும் நயர் ஆகிய ஆறுகள் பவரி மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளாகும். ஆலயங்களுக்கும் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு சொர்க்கபுரியாக பவுரி விளங்குகிறது.

wiki

பவுரி சுற்றுலா

பவுரி சுற்றுலா

சக்கும்பா என்ற சுற்றுலாத் தலத்திலிருந்து இமயமலையின் இயற்கை எழில் கொஞ்சும் மலைச் சிகரங்கள் மற்றும் பனியாறுகள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். இந்த பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1700 மீ உயரத்தில் அமைந்திருக்கும் கிர்சு என்ற சுற்றுலாத் தலம் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இந்த பகுதிக்கு வந்தால் அது சுற்றுலா பயணிகளை நகரத்தின் நரக வாழ்க்கையிலிருந்து சிறிது நேரம் விடுதலை கொடுக்கும். இங்கு ஒலிக்கும் பறவைகளின் அமுத கானம் நம் மனங்களை கிறங்கடிக்கும்.

பவுரியிலிருந்து 16 கிமீ தொலைவில் தரி தேவி என்ற ஒரு பகுதியும் உள்ளது. இது ஒரு ஆன்மீகத் தலமாகும். இங்குள்ள ஆலயத்தில் தரி என்ற பெண் தெய்வம் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்மழை பொழிகிறார். மேலும் இந்த பகுதியில் கியுன்களேஷ்வர் மகாதேவ் ஆலயமும் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயமாகும். இந்த ஆலயம் சிவபெருமானுக்கு நேரந்தளிக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தை ஆதி சங்கராச்சாரியா அவர்கள் கட்டியுள்ளார். பவுரியில் இருக்கும் இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் டூத்தடோலி ஆகும். இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது.

இந்த பகுதியில் ஏராளமான இந்து சமய கோயில்கள் உள்ளன. குறிப்பாக கண்டோலியா ஆலயம், சித்திபலி ஆலயம், சங்கர் மாத், கெஷோரி மாத், மற்றும் ஜிவல்ப தேவி ஆலயம் போன்றவை மிகவும் பிரபலமான ஆலயங்கள் ஆகும். மேலும் இந்த பகுதியில் இருக்கும் லல்ட்ஹாங்க், அத்வானி, தாரா குண்ட், கோட்வாரா, பாரத் நகர் மற்றும் சிரிநகர் போன்ற சுற்றுலாத் தளங்களையும் கண்டு களிக்கலாம்.

தேவல் மற்றும் கண்டல் ஆகிய பகுகிகள் பழங்கால இந்து ஆலயங்களை தரிசிக்க வழிசெய்கிறது. பவுரி பகுதியில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதும் மற்றும் சைக்கிள் ஓட்டுவதும் மிக முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களாகும்.

Wikid

 குமாவோன்

குமாவோன்

உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வாலுடன் சேர்ந்த நிர்வாகப் பிரிவுதான் குமாவோன். உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சம்பவாட், நைனிடால், அல்மோரா, பாகேஸ்வர், பித்தோரகார் மற்றும் உத்தம்சிங் நகர் ஆகியவை குமாவோன் நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்டவங்களாகும். இந்த பிரதேசத்தின் வடக்கில் திபெத், தெற்கில் உத்திரப் பிரதேசம், கிழக்கில் நேபாளம் மற்றும் மேற்கில் கார்வால் ஆகியவை சூழ்ந்துள்ளன. குமாவோனி மொழியை உள்ளூர் மொழியாக பயன் படுத்தும் குமாவோன் பகுதியின் முக்கிய நகரங்களாக நைனிடால், அல்மோரா, ஹல்ட்வானி, முக்தேஸ்வர், பித்தோரகார், காஷிபூர், ருத்ராபூர் மற்றும் ரானிகெட் ஆகிய இடங்கள் உள்ளன.

Sourabh132000

 சிக்கிம்

சிக்கிம்

உள்ளூர் மக்களால் 'சொர்கம்' என அழைக்கப்படும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த, பனிகளால் சூழப்பட்ட சிகரங்களைக் கொண்ட, பூக்களால் நிரப்பப்பட்ட புல்வெளிகளுடன் காட்சியளிக்கும், பரிசுத்தமான நீரால் நிரப்பப்பட்ட நீர்நிலைகள் உள்ள இடம்தான் சிக்கிம். இந்த சிக்கிம் நம்மில் பெரும்பாலானோர்க்கு மாநிலமாக தெரியும். ஒரு தேசமே இங்கு உறங்கிக்கொண்டிருக்கிறது.

ஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமாக ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன. மேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், சுடுநீர் ஊற்றுகளும் அமைந்துள்ளன. இயற்கையான 50 டிகிரி சூட்டில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. சிக்கிமின் மூன்றில் ஒரு பகுதி அடர்ந்த காடுகளாக உள்ளது. மேலும் பனிகளால் நிரம்பிய பல ஓடைகள் சிக்கிமின் உயிர்நாடி என அழைக்கப்படும் தீஸ்தா நதியில் சங்கமிக்கின்றன.

Carsten.nebel

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

சிக்கிம் மாநிலத்தின் மிக உயர்ந்த சிலையான குரு பத்மசம்பவா அவர்களின் சிலை நம்ச்சியில் அமைந்துள்ளது. பல அழகிய பூக்களின் புகழிடமாக விளங்கும் ரோடென்ரான் சரணாலயத்தையும் கண்டு களியுங்கள் அதுமட்டுமல்லாது உலகின் 3-வது உயரமான சிகரமான கங்ஜங்கா சிகரம், ஏராளமான புத்த கோவில்கள், பச்சைப் புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்குகள். வெந்நீர் ஊற்றுகள், அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள், சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற மலைக்குன்றுகள் என ஏராளமான இடங்கள் உண்டு.

wiki

டார்ஜிலிங்

டார்ஜிலிங்

ஹாலிவுட் மற்றும் திரைப்படங்களில் அதிகமாக இடம் பெற்றுள்ள இந்திய மலைநகரம் எனும் அடையாளத்தையும் இது கொண்டுள்ளது. இயற்கை அழகை பார்த்து ரசிக்க வசதியாக இங்கு இயக்கப்படும் டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே உலகப்பிரசித்தி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காள மாநிலத்தின் வடகோடியில் இந்த மலைநகரம் வீற்றிருக்கிறது. சிறு இமாலயம் அல்லது மஹாபாரத் மலைத்தொடர்கள் எனப்படும் மலைப்பிரதேசத்தில் எத்திசையிலும் பனி மூடிய மலைச்சிகரங்கள் சூழ்ந்திருக்க இந்த நகரம் காட்சியளிக்கிறது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலிருந்தே ஒரு உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும், தரமான தனித்தன்மையான தேயிலை விளையும் பூமியாகவும் இது அறியப்பட்டு வந்திருக்கிறது. இந்நகரத்திலிருந்து பல்வேறு ரகங்கள் மற்றும் தர வகைகளில் உலகமெங்கும் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Anilbharadwaj125

சுற்றுலாத்தளங்கள்

சுற்றுலாத்தளங்கள்

டார்ஜீலிங் நகரத்தில் சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய ஏராளமான அம்சங்கள் உள்ளன. இவற்றில் ஹேப்பி வாலி டீ எஸ்டேட், லாயிட்'ஸ் பாடனிகல் கார்டன், டார்ஜீலிங் ஹிமாலயன் ரயில்வே, படாஸியா லூப் மற்றும் வார் மெமோரியல், கேபிள் கார், புதியா பஸ்தி கொம்பா மற்றும் ஹிமாலயன் மவுண்டனீரிங்க் இன்ஸ்டிடியூட் அன்ட் மியூசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

Aranya449

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X