Search
  • Follow NativePlanet
Share
» »ஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா?

ஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா?

கடுமையான வெய்யில்... கட்டுக்கோப்பான ஷூட்டிங் ஷெட்யூல்ஸ். அடுக்கடுக்கா படங்கள்ல நடிச்சி தன்னோட மார்க்கெட்ட தக்கவச்சிக்கணும். அதே நேரத்துல குடும்பத்தோட பாசத்த காதல பகிர்ந்துக்கவும் செய்யணும். ஆனா இந்த செலிபிரிட்டி வாழ்க்கையில சுதந்திரமா ஒரு சுற்றுலா கூட போக முடியாதுப்பா. இந்த பிரபலங்கள்லாம் எப்படி எங்கெங்கெல்லாம் சுற்றுலா போறாங்கன்னு பாருங்க.. உங்களுக்கே வியப்பா இருக்கும். அட நம்ம நாட்டுலதானுங்க..

சோனம் கபூர்

சோனம் கபூர்

பாலிவுட்டின் அட்டகாசமான நடிகை சோனம் கபூர் அவங்க தங்கச்சிக் கூட சேர்ந்து சுற்றுலா போகுறதுன்னா ரொம்ப பிரியப்படுறாங்க..

சமீபத்துல கூட காடுகளுக்கு பயணிக்கனும் இவங்க தங்கச்சி ஆசப்பட்டதால, ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு காட்டுக்கு சுற்றுலா போனாங்க எங்க தெரியுமா?

கன்ஹா தேசிய பூங்கா

கன்ஹா தேசிய பூங்கா


ஜங்கிள் புக் நாவல்ல வந்த காடுகளுக்கு பயணிச்சி போகணும்னு தங்கச்சி ஆசப் பட, அக்கா சோனம் அந்த ஆசைய நிறைவேத்தி வச்சிருக்காங்க..

இதே காட்டுக்கு இன்னும் பல பிரபலங்கள் வந்து போறாங்களாம். அதுல முக்கியமான பிரபலம் சோனாக்ஸி சின்கா.

சின்ன வயசுலேர்ந்தே குடும்பத்தோட இந்த காடுகள்ல பயணிக்கிறவங்களாம் அவங்க. சபாரி, பறவைகள பார்வையிடறது, அருகாமைல இருக்கு வசதியான ரிசார்ட்கள்ல தங்குறதுனு இவங்க வாழ்க்கை செம்ம ஜாலியா என்ஜாய் பண்ணுவாங்கலாம்.

கன்ஹா புலிகள் பாதுகாப்பு காடுகள்

கன்ஹா புலிகள் பாதுகாப்பு காடுகள்


இந்த பூங்கா மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் பாலாகாட் மற்றும் மண்ட்லா மாவட்டங்களில் அமைந்துள்ளது. இங்கு வங்காளப் புலிகள், சிறுத்தைகள், செந்நாய்கள் மற்றும் மான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இப்பூங்காவில் மூங்கில் மரங்களும் அதிக அளவில் உள்ளன. புகழ்பெற்ற புதினமான தி ஜங்கிள் புக் இப்பூங்காவின் உந்துதலால் எழுதப்பட்டது.


Altaipanther

ஆலியா பட்

ஆலியா பட்

ஆலியா பட்டுக்கு வெளிநாடுகள்ல பயணிக்கிறதுன்னா ரொம்ப விருப்பமாம். ஆனாலும் இந்தியானு வந்துட்டா அவங்க குடும்பத்தோட சுற்றுலா செல்ல எப்பவுமே தயாரா இருக்காங்க.. எல்லாருமே இவங்க குடும்பத்துல பிரபலம் அப்படிங்குறனால ஃபுல் பிஸி. ஆனாலும் ஹைதராபாத்ல இருக்குற பலக்னமா மாளிகைக்கு போக இவங்களுக்கு ரொம்ப ஆசை.

சல்மான் கான் தங்கச்சி கல்யாணம்

சல்மான் கான் தங்கச்சி கல்யாணம்


பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானோட தங்கை திருமணம் நடந்ததும் இதே பலக்னமா மாளிகையிலதான். அந்த திருமணத்துல கத்ரினா கெய்ப், ஆமீர் கான், பிரியங்கா, கரன் சோகர், சானியா மிர்சா, கபிர் கான்னு நிறைய பிரபலங்கள் கலந்துகிட்டாங்க.

Joe Lachoff

பலக்னமா மாளிகை

பலக்னமா மாளிகை

இந்த அரண்மனையின் பெயருக்கு உருது மொழியில் ‘வானத்தின் கண்ணாடி' என்பது பொருளாகும். சார்மினார் அலங்கார வளைவிலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ள இந்த அரண்மனைக்கு பயணிகள் சுலபமாக சென்றடையலாம்.

ஒரு தேளின் உருவம் போன்று இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் விசேஷமான அம்சமாகும். தேளின் இரண்டு முன்புற கொடுக்குகளை சித்தரிக்கும்படியாக அரண்மனையின் வெளிப்புற நீட்சிகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் நிறைய தெரிஞ்சிக்கணும் அப்படின்னா இத கிளிக் பண்ணுங்க..

wiki

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும்

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும்

கிரிக்கெட்னாலே செம்ம பிரஷர் ஆய்டுவாரு நம்ம கோலி.. அதே சமயம் தோத்துட்டா அவ்ளோதான் காண்டாகி சூடாகிடுவாரு.. வேற வழியே இல்ல ஒரு சுற்றுலா திட்டமிட்டு போய்ட்டு வந்தாதான் அடுத்து கோலிய சாதாரணம மனுசனா பாக்கமுடியும்.

அனுஷ்கா ஒரு வருசத்துல நிறைய படங்கள் நடிக்கிறாங்க.. பிஸி ஷெட்யூல்ல ரொம்ப பிஸியா வேல பாக்குறனால அலுப்பு தட்டி போர் அடிக்குது. அப்ப அதுக்கும் வழி சுற்றுலாதான். சரி ரெண்டு பேரும் காதலிக்கும்போதே அப்படித்தான். எங்க போவாங்க தெரியுமா?

கோவா

கோவா

கோவால போயி கால வச்சாத்தான் இந்த கப்பிள்ஸ்க்கு ரொமான்ஸ் மூட் வந்துடும். காதலர்களுக்கே உரிய சிறுபிள்ளைத் தனமான விளையாட்டுகள், கேலி கிண்டல்கள்னு கடைசில சின்ன சின்ன ஊடல்கள் வரைக்கும் இவங்களுக்குள்ள நிகழுமாம். அனுஷ்காவுக்கும், கோலிக்கும் இடையில இவ்ளோ அன்யோன்யம் இருக்குறதுக்கு காரணம் இந்த மாதிரியான சுற்றுலாக்கள்ல நேரத்த ஒன்னா செலவிடுறதுதான்.

இவங்க மட்டும் இல்லிங்க.. லாராதத்தா, மகேஷ் பூபதி, அமிதாப், மலைக்கா, பிபாசா பாசுனு நிறைய பேர நீங்க கோவால பாக்கமுடியும். ஆனா பெரும்பாலும் நாம அடையாளம் காணமுடியாதபடி தான் இருப்பாங்க..

நயன்தாரா

நயன்தாரா

பலகட்ட காதல்களும், முதுகுல குத்தப்பட்ட அனுபவங்களும் இருந்தாலும், மனசுக்கு புடிச்சி, மனச முழுசா புரிஞ்சிக்கிட்டு ஏத்துக்கிட்ட விக்னேஷ் சிவன் கிடச்சதுல நயன்தாரா ரொம்ப ஹேப்பி. அவங்களோட பிஸி ஷெட்யூல்களுக்கு இடையிலயும் சுற்றுலா போகுறது, காதலரோட விளையாடுறதுனு நிறைய வாய்ப்புகள பயன்படுத்தி தங்களோட அன்புல மகிழ்ச்சியா இருக்காங்க. இவங்க வெளிநாடுகள்ல சுற்றித் திரிஞ்சாலும், இந்தியாவுல பல இடங்களுக்கும் ஒன்னா சேர்ந்து போவாங்களாம் . அதுல ஒரு இடம் லடாக்.

அடடே.. இப்படி ஒரு இடத்துக்கு போறது வெளியில தெரியவே இல்லியேனு நினைக்கலாம். அவ்ளோ சீக்ரெட் பாஸ்.. தலைவிய பாத்தா உடனே கேமராவ தூக்கிட்டு கிளம்பிடுவீங்களே...

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்


தலைவரு எப்பவுமே மாஸ்தான்.. ஆவூண்ணா இமயமலைக்கு போய்டுவாருனு கிண்டல் பண்ணுவாங்க.. ஆனா ரஜினிகாந்த் இமயமலைக்கு போகுறதே இந்த மாதிரி கேலி கிண்டல்கள காதுல வாங்காம, எப்படி அமைதியா எளிமையான வாழ்க்கைய வாழுறதுன்றதுக்காகத்தானே.

அது சரி ரஜினி இமயமலைக்கு மட்டும்தான் போறாருனு நீங்க நினச்சிட்டு இருக்கீங்க.. அவரு அடிக்கடி திருப்பதி அப்றம் ஷீரடி சாய் பாபா கோவிலுக்கும் போய்ட்டு வராரு. எங்க போனாலும் அவருக்கு ராகவேந்திரா சுவாமி கோவில் இருக்குனு தெரிஞ்சிட்டா அங்க போகமா ஊருக்கு திரும்பவே மாட்டார்னு சொல்றாங்க.

பேட்ட படத்தோட ஷூட்டிங்கின் போது கூட அருகாமை கிராமங்கள்ல மக்கள பாத்துருக்காங்க.. நிறைய பேருக்கு அடையாளம் தெரியலனாலும், சொன்னதும் புரிஞ்சிக்கிட்டு நட்பு பாராட்டுனாங்களாம்.

Read more about: chennai tourism in india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X