Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவிலேயே இந்த மாநிலத்திற்கு தான் அதிக ரயில்வே நிதி ஒதுக்கீடு – தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவிலேயே இந்த மாநிலத்திற்கு தான் அதிக ரயில்வே நிதி ஒதுக்கீடு – தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தெரியுமா?

2025-26 பட்ஜெட்டில் இந்திய ரயில்வேயை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியாக ரயில்வேக்கு ரூ.255445.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வருவாய்க்கு ரூ.3445.18 கோடியும் மூலதனச் செலவினத்திற்கு ரூ.2,52,000 கோடியும் அடங்கும். இந்த நிதியை மாநிலம் வாரியாக இந்திய ரயில்வே பிரித்து கொடுத்துள்ளது. அவற்றில் அதிகபட்சமாக ஒரு மாநிலத்திற்கு ரூ.14745 கோடி நிதியும், குறைந்த பட்சமாக ஒரு மாநிலத்திற்கு ரூ.482 கோடி நிதியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கீழே பார்ப்போம்!

2025-2026 ரயில்வே பட்ஜெட் நிதி ரூ. 2.65 லட்சம் கோடி

பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ. 2.65 லட்சம் கோடி மூலதன ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு, நிலையங்கள் மற்றும் ரயில்களை நவீனமயமாக்குதல், இணைப்பை மேம்படுத்துதல், பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம், ஏற்கனவே உலகின் 4 ஆவது மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்காக திகழும் இந்திய ரயில்வேயின் செயல்திறனை மேலும் மேம்படுத்த இந்திய ராசு முயல்கிறது.

Train

தொலை தூரங்களையும் இணைக்க முடிவு

2025-26 பட்ஜெட்டில் ரயில்வேயை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உந்துதல் மற்றும் 17,500 பொது ரயில் பெட்டிகள், 200 வந்தே பாரத் மற்றும் 100 அம்ரித் பாரத் ரயில்களை உற்பத்தி செய்தல் போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் ஆகியவை அடங்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் தொலை தூரங்களையும் கூட ரயில் மூலம் இணைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

புதிய பாதைகள் அமைத்தல், இரட்டிப்பாக்குதல், நான்கு மடங்கு விரிவாக்கம்

நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும் பட்ஜெட்டில் ரூ.4.6 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை புதிய பாதைகள் அமைத்தல், இரட்டிப்பாக்குதல், நான்கு மடங்கு விரிவாக்கம், புதிய கட்டுமானங்கள், நிலைய மறுமேம்பாடு, மேம்பாலம், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பலவற்றுடன் தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Train

அதிகரித்த ரயில்வே பட்ஜெட்

2025-26 நிதியாண்டை எதிர்நோக்குகையில், ரயில்வேக்கு மொத்த மூலதனச் செலவு ரூ.2,65,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2009-14 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.45,900 கோடியுடன் ஒப்பிடும்போது கணிசமான அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதைகளின் கட்டுமானம் துரித வேகத்தில் தொடரும், 2025-26 நிதியாண்டில் ரூ.32,235.24 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். கூடுதலாக, 2025-26 நிதியாண்டில் பாதை மாற்றத்திற்காக ரூ.4,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, 2025-26 நிதியாண்டில் ரோலிங் ஸ்டாக் ரூ.57,693 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

50 நமோ பாரத் ரயில்கள், 100 அம்ரித் பாரத் ரயில்கள்

கூடுதலாக, ரயில்வே 100-200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களை இணைக்கும் 50 புதிய நமோ பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தும், ஒவ்வொன்றும் 16 பெட்டிகள் (ஏசி & ஏசி அல்லாத பெட்டிகள் இரண்டும்) கொண்டிருக்கும். மேலும், 100 அம்ரித் பாரத் ரயில்கள் (ஏசி அல்லாத) தொடங்கப்படும், இது மலிவு மற்றும் அணுகக்கூடிய பயண விருப்பங்களை வழங்கும். மொத்தம் 200 வந்தே பாரத் ரயில்களும் அறிமுகப்படுத்தப்படும், இது அதிவேக பயண வலையமைப்பை மேலும் மேம்படுத்துகிறது.

Train

17,500 ஏசி அல்லாத பொது பெட்டிகள் இணைப்பு

அதிக பயணிகளுக்கு இடமளிக்க, ரயில்வே 17,500 ஏசி அல்லாத பொது பெட்டிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், வழக்கமான ICF பெட்டிகள் LHB பெட்டிகளால் மாற்றப்படும், இது பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும். முதல் வந்தே ஸ்லீப்பர் ரயில் தற்போது சோதனைக்கு உட்பட்டுள்ளது, மேலும் 2025-27 க்கு இடையில் 50 வந்தே ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கப்படும், மொத்தம் 200 ரேக்குகள் தயாரிக்கப்பட உள்ளன.

மாநிலம் வாரியாக ரயில்வே பட்ஜெட்

ஆந்திரப் பிரதேசம் - ரூ.9417 கோடி

பீகார் - ரூ.10066 கோடி

சத்தீஸ்கர் - ரூ.6925 கோடி

டெல்லி - ரூ.2593 கோடி

கோவா - ரூ.482 கோடி

ஹரியானா - ரூ.3416 கோடி

ஹிமாச்சலப் பிரதேசம் - ரூ.2716 கோடி

ஜார்க்கண்ட் - ரூ.7302 கோடி

கர்நாடகா - ரூ.7559 கோடி

கேரளா - ரூ.3042 கோடி

மத்தியப் பிரதேசம் - ரூ.14745 கோடி

ஒடிசா - ரூ.10559 கோடி

பஞ்சாப் - ரூ.5421 கோடி

ராஜஸ்தான் - ரூ.9960 கோடி

தமிழ்நாடு - ரூ.6626 கோடி

தெலுங்கானா - ரூ.5337 கோடி

உத்தரகாண்ட் - ரூ.4641 கோடி

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரயில்வே நிதி ரூ.6626 கோடி ஆகும்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+