Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை டூ கோடியக்கரை- டூடேஸ் டிரிப் போலாமா ?

சென்னை டூ கோடியக்கரை- டூடேஸ் டிரிப் போலாமா ?

சென்னையில் வழக்கமான இடங்களைத் தவிர்த்து ஜாலியாக பைக் ரைடு டூர் போக ஏற்ற இடம் உங்க ஊர் பக்கத்துலேயே இருக்குங்க. வாங்க இந்த வார விடு முறைய கோடியக்கரையில புதுவிதமா செலவிடலாம்.

சென்னையில் வசிக்கும் மக்களுக்கு விடுமுறை என்றாலே மெரினா பீச்சும், வண்டலூர் ஜூவும் தான் தெரிந்த சுற்றுலாத் தலமாக இருக்கும். இளையோர்களுக்கு மகாபலிபுரம், இசிஆர் ரோடும் பொழுதைக் கழிக்க ஏற்றதாக இருக்கும். ஆனால், வாரந்தோரும் இந்த ஒரே பகுதிக்குச் சென்று அனைவருக்குமே போர் அடித்திருக்கும் அல்லவா. என்ன செய்வது வாரத்தில் ஓரிரு நாள் விடுமுறையை இந்த சிற்றுலாத் தலங்களில் தானே கழித்தாக வேண்டும் என மனதை சமாதானம் செய்து கொள்வீர்கள். ஆனால், இந்த இடங்களையெல்லாம் தவிர்த்து நண்பர்களுடன் ஜாலியாக பைக் ரைடு டூர் போக ஏற்ற இடம் உங்க ஊர் பக்கத்துலேயே இருக்குங்க. வாங்க இந்த வார விடு முறைய கோடியக்கரையில புதுவிதமா செலவிடலாம்.

சென்னை - பாண்டிச்சேரி

சென்னை - பாண்டிச்சேரி


சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வந்தடைய திண்டிவனம் சாலையை தேர்வு செய்தீர்கள் என்றால் மதுராந்தகம், மேல்மருவத்தூர் கடந்து மொத்தம் 166 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். மாமல்லபுரம் சாலை தேர்வு செய்தால் கடற்கரை சாலை வழியாக சுமார் 156 கிலோ மீட்டர் பயணித்தால் பாண்டிச் சேரியை அடையலாம். காலை 8 மணியளவில் இப்பயணத்தை துவங்கியுள்ளுர்கள் என்றால் 10.30 மணியில் இருந்து 11 மணியளவில் பாண்டிச்சேரியை அடைந்துவிடலாம்.

Sathyaprakash01

பாண்டிச்சேரி - காரைக்கால்

பாண்டிச்சேரி - காரைக்கால்


பாண்டிச்சேரியில் இருந்து கடலூர், சிதம்பரம் சீர்காழி என 132 கிலோ மீட்டர் பயணித்தால் காரைக்காலை அடையலாம். இந்த இடைப்பட்ட தூரத்தில் உங்களது சோர்வை போக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கடலூரிலும், சிதம்பரத்திலும் ஏராளமான சுற்றுலாத் தலங்களும், ஆன்மீகத் திருக்கோவில்களும் உள்ளன. பயணித்தின் போது சற்று ஓவ்வெடுக்க விரும்புவோருக்கு இப்பகுதிகளே ஏற்றதாக இருக்கும். இருப்பினும், பாண்டிச்சேரி - காரைக்கால் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அதிகம் நிறைந்த சாலை என்பதால் கூடுதலாக பயண நேரம் பிடிக்கும்.

P Jeganathan

காரைக்கால் - கோடியக்கரை

காரைக்கால் - கோடியக்கரை


காரைக்காலில் இருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் கடல் முகத்துவாரத்தில் உள்ளது காரைக்கால். நாகப்பட்டினம், வேளாங்கன்னி, வேதாரண்யம் என பிரபல சுற்றுலாத் தலகங்களைக் கடந்து இப்பகுதியை அடைந்தால் இங்கேயும் முழுக்க முழுக்க காத்திருக்கிறது உங்களுக்கான பறவைகள் சரணாலயம், கலங்கரை விளக்கம், துறைமுகமும்.

Marcus334

காரைக்கால்

காரைக்கால்


நெடுஞ்தூரப் பயணத்திற்குப் பின் காரைக்காலை அடைந்துவிட்டீர்கள். சரி, வாங்க கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்ற போலாம். ஆமாம் எங்கே காரைக்கால் ஸ்பெஷல் உணவு கிடைக்கும். இதுதானே உங்க கேள்வி. கவலைய விடுங்க. உங்களுக்காகவே காரைக்காலில் கடற்கரையிலேயே கமகமன்னு காத்திட்டு இருக்கு ஸீகல் உணவகம். கடற்காற்று மோத கடலைப் பார்த்துக் கொண்டே உணவருந்தும் வாய்ப்பு இங்கே கிடைக்கும். அதுமட்டுமா, இந்த உணவகத்தோட ஒருபகுதியில் பாரும் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு அரையில் அசைவமும் மதுவும் வழங்குகிறார்கள். குடும்பத்தினர் அனைவரும் அவரவர் ருசிக்கு ஏற்ப உணவும், மதுவும் பெறலாம். பாதுகாப்பும் சுத்தமும் உள்ள இந்த ஸீகல் உணவகம் பாண்டிச்சேரி அரசால் நடத்தப்படும் ஸ்டார் ஹோட்டல் என்றே சொல்லலாம்.

Jassimjazz

மிதவை உணவகம்

மிதவை உணவகம்


ஸீகலுக்குச் செல்லும் வழிச் சாலை முழுவதுமே அரசலாறு ஓடுகிறது. இங்குதான் மிதவை உணவகமும் அமைந்துள்ளது. படகு உணவகத்தில் பயணித்துக் கொண்டே ஆடலாம், பாடலாம், சாப்பிடலாம், ஒரு சுற்று சுற்றியும் வரலாம். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தனிமை சுகத்தை அள்ளி வழங்கும் எமெரால்ட் பீச் ஈசிஆர் வழித்தடத்தை தொட்டு இங்கே தான் உள்ளது.

Mohd Fazlin Mohd Effendy Ooi

மூன்று லைட் ஹவுஸ்...

மூன்று லைட் ஹவுஸ்...


உணவு முத்துவிட்டு சூரிய மறைவுக்குப் பின் கட்டாயம் பயணிக்க வேண்டிய இடம் லைட் ஹவுஸ் தான். காரைக்காலில் மட்டும் மொத்தம் மூன்று லைட் ஹவிஸ்கள் உள்ளன. அதில் ஒன்று கோடியக்கரை கடலோரத்தில் பாரந்தகசோழன் காலத்தில் கட்டப்பட்டது. இரண்டாவது சுமார் 120 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஸ் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாவது 1200 வருடத்திற்கு முற்பட்டது என கூறப்படுகிறது. வந்தியத்தேவனும், பூங்குழலியும் உலவிய இடமாக கல்கியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் இருந்துதான் ராஜராஜசோழன் இலங்கைக்கு படையெடுத்தாக வரலாறும் உள்ளது. இதில் 180 அடி கொண்டி பிரிட்டிஸ்காரர்களால் கட்டப்பட்ட லைட்ஹவுஸ் தான் தமிழகத்திலேயே உயரமானதாம்.

Marcus334

கோடியக்கரை சரணாலயம்

கோடியக்கரை சரணாலயம்


பெறும்பாலும் சரணாலயம் என்றால் பறவைகள் அல்லது விலங்குகள் சரணாலயமாக இருக்கும். ஆனால், கோடியக்கரை சரணாலயம் விலங்குகளுக்கம், பறவைகளுக்கும் பிரசித்தம் பெற்றவையாக உள்ளது. 17 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வன விலங்கு சரணாலயப் பகுதியாக இது ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இக்காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நிர் புகுந்து உப்பு ஏரியாக முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி, மேல்மருவத்தூர் பகுதிகளில் நதிகளாக சங்கமிக்கின்றன. நதுப்பு இந்த நிலக் காடகளிலும், வனவிலங்கு சரணாலங்களிலும் ஏராளமான மான்கள் சுற்றித்திரிவதைக் காணலாம். மேலும், உயரம் குறைவான ஏரிப் பகுதிகளில் மீன்கள் அதிகளவில் இருப்பதால் பலவகை பறவைகள் இங்கே கூடுகின்றன.

Marcus334

வேதாரண்யம்

வேதாரண்யம்


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி தான் வேதாரண்யம்/ இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தினால்தான் இவ்வூருக்கு இப்பெயர் அமைந்தது. பராந்தக சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஒரு சிவன் கோவிலாகும். இங்குள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண், ஆயுர்வேத மூலிகைக்காடு, வரலாற்றுப் புகழ்வாய்ந்த கலங்கரை விளக்கம், இராமர் பாதம், எட்டுக்குடி முருகன் கோவில், போன்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடங்களாகும்.

Adiyapatham Sundaresan

டச்சுக் கோட்டை

டச்சுக் கோட்டை


டச்சுக்கோட்டையானது, நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள தரங்கம்பாடி என்ற ஊரில் அமைந்துள்ளது. 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை, டச்சுக்கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்றாகும். இக்கோட்டை நுண்ணியக் கட்டிடக்கலைக்கு இன்றளவும், புகழ்பெற்று விளங்குகிறது. காலனி ஆதிக்கம் குறித்த வரலாறு மற்றும் கட்டிடக்கலை தொடர்பான ஆர்வம் உள்ளவர்கள் இக்கோட்டையைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.

I, Eagersnap

வேளாங்கன்னி

வேளாங்கன்னி

வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் நாகையிலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது வேளாங்கன்னி. இந்த சிறிய நகரம் கிரிஸ்த்துவர்களின் முக்கியமான புண்ணிய தலமாகும். இங்கு புகழ்பெற்று விளங்கும் ஆரோக்கியமாத தேவாலயம் அனைத்து சமய மக்கள்கள் வழிப்படுகிறார்கள். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழா வேளாங்கன்னியில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

rajaraman sundaram

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X