Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை - சேலம்: இப்படி ஏகப்பட்ட வழிகள் இருக்கும்போது ஏன் பசுமை சாலை திட்டம்?

சென்னை - சேலம்: இப்படி ஏகப்பட்ட வழிகள் இருக்கும்போது ஏன் பசுமை சாலை திட்டம்?

இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. தமிழக மற்றும் மத்திய அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த சாலை திட்டம் மிகவும் துரிதமான போக்குவரத்துக்காக

By Udhaya

இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. தமிழக மற்றும் மத்திய அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த சாலை திட்டம் மிகவும் துரிதமான போக்குவரத்துக்காக உருவாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. சேலத்திலிருந்து சென்னை வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டம் எட்டு வழிச்சாலையாக உருவாகவுள்ளது. அதே நேரத்தில் இந்த திட்டத்தால் காடுகள் நிறைய அளவில் பாதிக்கப்படும். ஏற்கனவே சேலம் - சென்னை பயணத்துக்கு ஏகப்பட்ட வழித்தடங்கள் இருக்கிறது அப்படி இருக்க இந்த திட்டத்தின் அவசியம் என்ன என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். சரி இந்த திட்டத்தில் வரும் இடங்களைப் பற்றி பார்க்கலாம்.

 சேலம் - சென்னை வழித்தடம்

சேலம் - சென்னை வழித்தடம்

இந்த எட்டு வழி பசுமை சாலை திட்டமானது சேலத்திலிருந்து ஆரம்பித்து பல்வேறு ஊர்களிடையே செல்கிறது. இந்த சாலையில் தொட்டுச்செல்லும் முக்கிய இடங்கள். ஏற்காடு, கல்ராயன் மலைகள், அரூர், தீர்த்தமலை, செங்கம், கடலாடி வனப்பகுதி, பூண்டி. போளூர், ஆரணி, காஞ்சிபுரம் வழியாக சென்னைக்குள் நுழைகிறது.

ஆனால் இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கேட்கும் கேள்வி என்பது சேலம் முதல் சென்னை வரை பயணிக்க ஏற்கனவே பல வழிகள் இருக்கின்றன. அந்த வகையில் ஏன் இந்த வழித்தடம் தேவையில்லாமல் இயற்கையை அழித்து செய்யப்படுகிறது.

மற்ற வழிகள்

மற்ற வழிகள்

வழி 1

சேலத்திலிருந்து பொம்மிடி, மொரப்பூர், சாமல்பட்டி, திருப்பட்டூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், வேலூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், ஆவடி வழியாக சென்னையை அடையலாம்.

நேரம் - 5 மணி நேரம் வரை ஆகின்றது. சற்று முன்பின் ஆனாலும் அதிகபட்சம் 6 மணி நேரம் ஆகிறது இந்த வழியில்...

வழி 2

சேலம் - ஆத்தூர் - சின்னச்சேலம் - விழுப்புரம் - திருக்கோவிலூர் - திண்டிவனம் - மேல்மருவத்தூர் - மதுராந்தகம் - செங்கல்பட்டு வழியாக சென்னையை அடையலாம்

தூரம் - 354 கிமீ

நேரம் - 6 மணி நேரம் ஆகின்றது. ஆனால் இந்த வழியில் அதிக வாகன நெரிசல் இருக்கும். எனவே இது கொஞ்சம் தாமதமாகலாம்.

மற்றொரு வழி

சேலத்திலிருந்து ஆரம்பிக்கும் மற்றொரு வழி தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆம்பூர் , வேலூர் வழியாக காஞ்சிபுரம் வந்தடைந்து அங்கிருந்து சென்னைக்கு செல்லும்.


இதுபோல் இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனாலும் அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பதற்கு, வேகமும், நேரக்குறைப்பும் முக்கியமாக கூறப்படுகிறது. இப்போது செல்லும் நேரத்துக்கு பாதி நேரத்தில் செல்ல திட்டம் வழி வகை செய்யும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

 செலவும் திட்டமும்

செலவும் திட்டமும்


இந்த திட்டத்துக்கு ஆகும் செலவு 10 ஆயிரம் கோடி ஆகும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை 274 கிமீ தொலைவு கொண்டதாக அமைக்கப்பட இருக்கிறது. இதில், 250 கிமீ தூரமானது வனப்பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது.

சென்னை தாம்பரத்தில் துவங்கி தர்மபுரி மாவட்டம் அரூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையானது 179B எனவும், அரூர் முதல் சேலம் வரையில் அமைக்கப்பட இருக்கும் புதிய நெடுஞ்சாலை 179A என்ற பெயரிலும் குறிப்பிடப்படும்.

நீளமும் சாலையும்

நீளமும் சாலையும்

இந்த சாலையானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிமீ தொலைவிற்கும் அமைக்கப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ தூரம் தொட்டுச் செல்லும் இந்த சாலை மீண்டும் தர்மபுரியில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என 53 கிமீ தொலைவுக்கு அமைய இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியிலிருந்து சேலம் மாநகரம் வரை 38 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட இருக்கிறது.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை

தற்போது சென்னையிலிருந்து உளூந்தூர்பேட்டை வழியாக சேலம் வரையில் 360 கிமீ தொலைவுக்கான நெடுஞ்சாலை பயன்பாட்டில் இருக்கிறது. புதிய பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக இரு நகரங்களுக்கு இடையிலான தொலைவு 60 கிமீ வரை குறையும். புதிய பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக இரு நகரங்களையும் வெறும் 3 மணிநேரத்தில் இணைக்க முடியும்.

 சிறப்பாக மாறும் இடங்கள்

சிறப்பாக மாறும் இடங்கள்

திருவண்ணாமலை

ஆன்மிக தலமாக விளங்கும் திருவண்ணாமலை நகரம் இந்த திட்டத்தால் மிகச் சிறப்பான போக்குவரத்து வசதியை பெறும். திருவண்ணாமலைக்கு மிக அதிக அளவில் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். இவர்களுக்கு இந்த சாலை மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம்

திருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில் இந்த ஊருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கே சட்டப் பிரச்சனை இருப்பதாக கேள்விப்படுவதும் அரிது. பிரச்சனைகள் இன்றி வாழ வேண்டும் என்கிற நோக்கத்தோடு இருக்கும் பக்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் இவ்விடத்திற்கு வருகை தரும் பக்தர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள்.

பஞ்ச பூத ஸ்தலங்கள்

பஞ்ச பூத ஸ்தலங்கள்

இந்த நகரம் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. வாயு. காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்ச பூதங்களை சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருவாணைக்கோவில் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய ஊர்கள் பிரதிபலிக்கின்றன. இந்த நகரத்தில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோத்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. நவம்பர்/டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் பிரம்மோத்சவம் மிகவும் புகழ்வாய்ந்தது.

தமிழ் நாள்காட்டியில் இவை கார்த்திகை மாதத்தை குறிக்கின்றது. இந்த விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுவதோடு, கடைசி நாள் கார்த்திகை தீப திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. இந்த கடை நாள் கொண்டாட்டத்தின் போது, பக்தர்கள் மூன்று டன் வெண்ணெய்யை உள்ளட்டக்கிய ஒரு பெரிய பாத்திரத்தில் விளக்கு கொழுத்துகிறார்கள். இந்த பாத்திரம் ஆணைமலை குன்றின் உச்சியில் வைக்கப்படுகின்றது. அருணாச்சலேஷ்வரா கோவில், ரமணா ஆசிரமம், விருபாக்‌ஷா குகை மற்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் ஆகியவை தென்னிந்திய இந்துக்கள் இடையே சமயச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்கள் ஆகும்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலகமெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பட்டு நூலில், தங்கச் சரிகை சேர்த்து நெய்யப்படும் இச்சேலைகள், முற்காலத்தில் வாழ்ந்த பெண்கள் மட்டுமல்லாது, இக்காலத்து நவீன பெண்களும் விரும்பும் வண்ணம் நெய்யப்படுகின்றன. இச்சேலைகள், தென்னிந்தியாவின் உடைக் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கமாக இருப்பினும், தமிழர்களின் தனிப்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமை பொருந்தியதாகும். வருடந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இப்புனித நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், தேவராஜஸ்வாமி கோயில், மற்றும் கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

பாதிக்கப்படும் காடுகள், விளைநிலங்கள்

பாதிக்கப்படும் காடுகள், விளைநிலங்கள்

எட்டு வழிச்சாலையால் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கும் மற்றும் அதிக அளவில் காடுகலை அழிக்கவேண்டியிருக்கும் என எதிர்க்கட்சிகளும் சமூக நல அமைப்புகளும் கூறி இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த திட்டத்தில் இருக்கும் சில உண்மைகளை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த சாலைத் திட்டத்தின் வழித்தடமானது
தாம்பரம் மண்ணிவாக்கம் - சேலம் உத்தமசோழபுரம் வரை அமைக்கப்படவுள்ளது. இது ரெண்டு சாலையாக அமைக்கப்படவுள்ளது.

1

சேலம் - அரூர்

2

அரூர் - சென்னை

இதனால் சுற்றுலாத் தளங்களோ, காடுகளோ, விளைநிலங்களோ பாதிக்கப்படவில்லை என முதல்வரின் தகவல்கள் கூறுகின்றன. 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலத்தில் இந்த சாலை அமைக்கப்படவுள்ளது. எனினும் இந்த திட்டத்தால் அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படும் என்பது எதிர்த்தரப்பினரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

All Images are taken from

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X