Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை வாசிகளுக்கே தெரியாத சென்னையின் மலிவான ஷாப்பிங் தளங்கள் இவை!

சென்னை வாசிகளுக்கே தெரியாத சென்னையின் மலிவான ஷாப்பிங் தளங்கள் இவை!

By Udhaya

சென்னைல ரெம்ப காலமா வாழ்ந்துனு வரோம். எங்களுக்கே நெறிய எடங்கள் தெரியாம இருக்கும். அப்படி பல இடங்கள்ல ஷாப்பிங் செய்ய மலிவான விலையில பொருள்கள வச்சினிக்குற ஏரியாங்கள்ல சென்னைதான் டாப்பு.. இங்கெல்லாம் போனீங்கன்னா மலிவான விலையில நிறைய பொருள்கள அள்ளிட்டு வரலாம். இது சென்னையில இருக்குற கொஞ்சம்பேருக்கு தெரிஞ்சிருக்கலாம்.. ஆனா புதுசா வர்றவங்களுக்கும் உபயோகமா இருக்கனுங்குறதுக்காக தெள்ளத்தெளிவா எந்தெந்த ஏரியாங்கல்லாம் மலிவு விலையில பொருள்கள் கிடைக்குது, நடுத்தர வர்க்கத்துக்காரங்க ஷாப்பிங் செய்ய ஏற்ற இடங்கள் எவைனு இந்த பதிவுல பாக்லாம். சென்னைனு எடுத்துக்கிட்டாலே நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டே போய்ட்டிருக்கு. அதோட எல்லை மாநகராட்சி ஒரு பக்கம் விரிவு செஞ்சிட்டு இருக்க, மக்களா பாத்து கொஞ்சம் கொஞ்சமா விரிவு பண்ணிட்டே வர்றாங்க.. அட தாம்பரத்துல ஆரம்பிச்ச ஓட்டம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி தாண்டி காட்டாங்கொளத்தூர்ல இருக்கறவங்களே நாங்க சென்னையில இருக்கோம்னு சொல்லிகிடுற அளவுக்கு மக்கள் சென்னைய விரிவடையச் செஞ்சிருக்காங்க.. இந்த பகுதி ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த பக்கம் அம்பத்தூர், ஆவடி தாண்டி திருவள்ளூர் வர போய்ட்டு இருக்கு சென்னை... வட திசைய பாத்தா பழவேற்காடு காரங்க கூட சென்னைனு சொல்லிட்டுதான் வராங்க ஊருபக்கம். நகரம் மாநகரமா மாறி பெருநகரமா விரிவடஞ்சி போயிட்டே இருக்கு.. இங்க சுற்றுலாவுக்கு பஞ்சமே இல்ல.. ஆனா ஷாப்பிங்...? வாங்க சென்னையோட ஹாட் ஷாப்பிங் தலங்கள பத்தி இந்த பதிவுல விளக்கமா பாக்கலாம். தமிழ் நேட்டிவ் பிளானட் பதிவுகள உடனுக்குடன் உங்க திரைக்கே நேரடியா பெற மேல வலது பக்கம் இருக்குற பெல் பட்டன அழுத்துங்க... அப்றம் முகநூல்லயும் Native Planet Tamil என்கிற நம்மளோட பக்கத்த லைக் பண்ணி, அப்டேட்டுகள உடனடியா பெற்றிடுங்க..

சென்னையில் ஷாப்பிங் செய்வதற்கான டிப்ஸ்:

சென்னையில் ஷாப்பிங் செய்வதற்கான டிப்ஸ்:

அ. நடந்து செல்லுங்கள் அல்லது முடிந்தவரை பேருந்தில் செல்லுங்கள். சொந்த வாகனத்தில் சென்றால் வாகனத்தை நிறுத்தவே அல்லல் படுவீர்கள்.

ஆ. சென்னையின் வண்ணமயமான அழகை ரசிக்க, மதியம் 3 மணிக்கு மேல் செல்லுங்கள். கூட்ட நெரிசல் கடுப்பாகும்தான் என்றாலும், அப்படி ஒரு அனுபவத்தை நீங்கள் கட்டாயம் உணரவேண்டும்.

இ. தி நகர் போன்ற இடங்களில் மிக மிக மலிவான டி சர்ட்கள், சட்டைகள் கிடைக்கும். அதை தவிர்த்துவிடுங்கள். இவை மிக மிக தரமில்லாத பொருள்கள் அல்லது ஏற்கனவே பயன்படுத்திய பொருள்கள்.

ஈ. அதிகம் விலை கொண்ட பொருள்கள், துணிமணிகளை குளிர்சாதன வசதி கொண்ட கடைகளில் வாங்குவதை தவிர்த்துவிட்டு, கடைத்தெருக்களில் வாங்க முற்படுங்கள். நல்ல தரம், ஓரளவுக்கு தரம் போன்றவற்றை கொண்டு அதன் மதிப்பை எடைபோடுங்கள்.

PC: Karan Patil

 எங்கெல்லாம் செல்லலாம்

எங்கெல்லாம் செல்லலாம்

முதலில் சென்னை பெருநகரத்தின் முக்கிய தலங்களைப் பற்றி பார்க்கலாம்.

அ. தி நகர்

ஆ. பாரிமுனை

இ. பாண்டிபஜார்

ஈ. சௌகார்பேட்டை

மற்றபடி அருகாமை இடங்களில் ஷாப்பிங் செய்யவிரும்புபவர்களுக்கான இடங்கள்

செங்கல்பட்டு அருகே நிறைய கடைகளும், ஷாப்பிங் பிரதேசங்களும் இருக்கின்றன. குயின்ஸ் சூப்பர் ஷாப்பிங், சோனி காம்பிளக்ஸ், ரஹமத் ஷாப்பிங் மால், டீல்ஸ் ஆரோ, மாணிக்கம் ஜ்வல்ஸ், விக்னேஸ் ஸ்டோர்ஸ், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ், சிங்கப்பூர் ஷாப்பிங் சென்டர், பர்பெக்ட் மார்க்கெட்டர்ஸ், காதிரா எக்ஸ்போர்ட், ஜேபி ஷாப்பிங் காம்ப்லக்ஸ், உழவன் ஆர்கானிக் ஷாப், சஹானா ஸ்மைலி கிட்ஸ், அஷோக் எலக்ட்ரானிக்ஸ் என ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன.

சிங்கப்பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள ஷாப்பிங் செய்ய ஏற்ற தளங்கள்

லலித் எலக்ட்ரிக்கல்ஸ் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், கேஎம்கே மொபைல் ஸோன், மாதாஜி ஜுவல்லரி, லுக் அட் மி, மம்மி டாடி, ஷிபா பேஃஷன் வியர், மகாலட்சுமி பேஃஷன் பார்க், ஆசியா டெக்ஸ்டைல்ஸ் என இந்த பகுதியிலும் நிறைய ஷாப்பிங் செய்ய ஏற்ற தளங்கள் இருக்கின்றன.

குறிப்பு: ஒரு வேளை நீங்கள் செங்கல்பட்டில் இருக்கிறீர்கள். ஷாப்பிங் செய்ய தி நகர் வருவதென்றால் வேகாத வெயிலில், நண்டு சின்டுகளைக் கூட்டிக்கொண்டு, இவ்வளவு தூரம் வரவேண்டுமா என்று நீங்கள் யோசிக்கலாம். அவர்களுக்காகவே இந்த பதிவு. மற்றபடி நீங்கள் மலிவான விலையில் அதிக அளவு பொருள்கள் வாங்கவேண்டும் என்றால் மாநகருக்குள் படையெடுத்தாக வேண்டும்.

PC: Apoorva Jinka

குறைந்த செலவு - நிம்மதியான பயணம் - அதிக பொருள்கள்

குறைந்த செலவு - நிம்மதியான பயணம் - அதிக பொருள்கள்

குறைந்த செலவில் அதிக பொருள்களும் வாங்கி தொந்தரவில்லாமல் வீடு போயி சேரணும். அதானே உங்களுக்கு வேணும். அதுக்கான வழிமுறய நாங்க சொல்லுறோம். மொதல்ல ஷாப்பிங்க் செய்ய போற எடத்துக்கு எத்தன பேரா போவீங்கனு முடிவு பண்ணிக்கோங்க... நீங்க சொல்றத மதிச்சி கேட்கக்கூடிய நபர்களை மட்டும் கூட்டிப்போங்க.. அப்றம் சண்டகோழியா முட்டிட்டு கெடக்க கூடாது.

வெய்யில் அதிகம் என்பதால் முடிந்தவரை மாலைவேளைகளில் ஷாப்பிங் செல்வது சிறந்தது,. என்றாலும், கையில் நீர் பாட்டில்களை எடுத்துச் செல்லுங்கள். சிலருக்கு இப்படி அனுபவம் இருக்கும். வெளியில் நீர் குடித்தால் உடனடியாக ஜலதோஷம் வந்துவிடும். இதனால் வீட்டிலிருந்தே நீர் எடுத்துச் செல்வது நல்லது.

சிறிய கடைகளில் பழரசம் வாங்கி அருந்தும்போது கவனமாக இருங்கள். அதில் பயன்படுத்தப்படும் நீரின் தன்மையிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அல்லது இது போன்ற பிரச்னைகள் உங்களை ஒன்றும் செய்யாது என்று நம்பினால் குழப்பம் இல்லை. நீங்கள் தாராளமாக எதையும் அருந்தலாம், சுவைக்கலாம்.

சென்னை கடற்கரை ரயில் நிலைய மார்க்கத்தில் நீங்கள் இருக்கும் இடம் வந்தால் நிச்சயம் நீங்கள் குடுத்து வைத்தவர்கள்தான். பின் மதிய வேளைகளில் ரயில் பயணம் கூட்ட நெரிசல் குறைவானதாக இருக்கும். இதனால் எளிதில் பொருள்களை வாங்கிவிட்டு வரலாம். ஆனாலும், மாலை நேரம் ஆக ஆக ரயிலில் கூட்டம் அதிகரிக்கும்.

நீங்கள் செல்லும் போது ரயிலில் சென்றுவிட்டு, திரும்பும்போது வாடகை கார் புக் செய்து வீடு திரும்பலாம். இதுவும் நல்ல யோசனைதான்.

PC: Vinoth Chandar

தியாகராய நகருக்குள் செல்லலாமா

தியாகராய நகருக்குள் செல்லலாமா

தி நகருக்கு ஷாப்பிங் செல்வோர் கவனத்திற்கு -

நவம்பர் - டிசம்பர் - சனவரி மாதங்களில் கூட்டம் அலைமோதும். முக்கியமாக வார இறுதி விடுமுறை நாட்களிலும், மாலை வேளைகளிலும்

உங்களுக்கு கூட்டம் பிடிக்காது என்றால் மாலை 5 முதல் இரவு 9 மணி வரையுள்ள நேரத்தை தவிர்க்கவும்.

காலை 7 மணிக்கே வந்து ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தால் முதல் ஆளாக வந்துவிட்டு வாங்கவேண்டியவை வாங்கிவிட்டு செல்லலாம். காலை 10 மணிக்கு மேல்தான் கூட்டம் வரும். ஆனால் நிறைய கடைகள் காலங்காத்தாலே திறந்திருக்க வாய்ப்பு குறைவு என்பதையும் கவனத்தில் கொள்க...

கோடை விடுமுறைகளில் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் அதிக அளவில் குழந்தைகள், சிறுவர்கள் தொடர்பான பொருள்கள் வியாபாரத்துக்கு வரும். மேலும் இந்த சமயத்தில் ஷாப்பிங் செய்பவர்களை குறி வைத்து நிறுவனங்கள் போட்டி போட்டு சலுகைகளை வழங்கும். பயன்படுத்திக்கோங்க..

எப்படி செல்வது?

பேருந்து - சென்னையின் முக்கிய பகுதிகளிலிருந்து பேருந்துகள் தி நகர் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன

தாம்பரம் - தி நகர் வழித்தடத்தின் பேருந்து எண் 5A ஆகும். 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இருபுறங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆவடி - தி நகர் - திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்படும் 47D பேருந்தில் அந்த பகுதி மக்கள் பயணிக்கலாம்.

ரயில்

செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களிலிருந்து அடிக்கடி ரயில்கள் இந்த மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி தி நகரை எளிதாக அடையலாம்.

PC: Ganeshk

 தி நகரில் எங்கெல்லாம் ஷாப்பிங் செய்வது

தி நகரில் எங்கெல்லாம் ஷாப்பிங் செய்வது

அ. பனகல் பார்க்

ஆ. ரங்கநாதன் தெரு

இ. வடக்கு உஸ்மான் சாலை.

ஈ. மாம்பலம் ரயில் நிலையம்

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கு புறமாக சென்றால் அங்கு நிறைய சிறு சிறு கடைகள் இருக்கும். சரவணா ஸ்டோர் உள்ளிட்ட அவர்களின் கடைகள் நிறைய இருக்கும். இடையிடையில் நிறைய தள்ளுவண்டி கடைகள், நடைபாதை கடைகளும் இருக்கும். இங்கு துணிமணிகள், காதணி, கழுத்தணிகள், காலணிகள் என பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தேவையான நிறைய பொருள்கள் விற்கப்படுவதை காணலாம். குறைந்த விலையில் ஓரளவுக்கு தரமான பொருள்களை இங்கு வாங்கமுடியும்.

அந்த தெருவில் அப்படியே நேராக சென்றால், ஒரு முக்கிய சாலை வரும், அதன் வழிநெடுகவும் சாலையோர கடைகள் விரித்திருப்பார்கள். அவ்வப்போது போக்கு வரத்து கருதி அந்த கடைகளை அப்புறப்படுத்துவார்கள் காவலர்கள். அதே சாலையில் சிறிது தூரம் சென்றால் பனகல் பார்க் வரும்.

தி நகரில் அணிகலன்கள், துணிகள், ஆடைகள், வீட்டு உபயோகபொருள்கள், மின்னணு சாதனங்கள், காய்கறி பழங்கள் என எல்லாவற்றையும் நீங்கள் வாங்கமுடியும்.

McKay Savage

பாரி முனை

பாரி முனை

என்ன தி நகரில் உங்களுக்கு எதும் பிடிக்கவில்லையா.. அப்படியானால் பாரிமுனை நோக்கி படையெடுங்கள்.

பேரம் பேசுவதில் கில்லாடியா நீங்கள்.... அட உங்களுக்கென்றே காத்திருக்கிறது பாரிமுனை. ஆனா ஒரு குறை.. அட ஆமாங்க வரவிங்க போறவிங்கலாம் அடிச்சி பேசி விலய குறச்சிடுறீங்கன்னு.. கடைக்காரரே மொத்தமா ஒரு விலய பிக்ஸ் பண்ணிடறாரு..

200 மதிப்புள்ள பொருள ஆரம்பத்துலயே 500ரூபாய்னு பிக்ஸ் பண்ணிட்டு, நீங்க எவ்ளோதான் பேரம் பேசினாலும், 250க்கு கீழ கொறைக்கமாட்டேனும்பாரு. எப்டி பாத்தாலும் அவருக்கு 50 ரூபா லாபம்தானுங்களே..

இதுமாதிரி இடங்கள்ல நிறைய பொருள்கள் வாங்குனா அது நல்ல லாபமா அமையும்.

PC: Karthik Gangadharan

 எப்படி செல்வது

எப்படி செல்வது

தி நகரிலிருந்து பாண்டி பசார் - தி நகர் பனகல் மாளிகையிலிருந்து நானா தெருவிற்குள் நுழைந்தால், நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது பாண்டி பசார்.

தி நகர் - பாரிமுனை - மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கோட்டை வரை ரயிலில் சென்று அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கும் பாரிமுனைக்கு எளிதில் செல்லமுடியும்.

பாரிமுனை - சவுகார்பேட்டை - பாரிமுனையிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சவுகார் பேட்டை. ஜார்ஜ் டவுன் தாண்டி செல்லவேண்டும்.

Read more about: travel chennai shopping tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more