» »சென்னை 2 சந்திரகிரி – வரலாற்றுப் பாதையில் ஒரு சுற்றுலாப் பயணம்:

சென்னை 2 சந்திரகிரி – வரலாற்றுப் பாதையில் ஒரு சுற்றுலாப் பயணம்:

Posted By: Gowtham Dhavamani

கோட்டைகள், அரண்மனைகள், கோவில்கள் இல்லாமல் இந்திய வரலாறு முழுமையடையாது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எண்ணற்ற கோவில்கள், கோட்டைகள் உலக அளவில் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துகின்றன. இந்தியாவின் வட பகுதியாகட்டும், தென் பகுதியாகட்டும், மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியாகட்டும், பல நூற்றாண்டுகளை கடந்த, பழமையான வரலாற்றைக் கூறும் அரண்மனைகள், கோட்டைகளால் நம் நாடு இன்னமும் தனது முதிர்ச்சியை இழக்காமல் உள்ளது. இந்த வகையில் சென்னைக்கு அருகே, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள அழகிய சந்திரகிரி கோட்டை மற்றும் இங்குள்ள கண்ணைக் கவரும் அரண்மனைகள் அந்த காலத்து ராஜாக்களின் வாழ்க்கையையும், மக்களின் பாரம்பரியத்தையும் உயிர்ப்புடன் கூறும் வகையில் உள்ளது. வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களைப் பார்க்கும் ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் வார இறுதி நாட்களில் இங்கு வந்து பார்த்து மகிழலாம்.

சந்திரகிரிக்கு சுற்றுலா செல்ல உகந்த காலம்:

சந்திரகிரிக்கு சுற்றுலா செல்ல உகந்த காலம்:


சந்திரகிரி கோட்டையின் உள் மற்றும் வெளிப்புறப்பகுதிகளையும், இங்குள்ள அரண்மனைப் பகுதிகளையும் ஆற, அமர ரசித்துச் சுற்றிப்பார்க்க ஏற்ற பருவகாலங்கள் அக்டோபர் மாதம் முதல், நவம்பர் வரையிலும், அதன் பிறகு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலும் எனக் கூறப்படுகிறது. கோடைக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதை தவிர்க்கும்படியும் கூறப்படுகிறது.

PC- Bhaskaranaidu

சந்திரகிரிக்கு எப்படி செல்வது?

சந்திரகிரிக்கு எப்படி செல்வது?

விமானப் பயணிகளுக்கு

நீங்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்திருந்தால், அங்கிருந்து வாடகை கார் மூலம் நேராக சந்திரகிரி செல்லலாம். விமான நிலையத்திலிருந்து, சந்திரகிரிக்கு 160 கி.மீ. தூரம் ஆகும்.

ரயில் மூலம்: சென்னையிருந்து சந்திரகிரி செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. என்றாலும், திருப்பதி வரை ரயில் மூலம் சென்று, அங்கிருந்து வாடகைக் கார் பிடித்து அருகே உள்ள சந்திரகிரி செல்லாம்.

சாலை வழிப் பயணம்:

சென்னையிலிருந்து, 145 கி.மீ தூரமுள்ள சந்திரகிரிக்கு சாலை வழியே செல்வது சுலபமானதாகும். பேருந்து மூலமோ அல்லது வாடகை கார் மூலமோ குறைந்த நேரத்தில் விரைவாகச் செல்லலாம். நீங்கள் சொந்த வாகனத்தில் செல்வதாக இருந்தால் கீழ் கண்ட வழியைக் கடைபிடிக்கலாம்.


சென்னை-புழல்- நாராயனவனம்-திருப்பதி-சந்திரகிரி

சென்னையிலிருந்து புழல், திருப்பதி வழியாக சந்திரகிரிக்கு செல்லும் இந்த வழி விரைவான வழியாகும். மேலும் இவ்வழியாக செல்லும் போது கோவில்கள், பழமையான ஊர்கள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றைக் கண்டு களித்துக்கொண்டே செல்லலாம்.

1) புழல் ஏரி :

1) புழல் ஏரி :

சென்னையிலிருந்து சந்திரகிரி செல்லும்போது முதலில் காண வேண்டிய இடம் செங்குன்றத்திலுள்ள மிகப்பெரிய புழல் ஏரியாகும். 1876 ம் ஆண்டு பிரிட்டிஷார் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி மிகப்பெரிய மழைநீர் சேமிப்புப் பகுதியாகும். சென்னை மாநகருக்கும், அருகே உள்ள பல்வேறு நகரப்பகுதிகளுக்கும் குடி நீர் வழங்கும் இப்பிரம்மாண்ட ஏரியும், இப்பகுதியின் அமைதியான சூழ்நிலையும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதாக உள்ளது. இதை ரெட் ஹில்ஸ் ஏரி எனவும் கூறுவர். நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

PC- Puzhal2015

 2) கைலாசகொனா நீர் வீழ்ச்சி:

2) கைலாசகொனா நீர் வீழ்ச்சி:

புழலுக்கு அடுத்து நீங்கள் காணும் முக்கிய இடமான, அழகான இந்த நீர் வீழ்ச்சியில் நீங்கள் ஏன் குளிக்கக் கூடாது? இந்த வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள், கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியை கண்டு கழிக்காமல், குளிக்காமல் செல்ல மாட்டார்கள். மலையிலிருந்து தண்ணீர் கொட்டும் அழகும், மலை அடிவாரத்திலிருக்கும் கோவிலிலிருந்து காற்றில் மிதந்து வரும் ஆலய மணியோசையும் சுற்றுலாப்பயணிகளுக்கு இனிய விருந்தாகும். இக்கோவிலில் சிவனும், பார்வதியும் வீற்றிருக்கின்றனர். கைலாசத்தின் தலைவன் எனக்கருதப்படும் சிவன் கடவுள் பெயரில் இந்த அருவிக்கு கைலாசகோனா என்று பெயராகும்.

PC- Satyam555

 3) திருமலை – திருப்பதி:

3) திருமலை – திருப்பதி:

திருப்பதிமலையிலுள்ள திருமலைக் கோவிலை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. திருப்பதி என்றாலே உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ வெங்கடாஜலபதிக் கடவுளும் , பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதமும்தான் ஞாபகம் வரும். மற்றக் கோவில்களை கண்டு தரிசிப்பதற்கும்,, நீங்கள் திருப்பதி கோவிலை கண்டு தரிசிப்பதற்கும் வித்தியாசத்தை உணர்ந்தீர்களா? ஒவ்வொரு யாத்ரீகரும் நகரத்தின் ஆன்மீக அழகையும், திருமலையின் இயற்கை அழகையும் வித்தியாசமாக உணர்வதைக் காணலாம். இதனால்தான் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

4) சந்திரகிரி:

நீங்கள் சந்திரகிரியில் இருக்கின்றீர்கள் என்றால் உங்களைச் சுற்றி நீங்கள் காணவேண்டிய இடங்கள் பல உள்ளன. ராணி மகாலில் இருந்து ம்யூசியம் மற்றும் கோட்டையிலிருந்து கார்டன்கள் வரை காண வேண்டிய பல இடங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சந்திரகிரியில் கீழ்கண்ட இடங்கள் முக்கியமானவை:

PC - Nikhilb239

 1) ராஜ்மஹால்:

1) ராஜ்மஹால்:

இந்த கலையம்சம் வாய்ந்த கட்டிடம் இந்தோ - சாராசினிக் கட்டிட கலையின் வடிவமைப்பாக திகழ்கிறது. சந்திரகிரி கோட்டைக்குள் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் முக்கியமான இந்த கட்டிடம் தற்போது அரும்பொருள் காட்சியகமாக (muesium) உள்ளது. வரலாற்றில் பல சப்தங்களை ஏற்படுத்திய ராஜ் மகாலின் பல பாகங்கள் இந்த ம்யூசியத்தில் அமைதியாக உறங்கினாலும், பழமையான இந்த அரண்மனை இன்னமும் பழமையை பேசியபடி உள்ளதை காணத் தவறாதீர்கள்.

PC- Bhaskaranaidu

2) சந்திரகிரி கோட்டை:

2) சந்திரகிரி கோட்டை:

11 ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட இக்கோட்டை தற்போது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு துறையின் கீழ் இருந்தாலும், அழிவின் விளிம்பிலுள்ள கட்டிடங்களின் தாழ்வாரங்கள் இன்னும் பழைய தூண்கள் மற்றும் கேரிடார்களின் வலிமையிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ராஜா ,ராணி மகால்களைக் காணும்போது அழிவின் விளிம்பிலும் இருந்தாலும் அதன் கட்டிட கலையம்சங்களை கண்டு ரசிக்காமல் இருக்க முடியாது.

PC- SnapMeUp

 3) ராணி மஹால்:

3) ராணி மஹால்:

ராணி மஹால் சந்திரகிரி கோட்டையின் மகாராணிகள் வசித்த பகுதியாகும். இது சந்திரகிரி மலையின் உச்சியிலும், ராஜ் மகாலின் ஒரு பகுதியாகவும் உள்ளது. அழகிய கலையம்சங்களுடன் கூடிய இக்கட்டிடம் இந்தோ - சராசனிக் கட்டிட முறையில் கட்டப்பட்டதாகும். வரலாற்றுப் பிரியர்கள் அவற்றை பார்த்து ரசிப்பதோடு, அரண்மனையின் அருகே உள்ள நிழல் தரும் மரங்கள் அடங்கிய தோட்டத்தில் ஜில்லென்ற தென்றல் காற்றை அனுபவிக்கலாம். ஓய்வெடுத்தபடியே சந்திர கிரி கோட்டையின் பழம் பெருமைகளை அசை போடலாம்.

PC- rajaraman sundaram

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்