» »சென்னை 2 காஞ்சிபுரம் - ஆன்மீகம் பயணம் மேற்கொள்ள சிறந்த வழித்தடம்

சென்னை 2 காஞ்சிபுரம் - ஆன்மீகம் பயணம் மேற்கொள்ள சிறந்த வழித்தடம்

Posted By: Gowtham Dhavamani

இந்தியா எல்லா வகையிலும் வரலாற்றில் சிறந்து விளங்குகின்றது. ஒரு இடத்தைப் பற்றி யோசித்தால், அதன் கடந்த கால தடயங்கள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆயிரமாயிரம் பழமையான இடங்களிலிருந்து பழங்கால கலைகள் வரை, இந்தியாவின் புகழ்பெற்ற காலங்கள் அதன் மூலத்திலிருந்து வெளிவரும்.

காஞ்சிபுரம் இந்தியாவின் வரலாற்று நகரங்களில் ஒன்றாகும். வேகவதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கோவில், கடந்தகாலத்தின் முக்கியத்துவத்தை கற்பிக்கும் இடமாகவும், மதம் சார்ந்த மையமாகவும் இருந்துள்ளது. பழமையான கோயில்கள் மற்றும் கலைநயம் வாயிந்த கட்டிடங்கள் இதனை வெளிப்படுத்துகின்றன. இன்று, காஞ்சிபுரம் அதன் இந்து கோயில்களுக்கும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கும் மிகவும் புகழ்பெற்று விழங்குகின்றது. இந்தியாவின் ஏழு யாத்ரீக ஸ்தலங்களில் ஒன்றாகவும் கருதப்பட்ட இந்த ஆன்மீக நகரம், இந்து பக்தர்கள் ஆன்மீகத்தில் மூழ்கவும், கடவுளை நெருங்கவும், தேர்வு செய்யும் இடமாக விளங்குகிறது.

வரலாற்றை நேசிப்பவர்கள் மத்தியில் காஞ்சிபுரம் புகழ்பெற்றதாகும். வரலாற்று சிறப்பு மிக்க பல இடங்கள் இங்கு உள்ளன. பண்டைய நாட்களை பற்றி படிப்பது மட்டுமல்லாது பார்க்கவும் விரும்பினால், இது சரியான தேர்வாக இருக்கும். பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர சாம்ராஜ்ஜியம் மற்றும் வெள்ளையர்களால் சுதந்திரம் அடைவதற்கு முன், அடைந்த பின் என காஞ்சிபுரமும் செழுமையான காலங்களில் இருந்து இருண்ட காலம் வரை அனைத்தையும் கண்டது.

இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த கோயில்களை கொண்ட நகரத்திற்கு செல்ல விருப்பமா? ஆம் என்றால், மேலும் இந்நகரத்தை பற்றி மற்றும் காஞ்சிபுரம் பற்றி அனைத்தையும் அறியவும், கீழ்வரும் விவரங்களை படிக்கவும்.

 காஞ்சிபுரம் செல்ல சரியான நேரம்:

காஞ்சிபுரம் செல்ல சரியான நேரம்:

ஆண்டு முழுவதும் சூடான மற்றும் ஈரப்பதமான சூழல் இருந்தாலும், பக்தர்களும், வரலாற்று ஆர்வலர்களும் , லட்சக்கணக்ககில் தங்கள் ஆன்மிக தாகத்தை தணிக்க, இந்த கோயில்களின் பழமைவாய்ந்த பிரகாரங்கரங்களில் சுற்றுகின்றனர்.

காஞ்சிபுரத்தை ஆன்மீ பொருட்டு நீங்கள் பார்வையிட விரும்பினால், அக்டோபர் மாதத்தில் இருந்து மே மாதம் இறுதிவரை செல்வது உகந்த நேரம் ஆகும். அப்போது பொங்கல், தேர் விழா, மகா சிவராத்திரி போன்ற பெரிய திருவிழாக்களின் கொண்டாட்டங்களையும் நீங்கள் அனுபவிக்க முடியும். நவம்பர் முதல் மார்ச் வரை சிறந்த பருவ காலம் ஆகும்.

prof_richard

காஞ்சிபுரம் செல்வது எவ்வாறு:

காஞ்சிபுரம் செல்வது எவ்வாறு:

சென்னையிலிருந்து 72 கி.மீ தூரத்தில் காஞ்சிபுரத்தை , சாலை வழியாக எளிதில் சென்றடையலாம். சென்னை அல்லது பிற முக்கிய நகரங்களிலிருந்தும் அல்லது சென்னையிலிருந்து ஒரு வாடகை வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் வந்தடையலாம்.

விமானம் வழி:

சென்னைக்கு நீங்கள் விமானம் மூலம் வருவதானால் காஞ்சிபுரத்துக்கு விமான நிலையத்திலிருந்து வாடகைக்கு வண்டி எடுத்துக்கொள்ளலாம். சென்னை விமான நிலையம் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரயில் பயணம்:

சென்னை மற்றும் காஞ்சிபுரம் இடையே பல நேரடி ரயில்கள் இல்லை. இருப்பினும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை ரயிலில் வந்தடைந்து காஞ்சிபுரத்துக்கு ஒரு டாக்க்ஷியை பேசிக்கொண்டு வந்தடையலாம். நீங்கள் காஞ்சிபுரத்துக்கு நேரடியாக உள்ளூர் ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம்.

இருப்பினும், சென்னையிலிருந்து காஞ்சிபுரத்தை அடைய சிறந்த மற்றும் மிகவும் வசதியான வழி, சாலை வழியாக செல்வதே. உங்கள் சொந்த காரை எடுத்துக் கொண்டோ அல்லது ஒரு வாடகை வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டோ வந்தால், மலைகள், சிறிய ஏரிகள், எழில்மிகு சூழல்கள் முதலியவை வழியில் கண்டுகழிக்க முடியும்.

வழி 1: சென்னை - ஸ்ரீபெரம்பதூர் - நீர்வலூர் - காஞ்சிபுரம்

வழி 2: சென்னை - இராமாபுரம் - ஸ்ரீபெரம்பதூர் - காஞ்சிபுரம்

வழி 2 காட்டிலும் குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்வதால் வழி 1 சிறந்தது.

காஞ்சிபுரம் செல்லும் வழியில், நீங்கள் பின்வரும் இடங்களில் நிறுத்தி உங்கள் பயணத்தை சிறந்த பயணம் ஆக அனுபவிக்க முடியும்.

செம்பரம்பாக்கம் ஏரி:

செம்பரம்பாக்கம் ஏரி:

இது அடையார் ஆற்றின் ஆரம்பநிலை, இந்த அழகிய ஏரி தண்ணீர் தேக்கமாக செயல்பட்டு, தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு நீர் வழங்கி வருகிறது. நீங்கள் இங்கே ஒரு இடைவெளி எடுத்து உங்கள் ஆன்மா மற்றும் மனதை அமைதிப்படுத்தும் காற்றை அனுபவிக்க முடியும். இந்த ஏரி அருகே ஒரு பழங்கால சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு உங்கள் ஆன்மீக பயணத்தை தொடரலாம்.

PC- GnanaskandanK

ஸ்ரீபெரம்பதூர் ஏரி:

ஸ்ரீபெரம்பதூர் ஏரி:


ஸ்ரீபெரும்புதூர் ஏரி, காஞ்சிபுரத்துக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள மற்றொரு ஏரி. இந்த ஏரியின் இயற்கையான அழகு பார்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும். ஒரு சிறிய நீர்வீழ்ச்சியும் இந்த ஏரி அருகே அமைந்துள்ளது, அங்கு நீங்கள் ஒரு சிலமணி நேரம் ஓய்வெடுக்க முடியும் மற்றும் அமைதியான சூழலை அனுபவிக்க முடியும்.

நீங்கள் இறுதியாக காஞ்சிபுரத்தில் தங்கி, வரலாற்று நகரத்தின் அழகை ரசிக்க முடியும்.

நீங்கள் காஞ்சிபுரத்தை அடைந்துவிட்டால், ஆன்மீகத்தின் சாராம்சத்தையும், பக்தியையும் நீங்கள் உணரலாம். அமைதி நிறைந்த இடத்தில் இருப்பதன் மூலம் சுவர்க்கத்தில் இருந்தது போல நீங்கள் உணர, உங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.

PC- Destination8infinity

காமாட்சி அம்மன் கோயில்:

காமாட்சி அம்மன் கோயில்:

பல்லவ மன்னர்களால் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் சக்திவாய்ந்த தெய்வமான பார்வதி தேவியின் அவதாரமான காமாட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதன் மையத்தில் ஒரு குளம் அமைந்துள்ளது. மறக்கமுடியாத கட்டிடக்கலை மற்றும் கோயில்களில் செதுக்கப்பட்ட நம்பமுடியாத வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகள் காமாட்சி அம்மன் கோவிலின் சிறப்பு அம்சங்களாகும்

PC- Bikash Das

ஏகாம்பரநாதர் கோவில்:

ஏகாம்பரநாதர் கோவில்:


ஏகாம்பரநாதர் ஆலயம் 20 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. மிகப்பெரிய சைவ சன்னதி என்பதும், சுவர் ஓவியங்களும், இதன் சிறப்பம்சம் ஆகும். பல்லவர்களால் கட்டப்பட்டு சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட, இந்த அழகான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில் ஆண்டு முழுவதும் ஒரு முக்கிய ஸ்தலமாக திகழ்கிறது.

PC- Richard Mortel

கைலாசநாதர் கோவில்:

கைலாசநாதர் கோவில்:


58 சிறிய சைவ தெய்வங்களையும், 18 சிவலிங்கமும் கொண்ட இந்த கோயில், நகரத்தின் கலாச்சார மைய்யமாகவும் மாறியுள்ளது. கைலாசநாதர் கோயில் நகரத்தில் உள்ள பழமையான கோவில் ஆகும். கலை மற்றும் சுவர் ஓவியங்களுக்கும் இந்த இடம் புகழ் பெற்றது. காஞ்சிபுரத்தின் வரலாறு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த கோவிலை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். இந்த கோயிலுக்குள் நுழைந்ததும், இந்து இதிகாசத்தின் புராணக்கதைகளை பார்த்து அறிய முடியும்.

PC- Nithi Anand

காஞ்சிக் குடில்:

காஞ்சிக் குடில்:


இந்த பழம்பெரும் சிறிய வீடு, இந்து பண்டிகைகள், கலாச்சாரம் மற்றும் காலம் காலமாக மாறிய வழக்கங்கள் போன்ற குறிப்புகளைக் கொண்டது. இந்து மதத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள விரும்பினால், காஞ்சிக் குடுல் உங்கள் இலக்காகும். வரலாறு மற்றும் பாரம்பரியம் மூலம் ஆச்சரியப்படுவதற்கு வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்.

காஞ்சிபுரம் கோயில்களின் நிலமாகும். அனைத்து கோயில்களையும் ஒரே நாளில் சென்று பார்ப்பது கடினம். நீங்கள் வரதராஜ கோயில், தேவராஜசுவாமி கோயில் மற்றும் வைகுண்ட பெருமாள் கோயிலை பார்த்து ,தூபக் குச்சிகள், மலர்கள், மணிகள் ,என ஆன்மீக உணர்வு ததும்ப காஞ்சிபுரத்தை சுற்றிப்பார்க்கலாம்.

PC- tshrinivasan

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்