Search
  • Follow NativePlanet
Share
» »மூணாறில் உறைபனி - சென்னை to மூணாறு காரில் செல்ல இது தான் சரியான நேரம்!

மூணாறில் உறைபனி - சென்னை to மூணாறு காரில் செல்ல இது தான் சரியான நேரம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூணாறு தேனிலவு செல்வோர் மத்தியில் பிரபலமான ஹாட்ஸ்பாட் ஆக இருக்கிறது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், கவர்ச்சியான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் மூடுபனி மலைகளுடன் கூடிய வளைந்த நிலப்பரப்புகளுடன் காணக்கூடிய அற்புத காட்சிகளை வழங்குகிறது.

மூணாறு மற்றும் சுற்றுப்புறங்களில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருவதால், வானிலை வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியாக மாறியுள்ளது. இதனால் சுற்றுவட்டாரங்களில் வானிலையானது பூஜ்ஜியம் டிகிரியை தொட்டுள்ளது. அழகிய மூணாறை மேலும் அழகுப்படுத்தும் வானிலையால் நாடெங்கிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் மூணாறை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். மூணாறில் பார்க்க வேண்டிய இடங்கள், சென்னையிலிருந்து மூணாறுக்கு காரில் எப்படி செல்வது, வழியில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இங்கே காண்போம்!

மூணாறில் பூஜ்ஜியமாக குறைந்த வெப்பநிலை

மூணாறில் பூஜ்ஜியமாக குறைந்த வெப்பநிலை

ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்தே, மூணாறு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வெப்பநிலை குறையத் தொடங்கியது. செந்துவாரா, கன்னிமலை, , லெட்ச்மி, ஏழுமலை, சைலன்ட்வேலி போன்ற பல இடங்களில் -1°C ஆகக் குறைந்தது. மலை நகரம் அடர்ந்த மூடுபனி போர்வைகளால் சூழப்பட்டுள்ளது. உண்மையில், உள்ளூர் மக்கள் அதிகாலையில் உறைபனியை காணுவதாக கூறுகின்றனர். தட்பவெப்பநிலையில் உள்ள அமைதியான சூழல் குளிர் காலத்தில் புதிய இடங்களை ஆராய்வதற்கான ஒரு புள்ளியாக அமைகிறது.

மூணாறு செல்ல இதுவே சரியான நேரம்

மூணாறு செல்ல இதுவே சரியான நேரம்

பச்சை நிறத்தின் ஒவ்வொரு நிழலிலும் விளையாடும் மலைகளைக் கடந்து பயணிப்பதை கற்பனை செய்து பாருங்கள். நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் பார்வையைப் பிடித்து மரங்கள் நிறைந்த பகுதிகள் வழியாக செல்லும் சாலைகளில் மெதுவாக வாகனம் ஓட்டுவதை கற்பனை செய்து பாருங்கள். நினைக்கவே எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது அல்லவா. அதுவும் குளிர்காலம் அதன் உச்சபட்சத்தில் அழகிய மலைபிரதேசத்தை மிகவும் அழகாக்கியுள்ளது. தாவரங்கள், மலைகளின் மீது போர்த்தியிருக்கும் பனிப்போர்வையைக் காண இதுவே சரியான நேரம் மக்களளே, இப்பொழுதே கிளம்புங்கள்!

சென்னை to மூணாறு கார் பயணம்

சென்னை to மூணாறு கார் பயணம்

சென்னையிலிருந்து மூணாறுக்கு காரில் எளிதில் செல்லலாம். உங்களுக்கு டிரைவிங் செய்வது பிடிக்கும், அல்லது நண்பர்களுடன் காரில் செல்வது நன்றாக இருக்கும், அல்லது புதிதாக திருமணம் ஆனவர்கள் எங்களுக்கு தனிமை வேண்டுமென்று நினைத்தால் சுலபமாக மூணாறு ட்ரிப் பிளான் பண்ணலாம். ஒரு நீண்ட வார இறுதியை தேர்ந்தெடுப்பது நல்லது, 11 முதல் 12 மணிநேரங்களுக்குள் எளிதாகக் கடந்து செல்ல முடியும். சென்னை முதல் மூணாறு வரையிலான தூரம் 596 கிமீ ஆகும். ஆனால், போகும் வழியில் உள்ள சுற்றுலாத் தலங்கள், மூணாறில் உள்ள சுற்றுலாத் தலங்கள், திரும்பி வருவது என அனைத்து செயல்பாடுகளுக்கும் 3 இல் இருந்து 4 நாட்கள் தாரளாமாக போதும்.

எந்த வழியில் செல்லலாம்

எந்த வழியில் செல்லலாம்

சென்னையில் இருந்து மூணாறுக்கு செல்ல மூன்று பிரபலமான வழிகள் உள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கிளம்பும் இடம் மற்றும் உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் தேர்வு செய்யலாம்o பாதை 1 (583 கிமீ) - சென்னை - விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி - தேனி - போடி காட் - மூணாறு

o பாதை 2 (596 கிமீ) - சென்னை - விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் - உடுமலை - மூணாறு

o பாதை 3 (189 கிமீ) - சென்னை - குமிளி - கட்டப்பனா - இடுக்கி அணை - மூணாறு

இயற்கை அழகு நிறைந்த வழிகள்

இயற்கை அழகு நிறைந்த வழிகள்

இந்த வழித்தடங்கள் அனைத்தும் அற்புதமான இயற்கை அழகை வழங்குவதோடு, சுற்றிலும் அபரிமிதமான இயற்கை அதிசயங்களால் நிரம்பியுள்ளன. மலைகள், பள்ளத்தாக்கு காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் வயல் மற்றும் மரங்களால் வரிசையாக பசுமையான பகுதிகள் உள்ளன. காரில் செல்லும் போதே நீங்கள் இவையெல்லாம் ரசித்துக் கொண்டே செல்லலாம் பயணிகளே.

மூணாறில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்

மூணாறில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்

o இரவிகுளம் தேசிய பூங்கா

o மூணாறு தேயிலை மியூசியம்

o பொத்தமேடு வியூபாயின்ட்

o மாட்டுப்பட்டி அணை

o அடுக்கல் நீர்வீழ்ச்சி

o நியாயமகாட்

o தேவிகுளம்

o சீயபாரா நீர்வீழ்ச்சி

o டாப் ஸ்டேஷன்

o குந்தளா ஏரி

o ஆனைமுடி சிகரம்

o பிளாசம் பார்க்

o CSI தேவாலயம்

பனி மூடிய மூணாறு முன்னெப்போதையும் விட மிகவும் அழகாக இருக்கிறது. சீசனுக்காக அனைத்து ஹோட்டல்களும் கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஆகவே இப்பொழுதே ரூம் புக் செய்துவிட்டு கிளம்புங்கள்!

Read more about: munnar kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X