Search
  • Follow NativePlanet
Share
» »நாட்டிலேயே ராயல் பெங்கால் புலி இருக்கும் ஒரே பூங்கா இதுதானாம்!

நாட்டிலேயே ராயல் பெங்கால் புலி இருக்கும் ஒரே பூங்கா இதுதானாம்!

ராயல் வங்காள புலியை எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக காண வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள இந்த வனவிலங்கு பூங்காவிற்குத் தான் செல்ல வேண்டும்.

நம் இந்திய நாட்டில் ஒருசில குறிப்பிடத்தக்க காட்டுப் பகுதிகளில் புலிகள் காணப்பட்டாலும் வங்காளத்துப் புலி என்னும் ராயல் பெங்கால் புலிகளைக் காண்பது அறிது. புலியினத்தில் குறைந்த எண்ணிக்கை கொண்ட இந்தப் புலிகள் இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேப்பாளம், மியன்மார் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே காண முடியும். இவற்றை எளிதில், எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக காண வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள இந்த வனவிலங்கு பூங்காவிற்குத் தான் செல்ல வேண்டும். எங்கே என்று பார்க்கலாமா ?

சாத்பீர் வனவிலங்கு பூங்கா

சாத்பீர் வனவிலங்கு பூங்கா

சாத்பீர் வனவிலங்கு பூங்கா

சாத்பீர் வனவிலங்கு பூங்காவானது சண்டிகர் நகரத்தில் அமைந்துள்ள பிரசித்தமான உள்ளூர் சிற்றுலாத் தலமாகவும், வெளிமாநிலத்தில் இருந்து பயணிப்போருக்கு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இதற்குக் காரணம், மேற்கூரியதைப் போல இங்குள்ள ராயல் பெங்கால் புலி தான்.

Pallavibarman10

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சண்டிகர் நகரில் இருந்து ஜாப்னீஸ் கார்டன் வழியாக - ஜிராக்பூர் - பாடியாலா சாலையில் சுமார் 22 கிலோ மீட்டர் பயணித்தால் இந்த சாத்பீர் வனவிலங்கு பூங்காவை அடையலாம். சண்டிகர் சர்வதேச விமான நிலையம் இப்பூங்காவில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. அங்கிருந்து உள்ளூர் வாடகைக் கார்கள் பூங்காவிற்கு செல்ல அதிகளவில் உள்ளது.

Wikiexplorer13

சாத்பீர் வனவிலங்கு பூங்கா

சாத்பீர் வனவிலங்கு பூங்கா

சாத்பீர் வனவிலங்கு பூங்கா ஆரம்ப காலத்தில் வனவிலங்கு காட்சியகமாக செயல்பட்டது. உள்ளூர் மக்களால் மஹேந்திர சௌதரி ஜுவாலஜிகல் பார்க் என்ற பிரபலமாக அழைக்கப்படும் இது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ளது. வட இந்தியாவில் உள்ள வனவிலங்கு பூங்காக்களில் மிகப் பெரியது என்ற பெருமையும் இதற்கு உள்ளது.

chhatbirzoo

ராயல் பெங்கால் புலி

ராயல் பெங்கால் புலி

ராயல் பெங்கால் புலி

பல நூற்றுக்கணக்கான உயிரினங்கள் உள்ள இந்த சாத்பீர் பூங்காவிற்கே முக்கிய அம்சம் இங்குள்ள ராயல் பெங்கால் புலி ஆகும். இந்த வளாகத்தின் உள்ளே லயன் சஃபாரி, டிரைவ்-இன் டீர் சஃபாரி, ஷாலோ லேக் போன்றவை இதர முக்கியமான அம்சங்களாக உள்ளன.

SusuMa

இயற்கைச் சூழல்

இயற்கைச் சூழல்

இயற்கைச் சூழல்

பூங்கா முழுவதும் உள்ள உயர்ந்த பசுமை மரங்கள், பாதுகாக்கப்படும் மூலிகைத் தாவரங்கள் உள்ளிட்டவை உள்ளூர் மக்களால் விரும்பப்பட்டு பயணிக்கக் கூடிய சிற்றுலாத் தலமாக உள்ளது. பூங்காவின் உள்ளேயே நிலவும் இயற்கையான காட்டுச் சூழலில் வன விலங்குகளை பார்ப்பது போன்ற அனுபவம் வெளிநாட்டுப் பயணிகளையும் சாத்பீரை நோக்கி ஈர்க்கிறது.

chhatbirzoo

சுக்னா காட்டுயிர் சரணாலயம்

சுக்னா காட்டுயிர் சரணாலயம்

சாத்பீரைப் போலவே சண்டிகரில் உள்ள மற்றொரு பிரசித்தமான சுற்றுலாத் தலம் சுக்னா காட்டுயிர் சரணாலயம். சுக்னா ஏரிக்கரையின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்த சுக்னா காட்டுயிர் சரணாலயம் 2600 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்குள்ள பலவகையான பாலூட்டி விலங்குகள், பூச்சியினங்கள் மற்றும் ஊர்வன வகைகள் விலங்கியல் ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்றது.

Harvinder Chandigarh

சாம்பார் மான்கள்

சாம்பார் மான்கள்

நாட்டிலேயே அதிகப்படியான சாம்பார் மான்கள் உள்ள ஒரே இடம் சுக்னா சரணாலயம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான காலத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் பறவைகளும் இங்கே பயணம் செய்வது வழக்கம்.

Shashidhara halady

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X