» »ஆக்ராவில் தாஜ்மஹால் தவிர இன்னும் வேற ஒரு சிறப்பு இருக்கு! அது என்ன தெரியுமா?

ஆக்ராவில் தாஜ்மஹால் தவிர இன்னும் வேற ஒரு சிறப்பு இருக்கு! அது என்ன தெரியுமா?

Written By: Bala Karthik

இது அற்புதமான கட்டிடக்கலையாக அமைய, வரலாற்று கடந்த சுவாரஸ்யத்தை தர, புகைப்படம் எடுப்பதற்கான இடப்பட்டியலும் இங்கே நீள, இந்த சினி கா ரௌஷா எனப்படும் நினைவிடத்தை நாம் பார்க்க வேண்டியது அவசியமாக! ஆக்ராவை நிகரற்ற இலக்காக கருத, இந்தியாவின் வரலாற்றின் பெருமையையும் கொண்டு இவ்விடம் விளங்குகிறது. பல நினைவு சின்னங்கள் காணப்பட, அவற்றுள் நகரத்தில் மட்டும் பிரசித்திப்பெற்று காணாமல், இந்தோ பெர்சிய கட்டிடக்கலைக்கொண்டு புகழுடன் விளங்குகிறது சினி கா ரௌஷா.

1635ஆம் ஆண்டில் இது கட்டப்பட, இந்த நினைவிடமானது அல்லாமா அப்ஷால் கான் முல்லாஹ் என்பவரது கல்லறையாக விளங்க, இவர் தான் அறிஞர் மற்றும் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முகலாய பேரரசரான ஷாஜ கானின் பிரதமராக விளங்கவும் செய்தார். யமுனை நதிக்கரையில் இவ்விடம் அமைந்திருக்க, பளப்பளப்பான பளிங்கு கற்களைக்கொண்டு கட்டப்பட்ட இந்தியாவின் முதல் அமைப்பு இதுவெனவும் தெரியவர, இதனை புகழ்மிக்க காஷி அல்லது சினி என முகலாய காலத்தில் அழைக்கவும்பட்டது.

இந்த பழுப்பு நிற, சதுரங்க அமைப்பானது அழகிய ஓவியத்தையும், கல்வெட்டுகளையும் கொண்டிருக்க குரானிலிருந்து அவை எடுக்கப்பட்டவை எனவும் தெரிய வருகிறது. இதன் அழகானது படிப்படியாக உயர, இந்த தனித்துவமிக்க கல்லறை பெர்சியன் பாணியில் கட்டப்பட்டிருக்க சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு துடிப்பான வண்ணத்தையும் கொண்டு தரைத்தட்டுகள் காணப்படுகிறது.

பார்க்க வேண்டிய நேரம்:

பார்க்க வேண்டிய நேரம்:

எந்நாளிலும் நாம் காண ஏதுவாக சினி கா ரௌஷா அமைய, இங்கே பார்ப்பதன் மூலம் நம் கருவிழிகளானது திறமைமிக்க கைவினைஞர்களின் திறனையும் உணர்கிறது. இவ்விடத்தை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நம்மால் பார்க்க முடியக்கூடும். இந்த அற்புதமான நினைவு சின்னத்தை நீங்கள் பார்க்க ஏற்கனவே திட்டமிடவில்லை என்றால், உள்ளூர் அல்லது தேசிய விடுமுறையில் உங்கள் திட்டத்தை நீங்கள் தீட்டிக்கொள்ளலாம் திடமாக.

PC: Varun Shiv Kapur

 இவ்விடத்தை காண சிறந்த நேரங்கள்:

இவ்விடத்தை காண சிறந்த நேரங்கள்:

குளிர்க்காலத்தின் பகல் பயணமாக இதனை நாம் திட்டம் தீட்டுவதன் மூலம் பயணம் சிறப்பாக அமைய, அதிர்ச்சியூட்டும் அற்புதத்தையும் ஆச்சரியம் நீங்கா மனதுடன் கண்டிடலாம். நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் ஆக்ராவை நாம் காண ஏதுவாக அமைந்திடுகிறது. சகித்துக்கொள்ள முடியாத கோடைக்காலமதில், இங்கே வருவதற்கு யாரும் பரிந்துரை செய்வது கிடையாது


எப்படி இவ்விடத்தை நாம் அடைவது?

ஆகாய மார்க்கமாக நாம் அடைவது எப்படி?

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், புது தில்லி, ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம் மற்றும் கான்பூர் விமான நிலையமென ஆக்ராவிலிருந்து அருகாமையில் பல விமான நிலையங்கள் அமைந்திருக்கிறது. நீங்கள் தனியார் கார் அல்லது பேருந்துவை முன்பதிவு செய்வதன் மூலமாக ஆக்ராவை விமான நிலையத்திலிருந்து அடைந்திடலாம்.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

ஆக்ராவை நாம் அடைய, இங்கே காணப்படும் மூன்று முக்கிய இரயில் நிலையத்தில் ஏதாவது ஒன்றில் நிற்கவிருப்பதை கண்டிட: ஆக்ரா கண்டோன்மெண்ட், ஆக்ரா கோட்டை மற்றும் ராஜா கி மாண்டி அவை என்பது குறிப்பிடத்தக்கது.


சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

தேசிய நெடுஞ்சாலையுடன் இணைந்து சிறந்த முறையில் காணப்படுகிறது ஆக்ரா. தேசிய நெடுஞ்சாலை 2, தேசிய நெடுஞ்சாலை 11, மற்றும் தேசிய நெடுஞ்சாலை 3 ஆக்ரா முதல் தில்லி, ஜெய்ப்பூர், மும்பை, மதுரா, என நகரத்தின் பல பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது. நீங்கள் செல்லும் வழியில் ஆக்ரா, பத்தேஹ்பூர் சிக்ரி, மற்றும் பரத்பூர் பறவைகள் சரணாலயம் தவிர்க்காமல் பார்க்க வேண்டியதாக அமைகிறது.

PC: Braja Sorensen

 ஆக்ராவில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:

ஆக்ராவில் நாம் காண வேண்டிய மற்ற இடங்கள்:

ஆக்ரா மற்றும் தாஜ் மஹால் ஒன்றுக்கு ஒன்று ஒத்த அர்த்தத்துடன் விளங்குகிறது. இங்கே காணப்படும் காதலின் நினைவு சின்னத்தை காணாமல் நாம் ஆக்ராவை விட்டு நகர்ந்துவிடக்கூடாது என்பதை மனதில் முனுமுனுத்துக் கொளிகிறோம். இந்த சிறு பகுதியில் வரலாற்று விரும்பிகள் எண்ணற்ற ஆராய்ச்சியை ஆச்சரியம் பொங்க செய்திட, இந்த நகரமானது தள்ளியும் அமைந்திருக்கிறது. ஜாமா மஸ்ஜித், பாஞ்ச் மஹால், ஆக்ரா கோட்டை, மற்றும் அக்பர் கல்லறை என வாய் பிளக்கும் வியப்பை நம் உடலுடன் சேர்த்து மனதிலும் பலவிடம் தர, இந்திய கலாச்சாரத்துடன் இணைந்த முகலாய இனத்தையும் இங்கே நம்மால் பார்த்திட முடிகிறது. ஆலயங்கள் மற்றும் குருத்வராக்கள் இங்கே விலைமதிப்பில்லா காட்சியை நம் கருவிழிகளுக்கு தந்து மனதை பரவசத்தின் எல்லையில் திளைக்கவும் வைக்கிறது.

PC: Harshit Singhal