Search
  • Follow NativePlanet
Share
» »மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் வாழ்ந்த புராண கடற்கரை இது!

மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் வாழ்ந்த புராண கடற்கரை இது!

மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் வாழ்ந்த புராண கடற்கரை இது!

மேற்கு தொடர்ச்சி மலைகள் கிழக்கில் அமைந்திருக்க, பிரம்மாண்டமான அரபிக் கடல் மேற்கில் சூழ்ந்திருக்க அவற்றின் மத்தியிலே அழகே உருவாய்

PC: Pranav011

காட்சியளித்துக் கொண்டிருக்கிறது சிப்லுன் நகரம். இந்த நகரம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் இருப்பதால் பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக சிப்லுன் அருகேதான் வாகனங்களை நிறுத்தி விட்டு சற்றுநேரம் இளைப்பாறுவார்கள். இதன் காரணமாக இந்த நகரம் மெல்ல மெல்ல ஒரு சுற்றுலா மையமாக மாறிவிட்டது. வாருங்கள் நாமும் இந்த சுற்றுலாவை ரசித்துவிட்டு வரலாம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

படகு சவாரி


சிப்லுன், வஷிஷ்டி நதியின் கரையோரத்தில் அமைந்திருப்பதால், படகு சவாரி போன்றவை இங்கு பிரபலம். அதனால் சிப்லுன் நகரம், பயணிகள் மத்தியில் இன்று ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

அருமருந்து

பெருநகரங்களில் வாழும் மக்கள் தங்களின் அலுத்துப் போன இயந்திர வாழ்க்கைக்கு மிகச் சிறந்த நிவாரமானாக சிப்லுன் நகரை கருதுகிறார்கள். இந்நகரத்தின் உணவு வகைகளும், கர்நேஷ்வர் ஆலயம் போன்ற ஸ்தலங்களும் அவர்களுக்கு அருமருந்தாகவே இருந்து வருகிறது.

பரசுராமர் வசித்த இடம்

மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர், சிப்லுன் நகரத்தில்தான் வசித்ததாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே இந்நகரம் 'பரசுராமரின் இல்லம்' எனும் பொருளில் சிப்லுன் என்று மராட்டிய மொழியில் அழைக்கப்படுகிறது. இ

கோவால்கோட் கோட்டை


இந்த நகரம் சிறப்புமிக்க கோயில்கள் சிலவற்றுக்கு உறைவிடமாக திகழ்ந்து வருகிறது. மேலும் சிப்லுனில் 1670-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோவால்கோட் கோட்டை பயணிகளிடையே மிகப் பிரபலம்.

சரித்திரப் புகழ்

சிப்லுன் நகரின் சரித்திரப் புகழுக்கு சாட்சியாக நிற்பது கோவால்கோட் கோட்டையே ஆகும். இந்தக் கோட்டை 1670-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 2 ஏக்ரா நிலப்பரப்பை மட்டுமே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். மேலும் இந்தக் கோட்டையை அடைவதும் மிக எளிதான காரியமே.

வார விடுமுறை சுற்றுலா


அதோடு சிப்லுனுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு சில பெருநகரங்களில் வாழும் மக்கள் தங்கள் வார விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க சிப்லுன் நகரையே தேடி வருகிறார்கள்.

More News

    Read more about: travel beach
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+