Search
  • Follow NativePlanet
Share
» »கோயம்புத்தூர் - எப்போதும் சீசன்தான்!!!

கோயம்புத்தூர் - எப்போதும் சீசன்தான்!!!

கோயம்புத்தூர் - எப்போதும் சீசன்தான்!!!

By Super Admin

எட்டுத்திக்கும் கொங்குதமிழின் இனிய சங்கீதம் ஒலிக்க, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலமலையின் அரவணைப்பில், ஆண்டின் எந்தப் பருவத்திலும் இனிமையான பருவ நிலையைக் கொண்டிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம் பயணிகளுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத் தலமாகும்.

அதுமட்டுமல்லாமல் கடவுளின் சொந்த தேசமென்று புகழப்படும் கேரள மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ளது.

இங்குள்ள பெரும்பாலான சுற்றுலாத் தலங்களை, அவை ஆன்மீக ஸ்தலங்களாகட்டும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாகட்டும் நீங்கள் வருடத்தின் எந்தப் பருவத்திலும் சுற்றிப் பார்க்கலாம்.

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

கோயம்புத்தூரின் சுற்றுலாத் தலங்கள்

மருதமலை கோயில்

மருதமலை கோயில்

மருதமலையை தெரியாவதர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே சொல்லலாம். இந்த கோயில் முன்பு கொங்கு வேட்டுவ கவுண்டர்களின் தனிச் சொத்தாக இருந்தது. இது முருகனின் அறுபடைவீடு ஆலயங்களுக்கு பிறகு அடுத்த முக்கியத்துவத்தை பெறுகிறது. எனவே முருக பக்தர்கள் மருதமலை கோயிலை முருகனின் 7-வது படைவீடு என்று நம்புகின்றனர். 1200 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் மருதமலை கோயில் கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதோடு சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது.

கோவை குற்றாலம்

கோவை குற்றாலம்

உலகின் 2-வது சுவையான நீராக கருதப்படும் சிறுவாணி ஆற்றுநீர் அருவியாக கொட்டும் இடம்தான் கோவை குற்றாலம். இதன் பெயருக்கு ஏற்றார் போலவே கோவையின் குற்றாலமாக திகழ்ந்து வரும் இந்த அருவி கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும். மேலும் கோயம்புத்தூரின் மற்ற பகுதிகளிலிருந்து இங்கு வர குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே உள்ளன. அதுமட்டுமல்லாமல் 5 மணிக்கு மேல் இங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

படம் : Ramana

தியானலிங்க ஆலயம்

தியானலிங்க ஆலயம்

1994-ல் சத்குரு அவர்களால் நிறுவப்பட்ட தியானலிங்க ஆலயம் கோயம்புத்தூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் வெள்ளியங்கிரியில் அமைந்திருக்கிறது. அதன் பிறகு 1996-ஆம் ஆண்டுதான் கம்பீரமான சிவலிங்கம் ஒன்று கோயிலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தக் கோயிலில் நிலவும் சலனமற்ற அமைதியான சூழலின் காரணமாக தியானம் செய்ய அதிக அளவில் மக்கள் வருகின்றனர். அதோடு இங்கு மத வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் வந்து தியானம் செய்யலாம்.

நந்தி

நந்தி

தியானலிங்க ஆலயத்திலுள்ள நந்தி.

படம் : Natesh Ramasamy

புரூக்பீல்ட்ஸ் மால்

புரூக்பீல்ட்ஸ் மால்

கோயம்புத்தூர் மாநகரில் இளைஞகர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் இடங்களில் ஒன்று புரூக்பீல்ட்ஸ் மால். 2009-ல் புரூக்பாண்ட் சாலையில் திறக்கப்பட்ட இந்த வணிக வளாகம் நகரிலேயே அதிகம் பேர் வந்து செல்லும் வளாகமாக அறியப்படுகிறது. இங்கு 6 திரைகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஒன்றும், உள்ளூர் மற்றும் காண்டினெண்டல் உணவு வகைகளை பரிமாறும் உணவகம் ஒன்றும் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பெரியவர் ஒருசேர விளையாடும் விளையாட்டு மண்டலம் ஒன்றும் இந்த வளாகத்தில் உள்ளது.

படம் : Faheem9333

பிளாக் தண்டர் தீம் பார்க்

பிளாக் தண்டர் தீம் பார்க்

கோயம்புத்தூரிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் அமைந்திருக்கிறது பிளாக் தண்டர் தீம் பார்க். இது கோயம்புத்தூரிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவிலும், ஊட்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் அமையப்பெற்றுள்ளது. 65 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த தீம் பார்க் 50-க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுகளை கொண்டுள்ளது. இந்த பூங்கா நீலகிரி மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளதால் நீலகிரி மற்றும் அதன் தேயிலை தோட்டங்களை பார்த்து ரசிப்பதோடு, புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம். இங்கு 40 தங்கும் அறைகளை கொண்ட நீயூ பிளாக் தண்டர் ரிசார்ட் அமைந்திருப்பதால் இயற்கை சூழலில் ஓரிரு நாட்கள் தங்கி குதூகலமாக பொழுதை கழிக்கலாம். இதன் அருகில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையமும், 41 கிலோமீட்டரில் கோயம்புத்தூர் விமான மற்றும் ரயில் நிலையமும் உள்ளன. அதோடு கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து அங்கிருந்து ஒரு டேக்சி வைத்துகொண்டு சுலபமாக 15 நிமிடங்களுக்குள் பிளாக் தண்டரை அடைந்து விட முடியும். மேலும் இந்த பூங்காவிற்குள் செல்வதற்கு நுழைவுக் கட்டணம் பத்து வயதுக்கு மேலான பெரியவர்களுக்கு ரூ. 450, பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ. 400-ம் வசூலிக்கப்படுகிறது.

பட்டீஸ்வரர் ஆலயம், பேரூர்

பட்டீஸ்வரர் ஆலயம், பேரூர்

கோயம்புத்தூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் பேரூர் எனுமிடத்தில் பட்டீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. கோயம்புத்தூரிலேயே மிக முக்கியமான கோயிலாக கருதப்படும் இது கொங்கு வேட்டுவ கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பாளையக்கார மன்னர்களால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது.

சிங்காநல்லூர் ஏரி

சிங்காநல்லூர் ஏரி

சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இந்த ஏரிக்கு அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரையிலான காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் வந்து செல்கின்றன. எனவே நீங்கள் கோயம்புத்தூர் வரும்போது சிங்காநல்லூர் ஏரியை தவறவிட்டுவிடாதீர்கள்.

படம் : K. Mohan Raj

ஆழியார் அணை

ஆழியார் அணை

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவில் ஆழியார் அணை அமைந்துள்ளது. இந்த அணை 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துடன் 1959 மற்றும் 1969-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டத்தாகும். இங்கு எண்ணற்ற திரைப்படங்கள் படமாகப்பட்டுள்ளன. அவற்றில் முத்துராமன், ரவிச்சந்திரன் நடித்த காதலிக்க நேரமில்லை படம் மிகவும் பிரபலம்.

படம் : Siva301in

மங்கீ ஃபால்ஸ்

மங்கீ ஃபால்ஸ்

மங்கீ ஃபால்ஸ் ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் குழந்தைகளோடு பொழுதை கழிக்க ஏற்ற இடமான மங்கீ ஃபால்ஸ் செல்வதற்கு நுழைவுக்கட்டணமாக வெறும் 15 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

கரி தானுந்து விரைவுச்சாலை

கரி தானுந்து விரைவுச்சாலை

கரி மோட்டார் ஸ்பீட்வே என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கரி தானுந்து விரைவுச்சாலை, கோயம்புத்தூரின் புறநகர் பகுதியான செட்டிபாளையம் அருகே கார் பந்தயங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டதாகும்.

படம் : G27

அமராவதி அணை

அமராவதி அணை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமராவதி அணை அமைந்துள்ளது. இங்கு முதலைப் பண்ணை, மீன் பண்ணை, அணையின் முன்பு அமைந்துள்ள அழகிய பூங்கா, சிறுவர்களுக்கான பூங்கா ஆகியவை அமையப்பெற்றுள்ளன. அதோடு எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் அமராவதி அணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படகுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.

படம் : Dhruvaraj S

வ.உ.சி பூங்கா

வ.உ.சி பூங்கா

காந்திபுரம் அருகேயுள்ள வ.உ.சி பூங்கா.

படம் : Pratheept2000

திருமூர்த்தி அருவி

திருமூர்த்தி அருவி

திருமூர்த்தி அருவி கோயம்புத்தூருக்கு 86 கிலோமீட்டர் தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக எழுப்பப்பட்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

சுங்கம்-உக்கடம் பாலம்

சுங்கம்-உக்கடம் பாலம்

இரவு நேர விளக்கொளியில் சுங்கம்-உக்கடம் பாலம்.

படம் : Faheem9333

ஈச்சனாரி விநாயகர்

ஈச்சனாரி விநாயகர்

புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோயிலில் உள்ள பிள்ளையார் விக்ரகம்.

படம்

கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம்

கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம்

கோயம்புத்தூரின் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் இந்தியாவின் 18-வது மிகப்பெரிய விமான நிலையமாகும்.

படம் : PP Yoonus

பெருமாள் கோயில்

பெருமாள் கோயில்

கோவைப்புதூரில் உள்ள பெருமாள் கோயில்.

படம் : Balajijagadesh

கோயம்புத்தூர் ரயில் சந்திப்பு

கோயம்புத்தூர் ரயில் சந்திப்பு

கோயம்புத்தூர் செல்லும் ரயில்கள் : /coimbatore/how-to-reach-by-train/

படம் : Ragunathan

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

கோயம்புத்தூர் ஹோட்டல்கள்

படம் : Simply CVR

கோயம்புத்தூரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

கோயம்புத்தூரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Nagesh Jayaraman

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+