இன்பத் தமிழ் தவழும் கொங்கு நாட்டின் தலைநகரம், பொட்டல் நிலத்திலும் பொன் விளைவிக்கும் கடும் பாட்டாளிகளின் நகரம், இயற்கை என்னும் இனியவள் பேரழகு நிறைத்த சொர்க்கம் 'கோயம்பத்தூர்' . இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்களில் முதன்மையானதாக இருக்கும் இந்நகரம் தொழில், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா என பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுவருகிறது.
இந்த வளர்ச்சியின் விளைவுகளில் ஒன்றாக கோவைக்கு வேலை அல்லது படிப்புக்காக வருபவர்களில் பெரும்பாலனவர்கள் திரும்பி போக மனமில்லாமல் கோவையிலேயே நிரந்தரமாக தங்கிவிடுவது வாடிக்கையான ஒன்றாகும். என்னதான் வளர்ந்து விட்டாலும் இன்றும் தன் சுயத்தை இழக்காமல் தனக்குரிய அடையாளத்தை பெருமையுடன் தாங்கி நிற்கும் கோவை நகரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பெயர்க் காரணம் :
இந்நகரில் இருக்கும் முக்கிய கோயில்களில் ஒன்றாக கோனியம்மன் கோயில் இருப்பதினால் முதலில் இது கோனியமுத்தூர் என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அதுவே மருவி கோயம்பத்தூர் என்றானதாக சொல்லப்படுகிறது. தவிர முன்னொரு காலத்தில் கோவன் என்ற அரசன் இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்ததாகவும் பின்னர் அப்போது கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் கோயம்பத்தூர் என மருவியதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
Photo: Flickr

செல்லப்பெயர் என்ன தெரியுமா ? :
கோயம்பத்தூர் நகருக்கு ' தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என்ற செல்லப்பெயரும் உண்டு தெரியுமா?. இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் என்ற நகரில் தான் அதிக அளவிலான பருத்தி உற்பத்தியும், பருத்தி ஆலைகளும் இருக்கின்றன. அதேபோல கோவை நகரிலும் நூற்றுக்கணக்கான பருத்தி ஆலைகள் இருந்ததினால் ஆங்கிலேயர்கள் காலத்தில் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
Photo: Flickr

சிறுவாணி தண்ணீர் :
கோயம்பத்தூருக்கு முதல் முறை வரும் எவரும் பிரமிக்கும் விஷயங்களில் ஒன்று சிறுவாணி நீர் ஆகும். இதுவரை இப்படியொரு சுவையான நீரை நாம் பருகியிருக்கவே முடியாது. ஆம், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பாதி கோயம்பத்தூரின் தாகம் தீர்க்கும் இந்த சிறுவாணி நீர் தான் உலகிலேயே இரண்டாவது சுவையான நீர் ஆகும். கோயம்பத்தூருக்கு வருபவர்கள் இந்த நீரை சுவைபார்க்க மறந்துவிடாதீர்கள்.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் :
தென்னாடுடைய சிவபெருமான் கொங்குநாட்டில் கம்பீரமாய் வீற்றிருக்கும் இடம் கோயம்பத்தூரில் உள்ள பேரூர் ஆகும். இங்கே பட்டீஸ்வரர் உமையாள் பச்சைநாயகியுடன் ஸ்வயம்பு லிங்கமாய் வீற்றிருக்கிறார்.
சைவம் வளர்த்து தொண்டாற்றியதில் கொங்கு நாட்டுக்கும் பெரும் பங்கிருக்கிறது. அவ்வகையில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பே சிறிய கோயிலாய் இருந்த பட்டீஸ்வரர் கோயில் எண்ணற்ற சிவ பக்தர்களின் ஆஸ்தான கோயிலாக விளங்கியிருக்கிறது.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழன் கல்லால் ஆன சிறிய கருவறை ஒன்றை அமைத்து அதனுள் பட்டீஸ்வரர் லிங்கத்தை பிரதிர்ஷ்டை செய்திருக்கிறார். பின்னர் 16ஆம் நூற்றாண்டு காலத்தில் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர அரசர்கள் மற்றும் பாளையக்காரர்கள் இக்கோயிலை விரிவுபடுத்தி தற்போதிருக்கும் தோற்றத்தை அளித்திருக்கின்றனர்.

மருதமலை :
மருதமலையை தெரியாவதர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே சொல்லலாம். இந்த கோயில் முன்பு கொங்கு வேட்டுவ கவுண்டர்களின் தனிச் சொத்தாக இருந்தது. இது முருகனின் அறுபடைவீடு ஆலயங்களுக்கு பிறகு அடுத்த முக்கியத்துவத்தை பெறுகிறது. எனவே முருக பக்தர்கள் மருதமலை கோயிலை முருகனின் 7-வது படைவீடு என்று நம்புகின்றனர். 1200 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் மருதமலை கோயில் கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதோடு சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது.

தியான லிங்கம்
சத்குரு ஜக்கி வாசுதேவ் என்னும் ஆன்மீக குருவினால் முன்னெடுக்கப்பட்டு இந்த தியான லிங்க மையம் கோவை மாநகரில் ஒருந்து 30 கி.மீ தொலைவில் வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்தில் இது அமையப்பெற்றிருக்கிறது.

தியான லிங்கம்
தியான லிங்கம் தவிர இந்த மையத்தில் தீர்த்த குண்டம் என்ற இடம் உள்ளது. இங்கு சிறிய குளம் போன்ற பகுதி உள்ளது. அதனுள் நீருக்கடியில் பாத ரசத்தினால் ஆன மூன்று லிங்கங்கள் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனுள் பக்தர்கள் இறங்கி நீந்தி சென்று லிங்கத்தை தொட்டு வழிபாடு செய்யலாம்.

தியான லிங்கம்
இந்த மையத்தின் முக்கிய நிகழ்வாக மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அந்நாளின் போது சத்குரு ஜக்கி வாசுதேவின் சத் சங்கம், இசை நிகழ்ச்சிகள், தியான லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிவராத்திரி கொண்டாட்டங்கள் அடுத்த நாள் காலை வரை தொடர்கின்றன.

கல்லூரி நகரம் :
கோவைக்கு இப்போது சென்னையை விடவும் அதிக மாணவர்கள் படிப்பதற்காக வருகின்றனர். கோவைக்கு இப்போது சென்னையை விடவும் அதிக மாணவர்கள் படிப்பதற்காக வருகின்றனர். பி.எஸ்.ஜி, ஜி.ஆர். டி, அம்ரிதா பல்கலைக்கழகம், என இந்தியாவின் முதன்மையான பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் கோவில் இருக்கின்றன.

கோவை :
கோவையில் இருக்கும் சிறுமுகை என்ற ஊரில் காஞ்சீபுரம் நகருக்கு இணையாக பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

கோவை :
கோவையில் செட்டிபாளையம் என்ற இடத்தில் பார்முலா 2 ரேஸ் பந்தையங்கள் நடக்கும் பந்தைய சாலை ஒன்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது

கோவை :
கோயம்பத்தூர் நகரை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களை தமிழின் முதன்மை பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்துகொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications




