Search
  • Follow NativePlanet
Share
» »தனியாக பயணம் செய்யும் போது நீங்கள் எதிர்கொள்ளும் மோசடிகள் – அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி?

தனியாக பயணம் செய்யும் போது நீங்கள் எதிர்கொள்ளும் மோசடிகள் – அவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி?

இந்தியா ஒரு விருந்தோம்பல் மிகுந்த பாதுகாப்பான நாடாக அறியப்பட்டாலும், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் மோசடிகளால் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் பயணிகள் அவர்களது உடமைகள், பணம் உள்ளிட்டவற்றை இழக்க நேரிடுகிறது. அதனால் தான் நீங்கள் இந்தியாவில் எதிர்கொள்ளக்கூடிய பொதுவான பயண மோசடிகள் மற்றும் அவற்றில் சிக்கிகொள்ளாமல் சுற்றுலாவை சுமூகமாக முடிப்பது என்று இங்கே தெளிவாக கொடுத்து இருக்கிறோம்!

ரயில் மற்றும் பேருந்துகளில் மோசடி

சில பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் TTR மற்றும் டிக்கெட் பரிசோதகர் போன்று உடையணிந்து உங்களிடம் டிக்கெட்டுகளை கேட்டு, சோதிப்பது போல பேசி, உங்கள் டிக்கெட் செல்லுபடி ஆகாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் டிக்கெட் எடுத்து வந்த பிறகு வேறு எதற்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளவும். உங்களிடம் பணம் பறிப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருந்தால் உடனே அருகில் இருக்கும் காவல் அதிகாரியிடம் சென்று விடுங்கள்.

hotelswitct

ரயில் மற்றும் பேருந்துகளில் மோசடி

சில பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் TTR மற்றும் டிக்கெட் பரிசோதகர் போன்று உடையணிந்து உங்களிடம் டிக்கெட்டுகளை கேட்டு, சோதிப்பது போல பேசி, உங்கள் டிக்கெட் செல்லுபடி ஆகாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் டிக்கெட் எடுத்து வந்த பிறகு வேறு எதற்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளவும். உங்களிடம் பணம் பறிப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருந்தால் உடனே அருகில் இருக்கும் காவல் அதிகாரியிடம் சென்று விடுங்கள்.

fakeporters

ஹோட்டலை மாற்றி சொல்ல மோசடி

இந்தியாவில் மிகவும் பொதுவான சுற்றுலா மோசடிகளில் ஒன்று ஹோட்டல் மாறுதல் ஆகும். நீங்கள் விரும்பும் ஒரு ஹோட்டலுக்குச் செல்லும் வழியில், அது அவ்வளவு சிறப்பான இடம் இல்லை என்றும், மேலும் சிறந்த மற்றும் மலிவான எங்களுக்கு தெரியும் என சிலர் கூறி உங்களை அழைத்துச் செல்ல முயற்சி செய்வார்கள் சில சமயங்களில், நீங்கள் தேர்ந்தெடுத்த இடம் மூடப்பட்டுவிட்டதாகச் சொல்வார்கள். சலசலப்பை உருவாக்காமல் இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற சிறந்த வழி, நீங்கள் ஏற்கனவே முன்பணம் செலுத்திவிட்டீர்கள் என்று அவர்களிடம் கூறுவது தான்.

faketouristoffice

போலி போர்ட்டர்கள்

விமான நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் பொதுவாக அரங்கேறும் மோசடி இதுவாகும். பொதுவாக போர்ட்டர்கள் சிவப்பு சட்டை அல்லது அதிகாரப்பூர்வமாக தோற்றமளிக்கும் சட்டை அணிந்திருப்பார்கள், அவர்களிடம் உங்களது பைகளை தூக்க செல்லுங்கள். போலி போர்டர்களால் உங்களது விலையுயர்ந்த உடமைகள் கூட பறி போக கூடிய சூழலில் நீங்கள் தள்ளப்பட்டு விடுவீர்கள். ஆகவே சீருடை இல்லாத நபர்களிடம் உங்களது லக்கேஜ்களை கொடுத்து ஏமாறாதீர்கள்.

touristguide

போலி சுற்றுலா அலுவலகம்

இது பொதுவாக வட இந்தியாவில் நடைபெறக்கூடிய ஒரு மோசடி நடவடிக்கையாகும். நீங்கள் வட இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் போது, அருகிலுள்ள இடங்களுக்கு பேக்கேஜ் தருகிறோம் என்று சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பறிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு இடத்தில் முன்பதிவு செய்வதற்கு முன்னர், அந்த அலுவலகம் உண்மையானது தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது பிரபல டூர் ஆபரேட்டர்களை அணுகவும்.

inflatedtaxifare

சுற்றுலா வழிகாட்டி தேவையில்லை

இந்த நவீன உலகில் எல்லாமே தொலைபேசியில் அடங்கி விட்டது. ஒரு இடத்திற்கு செல்லவும், வழியை தெரிந்துக் கொள்ளவும், பேருந்து அல்லது டாக்ஸி புக் பண்ணவும் என எல்லா வசதிகளும் கைக்குள் அடங்கிவிட்டது. ஆகையால் கைடு என்ற பெயரில் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம். வரலாற்று சுற்றுலாத் தலங்கள், ட்ரெக்கிங், அபாயகரமான சுற்றுலாத் தலங்கள் என்று வரும் போது கைடு புக் பண்ணி கொள்ளுங்கள்.

உயர்த்தப்பட்ட டாக்ஸி கட்டணம்

இது இந்தியாவில் நடக்கும் சில பொதுவான சுற்றுலா மோசடிகளின் பட்டியலிலும் இடம் பெறுகிறது. இங்கே, நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று டிரைவர் கேட்பார், பின்னர் கட்டணமாக ஒரு தன்னிச்சையான எண்ணைக் குறிப்பிடுவார். திரும்பும் வழியில் வாடிக்கையாளரைப் பெறுவது சிரமமாக உள்ளது என்பதே மீட்டரைப் பொருத்தாததற்குக் காரணம் என்று கூறி அதிக கட்டணம் கொடுக்க செல்வார்கள். டாக்ஸியில் ஏறும் முன்னரே, கட்டணம் என்னவென்று தெளிவாகப் பேசிக் கொண்டு ஏறுங்கள்.

பொருட்களை திணிக்கும் கடைகளை கண்டுக்கொள்ளாதீர்கள்

இது இந்தியாவில் மிகவும் எரிச்சலூட்டும் சுற்றுலா மோசடிகளில் ஒன்றாகும். இந்த சுற்றுலாத் தலத்தில் இது மிகவும் பேமஸ், கண்டிப்பாக வாங்கியே ஆக வேண்டும் என்று அதிக விலையில் பொருட்களை வாங்கச் சொல்லி திணிப்பார்கள். உங்களுக்கு அந்தப் பொருள் பிடித்தே இருந்தாலும் கூட, இரண்டு மூன்று கடைகளில் விசாரித்தப் பின்னர் பொருளை நியாயமான விலையில் வாங்குங்கள்.

எல்லா இடங்களுக்கும் செல்லலாம், ஆனால் எங்கு சென்றாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

More News

    Read more about: travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+