Search
  • Follow NativePlanet
Share
» »குன்னூரில் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் இவை!

குன்னூரில் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் இவை!

By Balakarthik Balasubramanian

குன்னூரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? என்ன ஊட்டிக்கு அடுத்து காணப்படும் குன்னூரை பற்றி உங்களுக்கு தெரியாதா? அப்படி என்றால் இந்த கீழ்க்காணும் பத்திகளை நீங்கள் படிப்பதன் மூலம் இந்த குன்னூருக்கு செல்ல ஆசைப்படுவீர்கள் என்பதனை நான் உறுதியாக கூறுவேன்...என்ன ரெடியா...

நீலகிரியின் மேற்கு தொடர்ச்சியில் காணப்படும் மலைகள் பலவற்றுள் இரண்டாவது பெரிய மலை என்ற அந்தஸ்துடன் மிகவும் பிரசித்திபெற்று விளங்குகிறது, இந்த குன்னூர் மலைப்பகுதி. இந்த இடம், சுமார் 1930 மீட்டர் உயரத்தில் அமைந்து காட்சிகளை கண்களுக்கு தந்து எதிர்ப்பார்ப்பை மனதில் சுமத்தி ஏமாற்றம் கொள்ளாமல் இனிமையான பொழுதுபோக்கு இடமாக அமைந்து நம் மனதை வருடுகிறது. மேலும் இந்த குன்னூர், ஊட்டிக்கு அருகில் அமைந்து நம்மை காட்சிகளால் குளிரூட்டவும் செய்கிறது.

குன்னூரில் காணவேண்டிய இடங்கள்

குன்னூரில் காணவேண்டிய இடங்கள்

குன்னூர் அழகிய காட்சிகளுடன் முன்னனி வகிக்கும் ஒரு இடமாகவும், காட்சிகளால் மனதினை கொள்ளை கொள்ளும் ஒரு இடமாகவும்... ஊட்டிக்கு அருகாமையில் அமைந்து...நம் மனதை அதிசயங்களால் நிரம்ப செய்கிறது. ஆம், இங்கே நாம் காணும் கேத்ரின் நீர்வீழ்ச்சியின் அழகில் தொலையும் நம் மனம்...மீண்டும் நம்முடன் வர அடம்பிடித்து நீரிலேயே தங்குகிறது என்று தான் கூற வேண்டும். அதுமட்டுமல்லாமல்...டால்பின் நோஸ், லா நீர்வீழ்ச்சி, குயெர்ன்சி தேயிலை தொழிற்சாலை என செல்லும் இடமெல்லாம் மனதினை துள்ள வைக்கும் காட்சிகள் அமைந்து இதமானதோர் உணர்வினை எந்த ஒரு எதிர்ப்பார்ப்புமின்றி நமக்கு வழங்குகிறது.

Shijan Kaakkara

 குன்னூரை நாம் காண ஏதுவான மாதங்கள் யாவை?

குன்னூரை நாம் காண ஏதுவான மாதங்கள் யாவை?

வருடம் முழுவதும் நம்மால் இந்த குன்னூரை காண முடிகின்ற போதிலும்...பெரும்பாலானோரால் அதிகம் தேர்ந்தெடுக்கப்படும் மாதமாக, அக்டோபரிலிருந்து மே இடைப்பட்ட காலம் வரையிலான மாதங்கள் இருக்கின்றன.

Janjri

குன்னூரை நாம் அடைவது எப்படி?

குன்னூரை நாம் அடைவது எப்படி?


ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

குன்னூரிலிருந்து தோராயமாக 70 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கோயம்புத்தூர் விமான நிலையம் தான் மிக அருகில் காணப்படும் ஒரு விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்திலிருந்து இந்தியா முழுவதும் பல இடங்களுக்கும் எந்த ஒரு தங்கு தடையுமின்றி விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

குன்னூரிலிருந்து மிக அருகில் இருக்கும் ஒரு இரயில் நிலையம் எதுவென்றால்...அது மேட்டுப்பாளையமே ஆகும். ஆம், குன்னூரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த இரயில் நிலையம்...நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை இணைத்து நம் பயணத்தின் சிரமத்தினை அறவே அகற்றுகிறது. இதற்கு அப்பாற்பட்ட ஒன்றாக...நீலகிரி மலை இரயில் பாதைகள் அமைந்திருக்க, அந்த தண்டவாளத்தில் பொம்மை இரயில்கள் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வருகிறது. அத்துடன் உலக பாரம்பரிய தளமும் இங்கு தான் உள்ளது என்கின்றனர்.

சாலை மார்க்கமாக நாம் செல்வது எப்படி?

எவ்வளவு வழிகள் நமக்கு இருந்தாலும்...குன்னூர் செல்வதற்கு சாலசிறந்த தோர் வழியாக சாலை வழியையே பலரும் நமக்கு ஆலோசிக்கின்றனர். இந்த சாலைகளின் இணைப்பு வழியே நாம் செல்ல...செல்லும் வழியில் காணும் அழகிய ஹேர்பின் வளைவுகள் மற்றும் முதுமலை புலிகள் சரணாலயத்தில் நம் மனதை தொலைத்து சரணாகதி அடைகிறோம் என்றே சொல்ல வேண்டும். இங்கிருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், பெங்களூரு, என பல இடங்களுக்கு பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு நம் இடையூறுகளை தவிர்க்கிறது.

Naveen K S

 டால்பின் நோஸ்:

டால்பின் நோஸ்:

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய பாறைதான் இந்த டால்பின் நோஸாகும். இங்கிருந்து நாம் நோக்க...நம் கண்களுக்கு புலப்படும் ஊசி போன்ற வளைவு திருப்பங்களும், நாசியை வருடும் குறுகிய சாலைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தி மனதில் ஆச்சரியத்தை தேக்குகிறது. இந்த இடத்தை அடையும் நாம்...இங்கிருந்து தாடையை போன்று பிரியும் இரு பக்கங்களை கண்டு அதில் மனதினை தொலைக்க... கேத்ரின் நீர்வீழ்ச்சியும் அதன் பங்கிற்கு மனதினை கொள்ளைகொண்டு அழகிய நீரால் இதயத்தை வருடுகிறது.

Thangaraj Kumaravel

 லாம்ப் பாறை:

லாம்ப் பாறை:


இந்த பகுதிக்கு இப்பெயர் தோன்ற என்ன காரணம்? என நாம் யோசிக்க... நான் தான் என்கிறார் ஆட்சியர் கேப்டன் லாம்ப். ஆம், இந்த அழகிய இடத்தின் பார்வை அவர் மனதினை நெருட...அதனால் ஆர்வம் கொண்டு அப்பகுதியை அவர் வளர்ச்சிமிக்க ஒன்றாக மாற்றினார் எனவும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இந்த பாறை சில நூறு அடிகள் கீழ் நோக்கி செல்ல...அடர்ந்த காடு ஒன்று நம் கருவிழிகளுக்கு தென்பட மறுத்து அடம்பிடிக்கிறது. இந்த இடத்திலிருந்து நின்று நாம் பார்க்க...கோயம்புத்தூர் நிலவெளிகளும் அதன் சுற்றுபுறங்களில் காணும் பள்ளத்தாக்குகளும் அழகிய காட்சியை எந்த ஒரு கர்வமுமின்றி நம் கண்களுக்கு தந்து மனதை இதமானதோர் உணர்வினால் இன்புற செய்கிறது.

Thangaraj Kumaravel

 சிம் பூங்கா:

சிம் பூங்கா:

இந்த பூங்கா...இங்கே காணப்படும் ஒரு அசாதாரண சூழ்நிலைகளால் கவர்ந்த அழகிய தாவரவியல் பூங்காவாகும். இது 100 ஆண்டுகளுக்கும் முன்னர் நிலத்தின் இயற்கை வளங்களை சுற்றி உருவாக்கப்பட்டது என்றும் இதனை திரு. ஜெ.டி.சிம்ஸ் என்பவரும் மேஜர் முர்ரே என்பவரும் 1874 ஆம் ஆண்டு நிறுவியதாக வரலாற்றின் பார்வையில் பக்கங்கள் நமக்கு தெள்ள தெளிவாய் தெரிகிறது.

இங்கே காணப்படும் மரங்களும், புதர்செடிகளும், கொடிகளும் இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து காட்சிகளை நமக்கு தர...இதனை கடந்த பல அசாதாரண மரங்களும் இங்கு நிறையவே காணப்படுகிறது. இந்த மரங்கள்...உலகிலேயே காண இயலாத அரிதான மரங்களாகவும் அமைந்து நம் மனதை ஆச்சரியம் கொள்ள செய்கிறது. மேலும் ஆண்டு தோரும் காய்த்து தொங்கும் பழங்களும், காய்கறிகளும் என மே மாதக் காலங்களில் இந்த பூங்கா வண்ணமயமான காட்சிகளை கண்களுக்கு சமர்ப்பித்து மனதினை ஏக்கமுற செய்கிறது.

Thangaraj Kumaravel

லா நீர்வீழ்ச்சி:

லா நீர்வீழ்ச்சி:


குன்னூர் தொடர்ச்சி சாலையை உருவாக்கிய...கல்.லா என்பவரால் இந்த நீர்வீழ்ச்சி இப்பெயர் பெற்றதாக வரலாற்றின் ஏடுகள் திரும்பி... நம்மை தெளிவுபடுத்துகிறது. குன்னூர் நதியால் உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி, மேட்டுபாளைய இரயில் நிலையத்தின் சந்திப்பிற்கு அருகில் காணப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி சிறியதாக இருந்தாலும்...இங்கு வந்து செல்லும் கடல் அலைபோன்ற சுற்றுலா பயணிகளின் வருகையால்..."நான் அழகானவள்..." என கர்வமாக இந்த இடத்தில் அமைந்து காட்சியளிக்கிறது இந்த நீர்வீழ்ச்சி. குறிப்பாக பருவமழைக்காலம் முடிந்த பிறகு வந்து செல்வோரின் எண்ணிக்கை தான் இங்கே மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 180 அடியாக இருக்க... கீழே விழும் முன் பல தடவை பிரிந்து இறுதியாகவே ஆறாக ஒன்று சேர்ந்து ஆரவாரம் செய்கிறது. இந்த பகுதி மலை நிலவெளி பரப்புகளாக காணப்பட...இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரும், அதன் சுற்றுபுறங்களும்... சாகசத்தை கண்டு வியந்து நிற்போருக்கு பெரியதொர் விருந்தினை இயற்கையின் மூலமாக படைக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் நமக்கு வேண்டாம்.

Himanshu Vyas

மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு

மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு

மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு பயணப் பிரியர்களின் வரைபடத்திலேயே காணப் படாத ஒரு இடமாகும். இங்கு வர நீங்கள் பசுமையான காடுகளிடையே மலைப்பயணம் செய்ய வேண்டும். இந்தப் பள்ளதாக்குக்கு செல்லும் மலைப்பயணமே சாகசங்கள் நிறைந்ததாக செல்பவர்களை வாய்பிளக்கச் செய்கிறது. குன்னூரின் மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்த பள்ளத்தாக்கு ஆண்டு முழுவதும் பயணிகளை ஈர்க்கிறது.

கட்டாரி அருவி

கட்டாரி அருவி

கட்டாரி அருவி நீலகிரியின் மூன்றாவது பெரிய அருவி என்று புகழ் பெற்றது. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் இங்கு அமைந்துள்ளது. குன்னூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் குண்டா சாலையில் 180 மீட்டர் உஅயரம் கொண்டதாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கட்டாரி நீர்வீழ்ச்சியில் விழும் நீரின் விசையில் இருந்து இந்த மின் நிலையம் 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது மற்றும் லா நீர்வீழ்ச்சி ஆகியன நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளன.

Raghavan G

குவன்சே தேயிலை தொழிற்சாலை

குவன்சே தேயிலை தொழிற்சாலை


குவன்சே தேயிலை தொழிற்சாலை நீலகிரி தேயிலை தயாரிப்பில் முதன்மை வகிக்கிறது. நீலகிரிக்குச் செல்லும் பயணம் இங்குள்ள தேநீரின் சுவையைப் பருகாமல் முழுமையடைவதில்லை. தயாரிக்கப்படும் இடத்திற்கே சென்று உலகில் எங்கும் கிடைக்காத இதன் தனித்தன்மையான சுவையை சுவைப்பதை விட சிறப்பு வேறு என்ன இருக்க முடியும்? குவன்சே தேயிலை தொழிற்சாலையில் இந்த அனுபவம் கிடைக்கிறது.

துரூக் கோட்டை

துரூக் கோட்டை


துரூக் கோட்டை ஒரு சிதிலமடைந்த கோட்டையாகும். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாதலமாக குன்னூரில் விளங்குகிறது. இங்கிருந்து சுற்றுப்புறங்களில் உள்ள இடங்கள் தெளிவாக காணக்கிடைப்பதால் இது திப்பு சுல்தானின் புறங்காவல் கோட்டையாக விளங்கியது. இதன் அமைப்பு எதிரிகளை விரட்டி அடிக்க வாகாக இருந்தது. இப்போது எஞ்சியுள்ளது ஒரு சிதிலமடைந்த சுவர் மட்டுமே. இருப்பினும் வானிலிருந்து பார்க்கையில் கோட்டையின் அமைப்பு நன்றாகக் காணக் கிடைக்கிறது.

புனித ஜார்ஜ் ஆலயம்

புனித ஜார்ஜ் ஆலயம்

புனித ஜார்ஜ் ஆலயம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. ஜே.டி .போய்லியூ அவர்களால் வடிவமைக்கப்பட்டு 1826ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆழமான காவி ஸ்டக்கோ மற்றும் வெள்ளை நிறத்தில் விலை உயர்ந்த கல் முதலியவை பதித்து அழகுபடுத்தப் பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறம் செல்ல ஒரு நடையைக் கடந்து செல்ல வேண்டும். இதன் அமைப்பு ஆங்கிலேய ஆட்சிக் காலத்திற்கு அழைத்துச் செல்கிறது . மாடத்துடன் அமைந்த கூரை, உயரமான தூண்கள் மற்றும் கம்பீரமான சிலைகளுடன் அழகாகக் காட்சியளிக்கிறது

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

குன்னூர் சுற்றுலா

குன்னூரின் அழகிய புகைப்படங்கள்

Read more about: coonoor
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X