Search
  • Follow NativePlanet
Share
» »கூர்க்! கூர்க்! கூர்க்!

கூர்க்! கூர்க்! கூர்க்!

By

இந்தியாவில் அதிகமாக காதலர்கள் வந்துபோகும் இடமாக இருந்த மூணாரை வீழ்த்தி கூர்க் நகரம் தற்போது மிகச் சிறந்த ஹனிமூன் ஸ்தலமாக அறியப்படுகிறது.

இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.

கூர்க் ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்!

கூர்கின் சுற்றுலாத்தலங்கள்

கூர்கின் சுற்றுலாத்தலங்கள்

கூர்கின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அப்பே அருவி, துபாரே, பைலாகுப்பே, நிசர்கதாமா, ராஜா சீட், தலைக்காவேரி, பாகமண்டலா, இருப்பு அருவி, வாலனூர் பிஷிங் காம்ப், தடியாண்டமோல், நால்கு நாடு அரமணே ஆகியவை அறியப்படுகின்றன.

கூர்கின் சுற்றுலாத்தலங்கள்

படம் : Lingeswaran Marimuthukum

தடியாண்டமோல்

தடியாண்டமோல்

கூர்கிலிருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தடியாண்டமோல், கர்நாடக மாநிலத்தின் 3-வது உயரமான மலைச்சிகரமாகும். தடியாண்டமோல் எனும் இந்தப் பெயர் மலையாள மொழியிலிருந்து பிறந்துள்ள ஒரு சொல்லாகும். இதற்கு பெரிய மலை என்ற அர்த்தத்தை கொள்ளலாம். கடினமான மலையேற்றத்துக்கு தயக்கம் காட்டும் பயணிகள் பாதி தூரம் வரை வாகனத்தில் பயணிக்கலாம். இருப்பினும் மீத தூரத்தை மலையேற்றம் மூலமாக கடக்க வேண்டியிருக்கும். உச்சியில் ஏறிய பின் காணக்கிடைக்கும் காட்சி எல்லா சிரமங்களையும் மறக்க வைத்து விடும் என்பது உண்மை.

மேலும்...

படம் : Prashant Ram

யானைகள் பயிற்சி முகாம், துபாரே

யானைகள் பயிற்சி முகாம், துபாரே

கூர்கிலிருந்து 24 கி.மீ தொலைவில் துபாரே பகுதியில் அமைந்துள்ள யானைகள் பயிற்சி முகாமை நீங்கள் கூர்க் வரும் போது தவற விட்டுவிடக் கூடாது. இங்கு யானைகளை கொண்டு நடத்தப்படும் முகாம்கள் பயணிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருப்பதோடு, அவர்களுக்கு இந்த விலங்குகளை பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதன் மூலம் யானைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எவ்வளவு அவசியம் என்பதை முகாம்களில் கலந்துகொள்ளும் மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். அதோடு யானைகளை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என்பதை கண்கூடாக பார்ப்பதுடன், பயணிகளே தங்கள் கைகளாலே யானைகளுக்கு உணவும் கொடுக்கலாம். அத்துடன் வனத்துறையினர் ஏற்பாடு செய்யும் யானைச் சவாரியிலும், பரிசல் பயணத்திலும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதை களிக்கலாம்.

மேலும்...

படம் :Potato Potato

பைலாகுப்பே

பைலாகுப்பே

பைலாகுப்பே என்பது இந்தியாவிலேயே தர்மஷாலாவிற்கு அடுத்தபடியாக 2-வது பெரிய திபெத்திய குடியேற்ற ஸ்தலமாகும். இது கூர்க் நகரிலிருந்து 52 கி.மீ தொலைவில் உள்ளது. பைலாகுப்பேயின் சிறப்பம்சம் இங்குள்ள தங்கக்கோயில் அல்லது ‘நம்ட்ரோலிங்' என்று அழைக்கப்படும் திபெத்திய மடாலயமாகும். இந்த திபெத்திய மடாலயத்தின் உள்ளே தங்க நிறத்தில் ஜொலிக்கும் பத்மசாம்பவா, புத்தா, அமிதாயுஸ் போன்ற சிலைகள் நுட்பமான அலங்கார வேலைப்பாடுகளுடன் பார்வையாளர்களை பிரமிப்பில் சொக்க வைக்கின்றன. அதோடு பூஜை முரசு, பூஜை சக்கரம் மற்றும் கதவுகள் யாவுமே நுட்பமான நேர்த்தியான கைவினைக்கலை வேலைப்பாடுகளை கொண்டுள்ளன.

படம் : Lingeswaran Marimuthukum

அப்பே நீர்வீழ்ச்சி

அப்பே நீர்வீழ்ச்சி

கூர்க் நகரிலிருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள அப்பே நீர்வீழ்ச்சி அடர்த்தியான காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களின் வழி செல்லும் ஒரு குறுகிய பாதையின் முடிவில் திடீரென்று தோன்றி நம்மை திடுக்கிட வைக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க வசதியாக ஒரு தொங்கு பாலம் ஒன்று அருவிக்கு திரில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு பாலத்தின் மறுபுறத்தில் அமைந்துள்ள காளி மாதா கோயிலும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.

படம் : Gopal Vijayaraghavan

நீராடும் பயணிகள்

நீராடும் பயணிகள்

அப்பே அருவியில் உற்சாகமாக நீராடும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : jeet_sen

கால் கொடுக்கும் யானை!

கால் கொடுக்கும் யானை!

துபாரேவில் உள்ள யானைகள் பயிற்சி முகாமில் பாகன் தன் மேல் ஏறி அமர உதவிசெய்யும் யானை.

படம் : Dhruvaraj S

படமெடுக்கும் புத்தத் துறவி

படமெடுக்கும் புத்தத் துறவி

பைலாகுப்பேவில் உள்ள நம்ட்ரோலிங் மடாலயத்தில் மொபைல் ஃபோனில் படமெடுக்கும் புத்தத் துறவி.

படம் : Lingeswaran Marimuthuk

கண்ணாடிப் பூச்சி

கண்ணாடிப் பூச்சி

கூர்கின் காடுகளில் காணப்படும் பூச்சி வகைகளில் இது கொஞ்சம் அரிதானது. இதன் உள்ளே உள்ள அனைத்து பாகங்களையும் நம்மால் பார்க்க முடியும்.

படம் : Vipin Baliga

ஆலயமணி

ஆலயமணி

நம்ட்ரோலிங் மடாலயத்தில் உள்ள பெரிய மணி.

படம் : Lingeswaran Marimuthuku

நிசர்கதாமா தொங்குபாலம்

நிசர்கதாமா தொங்குபாலம்

கூர்கிலிருந்து 39 கி.மீ தூரத்தில் , காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு நிசர்கதாமா. இங்கு காவேரி ஆற்றை கடந்து தீவுக்குள் செல்வதற்காக 90 மீட்டர் நீளத்துக்கு இந்த மரத் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

படம் : Lingeswaran Marimuthukum

நாகக்கோயில்

நாகக்கோயில்

பாகமண்டலா பகுதியில் காணப்படும் நாகக்கோயில்.

படம் : jeet_sen

இருப்பு அருவி

இருப்பு அருவி

கூர்கிலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இருப்பு அருவி.

படம் : Rameshng

கிரிக்கெட் விளையாடும் துறவிகள்

கிரிக்கெட் விளையாடும் துறவிகள்

பைலாகுப்பே பகுதியில் கிரிக்கெட் விளையாடி பொழுதுபோக்கும் குட்டித் துறவிகள்.

படம் : Joshua Singh

செலவாரா அருவி

செலவாரா அருவி

கூர்கிலிருந்து 37 கி.மீ தொலைவில் செலவாரா அருவி அமைந்துள்ளது.

படம் : V.v

படகுப்பயணம்

படகுப்பயணம்

துபாரே யானைகள் பயிற்சி முகாமில் ஒரு படகுப்பயணம்.

படம் : Shiraz Ritwik

புள்ளி மான்கள்

புள்ளி மான்கள்

கூர்கிலுள்ள மான் பூங்காவில் சுற்றித் திரியும் மான்கள்.

படம் : Aditya Patawari

வேண்டுதல் கற்கள்

வேண்டுதல் கற்கள்

கூர்கிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள மடிக்கேரி பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு காணப்படும் இந்தக் கற்கள் வேண்டுதல் நிறைவேற மக்களால் வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

படம் : Lingeswaran Marimuthukum

சூரிய உதயம்

சூரிய உதயம்

தடியாண்டமோல் சிகரத்தில் இருந்து சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும் அனுபவம் அற்புதமானது.

படம் : snapper san

குஷால் நகர்-மடிக்கேரி நெடுஞ்சாலை

குஷால் நகர்-மடிக்கேரி நெடுஞ்சாலை

அதிகாலை பனிமூட்டத்தில் குஷால் நகர்-மடிக்கேரி நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று செல்லும் காட்சி.

படம் : Haseeb P

தேயிலைத் தொழிலாளிகள்

தேயிலைத் தொழிலாளிகள்

கூர்கில் தேயிலைத் தோட்டங்கள் ஏராளம் உள்ளன. அதுபோன்ற தோட்டம் ஒன்றில் பணிபுரியும் தேயிலைத் தொழிலாளிகள்.

படம் : Philip Larson

தலைக்காவேரி

தலைக்காவேரி

தலைக்காவேரி இந்துக்களின் முக்கியமான புனித யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் தற்போது ஒரு குளம் (தீர்த்தவாரி) அமைந்துள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. புனிதமான இந்த காவேரி தீர்த்தவாரியில் சுப தினங்களில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது ஐதீகமாகும்.

புத்தரின் போதனைகள்

புத்தரின் போதனைகள்

பைலாகுப்பே நம்ட்ரோலிங் மடாலயத்தில் இசை வாத்தியங்களின் முன் அமர்ந்து புத்தரின் போதனைகளைப் படிக்கும் புத்தத் துறவிகள்.

படம் : Lingeswaran Marimuthukum

பாகமண்டலா

பாகமண்டலா

இந்துக்களுக்கான ஒரு புனித யாத்ரீக ஸ்தலமாக பாகமண்டலா விளங்குகிறது. காவேரி ஆறு தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன் சங்கமிக்கும் இவ்விடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது. எனவே மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது. துள சங்கிரமண திருவிழாவின்போது பக்தர்கள் தலைக்காவேரிக்கு செல்லும் முன்னர் இந்த திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுகின்றனர்.

முகப்புத் தோற்றம்

முகப்புத் தோற்றம்

பைலாகுப்பே நம்ட்ரோலிங் மடாலயத்தின் முகப்புத் தோற்றம்.

படம் : Premnath Thirumalaisamy

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

கூர்கில் உங்களின் வசதிக்கேற்ப மலிவானது முதல் சொகுசு ஹோட்டல்கள் வரை ஏராளம் உள்ளன.

கூர்க் ஹோட்டல்கள்

கூர்கை எப்படி மற்றும் எப்போது அடையலாம்?

கூர்கை எப்படி மற்றும் எப்போது அடையலாம்?

எப்படி அடைவது

எப்போது பயணிக்கலாம்

படம் : Lingeswaran Marimuthu

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X