Search
  • Follow NativePlanet
Share
» »ஓயாமல் மிரட்டும் புயல், மழை, சூறாவளி - கடலூரில் அப்படி என்னதான் இருக்கு?

ஓயாமல் மிரட்டும் புயல், மழை, சூறாவளி - கடலூரில் அப்படி என்னதான் இருக்கு?

ஓயாமல் மிரட்டும் புயல், மழை, சூறாவளி - கடலூரில் அப்படி என்னதான் இருக்கு?

எப்போது புயல் வந்தாலும், பாரபட்சமின்றி பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டம்தான். அரசும் நிவாரணம், பாதுகாப்பு என உதவிகள் செய்தாலும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள்ளாகவே மீண்டும் ஒரு புயல் அல்லது சூறாவளி மழை வந்துவிடுகிறது. சுனாமியாலும் பெருமளவில் பாதிக்கப்பட்ட இந்த கடலூரில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

கடலூர் நகரம் சைவ மற்றும் வைணவ கோவில்களுக்காக புகழ் பெற்று விளங்கும் தலமாகும். இங்குள்ள சில முக்கிய கோவில்களாக பாதாளீஸ்வரர் கோவில், திருவாகீந்திரபுரம் கோவில், மங்களபுரீஸ்வரர் கோவில், சுடர்கொழுந்தீஸ்வரர் கோவில் ஆகியவை அறியப்படுகின்றன. இங்கிருக்கும் பல்வேறு கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கும் இடங்களாக இருக்கின்றன. தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான சில்வர் பீச் கடலூருக்கு மிக அருகில் உள்ளது. இவை தவிர எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் கடலூரில் இருக்கின்றன.

கட்டிடக்கலை சிறப்பு

செயிண்ட் டேவிட் கோட்டை மற்றும் கார்டன் ஹவுஸ் ஆகிய இடங்கள் அவற்றினுடைய கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவங்களுக்காக பார்க்க வேண்டிய இடங்களாகும்.

சாகச கொண்டாட்டங்கள்

சதுப்பு நில பகுதிகளுக்காகவும், நீர் விளையாட்டுகளுக்காகவும் புகழ் பெற்று விளங்கும் பிச்சாவரம் கடலூரில் தான் உள்ளது. இது மாங்குரோவ் காடுகளின் தொடர்ச்சியாக இருக்குமிடமாகும்.

படகு பயணம்

கடலூருக்கு அருகிலிருக்கும் சில தீவுகள் பறவைப் பிரியர்களை ஈர்ப்பதில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. இங்கிருக்கும் படகு வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதி அளிப்பதாகவும், புதியதோர் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் உள்ளது.

இயற்கை வாழிடங்கள்

கடலூரில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களாக நிலக்கரி சுரங்கங்கள், கெடிலாம் கேஸில், கேப்பர் மலைகள், சிதம்பரம் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் ஆகிய இடங்கள் இருக்கின்றன.

பிச்சாவரம்

சிதம்பரம் நகரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ள இடம் புகழ் பெற்ற பிச்சாவரம் ஏரியாகும்.

உலகிலேயே பெரியது

மாங்குரோவ் காடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த ஏரி உலகிலேயே மிகப்பெரிய சதுப்பு நிலப்பகுதி ஆகும்.

எப்போது செல்லலாம்

செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலும் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன.

சில்வர் பீச்

தமிழ் நாட்டின் இரண்டாவது நீளமான கடற்கரையாக கருதப்படும் சில்வர் பீச் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.

குழந்தைகள் விரும்பும் சுற்றுலா

நகரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்கரை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.சிறார்களின மனதை கவரும் வகையில் ஒரு படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சாகசபிரியர்களே

குதிரையேற்றம் மற்றும் படகு சவாரி உட்பட பல பொழுதுபோக்குகளை தரும் இடமாக இந்த கடற்கரை விளங்குகிறது.

செயிண்ட் டேவிட் கோட்டை


கெட்டிலம் நதிக்கரையில் அமைந்துள்ள செயிண்ட் டேவிட் கோட்டையை எழிகு யேல் என்பவர் 17-ம் நூற்றாண்டில் கட்டினார். ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை மராத்தியர்களிடமிருந்து விலைக்கு வாங்கி சில வருடங்களுக்கு தங்குளுடைய தலைமையகமாக பயன்படுத்தி வந்தார்கள்.

நினைவுச் சின்னங்கள்

அழிவுகள் மற்றும் வரலாற்று சின்னங்களை தாங்கிக் கொண்டு கெட்டிலம் நதிகளில் நின்று கொண்டிருக்கும் இந்த கோட்டையை கண்டிப்பாக நீங்கள் தவறவிட்டுவிடக் கூடாது.

More News

    Read more about: travel cuddalore
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+