Search
  • Follow NativePlanet
Share
» »மும்பையில் சைக்கிள் பயணம் செல்ல ஆசையா? இதோ இந்த இடத்துக்கெல்லாம் போலாம்!!

மும்பையில் சைக்கிள் பயணம் செல்ல ஆசையா? இதோ இந்த இடத்துக்கெல்லாம் போலாம்!!

By BalaKarthik

சைக்கிள் பயணம் என்பது தளத்தை புதுப்பிக்கும், புத்துணர்ச்சிக் கொள்ள செய்யும் ஒரு விளையாட்டாக அமைய, எந்த ஒரு விளையாட்டும் இதற்கு ஈடு இணையாக ஒருபோதும் இருப்பதுமில்லை. காற்றானது உங்கள் முகத்தை தாக்க, உங்கள் உடலின் அட்ரனலின் ஆனது அதிவேகமாக சுரக்கவும் கூடும் என்பதோடு, உங்களுடைய தசைகளை வலிமைக்கொள்ளவும் செய்யும். அதுமட்டுமல்லாமல், பைக்கில் நாம் செல்லும் ஓர் பயணத்தில் கூட மனமானதும், உடலானதும் இவ்வளவு புத்துணர்ச்சியுடன் காணப்படுமா என்பது சந்தேகமே...

இந்த நகரத்தை பற்றிய கனவை நிறைவு செய்யும் வகையில், சைக்கிள் பயணத்துக்கு ஏற்றதோர் இடமாக மும்பையும் சிறந்து காணப்படுகிறது. இந்த நகரத்தில் எண்ணற்ற வழிகள் காணப்பட, அவை சில சிறந்த காட்சி இடங்களை நோக்கி நம்மை அழைத்தும் செல்கிறது; பல சாலைகள் பழமையான நகரம் வழியாக செல்ல, இவ்விடமானது காட்சிகளை மட்டும் கண்களுக்கு தராமல் உடற்பயிற்சியாகவும் அதே நேரத்தில் நமக்கு அமைகிறது. பெரும் வகையான தாவரங்களையும், விலங்குகளையும் இவ்விடமானது கொண்டிருக்க, இயற்கையோடு இணைந்தும் இவ்விடமானது காணப்படக்கூடும்.

அப்பேற்ப்பட்டு காணப்படும் சாலைகளை பற்றி நாம் பார்ப்பதோடு, பைக்கின் மீது வைக்கப்பட்ட உங்கள் கைகளை அதோடு சேர்த்து மும்பை நகரத்தில் செல்ல வேண்டிய சைக்கிள் பயணமும் மூலமாகவும் வைக்க தயாராகுங்களேன்.

யியூர் மலை:

யியூர் மலை:

தானேவில் காணப்படும் யியூர் மலை, சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் யூனியன் பிரதேசத்தில் காணப்படுகிறது. இந்த மலையை ‘மாமா பஞ்சா மலை' என்றும் அழைக்க, பெரும் அளவிலான சைக்கிள் பயணிகளை இவ்விடமானது ஈர்ப்பதோடு, மலை உச்சிப்பயணத்துக்கு பெடல் போட்டு வரவும் நம்மை தூண்டுகிறது.

இவ்விடமானது பைக் பயண பாதையுடனும் காணப்பட, மற்றுமோர் வழியும் தேசிய பூங்காவில் பயண வல்லுனர்களுக்காகவும், மலை ஆர்வலர்களுக்காகவும் காணப்படுகிறது. இந்த மலையானது சூழல் நெகிழ்ச்சி மண்டலமாக காணப்பட, அதீத பசுமையும், குறைவான மாசையும், புத்துணர்ச்சியை தரும் காற்றையும் கொண்டிருக்கிறது.

PC: Dinesh Valke

சஞ்சய் காந்தி தேசிய பூங்கா:

சஞ்சய் காந்தி தேசிய பூங்கா:

104 கிலோமீட்டரில் சரணாலயமானது காணப்பட, பயண ஆர்வலர்களுக்கான மற்றும் பைக் பிரியர்களுக்கான இடமும் நம் நாட்டில் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா என்னும் பெயரில் நம் மனதில் பரவசத்தை தருகிறது. இயற்கை அழகையும், அமைதியையும் இவ்விடமானது தர, சுற்றுலாப்பயணிகளை காலத்தின் போக்கில் கட்டி அணைப்பதோடு; 2400 வருட பழமையான கான்ஹேரி குகைக்கும் வீடாக இவ்விடமானது காணப்பட பாறைகளின் உச்சியின் ஒன்றில் இது காணப்படுகிறது.

இவ்விடமானது இரண்டு அழகிய ஏரிகளுக்கு வீடாக விளங்க, அவை விஹார் மற்றும் துளசி என்றும் தெரியவர, இதனை கடந்து, எண்ணற்ற நடைப்பயண பாதைகளும், காலை மற்றும் மாலையில் நடப்போருக்கு ஏதுவாக அமைய, தேவையான தூய்மையான காற்றையும் அவை நமக்கு தருகிறது.

PC: Pratham.bhoot

போர்த்துகீசிய மீனவ கிராமம்:

போர்த்துகீசிய மீனவ கிராமம்:

வெர்சோவாவில் இது காணப்பட, இவ்விடமானது சைக்கிள் ஓட்ட முயல்பவருக்காகவே காணப்படுகிறது. இந்த வழியாக நாம் செல்ல எண்ணற்ற மீனவ கிராமங்களும், அக்கிராமங்களுக்கு அழகு சேர்க்கும் சதுப்பு நிலக்காடுகளும், காணப்பட அவ்விடத்தின் அழகானது நம் மனதை மட்டுமல்லாமல் மதியையும் மயக்கக்கூடும்.

தேவாலயங்களும், குடிசைகளும் இடிபாடுகளுடன் காணப்பட, இவ்விடமானது நம்மை காலம் கடந்து அழைத்து செல்வதோடு, உச்சிமலை முதல் உத்தன் சௌக் வரை ஒட்டுமொத்த அழகிய காட்சிகளையும் நம் கண்களுக்கு தரக்கூடும்.

PC: AlainAudet

பந்த்ரா முதல் சர்ச் கதவு வரை:

பந்த்ரா முதல் சர்ச் கதவு வரை:

அழகிய புற நகரான பந்த்ரா அகலமான பாதைகளுக்கு மத்தியில் பயணம் செல்ல நமக்குதவ, கடற்கரைகளும், பந்த்ரா ஏரியும் இங்கே காணப்படுகிறது. இந்த பாதையானது பரந்து விரிந்து மும்பையின் மேற்கில் காணப்பட, நரிமான் புள்ளியையும் கொண்டு முடிந்திட, இவ்வழியானது ஆலயங்களையும், பூங்காக்களையும், என பலவற்றையும் கொண்டிருக்க, ஆம்சி மும்பை பாதையின் சைக்கிள் பயணமானது மிகவும் விரும்பத்தக்க வகையில் காணப்படக்கூடும்.

Ameya charankar

கடல்வழி பயணம் முதல் மும்பை கோட்டை பகுதி வரை:

கடல்வழி பயணம் முதல் மும்பை கோட்டை பகுதி வரை:

இந்த பயணமானது CSTயில் தொடங்கி, சாசூன் கப்பல்துறை வரை என மும்பை பஞ்ச்ராபோலே, கடல் இயக்கி பயணம், மும்பாதேவி ஆலயம், க்ரௌபோர்ட் சந்தை எனவும் காணப்படுகிறது.

நீண்ட அகலமான 3.5 கிலோமீட்டர் கடல்வழி பயணமானது கான்கீரீட் சாலை வரை பரந்து விரிந்து காணப்பட, அதோடு இணைந்து மும்பை வழியும் பிரம்மாண்டமாக முடிவை எட்ட, இங்கே அழகான முறையில் திட்டம் தீட்டப்பட்டு வைக்கப்பட்ட பனை மரங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

PC: Tfeayush

இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more