Search
  • Follow NativePlanet
Share
» »இப்படிப்பட்ட அணைகளை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது!

இப்படிப்பட்ட அணைகளை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது!

மலைப்பாங்கான பகுதிகளே இங்கு அதிகம் என்றாலும் சமவெளிப்பகுதிகளும் குறைந்த அளவில் இம்மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. எனவே பருவநிலை என்பது அந்தந்த இடங்களின் புவி அமைப்புக்கேற்ப மாறுபட்டு காணப்படும். பொ

By Udhaya

மலைப்பாங்கான பகுதிகளே இங்கு அதிகம் என்றாலும் சமவெளிப்பகுதிகளும் குறைந்த அளவில் இம்மாநிலத்தில் இடம் பெற்றிருக்கின்றன. எனவே பருவநிலை என்பது அந்தந்த இடங்களின் புவி அமைப்புக்கேற்ப மாறுபட்டு காணப்படும். பொதுவாக கோடைக்காலமே இம்மாநிலத்தில் சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக இருக்கும். இக்காலத்தில் நிலவும் இதமான சூழல் பயணத்தை இனிமையானதாக மாற்றும். குளிர்காலத்திலும் இப்பிரதேசத்தில் சுற்றுலா மேற்கொள்ளலாம் என்றாலும் சில இடங்களுக்கான பனிப்பொழிவால் மூடப்பட்டிருக்கக்கூடும். மேலும், கடுமையான குளிரை எதிர்கொள்ளும் வலிமை கொண்டோருக்கு மட்டுமே இக்காலம் பொருந்தும். இங்கு சில அணைகள் மிகவும் பிரபலமானவை. அழகியல்கள் நிறைந்தவை.

 விக்டோரியா அணை

விக்டோரியா அணை

பீம்தால் ஏரியின் இறுதியில், 40 அடி உயர `விக்டோரியா' அணை உள்ளது. அணையின் இரு புறங்களிலும் படிமுறையில் அமைந்த மலர் தோட்டங்கள் காணப்படுகின்றன. இந்த அணை சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் இயற்கை காட்சிகளை வாரி வழங்குகிறது. இவ்வணையில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்கின் கரைகளில் அழகான காட்டு பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இக்காட்சியானது சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றது. பாண்டவர்களால் கட்டப்பட்ட பீமேஸ்வரர் ஆலயம், இந்த அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

பீம்தால் ஏரி

பீம்தால் ஏரி

கடல் மட்டத்திற்கு மேலே 4500 அடி உயரத்தில் உள்ள பீம்தால் ஏரி, நைனிடாலை சுற்றியுள்ள மிக பெரிய இயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இது பாண்டவர்களில் ஒருவனான பீமனின் பெயரால் அழைக்கப்படுகின்றது.

இந்த ஏரி, நைனிடாலில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் சிறிய துடுப்பு படகுகள், மற்றும் படகுகள் உள்ளன. எனவே, சுற்றுலா பயணிகள் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம்.

இந்த ஏரி, பல்வேறு நீர்வாழ் உயிரினங்களுக்கு ஒரு இயற்கையான இருப்பிடமாக விளங்குவதால், இமயத்தை தாண்டி இடம் பெயறும் பல்வேறு பறவைகளான கருப்பு கழுகுகள்(black eagle), சுவர் கொடி பறவைகள்(wall creeper birds), பழுப்பு மீன் ஆந்தைகள்(tawny fish owls), சின்னான்(bulbuls), மற்றும் மரகத புறாக்கள்(emerald doves) ஆகியவற்றை தன்னுள் ஈர்கிறது.

Kritikahasija

சிர்கிலா அணை

சிர்கிலா அணை

தார்சூலாவிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள நீர்மின் சக்தி திட்டப் பகுதிதான் சிர்கிலா அணைக்கட்டாகும். காளி நதியின் மீது கட்டப்பட்டிருக்கும் இந்த அணைக்கட்டு 1500 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ள இடமாகும். இந்த அணைக்கட்டுடன், ஒரு ஏரி இணையும் அற்புத காட்சியையும் சுற்றுலாப் பயணிகள் இங்கே காண முடியும். இந்த இடம் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும புகழ் பெற்ற இடமாகும்.

euttaranchal

காளி ஆறு

காளி ஆறு

மாபெரும் இமயமலையில் உள்ள கலாபானி என்ற இடத்தில் காளி ஆறு உற்பத்தியாகிறது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3600 மீ உயரத்தில் பித்தோரகார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆற்றிற்கு அருகில் இருக்கும் காளி கோவிலின் பெயரால் தான் இந்த ஆற்றிற்கு காளி ஆறு என்று பெயர் வழங்கப்பட்டது. இந்த ஆறு இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இயற்கையான எல்லையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது; இந்தியாவில் உத்தரகாண்ட் மற்றும் உத்திரபிரதேசங்களில் சாரதா என்ற பெயரில் இந்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. ஜாவ்ல்ஜிபியில் கோரி கங்கா ஆற்றுடன் இணையும் சாரதா ஆறு, இறுதியாக புனித நதியான கங்கையுடன் இணைந்து விடுகிறது. காளி ஆற்றின் பல்வேறு வழிப்பாதைகளில் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் வாட்டர் ராஃப்டிங் விளையாட்டுக்களை அனுபவித்திட முடியும்.

A. J. T. Johnsing

கலஹார் அணை

கலஹார் அணை

இந்த தேசிய பூங்காவிற்கு தென்மேற்கில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் கலஹார் அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டிலுள்ள நீர்மின் சக்தி நிலையம் தேவையான மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது. இது மட்டுமல்லாமல், பறவைகளை கவனிப்பதற்கும் புகழ் பெற்ற இடமாக இந்த பூங்கா விளங்குகிறது. குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இடம் பெயரும் வாட்டர்பௌல் பறவையை இங்கே காணலாம்.
euttaranchal.com

கார்பெட் அருங்காட்சியகம்

கார்பெட் அருங்காட்சியகம்

காலாதுங்கியில் உள்ள கார்பெட் அருங்காட்சியகம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். புகழ் பெற்ற பிரிட்டிஷ் வேட்டையாளர் மற்றும் வன உயிர் பாதுகாப்பாளருமான ஜிம் கார்பெட் வசித்து வந்த பாரம்பரிய மாளிகைதான் கார்பெட் மியூசியம். இந்த அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்தி வந்த கடிதங்கள், கலைப்பொருட்கள் மற்றும் அரிய, பழமையான புகைப் படங்கள் ஆகியவையும் உள்ளன. இந்த இடத்திற்கான நுழைவுக் கட்டணமாக குறைந்த அளவே வசூலிக்கப்பட்டு வருகிறது.

பாலு டேம்

பாலு டேம்

பாலு டேம் எனப்படும் இந்த சிறிய ஏரித்தேக்கம் சௌபாத்தியா பழத்தோட்டங்களிலிருந்து 3 கி.மீ கீழே அமைந்திருக்கிறது. இந்த ஏரிப்பகுதியிலிருந்து பனிமூடிய இமயமலைச்சிகரங்களை பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம். ஏரிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் அழகிய தோட்டப்பூங்காக்களில் ஓய்வெடுத்தபடி சுற்றிலும் விரிந்திருக்கும் மலையழகை கண்களால் பருக முடிவது இந்த ஸ்தலத்தில் விசேஷ அம்சம். இந்த ஏரித்தேக்கம் 1903ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. வருட முழுவதும் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படும் இந்த ஏரிப்பகுதி கூடாரத்தங்கலுக்கும் ஏற்றதாக காணப்படுகிறது.

ராணி ஜீல்

ராணி ஜீல்


ராணி ஜீல் எனப்படும் இந்த பிரம்மாண்டமான ஏரி மழைநீரை சேமிக்கும் நோக்கத்துடன் கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேந்திரா வித்யாலயா பகுதி மற்றும் கனோஸா கான்வெண்ட் பள்ளி ஆகியவற்றுக்கு இடையே இயற்கையான எழும்பியிருக்கும் இரண்டு மலைப்பீடப்பகுதிகளுக்கு நடுவே இந்த ஏரி உருவாக்கப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 7500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏரியில் பயணிகள் படகுச்சவாரி செய்து மகிழலாம்.

Mrneutrino

More News

Read more about: travel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+