Search
  • Follow NativePlanet
Share
» »டான்டா - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது

டான்டா - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது

டான்டா - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது

ஒரு காலத்தில் டான்டா சுதேச ராஜ்ஜியமாக இருந்தது. இதை பரமரா வம்சத்தை சேர்ந்த அக்னிவன்ஸ்ஹ ராஜபுத்திர வம்சாவளிகள் ஆண்டு வந்தனர். இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் டான்டா இந்திய குடியரசுடன் இணைக்கப்பட்டது. டான்டா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லையில் அமைந்துள்ள பானஸ்கன்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இங்கிருந்து அகமதாபாத் தெற்கில் சுமார் 161 கி.மீ. தூரத்தில் உள்ளது. டான்டாவை ஆண்ட அரச குடும்ப உறுப்பினர்கள் இன்றும் இந்த இடத்தில் வசிக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பூஜையானது டான்டாவின் மகாராணாவினால் செய்யப்படுகிறது. மவுண்ட் அபுவிற்கு மிக அருகில் அரச குடும்பத்திற்கு சொந்தமான "பவானி வில்லா பாரம்பரிய தங்கும் விடுதி" இயங்குகிறது.

டான்டா - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது

Ashish Choudhary

டான்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மிக முக்கியமான சுற்றுலா இடங்களாவன: அம்பாஜி கோவில், படான் ராணி கி வாவ், ஜெயின் கோவில் இடிபாடுகள், வாட்நகரில் உள்ள நினைவுச்சின்னங்கள், கோட்டேஷ்வர் கோவில், மொட்ஹெர சூரிய கோவில், தரங்கா மற்றும் கும்பாஹரியா ஜெயின் கோயில்கள் மற்றும் ட்ஹொரொய் அணை ஆகும். இங்கு பாஷ்மினா ஸ்டொல்ஸ், பித்தளை பாத்திரங்கள் மற்றும் நகைகள், தந்த ஓவியங்கள் போன்ற நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். பல்ராம் அம்பாஜி வனவிலங்கு சரணாலயம் மற்றொரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த சரணாலயத்தில் ப்ளூ எருதுகள் போன்ற விலங்குகள், காட்டுக்கோழி மற்றும் முகடு கோழி போன்ற பறவைகள், மயில்கள், காட்டு பன்றி, குள்ளநரி, நரி, காடை, போன்றவற்றுடன் மூர்க்கமான விலங்குகளான, காட்டு பூனை, கழுதை புலி, சிறுத்தை, ஸ்லோத் கரடி & முள்ளம்பன்றி போன்றவற்றையும் காணலாம்.

Read more about: gujarat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X