» »வடகிழக்கு - ஒளிந்திருக்கும் அற்புதம்

வடகிழக்கு - ஒளிந்திருக்கும் அற்புதம்

Written By: Staff

அதிகம் சுற்றுலா செல்பவர்கள்கூட அச்சர்யத்தோடு கேள்விப்படும் இடம் வடகிழக்கு இந்தியா. காரணம், சுற்றுலா என்றாலே தென்னகத்தில் உள்ள மலைப் பிரதேசங்கள் இல்லையேல் டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்கள். வெகு சிலர் சிம்லா வரை செல்கின்றனர். அரிதிலும் அரிதாவே, சிலர் வடகிழக்கு மாநிலங்களான மேகாலாயா, அருணாச்சல பிரதேசங்கள் போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர்.

உண்மையில் வட கிழக்கு இந்தியா இன்னும் இயந்திர மயமாகாத அழகிய இடமாகத் திகழ்கிறது.

அப்படி ஒரு இடம்தான் மேகாலயாவில் இருக்கும் டாவ்கி .

dawki

Photo Courtesy : Vikramjit Kakati

மேகாலயாவின் தலைநகர், ஷில்லாங்கிலிருந்து 95 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த டாவ்கி நகரம். இங்கிருந்து வங்கதேசம் இரண்டு கி.மீ.தான்.

டாவ்கி, இந்தயாவிற்கும், வங்கதேசத்திற்கும் இடையே இருக்கும் வணிக உறவிற்கான முக்கிய இணைப்பு.  இதனால், டாவ்கியை, வங்கதேசத்தின் நுழைவாயில் என்று கூறுகின்றனர். நிலக்கரி சுரங்ககளும், சுண்ணாம்பு கற்களும் டாவ்கியிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கிய பொருட்கள். வங்கதேசம் செல்ல ஒரே சாலை வழி டாவ்கி வழிதான்.

டாவ்கியில் உள்ள உம்ன்காட் என்னும் நதியைக் காணவே பலர் வருகின்றனர். சமூக வலைதளங்களில்கூட இந்த நதியின் புகைப்படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். பாலத்தின் மேலிருந்து பார்த்தால் நதியின் அடியாழம் வரை தெரியும். துளி தூசி இல்லாத பளிங்கு போல் ஓடும் ஆற்றில், படகுகள் போகும் காட்சி கண்ணாடியில் வழுக்கிக் கொண்டு செல்வது போல் தெரியும். இங்கு மீன்பிடித்தொழில் பிரதானம். ஆற்றில் நிறைய படகுகளைப் பார்க்கலாம். இதற்கடுத்து, விவசாயத்தை நம்பி பலர் இருக்கின்றனர்.

fishing

Photo Courtesy : Swagataliza

இந்த நதியோரத்தில் இருக்கும் தொங்கு பாலம்தான் இரு நாடுகளை இணைக்கிறது. இது ஆங்கிலேயர்களால் 1932'அம் ஆண்டில் கட்டப்பட்டது.

இரு நாட்டு மக்களின் வசதிக்காக, இங்கு ஒரு சிறிய சந்தையும் இருக்கிறது.

river

Photo Courtesy: Diablo0769

டாவ்கிக்கு செல்வதெப்படி

ஷில்லாங்கிலிருந்து பேருந்துகள் இருக்கின்றன. கார் வாடகையெடுத்தும் செல்லலாம்.

கவ்ஹாத்தி ரயில் நிலையம், டாவ்கிக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம். இங்கிருந்து 180 கி.மீ

Read more about: rivers, shillong, meghalaya