Search
  • Follow NativePlanet
Share
» »தியோகர் இதோ ரெண்டாவது ஊரு.. என்னெல்லாம் இருக்கு பாருங்க

தியோகர் இதோ ரெண்டாவது ஊரு.. என்னெல்லாம் இருக்கு பாருங்க

தியோகர் இதோ ரெண்டாவது ஊரு.. என்னெல்லாம் இருக்கு பாருங்க

புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமான இது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கிய தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது. அலையலையான நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில் சிறிய குன்றுகளும் ஏராளமாக உள்ளன. பிரதான கோவில் வளாகம் 22கொவில்களுடன், 12 ஜோயோதிர்லிங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. பாபா பைத்யநாத் கோவிலுக்கு ஆண்டு முழுதும் ஏராளமான பயணிகள் வருகிறார்கள்.

யாத்ரீக அம்சங்கள்

யாத்ரீக அம்சங்கள்

சுல்தான்கஞ்சில் இருந்து 100கிமீ நடந்தே இக்கோவிலை அடைகின்றன. இந்து யாத்ரீகர்களுக்கு முக்கியமான இந்த இடம் கடவுள்களின் பூமி என்றழைக்கப்படுகிறது. யமுனாஜோர் மற்றும் தருவா ஆகிய நதிகள் இவ்வூரின் வழியே ஓடுகின்றன.

இயற்கை அழகும், மிதமான வானிலையும் உள்ள தியோகர் புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது.

Ashish itct

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

பைத்தியநாத் கோவில், ராமகிருஷ்ண வித்யாபீடம், த்ரிகுத், சத்சங் ஆசிரமம், நவ்லகா கோவில், ஷ்ராவணி மேளா, ஷிவ்கங்கா, தேவசங்கா மடம் ஆகிய இடங்கள் இங்கு உள்ளன. மேலும் நந்தன் பஹார் என்ற புகழ்பெற்ற மலைஸ்தலமும் உண்டு.

Shivsh0336

சிவகங்கா

சிவகங்கா


இந்தக் குளத்தின் நீர் புனிதமானதாகவும், பல நோய்களைத் தீர்ப்பதாகவும் கருதப்படுகிறது. பைத்யநாத் கோவிலில் இருந்து 200மீ தொலைவில் உள்ள இந்தக் குளத்தில் நீராட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அருகிலேயே சிறிய சிவன்கோவில் ஒன்றும் உள்ளது. இந்து புராணத்தின்படி இந்தக் குளத்தை கையால் பூமியில் அடித்து சிவன் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு செல்லும் வழியில் சிறுநீர் கழித்துவிட்டு கைகழுவ நீர்தேடிய போது நீர் கிடைக்காததால் இங்கு குளத்தை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

Tarunsamanta

 நந்தன் பகர்

நந்தன் பகர்

தியோஹரின் மேற்கு எல்லையிலுள்ள இந்த மலை புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். இங்கேயே ஒரு சிவன் கோவிலும், நந்தி கோவிலும் ஒரு சிறுவர் பூங்காவும் உள்ளன. பேய்வீடு, கண்ணாடி வீடு என பலவகையான விளையாட்டுக்கள் இங்கே உள்ளன. படகு மற்றும் ரஷ்ய ஊஞ்சல் விளையாட்டுக்கள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

Tarunsamanta

த்ரிகுத்

த்ரிகுத்


த்ரிகுடாசல் கோவிலுக்கு புகழ்பெற்ற இந்த மலை தியோகரில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ளது. 2470அடி உயரத்தில் உள்ள இந்த சிவன் கோவில் மயுராக்‌ஷி நதிவாயிலில் உள்ளது. மூன்று பிரதான உச்சிகள் இந்த மலைக்கு உள்ளதால் த்ரிகுத் என அழைக்கப்படுகிறது, மலைகளுக்கு மத்தியில் சம்பாதானந்தா தேவ் என்பவரால் உருவாக்கப்பட்ட திருகுடாசல் ஆசிரமம் ஒன்று உள்ளது. தற்சமயம் அவரது சீடர்களால் நடத்தப்படும் அந்த ஆசிரமத்தில் த்ரிஷூலி அம்மனின் கோவில் ஒன்றும் உள்ளது. ஜார்கண்டின் முதல் கயிற்றுவழியும் இங்கே அமைந்துள்ளது.

Tarunsamanta

Read more about: jharkhand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X