புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமான இது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கிய தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
அலையலையான நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில் சிறிய குன்றுகளும் ஏராளமாக உள்ளன. பிரதான கோவில் வளாகம் 22கொவில்களுடன், 12 ஜோயோதிர்லிங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
பாபா பைத்யநாத் கோவிலுக்கு ஆண்டு முழுதும் ஏராளமான பயணிகள் வருகிறார்கள். சுல்தான்கஞ்சில் இருந்து 100கிமீ நடந்தே இக்கோவிலை அடைகின்றன. இந்து யாத்ரீகர்களுக்கு முக்கியமான இந்த இடம் கடவுள்களின் பூமி என்றழைக்கப்படுகிறது.
யமுனாஜோர் மற்றும் தருவா ஆகிய நதிகள் இவ்வூரின் வழியே ஓடுகின்றன. இயற்கை அழகும், மிதமான வானிலையும் உள்ள தியோகர் புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
பைத்தியநாத் கோவில், ராமகிருஷ்ண வித்யாபீடம், த்ரிகுத், சத்சங் ஆசிரமம், நவ்லகா கோவில், ஷ்ராவணி மேளா, ஷிவ்கங்கா, தேவசங்கா மடம் ஆகிய இடங்கள் இங்கு உள்ளன. மேலும் நந்தன் பஹார் என்ற புகழ்பெற்ற மலைஸ்தலமும் உண்டு.



Click it and Unblock the Notifications